குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 12, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 08

இனி ஐந்தாவது பாடல், 
பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.
புருவ மத்தியில் பொல்லா மணியைப் புணர்ந்தால் பரமானந்த அனுபவம் தானாகக் கிடைக்கும். ஆனால் உடல் அனுபவத்தில் இச்சை ஏற்பட்டால் அந்த அனுபவம் பிரிந்து அவற்றில் ஆர்வம் உடையதாகிவிடும். 
இதை எண்ணித் தான் முன்னைய பாடல்களில் மாலும் அயனும் செய்யும் செய்கையால் எப்படி ஒருவன் தனது கீழ்சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகத்தில் சிக்கி பொல்லா மணியைப் புணர்ந்து பெறும் பேரானந்தத்தை இழந்து விடுவான் என்பதை சுட்டிக் காட்டியவர் இந்தப் பாடலில் அந்த நிலையை மேலும் அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். 
தனது யோக சாதனையால் அடைந்த உயர்ந்த நிலை பெருமாநிலம் எனும் உடலில் தூண்டலால் அருமாலுற்றேன் என்கிறார், அருமாலுற்றேன் என்றால் மயக்கமுற்றேன் என்று அர்த்தம். 
அடுத்த வரிகளைப் பண்டிதர்கள் அன்பு பெருகி கண்ணீர் மல்கி உரோமஞ் சிலிர்க்கும் அனுபவத்தை பெருமானார் கூறுவதாக பொருள் கொள்வார்கள். எனினும் அடுத்த வரிகள் ஆழ்ந்து யோக நுணுக்கத்துடன் பொருள் காணப்பட வேண்டியவை. 
என்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்
புரிந்து நிற்ப என்ற வரிகள் உள்நீர் சொரிய வரும் அனுபவங்கள் எவை என்றால் என்றென்றும் சொரிந்துக் கொண்டிருக்கும் கண்ணீர், உரோமஞ் சிலிர்ப்ப, மனது அன்பால் நிறையும் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும். 
பல பண்டிதர்கள் உள்நீர் என்பதற்கு பொருளை உள் அன்பு என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் உள் நீர் என்றால் புருவமத்தியில் உணர்வை ஒன்றுவதால் தலையில் சுரக்கும் அம்ருதம் என்பது சித்தர்களின் பரிபாஷை. 
புருவ மத்தியில் உள்ள பொல்லா மணியாகிய சிவத்தைப் புணர்ந்தால் யோகி அம்ருதத்தைப் பெறுகிறான். அப்படி அம்ருதமாகிய உள் நீர் சுரந்தால் மனதில் அன்பு பெருகும், உரோமம் சிலிர்க்கும், உடல் நடுங்கும், பரமானந்த நிலை வாய்க்கும்! இப்படி எல்லாம் உயர்ந்த நிலையை அனுபவிக்கையில் பெருமாநிலம் எனும் உடலில் இச்சைகள் அந்த அனுபவத்தைப் பெறமுடியாமல் பிரித்து அருமாலுறும் - மயக்கமுறும், உடலில் தூண்டலுக்கு மயக்கமுறாமல் அதைப் புரிந்து பொல்லாமணியைப் புணர்ந்து பேரானந்ததில் என்றென்றும் நிற்பது எக்காலம் என்று கேட்கிறார் மாணிக்க வாசகர்! 
ஆக சித்தர்கள் கூறும் அம்ருதம் பெறும் நிலையை மிகச் சூக்ஷ்மமாக பரிபாஷையாக இந்தப்பாடலில் கூறியுள்ளார் பெருமானார்! 
பெரும்பாலும் பலர் மாணிக்கவாசகர் உருகி உருகிப் பாடி உணர்ச்சியையும், தமிழின் எதுகை மோனை சொற்பிரயோகங்களையும் கொண்டு திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகாதார் என்று சொல்லுகிறார். 
இராஜ தந்திரியான அமாத்திய மாணிக்கவாசகர் உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய யோக இரகசிய நுணுக்கங்களை பரிபாஷையாகக் கூறி சிவபுராணத்தின் கடைசி வரியில் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து என்று அதை அறிவதற்குரிய சாவியையும் கொடுத்துச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...