Posts

Showing posts from August, 2014

தேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்

Image
தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மகாலக்ஷ்மி எனும் ஸ்ரீ தத்துவத்தினை விழிப்பிக்கச் செய்ய வல்ல தோத்திரம் மகா லக்ஷ்மி அஷ்டகம். இந்தப்பதிகளில் மகா லக்ஷ்மி அஷ்டகத்தின் சுருக்கமான பொருளையும் அதன் யோக தத்துவ விளக்கத்தினையும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய படி காண்போம், விரிவாக படிக்க எண்ணுபவர்கள் சென்னை ஆத்மா ஞான யோக சபா பதிப்பித்த ஆன்மீக படைப்பு – 06 வாங்கி கற்கவும். சபா செயலாளரிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

முதலாவது சுலோகம் நமஸ்தேஸ்துமஹாமாயேஸ்ரீபீடேஸுரபூஜிதே
சங்குசக்ரகதாஹஸ்தேமஹாலக்ஷ?மிநமோஸ்துதே

பொருளுரை: பிரபஞ்ச பெரும் மாயா சக்தி வடிவினளே! ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே! தேவர்களால் வணங்க்கப்படுபவளே, கைகளில் சங்கு, சக்கரம், கதையினை தாங்கியவளே, மகா லக்ஷ்மியே உனக்கு எனது நமஸ்காரம்!
விஷேட யோக வித்யா உரை:
ஆன்ம கொடிகளை பிரபஞ்ச பரிணாமத்தில் செலுத்தி விளையாடும் பராசக்தியின் ஒரு திரிபு சக்தி வடிவமே மகா லக்ஷ்மீ. அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரை புஷ்பம் பிரபஞ்சத்தின் குறி, பிரபஞ்ச…

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦2

முன்னைய பகுதியில் சாந்தி சதுஷ்டயத்தின் முதலாவதான சமபாவத்தை பற்றி சற்று விரிவாக பார்த்தோம். இன்றைய பதிவில் மற்றைய மூன்றையும் பற்றி சற்று பார்ப்போம். 

சாந்தி – அமைதி - மேற்கூறிய சமபாவம் பயிற்சித்து சித்தியானவுடன் ஏற்படும் நிலை சாந்தி எனப்படும் அமைதி. இது புலன்களை அடக்குவதால் வரும் அமைதியும் , தெய்வ சக்தியை எம்முள் ஏற்பதால் வரும் அமைதியும் அடங்கும். முதலாவது சமபாவத்தில் பலன் சாந்தி எனப்படும் அமைதி.

சுகம் எனும் ஆனந்தம் – எல்லாவித மன அழுத்தங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலை. இந்த நிலையில் அக இன்பமும் ஆன்ம மலரவும் ஏற்படும். இந்த நிலை முதல் இரண்டு நிலைகளான சமபாவம், சாந்தி ஆகிய இரண்டும் அடைந்ததன் வெளிப்பாடு.

ஹாஸ்யம் எனும் ஆத்மபிரசாதம் – இது சுகத்தின் இயக்க நிலை, சுக நிலையினை அடைந்தபின்னர் அது நிலைத்துவிட்டவுடன் அவர்களை சூழ இருவித ஆனந்த அலைகள் வெளிப்படத்தொடங்கும். எந்தவித வெளி பௌதீக மானசீக இடையூறுகளும் அவர்களை கலக்கமுறச்செய்யாது. இது தூய்மையும், தெளிவும் சாதகனின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படும் நிலை.

அடுத்த பதிவில் சக்தி சதுஷ்டயம் பற்றி பார்ப்போம்.....

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1

இந்த பதிவுகள் எனது  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வாசிப்புகளின் அடிப்படையானது. இயலுமான வரை சொற்பிரயோகங்களை அரவிந்தரின் சொற்களையும் அதற்கு தகுந்த தமிழ் சொற்களையே உபயோகித்துள்ளேன். இந்த புரிதல்கள் மேலும் பட்டை தீட்டப்படவேண்டியவை.  
அரவிந்தரின் பூரண யோகத்தில் சாதகன் அடியவேண்டிய ஏழு நிலைகளை பகுத்து கூறியவை சப்த சதுஷ்டயம் எனப்படும்.
அரவிந்தரின் யோகத்தில் சாதகனின் இலக்கு நான்கு, அவையாவன; சுத்தி – தூய்மைப்படுத்தல்முக்தி – விடுதலை அடைதல்சித்தி – உணர்ந்து செம்மையடைதல்புக்தி – ஆனந்த அனுபவம்
இவற்றை அடைவதற்கான இலக்குகள் ஏழு நிலை, அந்த ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நான்காக விரியும். அந்த சதுஷ்டயம் – ஏழும் வருமாறு; சாந்தி சதுஷ்டயம்சக்தி சதுஷ்டயம்விஞ்ஞான சதுஷ்டயம்சரீர சதுஷ்டயம்கர்ம சதுஷ்டயம்பிரம்ம சதுஷ்டயம்சித்தி சதுஷ்டயம்
இவற்றின் விபரங்களை ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்,
சாந்தி சதுஷ்டயம் ஒருவன் பூரண சாந்தியினை (அமைதியினை) அடைவதற்கு நான்கு பண்புகள் இருக்க வேண்டும். இந்த நான்கும் அவனது உறுதியான சாதனா பயிற்சியில் இருக்க வேண்டும். 
அந்த நான்லில் முதலாவதான சமந்தா எனப்படும் சமபாவம் பற்றி சுருக்கமாக இ…

மந்திர விஞ்ஞானம்

ஒருவன் “ராமா” என்று பலத்து கத்தினால் அவனை சுற்றிலும் குறித்த தூரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கேட்கிறது. எப்படி கேட்க முடிகிறது. கத்தினவனிடத்திலிருந்து கேட்டவர்கள் வரை சப்தம் சென்றிருக்க வேண்டும். காற்றின் வழியாக சப்தம் பரவுகின்றன. இங்கு காற்று என்பது வீசும் காற்றுகள் அல்ல. வாயு மண்டலம் என்று பொருள். நிலையான வாயு மண்டலத்திநூடாகவும் சப்தம் பயணிக்கும்.
இதுபோல் சப்தத்திற்கு வடிவமுண்டு, சப்தத்தினை குறித்த அலைவேகத்தில் அலைக்கழிக்க வைக்கும் போது குறித்த உருவங்களை உண்டு பண்ணும் என்பது தற்போது கணனிகளின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்,
அதுபோல் சப்தத்திற்கு குறித்த நிறத்தினை உண்டும் பண்ணும் ஆற்றலும் உண்டு.
ஒருவரை மடையா என்று ஏசினால் அவரிற்கு கோபம் வரும், அதுபோல் சப்தத்தினால் உணர்சிகளை தூண்ட முடியும்.
சப்தங்களை வாயினாலோ, மனதினாலோ சொல்லும்போது, நினைக்கும் போது உடலில் சில மாறுதல்கள் ஏற்படும். இதனை பஞ்சபூத பீஜ மந்திரங்களினால் பரிசோதித்து பார்க்கலாம்.
ரம் என்பது அக்னி பீஜம், இதனை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து “ரம்,ரம்” என்று தொடர்ச்சியாக ஆயிரத்தெட்டு தடவை வாய்விட்டு சொல்லுங்கள் உடலில…

காயத்ரிதேவியின் உருவ விளக்கம்

Image
முக்தா வித்ரு ஹேம நீல தவளச்சைர் என்று தொடங்கும் காயத்ரி தேவியின் தியான ஸ்லோகத்தின் பொருள்: ஐந்து முகங்களும், பத்து கைகளும் கொண்ட காயத்ரி தேவியின் உருவத்தின் விளக்கம் வருமாறு “ முத்து, பவளம், தங்கம், நீலம், வெள்ளை நிறங்களில் ஐந்து முகங்கள், மூன்று கண்கள், சந்திரன் பதித்த இரத்தின கிரீடம் தரித்த தத்துவ பொருள் கொண்ட எழுத்து வடிவினள், வரம் தரும் அபயம், அங்குசம், பாசம், சவுக்கு, கபாலம், கதை, சங்கு, சக்கரம், இருதாமரைகள் தாங்கிய பத்துக்கைகளைக் கொண்ட காயத்ரியினை தியானிக்கிறேன்.
இது காயத்ரியின் தியான வடிவம். இந்து சமயத்தில் இறைவனை பல்வேறு வடிவங்களில் வணக்குவதை பல தெய்வ வழிபாடு எனக் கருதுகின்றனர். இதற்கு காரணம் உருவவழிபாட்டை தவறெனக் கருத்தும் பிரிவினர் உருவவழிபாட்டின் உண்மை தத்துவத்தினை அறியாமையேயாகும்.
ஆன்மீக விளக்கத்தில் கடவுளின் பல்வேறு தெய்வ உருவங்கள் அரூபியான பரம்பொருளின் சில குறித்த தத்துவங்களை விளக்கும் தத்துவ குறியீடுகளே ஆகும். உருவையே கடவுள் எனக்கருதி கேலி செய்வதோ, மயங்கி வாதிடுவதோ உண்மை ஞானம் அல்ல! அவ்வுருவம் கூறும் தத்துவத்தினை உணர்ந்து அதனூடாக பரம்பொருளை அறிவதே எமது முன்னோர்கள் வழிகாட…

தீட்சை என்றால் என்ன? - தீக்ஷா விஞ்ஞானம்

எனது குருநாதரின் பாடக்குரிப்புகளில் இருந்து,

ஒருவன் எளியவன் திறமைசாலி ஆனால் நல்ல முறையில் தொழில் செய்து முன்னேற அறிவும், முயற்சியும் உண்டு ஆனால் பணம் இல்லை. இந்த நிலையில் அவனிற்கு யாராவது பணம் கொடுத்தால் அவன் அதனை வைத்து முன்னேறிக்கொள்வான்.
ஒருவனுக்கு சமஸ்க்ருதம் கற்க விருப்பம் ஆர்வம் உண்டு. யாராவது அவனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அவன் தனது முயற்சியில் அதனை கற்று தேறிவிடுவான்.
உடல் நோயுள்ளவனுக்கு நல்ல மருத்துவனின் உதவி தேவை.
மனிதன் தனது உடலையும் மனதையும் வளர்த்திட பிறரது உதவியும் பொருளும் வேண்டித்தான் இந்த உலக வாழ்க்கை அமைத்துள்ளது.
பணம் வேண்டியவனுக்கு பணத்தை பற்றிய விளக்கத்தை மட்டும் கொடுத்தால் போதாது, பணத்தையும் கொடுத்து அதனை பெருகும் வழியினையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
நோயாளிக்கு மருந்தினைப்பற்றி வர்ணிப்பதனால் பலன் எதுவும் இல்லை, மருந்தினை தரவேண்டும்.
கடவுளின் அருளைபெறல், சித்தி செய்யும் ஆற்றலை பெறல், பிரபஞ்ச ஆற்றலை தெரிந்து கொள்ளல், பயன்படுத்தல் என்பவற்றிற்கு சாதாரண உடல் மன அறிவு நிலைகள் போதுமானவை அல்ல. மனிதன் தனது ஐம்பொறிகளால் தொடர்பு கொள்ளும் உலகைப்பற்றிய அறிவை தானாகவே அறிந்து…