குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 10, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 06

நேற்றைய பதிவில் மூன்றாவது பாடலின் 

அல்லிக் கமலத் தயனும் மாலும்

அல்லா தவரும் அமரர் கோனுஞ்

சொல்லிப் பரவும் நாமத் தானைச்

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

என்ற வரி வரை பொருள் கண்டோம், இனி மிகுதி வரிகளைப் பார்ப்போம். 

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை

நிறைஇன் னமுதை அமுதின் சுவையைப்

புல்லிப் புணர்வ தென்று கொல்லோ

என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகத்தில் கீழ் பௌதீக பரிணாமத்தில் உழரும் உயிர் புருவ மத்தியில் உள்ள சுடரான சிவஜோதியைப் புணர்ந்தால் ஏற்படும் நிலையை சிவயோகத்தில் அம்ருதீகரணம் என்பார்கள். 

அதாவது உயிராற்றல் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று மனதில் வழி கழியாமல் புருவமத்தியில் ஒளியாக இருக்கும் சிவத்தை ஊர்த்துவ முகமாக அடைந்தால் பிரபஞ்ச சக்தி உடலில் பாயும் நிலையை அம்ருதம் பெறல் என்று யோகியர் குறிப்பார்கள். 

இப்படியான யோக நிலையை அடைந்தால் அந்த உயிர் கற்ப நிலை அடையும், கற்ப நிலை என்பது காலம் கடந்து நிற்பது. பொதுவாக இன்று பலர் கற்பம் என்பது ஸ்தூல உடலை அழியாது நிறுத்தல் என்று எண்ணுகிறார்கள். உண்மையில் கற்பம் என்பது உயிர் தான் பெற்ற அனுபவத்தை இந்த பூவுலகில் மற்றவர்களுக்கு தரக் கூடிய வல்லமையுள்ளதாக வலிமையுள்ளதாக எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கிறதோ அந்த நிலை கற்ப நிலை எனப்படும். 

ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பலர் எழுதியிருக்க மாணிக்கவாசகர் போன்ற ஒரு சிலரின் எழுத்துக்கள் மட்டும் மக்களுக்கு அவர் பெற்ற அனுபவத்தை தரும் வல்லமை உள்ளதால் மாணிக்கவாசகரும் கற்ப தேகம் அடைந்தவர் தான். 

இப்படி கற்ப நிலையை அடைய சித்தர்கள் மூலிகைகளில் துணையையும் நாடுவர்கள். இவற்றுள் எளிய கற்பம் நெல்லிக் கற்பம்! நெல்லிக்கனியை சரியாக பக்குவப்படுத்தி உண்டால் அது ஸ்தூல உடலைப் பலப்படுத்தி ஒருவனது சாதனைக்கு மனதையும் உடலையும் ஒழுங்குபடுத்தும் ஒரு அரிய கற்ப மூலிகை நெல்லிக்கனி! 

ஆக தனது உயிரை கற்பமாக்க வல்ல சிவ ஜோதியை எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எளிய கற்ப மூலிகையான நெல்லிக்கனிக்கு ஒப்பிடுகிறார்! 

ஒரு யோகி தான் அண்ணாக்கில் பெறும் அமுதத்தை ஒப்பிடுவதற்குரிய பொருட்கள் தேனும், பாலும்! இத்தகைய கற்ப நிலையைத் தரும் சிவ ஜோதியாகிய பொல்லா மணியை புணர்வது எக் காலம் என்கிறார்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...