குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, May 21, 2019

மந்திர ஜெபம் - பதஞ்சலியோக சூத்திரம் - மூளை அறிவியல்

மனதினைச் சரியாக பயன்படுத்துவதன் மூலம் மூளையை மாற்றமுடியும் என்பதை பதஞ்சலியாரும் புத்தரும் தெளிவாக அறிந்துள்ளார்கள். 

இங்கு யோக சூத்திரத்தில் பதஞ்சலியார் மந்திர ஜெபத்திற்கு தரும் வரைவிலக்கணத்தைப் பார்ப்போம். 

तज्जपः तदर्थभावनम् ॥२८॥

taj-japaḥ tad-artha-bhāvanam ॥28॥

அதனை (மந்திரத்தை) தொடர்ச்சியாக ஜெபித்துக்கொண்டு அதன் அர்த்தத்தை பாவித்துக்கொண்டு இருக்க ,

ஒருவன் தன்உணர்வினை (consciousness) அடைவதன் மூலம் தனது யோகப்பாதையில் மனதின் வழுவால் ஏற்படக்கூடிய தடைகளையும் நீக்குகிறான். 

இங்கு பதஞ்சலி மந்திரம் எனக்குறிப்பிடுவது ஓம், ஆனால் அவர் கூறும் அறிவியலை நாம் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். 

ஜெபம் என்பது தைல தாரையைப்போல் தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் உச்சரிக்கப்பட வேண்டும், அதேவேளை அதன் பொருள் உணர்ச்சிப்பூர்வமாக மனதில் உருவகப்படுத்தப்படவேண்டும். இப்படி செய்யப்படும் ஜெபம் ஒருவனின் தடைகளை நீக்கி தன்னுணர்வினைத் தரும். 

இதை காயத்ரி மந்திர சாதனை சரியாகச் செய்கிறது, காயத்ரி மந்திரத்தின் பொருள் "புத்தியைத்தூண்டும் அந்த பேரொளியை என்னில் இருத்தி தியானிப்போமாக" என்பதாகும். சரியான உச்சரிப்புடன் இந்தப்பொருளை மனதில் பாவித்துக்கொண்டு செய்யப்படும் காயத்ரி மந்திர ஜெபம் மூளையில் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இன்றிய நவீன அறிவியல் உறுதிப்படுத்தியுள்ள "Thought process of mind change the brain" என்ற முடிவுக்கு பொருந்தி வருகிறது. 

காயத்ரி மந்திரத்தின் மூளை மீதான தாக்கம் பற்றிய சிறு ஆய்வினை The International Journal of Indian Psychology {ISSN 2348-5396 (e) | ISSN: 2349-3429 (p), Volume 3, Issue 2, No.7, DIP: 18.01.115/20160302} 

வெளியிட்ட Effect of Gayatri Mantra Meditation on Meditation Naive Subjects: an EEG and fMRI Pilot Study by I S Thomas, S Rao; l (2016) என்ற கட்டுரை உரையாடுகிறது. 

மேற்குறித்த ஆய்வு பொதுமைப்படுத்தக்கூடிய விதியைத் தரும் பரந்த எண்ணிக்கையான Sample களைக் கொண்டிருக்காவிட்டாலும் அதுவரை காயத்ரி மந்திரத்தைப் பற்றி தெரியாதவர்களைக் கொண்டு தனியே மந்திரத்தை மட்டும் கேட்கச் செய்து மூளையில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்துள்ளார்கள். 

அவர்களின் முடிவுகள்:

The results showed that the areas that had maximum activation were in the bilateral superior temporal gyri, right temporal lobe, right insula, left inferior parietal lobule, lateral globuspallidus and culmen of the cerebellum. 

அர்த்தம் தெரியாமல் மந்திரத்தைக் கேட்பதனால் மேற்குறித்த பகுதிகள் தூண்டப்படுகின்றன என்பதே இந்த ஆய்வின் முடிவுகளாகும். 

இதில் முக்கியமான செய்தி காயத்ரி மந்திரத்தைக் கேட்கும் போது insula எனப்படும் insular cortex தூண்டப்படுகிறது என்பதும், நீண்டகால தியான சாதகர்களில் இந்தப்பகுதி தடித்து இருப்பது அறியப்பட்டுள்ளமை ((Lazar et al, 2005, Meditation experience is associated with increased cortical thickness. Neuroreport, 16, (17): 1893-1897, 

மூளையின் Insular cortex பகுதியே ஒருவரின் உணர்ச்சி, விழிப்புணர்வு, உடல் சமனிலை என்பவற்றைக் கட்டுப்படுத்துகிறது. காயத்ரி மந்திர ஜெபத்தை கேட்பதன் மூலம் (கவனிக்கவும் பதஞ்சலி கூறுவது போல் அர்த்ததுடன் ஜெபிப்பதால் அல்ல) இந்தப்பகுதி தூண்டப்படுகிறது. 

கேட்கும் ஒலியமைப்புகளே மூளையைத் தூண்டுகிறது என்றால் சரியான அர்த்தம் புரிந்து மூளையில் தகுந்த எண்ண அமைப்பை (thought process) ஏற்படுத்தும் ஜெபசாதனை மூளையில் இன்னும் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அனுமானிக்கலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...