பல வருடங்களுக்கு முன்னர் முற்பிறவி பற்றிய ஆர்வம் கொண்டிருந்த போது படித்த நூல்களில் ஒன்று வழக்கறிஞர் தங்கவேல் எழுதிய ஆவியுலகத் தொடர்புகளும் ஆறுமுகக் கடவுளும் என்ற நூல், இன்னொரு நூலும் அவர் எழுதியிருக்கிறார்.
இதில் அவர் ஆவியுலகின் தொடர்பு மூலம் தன்னை நாடி வருபவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு, அல்லது பிரச்சனைக்கான முற்பிறவி காரணம் என்ன என்பதை விளக்குவார். அதில் அனேக காரணங்கள் இப் பிறவிக்கான காரணம் முற் பிறவியில் அவர்கள் Extreme ஆக வெறுத்து ஒதுக்கிய விஷயத்தை இப் பிறவியில் அடைந்திருப்பதாக இருக்கும்.
இஸ்லாமியர்களை தனது கோயில் திருவிழாவிற்கு வரக் கூடாது என்று துன்புறுத்திய இந்து ஒருவன் அடுத்தப் பிறவியில் இஸ்லாமியனாகப் பிறந்து ஒவ்வொரு முறை கோயிலைக் கடக்கும் போதும் கோயிலிற்குள் போக வேண்டும் மன ஏக்கம் உடையவனாக,
தனது உடல் அழகால் தனது மாமன் மகளை வெறுத்து ஒதுக்கியவன் அடுத்த பிறவில் அழகற்றவனாக என்று எல்லா சம்பவங்களினதும் செய்தி எதை extreme ஆக செய்தார்களோ அதைச் சமப்படுத்துவது தான் இந்தப்பிறவி என்ற வகையில் இருக்கும்.
நண்பர் Arvind Swaminathan ஆவியுலகம் பற்றி ஆராய்பவர். எழுத்தாளர். அடிக்கடி Dr. Walter Semkiw, பற்றிக் குறிப்பிடுவார். நேற்று டாக்டர் வால்டரின் தளத்தைப் பார்த்த போது பல பிரபலங்களின் மறுபிறவி பற்றி ஆய்வு அறிக்கைகள் காணக்கிடைத்தது.
அதில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் முற்பிறப்பு மிக ஆச்சரியமானதும், எவராலும் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாதது ஆக இருக்கும். முற் பிறவியில் அவர் ஒரு மிகப்பெரிய செய்யது அகமட் கான் என்ற முஸ்லீம் அறிஞராக இருந்திருக்கிறார் என்பது. முழுவிபரமும் இங்கே பாருங்கள்.
http://www.iisis.net/index.php...
எமது பிறப்பு என்பது நாம் எதை எதிர்த்தோமோ, வெறுத்தோமோ அதை அனுபவிப்பதாக அமைகிறது என்பது ஆச்சரியமான கர்ம விதி!
கடவுளை எதிர்ப்பவர்கள் பக்தர்களாக மாறலாம்!
கடவுள் கடவுள் என்று பைத்தியக் காரத்தனமாக பக்தி செலுத்தியவர்கள் அதி நாத்திகராக மாறலாம்!
இது பற்றி ஓஷோவின் சிஷ்யை ஒருத்தியின் அனுபவமும் பொருந்தி வருகிறது. அவர் ஒரு முறை முற் பிறவியை அறியும் தியானம் பற்றி உரையாடிய போது அதைக் கற்றுத் தரும்படி அவரது பேராசிரியையான மாணவி ஒருத்தி கேட்க ஓஷோ அதனால் வீண் விளைவுகள் ஏற்படும் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனால் அவர் வற்புறுத்தி கேட்டு அந்த தியானத்தைப் பயிற்சித்து தனது முற் பிறவியை அறிந்த பின்னர் கதி கலங்கிப் போனார். அவர் இந்தப் பிறவியில் மிக ஒழுக்கமான, கல்வியறிவு பெற்ற ஆன்மீக வாழ்வு வாழும் பெண்மணி, முற் பிறவியில் ஒரு விலைமாதுவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப் பிறவி அதற்கு நேர் எதிரான extreme ஆக இருந்திருக்கிறது.
ஆக, அதி விருப்பாலும், அதி வெறுப்பாலும் நாம் பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.