Posts

Showing posts from April, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 20: நாமங்கள் 26 - 30

கர்ப்பூரவீடீகாமோத - சமாகர்ஷி-திகந்தராயை (26) எத்திக்கிலும் உள்ளவரை நறுமணத்தால் கவரும் கற்பூர வீடிகை என்ற தாம்பூலம் தரித்தவள் 
கற்பூர வீடிகை என்பது நறுமணம் தரும் பொருடக்களை கொண்டு செய்யப்பட்ட தாம்பூலம். இதில் பயன்படுத்தும் பொருட்கள் ஏலம், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, கேஸரி , ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு என்பனவாகும். இவற்றை நன்கு தூளாக்கி சீனி சேர்த்து செய்யும் கலவையே கற்பூர விடிகா. இந்த தூளினை வெற்றிலையுடன் கலந்து தாம்பூலம் தரிக்கையில் அதன் வாசனை அனைவரையும் கவரும் தன்மை உடையது. தேவி இந்த தாம்பூலத்தினை தரித்து வரும் வாசனையினால் இந்த பிரபஞ்சமே நறுமணத்தினை பெறுகிறது. அதனால் அவளை நோக்கி அனைத்தையும் கவர்கிறாள். 559வது நாமத்தினையும் காண்க. லலிதா திரிசதி 14வது நாமமும் இதே பொருளினை தருகிறது. 
இதன் உட்பொருள் அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசத்தினால் கவர்கிறாள் என்பதாகும். புத்தியுடைய மனிதன் தனது பக்தியால் தேவியினை அடைகிறான், ஆனால் அறிவற்ற மனிதன் அவளை அடைவதற்கு ஒரு உந்து கோல் வேண்டும். அந்த உந்துகோலே தாம்பூல வாசனையாக குறிப்பிடப்படுகிறது.
நிஜ-ஸல்லாப -மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ (27) கச்சப…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 19: நாமங்கள் 18 - 25

வக்த்ரஸ்மர - மாங்கல்ய - க்ருஹ - தோரண - சில்லிகாயை (18) முகத்தில் அழகு வெள்ளத்தில் சலிக்கும் மீன்களைப் போன்ற கண்களை உடையவள்  தேவியினுடைய கண்கள் தடாகத்தில் அசையும் மீன்கள் போன்று காணப்படுகிறது. முகம் தடாகமாகவும், கண்கள் மீனாகவும் உருவகிக்கப்படுகிறது. மீன் வேகமாக அசையக்கூடியது. அதுபோல் தேவியினுடைய கண்களும் உயிர்களுக்கு கருணையினை பொழிய வேகமாக அசைகிறது. மீன் முட்டைகளை இட்டுவிட்டு கண்பார்வையினாலேயே பொறிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை. அதுபோல் தேவியினுடைய கண்பார்வை பிரபஞ்சத்தை போஷிக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் அவளது கண்களின் அழகால் அவள் மீனாட்சி, மீனலோஜினி என அழைக்கப்படுகிறாள்.

நவசம்பக புஷ்பாப நாஸதண்ட - விராஜிதா (19) அன்றலர்ந்த சம்பகம் போன்ற அழகிய மூக்குடையவள்   தேவியினுடைய மூக்கு அன்று மலர்ந்த சம்பக மலர் போன்று காணப்படுகிறது.

தாராகாந்தி - திரஸ்காரி - நாஸாபரண - பாஸுராய (20) நட்சத்திரத்தினும் மிகுந்த ஒளிவீசும் மூக்குத்தியணிந்தவள்  நட்சத்திரங்களை விட ஒளிரும் மூக்குத்தி உடையவள். அவளுடைய மூக்குத்தியில் மாணிக்கங்களும் முத்துக்களும் காணப்படுகின்றது. தாரா என்றால் நட்சத்திரம், தாரா என்பது மங்களா, சுக்லா என்…

உண்மை ஞானத் திறவுகோல் - உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா?

உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா? என்பது பற்றி விபரிக்கிறது. 

சமய நெறியின் மயக்கத்திலே மயங்கி கிடக்கும் மக்களில் எப்படியோ தவறான பல நம்பிக்கைகள் வேரூன்றியிருக்கின்றன. அவைகளில் ஒன்றை மட்டும் ஆராய்வோம். "இதோ முருகன், இதோ கிருஷ்ணன் என்று கடவுளை பகுத்து கூறுவது போல "இவர் மகான், இவர் யோகி, இவர் சாது, அவர் சந்நியாசி" என பகுத்தறியும் வலியினை கண்டுபிடித்திருக்கிறார்கள் மதவாதிகள். உண்மையை உணரும் வரை நானும் இப்படித்தான் பெரியோர்களை கண்டு வந்தேன். 
சாது, சந்நியாசி, பக்தன், யோகி என்பவர்கள் உடையாலோ, உண்ணல் முதலிய வாழ்க்கை முறைகளாலோ, மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பவர்கள் அல்ல. பாரத நாட்டில் வாழ்ந்த எந்த சித்தரோ, யோகிகளோ மக்களை விட வேறு பட்டு இருக்கவில்லை. சமய நெறி என்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் இவ்வுலகில் வாழ்ந்த பக்தர்களும், ஆன்ம முன்னேற்றமடைந்தவர்களும் சாதாரண மக்களை விட வேற்றுமை அற்றுத்தான் வாழ்ந்தார்கள். சமய நெறி ஒரு கட்டமைப்பாக வந்தபின்னர்தான் தமக்குரிய அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டனர். அதைதொடர்ந்து எண்ணற்ற வேஷங்கள் வெளியாயின. 
பக்தி, யோகம், தவம் எனும் சாதனங்கள் உடலில் உள்ளு…

சித்த யோக பயிற்சிப்பாடங்கள் - சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு மட்டும்

Image
எமது வலைப்பின்னலை வாசிக்கும் சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு உதவக்கூடிய வகையில்  எமது குரு நாதரின் அரிய ஆன்மீகப்படைப்பினை அறிமுகம் செய்கிறோம். 
இந்த நூல் கண்ணைய யோகியார் தமது மாணக்கரிற்கு சித்த யோகத்தினை போதிப்பதற்கான மிக எளிய தமிழில், சிறிய வடிவில் பாடங்களாக எழுதப்பட்ட 36 பாடங்களின் தொகுப்பு. 
பாடங்களின் தலைப்புகளைகளை வாசகர்களின் ஆர்வத்திற்காக தருகிறோம். தேவையானவர்கள் கீழேயுள்ள தொடர்பிலக்கத்தில் தொடர்புகொண்டு பெற்று பயன்பெறலாம். 


உடல் மன ஒய்வும் பயனும்சுவாசமும் உயர் சித்திகளும்எளிய மனோ சிகிச்சைபிறப்பு நிறமும் - பேரின்ப பயன் களும் தூக்கத்தில் சகல சித்திகள்ஆயுள் உறுதிக்கான அருங்காயகற்பங்கள்பேரறறிவு பெறும் பெரும் சாதனைதிவ்விய விஞ்ஞனமும் வாழ்க்கை வெற்றிகளும்பிரணாயாமமும் பெரும் சித்திகளும்சுயதீஷைகளும் சூஷ்ம சித்திகளும்குண்டலினி எழுப்பும் சாதனைபரிணாமத்தை உயர்த்தி பராசக்தியினை நெருங்குஉட்புலன் களை வளர்யோகியரின் உணவும் சுகாதாரமும்ஹிப்னாடிச எளிய சாதனைபிரமித பெரும் சாதனைகள்ஆவிகளின் தொடர்பும் அரும்பயன் களும்உன் வருங்காலம் அறிமானஸதிசை காட்டிமரண பயம் தவிர்திராடகதிறன் சக்திபாவனா சக்திதூங்காமல…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 18: நாமங்கள் 10 - 17

மனோரூபேஷு கோதண்டா (10)  மனமாகிய கரும்பு வில்லை உடையவள் மனம் சங்கல்பம் விகல்பம் என்ற இரண்டு செய்கைகளும் உடையது. சங்கல்பம் எண்ணத்தில் சரியானது என்று முடிவெடுக்கும் செய்முறை, விகல்பம் என்றால் எண்ணங்களுக்கிடையிலான வேறுபாட்டினை உணர்ந்தறியும் செய்முறை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான செய்முறை. மனமும் அறிவைப்போன்று நுண்ணியது. மனம் ஐந்து புலன்களினூடாக பிரதிபலிக்கும். மனம் புலன்களூடாக பெறும் பதிவுகள் மூலம் சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்தி எண்ணங்களை தூண்டி இறுதியில் செயலினை செய்ய வைக்கிறது.  இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம், கோதண்ட என்றால் வில், இடது முன்னங்கையில் கரும்பாலான வில்லினை கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பாலான வில்? கரும்பினை பிழிந்து சாறு எடுத்தால் அது இனிப்பான சக்கரையினை தரும். அதுபோல் மனதினை பிழிந்து (கட்டுப்படுத்தி வழிப்படுத்தினால்) அவன் இனிப்பான பிரம்மத்தினை அறியலாம். இந்தக் கை மந்திரிணியான ராஜ சியாமளையை குறிக்கிறது.
பஞ்சதன்மாத்ர-ஸாயகா (11) (சப்த ஸபர்ச ரூப, கந்த, ரச எனும்) ஐந்து தன்மாத்திரைகளை பாணங்களாக உடையவள் பஞ்ச என்றால் ஐந்து, தன்மாத்ர என்றால் சுவை, தோடு உணர்வு, பார்வை, ஓலி, மணம் ஆகிய…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 17: நாமங்கள் 04 - 09

சிதக்னிகுண்ட-ஸம்பூதாயை (04)  
அறிவாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றிய பரப்பிரம்ம ஸ்வரூபிணீ
சித்+அக்னி+குண்ட+ஸம்பூதா. சித் என்பது நிர்குண பிரம்மனை அதாவது குணங்களற்ற பிரம்மனை குறிக்கும் (இதுவே உணர்வின் அடிப்படை). அக்னி குண்டம் என்பது நெருப்பினை உடைய யாக குண்டத்தினை குறிக்கும். ஸம்பூதா என்றால் தோன்றியவள் என்று பொருள். அக்னி குண்டம் அல்லது நெருப்பு இருளினை அகற்றுவது. இருள் என்பது அறியாமையினை குறிக்கும், அதனை அவித்யா என்பர், (வித்யா என்றால் அறிவு என்று பொருள்) இந்த நாமத்தினை நெருப்பில் இருந்து பிறந்தவள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவள் அறியாமையினை அகற்றும் அதியுயர் உணர்வு சக்தி. அவள் தன்னுடைய தூய உணர்வு சக்தியால் அறியாமையினை அகற்றுகிறாள், அவள் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஒளியேற்ற மாயா சக்தியான இருளை அகற்றுகிறாள். 
இதே விளக்கம் கிருஷ்ணன் பகவத் கீதையில் (4-37) தருகிறார் " நெருப்பு விறகுகளை சாம்பல் ஆக்குவது போல், அறிவுத்தீ எல்லாக்கர்மங்களையும் அழிக்கின்றது" ஒருவன் உள்ளிருக்கும் தூய பிரம்மனைப்பற்றிய முழுமையான அறிவு அவனுடைய எல்லாக் கர்மங்களையும் (ஸர்வகர்மாணி) அழிக்கும். அவை நல்லதாயினும் தீ…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 16: நாமங்கள் 02 - 03

ஸ்ரீ மஹாரஜ்ஞ்யை (02)  
ஒப்புயர்வற்ற லோகரக்ஷகி/பேரரசி
இந்த நாமமும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் தோங்குகிறது, அதற்கான விளக்கம் முதல் நாமத்தில் தரப்பட்டுள்ளது. மஹாரஜ்ஞ்யை என்றால் அரசிக்கு அரசி, பேரரசி என்று பொருள். 
இந்த சஹஸ்ர நாமத்தில் உள்ள அனேக நாமங்கள் சக்திவாய்ந்த பீஜாட்சரங்களை கொண்டுள்ளது. அந்த பீஜாட்சரங்களை நாமங்களில் இருந்து தனியாக்க இயலாது. பீஜம் அல்லது பீஜாட்சரம் என்பது ஒரு சம்ஸ்க்ருத எழுத்தையோ அல்லது பல எழுத்துக்களின் கூட்டையோ கொண்ட ஒலிகளாக இருக்கும். ஒவ்வொரு பீஜாட்சரமும் மிகவும் இரகசியமானதாக கருதப்படும். இதன் அர்த்தத்தினை புரிந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக உச்சரிக்கும் போது கூட உச்சரிப்பவனுக்கு அந்த மந்திர சக்தி அலைகளால் பலனை வழங்கக்கூடிய சொற்கள் இவையாகும். இவற்றிற்கு தனிப்பட்ட உச்சரிப்பு விதிகள் காணப்படுகிறது. 
தேவி உபாசனையில் சோடஷி மந்திரமே அதியுயர் மந்திரமாகும். சோடஷி என்றால் பதினாறு கலைகள்* அல்லது எழுத்துக்கள் உடையது என்று பொருள். கலை என்பது சந்திரனின் தேய்வுக்கும் வளர்விற்கும் இடைப்பட்ட பதினாறு நாட்களில் சந்திரனது நிலையாகும். மற்றைய மந்திரமான பஞ்சதசி மந்திரம் பதினைந்து எழுத்துக்கள் உள…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 15: ஸ்ரீ மாதா - உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்

ஸ்ரீ மாதா (01) 
உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்


தாயினை நாம் மாதா என்கிறோம். மாதா என்றால் அம்மா. இங்கு ஸ்ரீ என்ற முன்னடைமொழி முக்கியமான ஒன்று. ஸ்ரீ என்பது தாய்மையின் உச்ச நிலையினை குறிப்பது. மனித தாய் தனது குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அன்பையும் பாசத்தையும் புகட்டுபவள். ஆனால் பிள்ளைக்கு வரும் துபன்பங்களை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட துரதிஷ்டங்களை நீக்ககூடிய சக்தி உடையவள் அல்ல. லலிதாம்பிகை மனித தாயிற்கும் மேலானவள். அவள் தனது குழந்தைகளின் துன்பங்களை, துரதிஷ்டங்களை அகற்றும் வல்லமை உள்ளவள். குழந்தைகள் எனும் போது இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவளது குழந்தைகளே. அவளே இந்த முழுப்பிரபஞ்சத்திற்கும் அண்டங்கள் அனைத்திற்கும் தாயாவாள். அவள் மாதா என்று அழைக்கப்பட்டாளும் அவளே படைத்து, காத்து, அழிப்பவள். இந்த பிரபஞ்சம் அவளில் இருந்து உருவானது. அவளது ஆணைப்படியே உலகில் அனைத்தும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் அழியும் போது அவளிலேயே ஒடுங்குகின்றது. இந்த சம்ஸாரம் எனும் பிறவிச்சுழல் பிறப்பு, இருப்பு, இறப்பு என மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சம்ஸாரம் ஒரு சமுத்திரம் போன்றது. அந்த சமுத…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 14: நான்காவது தியான ஸ்லோகம்

அடுத்து நான்காவது தியான ஸ்லோகத்தின் விளக்கத்தினைப்பார்ப்போம். 
ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம்    ஸமந்த - ஹஸிதேக்ஷணாம்  ஸசரசாப  பாஸாங்குஸாம்                   | அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய  பூஷாம்பராம்  ஜபாகுஸும - பாஸுராம்     ஜபவிதௌ  ஸ்மரேதம்பிகாம்             ||
பத அர்த்தம்: 
ஸகுங்கும - குங்குமம் உடைய
விலேபம் - வாசனை
அளிகசும்பி - தேனிக்களால் விரும்பப்படும் 
கஸ்தூரிகாம் - மஞ்சள் பூச்சு
ஸமந்த+ஹஸித+அக்ஷணாம் - அன்பான+புன்னகைக்கும்+தோற்றம்
ஸசர+சாப+பாஸ+ அங்குஸாம் - அம்பு+வில்லு+பாசம்+அங்குசம்                  | அசேஷ+ஜந+மோஹிநீ - யாரென்ற பாகுபாடின்றி கவர்ந்திழுக்கும்
அருணமால்ய - விஷேட வகை சந்தனம்
பூஷ - அணிகலன்
அம்பராம் - சுத்த வடிவம்
ஜபாகுஸும - சிவந்த செவ்வரத்தம் பூ
பாஸுராம் - அலங்கரிக்கப்பட்ட
ஜபவிதௌ - ஜபவிதிக்கமைய 
ஸ்மரேதம்பிகாம் - தியானிக்க வேண்டும்
இதன் பொருளை இப்படி உருவகப்படுத்த வேண்டும்: தேவியினுடைய உடல் குங்குமப்பூச்சினையும், மஞ்சள் பூச்சினையும் கொண்டு தெய்வீக மணம் கமழுகின்றதாகிறது. அந்த மணத்தில் தேனிக்கள் கவர்ப்படுகின்றன. பக்தர்களை பார்த்து புன்னகைத்த முகத்தவளாக காணப்படுகிறாள். நான் கு கரங்களில…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான ஸ்லோகம்

இனி மூன்றாவது ஸ்லோகத்தின் விளக்கத்தினை பார்ப்போம்

த்யாயேத் பத்மாஸநஸ்தாம்  விகஸித   வதநாம்  பத்ம  பத்ராயதாக்ஷீம்  ஹேமாபாம்  பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம    பத்மாம்   வராங்கீம்                               | ஸர்வாலங்கார - யுக்தாம்  ஸததமபய    தாம்  பக்தநம்ராம்   பவாநீம்  ஸ்ரீ வித்யாம்  சாந்தமூர்த்திம்   ஸகலஸுரநுதாம்  ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||
பத அர்த்தம்: 
த்யாயேத் - தியானிக்கின்ற
பத்மாஸநஸ்தாம் - தாமரையில் அமர்ந்திருக்கின்ற அல்லது கால்கள் மடித்து  பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற
விகஸித வதநாம் - கவர்ந்திழுக்கும் முகம், விகஸ என்றால் சந்திரன் என்றும் பொருள், தேவியின் முகம் பௌர்ணமி சந்திரன் போன்றது, 
பத்ம- தாமரை 
பத்ராய - இதழ்
தாக்ஷீம் - கண்கள் (தாமரை இதழ் போன்ற கண்கள்
ஹேமாபாம் - தங்க நிறம்  
பீதவஸ்த்ராம் -  தங்க இழையுடைய ஆடை
கரகலிதலஸத்தஹேம - கைகளில் உடைய
ஹேமபத்மாம் - தங்க நிற தாமரை (தங்க நிற தாமரைகளை கைகளில் உடைய) 
வராங்கீம் - அதீத அழகான உடல் அங்கள் உடைய
ஸர்வாலங்கார - எல்லவிதமான அலங்காரங்கள் கொண்ட 
யுக்தாம் - நகைகள் 
ஸததமபயதாம்  - தொடர்ச்சியான அபயத்தை அளித்த 
பக்தநம்ராம் - தன்னை வணங்குகின்ற பக்தர்களின் பேச்சைக்கேட்…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 12: இரண்டாவது தியான ஸ்லோகம்

இனி இரண்டாவது தியான ஸ்லோகம்

அருணாம்  கருணாதரங்கிதாக்ஷீம்    த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் | அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:   அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
இதன் பத அர்த்தம்: வருமாறு;
அருணாம்: உதிக்கின்ற சூரியன்
கருணா: கருணை
தரங்கிதாக்ஷீம் - கண்களில் இருந்து வெளிப்படும் அலைகள்,   கருணை அலைகளை அள்ளி வீசும் கண்களையுடையவள் தேவி.
த்ருத -  ஆதரவு
பாஷா - பாசக்கயிறு
அங்குஷ - அங்குசம்
புஷ்ப - மலர்
பாண - அம்புகளை (மலர்களை அம்புகளாக கொண்டவள்)
சாபாம் - வில்
அணிமாதிபி ராவ்ருதாம் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்யா, ஈசத்வ, வசித்வ சித்திகளை சூழ உள்ளவள்.
 மயூகை - ஒளிக்கற்றை
அஹ -  நான்
மித்யேவ - விரும்பும்
விபாவயே - பேரின்பம்
பவாநீம் - பவானி, லலிதா சஹஸ்ர நாமத்தில் 112 வது நாமம்.
இந்த ஸ்லோகத்தின் பொருள் வருமாறு: நான் பவானியை தியானிக்கிறேன், உயர்ந்த பேரின்பவடிவானவள், உதிக்கின்ற சூரியனின் நிறத்தை ஒத்த, இது முன்னைய ஸ்லோகத்தில் அவளது சிவப்பு நிறத்தினை உறுதி செய்கிறது.  அவளது கருணை அலைகளை வீசுகிறது. இந்த தியான ஸ்லோகத்தில் நான்கு கைகளை உடையவளாக கருதப்படுகிறது. பின்னிரு கைகளிலும் பாசமும் அங்குசத்தினை  கொண்டிருக்கிறாள்.…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ்லோகம்

லலிதைக்கு நான்கு தியான ஸ்லோகங்கள் உள்ளது என்பது பற்றி முன்னர் பார்த்தோம், இனி அவற்றின் விவரணம் பற்றி பர்ப்போம். இந்த பதிவில் முதலாவது தியான ஸ்லோகத்தின் விளக்கம் தரப்படுகிறது. ஸ்லோகம் வருமாறு;
ஸிந்தூராருணவிக்ரஹாம்    த்ரிநயனாம்   மாணிக்யமௌலிஸ்புரத் தாராநாயக  ஷேகராம்     ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் | பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்    ரக்தோத்பலம் பிப்ரதீம்  ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்   த்யாயேத் பராமம்பிகாம் ||
இதன் பத அர்த்தம்: வருமாறு; ஸிந்தூராருணவிக்ரஹாம் - ஸிந்தூரம் என்றால் பெண்களின் நெற்றியில் வைக்கும் குங்குமம் என்று அர்த்தம். அதன் நிறம் சிவப்பு. அருணாம் என்றால் சூரியன் உதிக்கும் போது உள்ள நிறம். அதுவும் சிவப்பே. இது லலிதா தேவியின் நிறத்தினை குறிக்கிறது. அவளுடைய நிறம்  குங்குமம் பொன்ற சிவப்பு எனவும் உதிக்கின்ற சூரியனின் சிவப்பு எனவும்  இருதடவை வலியுறுத்தி உள்ளதன் காரணம் என்ன? வாக்தேவிகள் தேவியின் நிறம் சிவப்பு என்பதனை இரண்டு உதாரணம் கூறி மிக்க வலியுறுத்திய கூறவே. விக்ரஹாம் என்றால் உருவம் என்று பொருள். த்ரிநயனாம் என்றால் மூன்று கண்ணுடையவள் இது பௌதீகமான மூன்று கண்கள் உடையவள் என்று பொருள் இல்லை. ப…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் தியான ஸ்லோகத்திற்கான அறிமுகம்

லலிதா சஹஸ்ர நாமத்தில் தேவியை மனதில் உருவகப்படுத்த நான்கு தியான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. தியான ஸ்லோகம் என்றால் தேவியின் தோற்றத்தினை மனதில் உருவகப்படுத்த உதவும் வார்த்தைகளின் தொகுப்பு. முதலாவது "சிந்தூராருண விக்ரஹாம்" என்று தொடங்குவது, இது வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. இரண்டாவது "அருணாம் கருணாதாரங்கிதக்ஷிதாம்" எனத்தொடங்குவது. இது தத்தாத்திரேயாரால் உருவாக்கப்பட்டது. (தத்தாத்திரேர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஸ்வருபமானவர். தத்த என்றால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட என்று பொருள், மும்மூர்த்திகளுமே தம்மை அத்ரி மகரிஷி அனுசூயா தம்பதிகளுக்கு தந்ததால் அவரது பெயரின் பினால் ஆத்ரேய என்று வந்தது). மூன்றாவது "தியாயேத் பத்மாசனஸ்தாம்" என்ற ஸ்லோகம் பற்றி எதுவித குறிப்புகளும் இல்லை. நான்காவது "சகும்கும - விலேபனாம்" என்பது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. எல்லா ஸ்லோகங்களிலும் தேவியினுடைய சிவந்த நிறம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது உதிக்கின்ற சூரியனின் நிறத்தினை போன்றது என உருவகிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகை செதுக்கிய அழகுள்ளவள். அவளுடைய  அழகிற்கும் மே…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 09: பூர்வ பாகம் தொடர்ச்சி ....

ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ வித்தையில் உள்ள ஸ்ரீ புரத்தின் அமைப்பு, ஸ்ரீ சக்கரம், பஞ்சதசி மந்திரம், ஜெப முறைகள், பூஜை முறைகள், அந்தர் யாகம், பஹிர் யாகம் ஆகிய அனைத்தையும் கற்பித்துவிட்டார். ஸ்ரீ வித்தையில் தன்னையும், குருவையும், ஸ்ரீ சக்கரத்தினையும், ஸ்ரீ தேவியினையும் ஒன்றாக அபேத பாவனையினை பெறுவதே இறுதி இலட்சியம். ஹயக்ரீவர் ஏற்கனவே லலிதையின் மந்திரிகளான மந்திரிணி (ராஜா சியாமளா), தண்டினி (வாராஹி) ஆகிய இருவரது சஹஸ்ர நாமங்களையும் அகஸ்தியருக்கு கற்பித்திருந்தார். ஆகவே தற்போது அகஸ்தியர் ஹயக்ரீவரிடம் தனக்கு ஏன் லலிதையின் சஹஸ்ர நாமத்தினை கற்பிக்கவில்லை, தான் அதற்கு தகுதி அற்றவனா என்ற கவலையுடன் வினாவினார். அதற்கு ஹயக்ரீவர் " லோபாமுத்ரையின் பதியே, ஸ்ரீ வித்தை மிகவும் இரகசியமானது, அதனை கேட்காமல் உபதேசிக்க கூடாது, ஆதலால்தான் தான் வலிந்து உபதேசிக்கவில்லை" என்று சமாதானம் கூறினார்.  அகத்தியர் கேட்டதால் ஹயக்ரீவர் அதனை அவருக்கு உபதேசித்தார். அத்துடன் லலிதா சஹஸ்ர நாமத்தினை பாராயணம் செய்ய விரும்புபவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்பது பற்றி கூறினார்; அவை வருமாறு; ஸ்ரீ மாதாவின் மேல் அதீ…