குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 21, 2019

போகரும் புவனேஸ்வரி தேவியும்


***********************************************
ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்ட தியானத்தின் பின்னர் அன்னை அண்டத்தின் இயக்கத்தையெல்லாம் காட்டி அண்டத்திலிருந்து சக்திகளை எல்லாம் தாவர வர்க்கமும், தாது வர்க்கமெல்லாம் எப்படி ஈர்த்து வளர்கிறது என்று போகனுக்கு காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்து தெளிந்துகொண்டிருந்த போகனுக்கு அன்னை தன் புன்சிரிப்புடன் கேட்டாள்
போகா, எனக்கு ஏன் புவனேஸ்வரி என்று பெயர்? உனக்கு ஏன் போகன் என்று பெயர்?
அதற்கு போகரோ,
அன்னையே, தாங்கள் அண்டத்தின் இயக்கத்தை பூமியில் வனங்கள் எனும் தாவர வர்க்கத்தின் மூலம் ஈர்த்து பூமியை வளப்படுத்தும் தலைவி என்பதால் பு + வன + ஈஸ்வரி, பூமியிலுள்ள வனங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரி,
இந்த ஞானத்தையெல்லாம் தங்கள் அருளால் போகித்து பேரின்பம் காண்பதால் எனக்குப் பெயர் போகன்.
அன்னையும் சிரித்துக்கொண்டு வனத்திலுள்ள மூலிகைகள் எல்லாம் எப்படி அண்டத்துடன் தொடர்புகொள்கிறது என்ற ஞானம் பெற்றாய் போகா, பெற்ற ஞானத்தை பாமரனும் பயன் பெற விஷத்தை அமிர்தமாக மாற்றி ஆறறிவு தத்துவத்தை விளக்கி நவபாஷாணச் சிலையை தயார் செய்து பிரதிஷ்டை செய்வாய் என்று ஆசி கூறி பேரொளியாய் மறைந்தாள்.
{அவரவர் மன நிலைக்குத் தக்க கதையாகவோ, கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்,  }

Saturday, January 19, 2019

ரிஷி சிந்தனை - 01


மூலம்: பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யா
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
மனித சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பண்டைய ரிஷிகளின் ஞானத்தை எளிமைப்படுத்தி வழங்கியவரே பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா.  அவரது சிந்தனைகளை வாசகர்களின் சிந்தனைக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க குருவருள் கூடியுள்ளது.

மனிதன் செய்யும் செயல்களையும், ஒட்டுமொத்த சமூகமாக இயங்கும் நிலையையும் உற்று நோக்கினால், அவை அந்த மனிதர்களிலும் சமூகத்தினதும் மனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நம்பிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களும் அவர்களின் மனதில் அல்லது ஆழ்மனத்தில் உத்வேகங்களாக உருப்பெறுகின்றன. உருப்பெற்ற அந்த உத்வேகம், பின்னர் விருப்பமாக மாறி செயலுக்கு வருகிறது.

ஒரு மனிதன் தான் காணும் அல்லது செய்யும் செயல்கள் யாவற்றையும்,  தனது மனத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆழ்மன நம்பிக்கைகள் மூலமாகவே காண்கிறான். பலவித வாழ்க்கை முறைகளையும், பலவித செயல்களையும் உடைய வித்தியாசமான மனிதர்களை நாம் சமூகத்தில் காண்கிறோம்.
இவை அவர்களின் ஆழ்மன உணர்வில் ஆழமாக பதிப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளே! ஒருவனின் நல்லொழுக்கங்களும் அவனது மதிப்பீடுகளும் சமூகத்தில் அவனது செயல்களை கட்டுப்படுத்துகின்றன.

தத்துவவாதி செயிண்ட் எமர் சன் அவர்கள், ”எதிர்காலத்தில் உலகில் போர்கள் இல்லாமல் போய்விடும்எனக்குறிப்பிடுகிறார். ஏனெனில் போர்களுக்கான காரணம் மக்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் எதிரி, எதிர்ப்புணர்ச்சியுடன் கூடிய கொந்தளிப்பு, சண்டை, வெற்றி என்ற ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்பு பட்டுள்ளது.
இவை தற்போதைய உலக சமாதானம், உலக மதம், நாம் அனைவரும் உலகின் பிரஜைகள் என்ற கொள்கைகள் மூலம் மீள் நிரப்பப்படும்போது போர் புரியும் எண்ணம் அகற்றப்படும்.

உலகமே ஒரு குடும்பமாக எண்ணும் எண்ணம் வளரும். இந்த எண்ணம் வளரும்போது மக்கள் அனைவரும் சுய நலமற்று மனித குலத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு உயர்வார்கள். எனவே எதிரிகள் இல்லாமல் போய் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் மனநிலைக்கு மாறுவார்கள். 
(தொடரும்…..)Tuesday, January 15, 2019

குளத்தில் குப்பை போடும் மன நிலையும் குருவும்


*************************************
ஓரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்க்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருலில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத்தொட்டி ஆக்கி விடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.
குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக்கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத்தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப்போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தைத்தினை துளியாக பெற்று பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.

விஞ்ஞான மதம் - Scientific Religion


*************************
இன்று பலரும் அறிவியலால் நிருபிக்கப்பட்டது என்ற வாசகத்தில் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களாக இருக்கக் காணுகிறோம். அவர்கள் அறிவியலால் நிருபிக்கப்பட்டதை மட்டும் நம்புகிறோம் என்ற மதத்தை சார்ந்தவர்கள். ஒரு மதவாதி தனது புனித நூற்களையும், போதகரின் உபதேசத்தையும் எப்படி கேள்விக்குட்படுத்தாமல், சுயஅனுபவத்திற்கு வராமல் நம்புகிறானோ, அதைபோல் அறிவியல் கூறுவது மட்டும் உண்மை என்ற வாதத்தை வைக்கும் அறிவியல் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
அறிவியல் என்பது பௌதீகப் பொருட்களின் அமைப்பு, இயக்கம் என்பவற்றை குறைந்த அளவு வழுவுடன் (lower error), அதிக உறுதியுடன் (higher confidence) அறிவினை பெறுவதற்குரிய ஒரு முறை மாத்திரமே! மேலும் பௌதீகம் தாண்டிய நுண்மையினை சூக்ஷ்மத்தை புரிவதற்கு அறிவியல் இன்னும் மாதிரியுருக்களையும் (Models) சுருக்க விஞ்ஞானம் (abstract science) எனப்படும் கணிதத்தையுமே பயன்படுத்துகிறது

எண்ணப்புரட்சி - சிந்தனைப் புரட்சி


நாம் எண்ணும் எண்ணமும், நம்மைச்சூழ உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களின் எண்ணமும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது எண்ணமும் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் அடைந்த விளைவுதான் எம் எல்லோரது வாழ்க்கையும்!
எண்ணம் உருவாகும் எம் மனதையும், எம்மைச் சூழ உள்ளவர்கள் மனத்தையும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்களது மனதையும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களது மனத்தையும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது மனத்தையும் மாற்றாமல் எமது வாழ்வு மாறாது!
எண்ணத்தில் சிந்தனையில் புரட்சிதான் உண்மைப் புரட்சி

உண்மை சாதனை

உண்மை சாதன
**********************

Image may contain: drawing
சிரத்தையுள்ள மாணவன் தனது குருவிடம் தியானம் பயின்று வந்தான். கடுமையான பயிற்சிக்குப் பின்னர்
குருவிடம் மகிழ்ச்சியுடன் வந்து
குருவே, எனக்கு தியானம் சித்தித்து விட்டது, இன்று தியானம் அருமையாக இருந்தது, நல்ல அனுபவம் என்றான்.
அதற்கு குரு, நல்லது அன்பனே இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய் என்றார்.
அதற்கு சீடன் " நான் ஆன்மீகத்தில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன், மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, மூச்சு ஆழமாக செல்கிறது, தெய்வீக அனுபவங்கள் வருகிறது, ஆகவே நிச்சயமாக நான் முன்னேறி விட்டேன் குருவே என்றான் உறுதியாக.
அதற்கு மீண்டும் குரு " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
சீடனுக்கு பெரிய ஏமாற்றமாகிப்போகிவிட்டது. குரு தனது முன்னேற்றத்தை பெரிதாக எடுக்காமல் தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்று மனம் வருந்திக்கொண்டான். இரண்டொரு வாரம் செல்ல மன உணர் ச்சிகளும், உடல் சோம்பலும் வர தியானம் தடைப்பட்டது. தியானத்திற்கு உட்கார முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்ய முடியவில்லை என்றவுடன் தனது குரு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று மனம் புலம்பி வருத்தப்பட்டு விரக்தி அடையத்தொடங்கினான். வீட்டில் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தொடங்கி விட்டது.
நேரே குருவிடம் சென்று, குருவே என்னால் எனது சாதனையை தொடரமுடியவில்லை, மனம் ஒருமைப்படவில்லை என்றான்
அதற்கு குரு அதே பழைய தொனியில் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய்" என்றார்.
அதற்கு சீடனே குருவே என்னால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை என்றான்,
அதற்கு மீண்டும் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று கூறிவிட்டு தனது வேலையைப்பார்க்க சென்றுவிட்டார்.
கதையின் நீதி தியானம் சாதனை என்பது கணியன் பூங்க்குன்றனார் கூறியது போல் "வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே" என்பது போல் நன்றாக நடக்கிறது என்று மனம் மகிழ்ந்துகொண்டிருப்பதும், நன்றாக நடக்கவில்லை என்று துன்ப படுவதையும் விடுத்து தொடர்ந்து பயிற்சியை செய்வது மட்டுமே தேவையானது.

தைப்பொங்கலும் அண்டத்தின் குண்டலினி இயக்கமும்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்!

தைத்திரு நாளிற்குரிய காரணங்கள் உழவர் திருநாள் என்பது சமூகவியல் காரணியாக இருக்க வானியலிலும் மனித உடலிலும் இது எதைக்குறிக்கிறது என்று ஆராய்வோம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. பிண்டத்தில் பிரக்ஞைக்கு (Consciousnesses) இற்கு காரணம் உயிர், உயிர் எப்படி உடலில் மூலாதாரம் தொடக்கம் ஆகஞா சக்கரம் வரை எப்படி பயணித்து உடலை போசிக்கிறதோ அதைப்போல் சூரியன் அண்டத்தின் ஆதாரங்களான ராசி மண்டலங்களில் பயணித்து பயணித்து புவியை வளப்படுத்துகிறது.
பூமியின் ஆறு ஆதாரங்கள் வருமாறும்
மூலாதாரம் - மகரம், கும்பம்
சுவாதிஷ்டானம் - மீனம், தனுசு
மணிப்பூரகம் - மேஷம், விருட்சிகம்
அனாகதம் - ரிஷபம், துலா
விசுத்தி - மிதுனம், கன்னி
ஆக்ஞா- கடகம், சிம்மம்
தக்ஷிண அயனம் என்பது சூரியன் தனுசிலிருந்து மகரத்திற்கு செல்வதுடன், தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கிறது. அதாவது அண்டத்தில் உயிராகிய சூரியன் மகரமாகிய மூலாதரத்தில் பிரவேசிக்கிறது. இனி வரும் ஆறு மாதங்களுக்கு கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக மேலே ஏறிச்செல்லும்.
இதை மனித உடலில் குண்டலினி மேலெறுகிறது என்று குறிப்பிடுவார்கள், குண்டலினி மேலேறுவது என்பது எமது பிரக்ஞை உயர்ந்த நிலையை அடைவதைக்குறிக்கும். பிரக்ஞை உயர்ந்தால் மனம் விரிவுறும், மனம் விரிவுற்றால் வாழ்வு உயரும்.
தக்ஷிண அயனம் தொடங்கும் போது சூரியனாகிய உயிர் அண்டத்தின் ஆக்ஞா சக்கரமான கடகத்தில் புகுந்து கீழிறங்கத் தொடங்கும்.
இப்படி சூரியனின் இயக்கமும், மனித உடலில் உயிரின் இயக்கமும் ஒன்றாக இருப்பதை அறிந்தே அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஞானியர்கள் கூறி அதன்மூலம் பயன்பெறுவதற்கு வழிகளாக பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.
அண்டத்தில் சூரியன் மகர ராசியில் புகும் இந்த வேளையில் எமது மூலாதரத்தில் உயிரை ஒளி நிலைப்படுத்தும் சூரியனின் பிரகாசத்திற்கு மூலகாரணமான அந்த ஸவிதாவின் பேரொளியை எமது மூலதாரத்தில் இருத்தி ஓம் பூர் புவ: ஸ்வ; தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்று காயத்ரியால் தியானித்து, இதைக்காண்போர் யாவருக்கும்,
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச்செய்வாயம்மா, ஆயுள் ஆரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்பா என்று பிரார்த்திக்கிறோம்.

Thursday, January 03, 2019

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சுயகற்கை நெறி (Self-learning course)அகத்திய மகரிஷியின் படம் அல்லது விளக்கு அவர் மனதிற்கு பிடித்த படி { குருநாதர் உயிரை ஒளியாக்கி நஞ்சினை வென்று பேரொளி நிலையை அடைந்த மகாகுரு, உருவம் என்பது எமது மனதிற்கு புரிதலுக்கு இலகுவான குறியீடே அன்றி இதுதான் அறுதி வடிவம் என்று முடிவு செய்யக்கூடாது}

படத்திற்கு முன்னால் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலினை ஒரு சிறிய மரப்பலகை அல்லது தட்டில் வைத்து நூலை குருவாக எண்ணி

“குருதேவா என் அகத்தில் ஈசனாக இருந்து இந்த நூலில் கூறப்பட்ட பேருண்மைகள் எனக்கு புரியும் ஞான ஒளி பெற வழிகாட்ட வேண்டும்” என்று பிரார்த்தித்து விட்டு கண்களை புருவமத்தியில் வைத்து ஒளி மண்டலத்தை மனக்கண்ணில் பார்த்து, அந்த ஒளி எமது உடலில் சேர்வதாக பாவித்து கீழ்வரும் அகத்தியர் மூல குரு மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவேண்டும். இடையில் வேறு சிந்தனைகள் வந்தால் அதுபற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

அகத்தியர் மூலகுரு மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ
மந்திர உச்சரிப்பினை இந்த ஆடியோவில் கேட்கவும்: https://soundcloud.com/sumanenthiran-thava/voice-003

இப்படி தினசரி 108 தடவை ஜெபித்து வரும் வேளை வாரத்தில், உங்களுக்கு வசதியான ஒரு நாளை உங்கள் கற்கைக்குரிய நாளாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

அன்றைய தினம் ஒரு மணி நேரம் கற்கைக்கு ஒதுக்கி அந்தக்குறித்த நேரத்தில் முதல் பாடலை வரியாக படித்து விட்டு, அதன் பொருளை வாசித்து புரிய முயற்சி செய்யுங்கள். அடுத்து வரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போது அந்த வாரத்திற்குரிய பாடலின் பொருளை மீண்டும் மீண்டும் படித்து மனதில் சிந்தித்து வாருங்கள். படித்து விட்டேன் பொருள் விளங்கி விட்டது என்ற நினைவை எடுக்காதீர்கள். எவ்வளவு பொருள் விளங்கிவிட்டது என்று மனம் கூறினாலும் மீண்டும் மீண்டும் தினசரி அந்த ஒரு பாடலை மாத்திரம் அந்த வாரம் படியுங்கள்.  ஒரு நோட்டுப்புத்தகத்தில் உங்கள் சந்தேகங்களை குறித்துக்கொள்ளுங்கள். அவற்றிற்கு பதில் உடனடியாக கிடைக்கவேண்டும் என்று மனப்பதற்றம் அடையாமல் அவற்றிற்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கற்கையை தொடருங்கள். இப்படி 30 வாரங்களில் நூல் முழுமையையும் படித்து முடியுங்கள்.

இப்படிக் கற்கும்போது அரிய பல யோக இரகசியங்கள் உங்கள் ஆழ்மனமாகிய சித்தத்தில் புலப்படும். மெதுவாக உங்கள் ஆழ்மனத்தில் குருவின் பேரொளி துலங்கத்தொடங்கும். இதன் பயனாக நீங்கள் குருமண்டலத்தின் வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கத்தொடங்கும். உங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், கவலைகள் மெதுவாக நீங்கத்தொடங்கி உயர் யோக சாதனை செய்யக்கூடிய பண்பு உங்களில் உருவாகும்.

இதை செய்யத்தொடங்குவதற்கு எந்த நேர காலமும் பார்க்கத்தேவையில்லை. உங்கள் மனதில் செய்ய வேண்டும் என்று தோன்றியவுடன் செய்யத்தொடங்கவும். அந்த எண்ணமே குரு நாதரின் ஈர்ப்பு, அதை தவறவிட்டால் மற்றைய எண்ணங்கள் எமக்குள் வந்து இதை வலுவிழக்கச்செய்து எமது ஆன்ம முன்னேற்றத்தைத் தடுக்கும்.  

இப்படி கற்றலில் போது உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை ஆசிரியர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுடன் இந்த மின்னஞ்சலில் (sithhavidya@gmail.com) தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.

Tuesday, January 01, 2019

குளத்தில் குப்பை போடும் மன நிலையும் குருவும்


*************************************
ஓரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்க்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருலில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத்தொட்டி ஆக்கி விடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.

குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக்கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத்தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப்போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தைத்தினை துளியாக பெற்று பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.

சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...