आत्मपूजोपनिषद् – ஆத்மபூஜோபநிஷத் - 01 (முதல் பத்து மந்திரங்கள்)
இது சிறு உபநிஷதங்களில் ஒன்று, இருபது மந்திரங்களுடன் ஆத்மாவை வழிபட வழிகளைக் கூறுகிறது. சமஸ்க்ருத மூலத்திலிருந்து Dr. Sampadananda Mishra அவர்கள் மொழிப் பெயர்த்ததை சாதகர்களின் கற்கைக்கு உதவும் பொருட்டு தமிழில் மொழிப் பெயர்த்துள்ளோம்.
இந்த உபநிஷத்தை நான் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். இன்று வீண் ஆடம்பரமாக செய்யும் பூஜைகளின் அர்த்தத்தை 20 மந்திரங்களில் தெளிவாக வரையறுக்கிறது.
பூஜையின் ஒவ்வொரு அங்கமும் ஆத்ம ஞானம் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய செயலின் குறியீட்டு வடிவம். உதாரணம் கதை காட்டி புரியவைத்தல் பாரதீய ரிஷிகளின் அறிவைப் பெறும் முறைகளில் ஒன்று, மனதை இன்பமாக வைத்திருந்தால் தான் ஆன்ம சிந்தனைக்கு வழிகோலும். ஆகவே பூஜை முறைகளை வகுத்து அதில் செய்யப்படும் உபச்சாரங்கள் எல்லாம் மனிதன் தான் ஞானம் பெற தனது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதை வகுத்துள்ளார்கள்.
ஐம்புலன்கள் தான் மனிதனை புறவயப்படுத்துகிறது, இப்படி ஐம்புலங்களின் அனுபவம் பெறும் போது ஆத்ம சிந்தனை மறக்கப்படக் கூடாது. ஆகவே ஐம்புலன் அனுபவங்களை எல்லாம் கடவுளுக்குச் செய்யும் உபசாரமாக்கி அந்த உபச்சாரங்களை செய்யும் போது ஆழ்மனத்தில் அது ஆத்ம ஞானத்திற்காக செய்யப்படும் ஒரு குறியீடு என்பதையும் புகுத்தி செய்ய வைத்தார்கள்.
இப்படி ஆத்ம சிந்தனையை மறக்காமல் பூஜையினால் புலன்களின் செயல்களை செய்யப் பழகிய மனம் பிறகு எந்த உலகவிஷயத்தில் புலன் இன்பங்களில் ஈடுபட்டாலும் தனது உண்மை நிலையான ஆத்ம ஸ்வரூபத்தை மறக்காது.
இதை மறந்து விட்டு இன்று பூஜைகள் தமது தவறுகளை திருத்தும் பரிகாரங்கள், இந்தப் பூஜை செய்தால் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று மனிதர்களின் பேராசை உணர்வினைத் தூண்டி தமது வயிற்றுப் பிழைப்பு நடக்க வழி கோலுகிறார்கள்.
இந்த ஆத்ம பூஜோபநிஷத்தினைப் படித்து அதன் பின்னர் பூஜை செய்யும் போது அது ஒருவனை ஆன்ம முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்.
1. ॐ तस्य निश्चिन्तनं ध्यानम्। - oṁ tasya niścintanaṁ dhyānam - ௐ தஸ்ய நிஶ்சிந்தநஂ த்யாநம்।
தியானம் என்பது நான் என்ற ஆத்மனை தொடந்து நினைவில் நிறுத்துவது.
2. सर्वकर्मनिराकरणमावाहनम् । - sarvakarmanirākaraṇamāvāhanam - ஸர்வகர்மநிராகரணமாவாஹநம் ।
அனைத்து செயல்களையும் புறக்கணிப்பு மன நிலையில் (சாட்சிபாவத்துடன்) செய்தல் ஆவாஹனம்.
3. निश्चलज्ञानमासनम्। - niścalajñānamāsanam। - நிஶ்சலஜ்ஞாநமாஸநம்।
சலனமற்ற ஞானத்தை அடைதல் ஆசனம்
4. समुन्मनीभावः पाद्यम्। - samunmanībhāvaḥ pādyam - ஸமுந்மநீபாவஃ பாத்யம்।
ஆத்மாவினை ஏற்கும் திறந்த (மன) நிலை பாத்யம் ( நீர் சமர்ப்பித்தல்)
5. सदामनस्कमर्ध्यम्। - sadāmanaskamardhyam - ஸதாமநஸ்கமர்த்யம்।
ஆத்மாவை நோக்கிய விலகாத ஏகாக்ர சிந்தனை அர்க்கியம்
6. सदादीप्तिराचमनीयम्। - sadādīptirācamanīyam - ஸதாதீப்திராசமநீயம்।
ஆத்மாவின் திறனின் பிரகாசம் ஆசமனீயம்
7. वराकृतप्राप्तिः स्नानम्। - carākṛtaprāptiḥ snānam - வராக்ரதப்ராப்திஃ ஸ்நாநம்।
ஆத்மாவின் மேன்மையை அடைதல் ஸ்னானம்
8. सर्वात्मकत्वं दृश्यविलयो गन्धः ।- sarvātmakatvaṁ dṛśyavilayo gandhaḥ - ஸர்வாத்மகத்வஂ த்ரஶ்யவிலயோ கந்தஃ
எல்லாப் புற நிலைகளையும் ஆத்மாவில் ஒடுக்கல் கந்தம்
9. दृगविशिष्टात्मानः अक्षताः । - dṛgaviśiṣṭātmānaḥ akṣatāḥ - த்ரகவிஶிஷ்டாத்மாநஃ அக்ஷதாஃ ।
ஆத்மனைப்பற்றிய அகப்பார்வையை அடைதல் அக்ஷதை
10. चिदादीप्तिः पुष्पम् । - cidādīptiḥ puṣpam - சிதாதீப்திஃ புஷ்பம் ।
ஆத்மனின் பிரகாசம் புஷ்பம்
தொடரும்.....
Below is the original English translation by Dr. Sampadananda Mishra
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.