மன்னர் புலிகேசிக்கும் உளவு அணித் தலைவருக்கும் உரையாடல்.
மன்னா, காலகேயர்களின் தாக்குதலுக்கு பழிவாங்க சிங்க வமிசத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தப் போகிறார்களாம்.
ஓ அருமை, நாளை நடவடிக்கை எடுப்போம்!
உளவு அணித் தலைவர் சென்ற பின்னர், உடனடியாக தனது உதவி மந்திரியை அழைத்து அடேய் உடனடியாக நாளை காலை புஷ்பக விமானத்தை ரெடி பண்ணு! கடாரம் வழியாக சுற்றுலா செல்லுவோம்! மகனும் கலியாணம் முடிந்து ஒரு வாரம்தான்! இந்த தொல்லைபிடித்த அரசன் வேலையை விட்டு எப்போது தான் விலகப் போகிறேனோ!
மன்னா நாட்டின் நிலவரம் மிக மோசமாக இருக்கிறது, பாதுகாப்பு உத்தரவுகள் நீங்கள் தான் பிறப்பிக்க வேண்டும்?
மங்குனி அமைச்சரே, அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்! சென்ற முறை யாருக்கும் பொறுப்புக்கொடுக்காமல் சென்றேன் என்றுதானே பிரதமந்திரி அவதூறு சொல்லிக்கொண்டு இருக்கிறான்! இந்த முறை ஒரு அமைச்சரை நியமிக்கப் போகிறேன். எப்படியும் வன்முறைகளை நாம் கட்டுப்படுத்தப் போவதில்லை! நாடு திரும்பியவுடன் அவரை பதவி விலகச் சொல்லி விட்டு வேறு ஒருவரை நியமித்து விடுவேன், எப்படி யோசனை?
அமைச்சர் மனதிற்குள், நல்ல மடையனை அரசனாக வைத்துக்கொண்டு நாம் படும் பாடு!
புலிகேசியார், என்ன அமைச்சரே!
இல்லை மன்னா, அருமையான யோசனை, உடனடியாக விமானத்தை தயார் படுத்துகிறேன்!
மங்குனி அமைச்சரே, நீர் மனதிற்குள் என்ன எண்ணுகிறீர் என்று தெரியும், வசமாக மாட்டுவீர் அப்போது வைத்து செய்கிறேன்!
புலிகேசி மன்னர் பாங்க கொங்கா நாட்டிற்கு கடாரம் வழியே சுற்றுலா சென்றார்!
- யாவும் கற்பனை -
இம்சை அரசன் 23ம் புலிகேசியில் அரசியல் ஞானம், நாவலில் இருந்து ஒரு பகுதி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.