குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 16, 2012

கவச பிரயோகம் தாந்திரீக அடிப்படையில்

கீழ்வரும் பதிவுகளையும் வாசிக்கவும்:

விநாயகர் கவசம் பற்றிய 03வது பதிவில் குறித்த கவசப் பிரயோகத்தின் சாரத்தினை குறித்த தெய்வம் சாராமல் விளக்குவதாக கூறியிருந்தோம், அதன்படி இந்த பதிவில் அவற்றை விளக்குவோம். கவசம் என்பது தாந்திரீக வழிபாட்டில் தாம் உபாசிக்கும் தெய்வ சக்தியினை தமது ஸ்தூல, சூஷ்ம உடலினை மற்றைய தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பதற்காக சக்தி வாய்ந்த பீஜ மந்திரங்களையும், கட்டளைச் சொற்களையும் (suggestions) கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒருவகை மந்திர தோத்திரங்களாகும்.

மனிதன் என்பவன் பிராணன், மனம், உடல் என்பவற்றினால் ஆக்கப்பட்ட உணர்வின் கலவையே ஆவான். எந்த தெய்வசக்தியாக இருந்தாலும், தீய சக்தியாக இருந்தாலும் இந்த மூன்றையும் தாக்கியே ஒருவரிற்கு பலனை ஏற்படுத்தவேண்டும். உதாரணமாக நோய் உருவாவது எப்படி என்பது சித்தவித்யா விளக்கத்தில் பார்ப்போம், நோய் முதலில் ஆழ்மனதில் சூஷ்மமாக உருவாகி, பின் பிராணனை தடைப்படுத்தி ஸ்தூல உடலில் வெளிப்படும். ஆழ்மனதில் உருவாவதற்கான காரணம் பூர்வ கர்மம், தவறான ஆழ்மனப்பதிவுகள், பயம் என்பனவாகும், ஆழ்மனத்தில் பதியாமல் எந்த ஒன்றும் செயலுக்கு வருவதில்லை என்பது தற்கால மனவியலும் ஏற்றுகொண்ட பெருண்மை. இப்படிப்பட்ட தவறான பதிவுகள் சூஷ்ம உடலில் முதலிம் பிரண ஓட்டத்தினை தடைசெய்கின்றன. அதனால் பிராண ஓட்டம் சூஷ்ம உடலில் தடை பட்டு அந்த தடை உடலில் நோயாக உருப்பெறுகிறது. 

இதுபோல் மற்றயோரின் எண்ண சுழல்களும் மனதினை தாக்கி எமது பிராண ஓட்டத்தினை தடைசெய்யும் வல்லமை உடையவை, இது எண்ணுவோரின் மன பிராண வலிமையினைப் பொறுத்தது. இத்தகைய தடைகளை நீக்கி எமது பிராண மன ஓட்டங்களை சீராக்கி, பின்னர் எமது மனதில் பிராணனில், உடலில் பலமான தெய்வ சக்தியினை பதிப்பிக்கும் செயன் முறையே கவசம் எனும் தோத்திர முறையாகும்.

மனம் பிராணன் உடல் இடைத்தொடர்பும் இடைத்தாக்கமும்

மனம், பிராணன், உடல் என்பன ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பும், இடைத்தங்கலும் உடையவை. ஒன்றை வைத்து இன்னொன்றினை கட்டுப்படுத்த முடியும் என்பது எமது சித்தர்களும், முன்னோரும் கண்டு பிடித்த இன்னொரு இரகசியமாகும். மனதில் ஒன்றை புகுத்தினால் அது பிராணனிலும், உடலிலும் மாறுதலைச் செய்யும், இதுவே மந்திர சாதனை தோத்திர பாடல்கள் என்பவற்றின் அடிப்படை தத்துவமாகும். 

இதன் படி கவச பாராயணத்தின் ஊடாக உடலின் ஒவ்வொரு பகுதியில் உணர்வைச் செலுத்த அதில் பிராண சக்தி பாய்ந்து பிராண ஓட்டத்தினை சீர் செய்ய தொடங்கும். மனம் எங்கு உள்ளதோ அங்கு பிராணனும் இருக்கும். இவை இரண்டும் இணைபிரியா இரட்டை சகோதரர்கள். இதுவே கவச பாராயணத்தின் அடிப்படை தத்துவம். இதனை கொண்டு கடவுள், மதம் சாராமல் எப்படிப் பயன் படுத்தலாம் என பார்ப்போம். முற்காலத்தில் கடவுளை சார்ந்து, யோக விளக்கங்கள் அறிந்தவர்களாகவே எமது முன்னோர்கள் இருந்தனர்,ஆனால் தற்காலத்தில் மதம் என்பது உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி பல குழப்ப நிலையில் இருப்பதால் அடிப்படையினை கொண்டு இதனை சாதிக்கும் முறையினை விளக்குவோம். இதன் படி சாதனை படிமுறை வருமாறு;

ஒளியால் கவசமிடல்

சாதனை:

 • தனியாக இதனை பயிற்சிப்பதற்கு அமைதியான, காற்றோட்டமான ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 
 • சுகாசனம், சித்தாசனம் போன்று அமர்ந்த நிலையிலும் செய்யலாம். அல்லது சாய்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த வண்ணமும் செய்யலாம். 
 • உங்களுக்கு இஷ்ட தெய்வம் இருப்பின் அந்த தெய்வத்தினது மந்திரத்தினைக் கொண்டு விநாயகர் கவச பதிவில் கூறியபடி செய்யலாம், இல்லையெனில் கீழ்வருமாறும் செய்யலாம்,
 • கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சினை ஆழமாக இழுத்து சில முறை விடுங்கள். 
 • உடல் தளர்வாகிய பின்னர் ஒரு தங்க நிற ஒளி ஒன்று மூச்சினூடாக வெளியில் இருந்து நெற்றிப் பொட்டில் வந்து உறைவதாக பாவிக்கவும். ஒளி சூடற்ற குளிர்மையானதாகவும் பிரகாசம் பல சூரியனை ஒத்ததாகவும் பாவிக்கவும். பின்னர் இந்த ஒளி அப்படியே தலையின் உள்ளும் புறமும் சென்று மூளையினை நன்கு பலப்படுத்துவதாக பாவிக்கவும். 
 • அதன் பின் மூளையில், தலையில் அந்த ஒளி பரவிய பின்னர் அந்த பிரகாசம் அப்படியே இருக்க ஒளி அடுத்து படிப்படியாக ஒவ்வொரு உறுப்புகளினை அடைந்து அந்தந்த உறுப்புகளை ஒளியேற்றி பிரகாசிக்க செய்வதாக பாவிக்கவும். 


    1. புருவம்,
    2. கண்கள்
    3. மூக்கு
    4. காது
    5. வாய் 
    6. கழுத்து
    7. கைகள் இரண்டும்
    8. மார்பு
    9. நெஞ்சின் நடுப்பகுதி
    10. வயிறு
    11. தொப்புள்
    12. இன உறுப்புகள்
    13. தொடை
    14. முழங்கால்
    15. கணுக்கால்
    16. பாதம் 
    17. பெருவிரல் 

பின்னர் இந்த உறுப்புகளினூடாக பின்வரிசையில் ஒவ்வொரு உறுப்பகளினூடாக அந்தந்த உறுப்புகளில் ஒளி பிரகாசிப்பதை மனக்கண்ணில் கண்டு கீழ்வரும் ஒழுங்கில் செல்லவும். 
    1. பெருவிரல் 
    2. பாதம் 
    3. கணுக்கால்
    4. முழங்கால்
    5. தொடை
    6. இன உறுப்புகள்
    7. தொப்புள்
    8. வயிறு
    9. நெஞ்சின் நடுப்பகுதி
    10. மார்பு
    11. கைகள் இரண்டும்
    12. கழுத்து
    13. வாய்
    14. காது
    15. மூக்கு
    16. கண்கள்
    17. புருவம்,
    18. மூளை/தலை 

வரை சென்று பின்னர் மீண்டும் அந்த ஒளி புருவ மத்தியில் இருப்பதை உணருங்கள். இப்போது உங்கள் மனதில் உங்கள் உறுப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒளிக்கற்றை வீசுவதை மனக்கண்ணில் பாருங்கள். இப்பொது அடுத்தகட்டமாக இந்த ஒளியினை கவசமாக்கும் செய்முறையினைப் பார்ப்போம். 

இப்பொழுது மேற்குறித்த ஒவ்வொரு உடல் பகுதியிலுமிருந்து ஒளி விரிவடைந்து உடலைச் சூழ முட்டை வடிவில் உருவாவதை அனுபவியுங்கள். இது எவ்வளது தூரம் என்பது உங்களது பிராண மனோசக்திகளது ஆற்றலினால் தீர்மானிக்கபடும். சாதாரணமாக் உடலைச் சூழ முன்று - நாலு அடிகள் சூழ்ந்திருப்பதாக பாவியுங்கள். இந்த நிலையில் வேறு எந்த தீய சக்தியும் உங்க்களினுள் வரமுடியாது போகும். 

ஆரம்ப காலத்தில் காலையில் இப்படி சாதனை செய்துவிட்டு ஆபீஸுக்கு சென்றீர்களானால் மாலையில் வீடு வரும் போது மற்றவருடைய காந்தசக்தியினால் தாக்கமுற்று குறைந்திருக்கும். சிலமாத பயிற்சியில் நிரந்தரமான ஒளிகிரகணம் உடலைச் சூழ அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.

இந்த பயிற்சி செய்து உடலைச் சூழ ஒளி இருக்கும் போது மனதில் உங்க்களுக்கு வேண்டியவரிற்கு நல்லெண்ணத்தினை அனுப்பினால் அது அவரிற்கு பலிக்கும், இப்படி சிந்தித்தறிந்து கொள்வதன் மூலம் பல காரியங்க்களை செய்யலாம்.

இதன் அடிப்படை மனதிலும் உடலிலும் பிராண ஓட்டத்தினை சீராக்கி வலிமைப்படுத்தலேயாகும். 

பயிற்சித்து பலனைக் கூறவும். 

சத்குரு பாதம் போற்றி !

Friday, June 15, 2012

வாசகர் சந்தேகங்கள் : சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா?

எமது சித்தவித்யா பதிவுகளை படித்த நண்பர் ஒருவர் சில சுவாரசியமான கேள்விகளை அனுப்பி வைத்திருந்தார். அவற்றிற்கு எம்மாலான பதிலை கூறியுள்ளோம். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

1 . சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா? (முடியும் எனில் ஏன் பிரம்மச்சரியம் ,பற்று அ ற்ற நிலை அல்லது பாசம் துறத்தல், விந்து கட்டுப்பாடு, காம நோய்? என பலவாறு கூறுகின்றனர் அது ஏன்) தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது) என்று சில பதிவுகளில் படித்து அதிர்ந்து போனேன்.. இது தவறு என்று தெரிந்தாலும் மனதில் சிறு குழப்பம். இதுதான் என் கேள்வியின் அடிப்படை

இந்தக்கேள்வி எழுவதன் அடிப்படை எம்மனதில் உள்ள குழப்பமே என்பது எமது அனுமானம். இப்படியான குழப்பம் எழுவதன் ஆரம்ப புள்ளி நாம் எமது கலாச்சாரத்தின் பண்பாட்டின், தொடர்ச்சியினை இழந்து விட்டதன் விளைவு என்பதே எமது கருத்து.


எமது கலாச்சாரம் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வின் மெய்யியலை எடுத்துக்கூறிய கலாச்சாரம் என்பதனை அறிந்திருப்பீர்கள். வாழ்வில் தர்மத்தினை கொண்டு பொருள் ஈட்டி, காமம் முதல் இன்பங்களை அழகாக அனுபவித்து வீடு எனும் முக்தியடைவதையே வாழ்வியலாக காட்டினர் எமது முன்னோர். இப்படியான கலாச்சாரத்தில் தியானம் செய்வதற்கு இல்லறம் முடியாது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. 


பற்று அற்ற நிலை என்பது ஒருவருடைய மனம் முதலான அந்தக்கரணங்கள்  சார்ந்த ஒன்று, அதற்கும் வெளிவேடங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை. காவிகட்டியவரெல்லாம் பற்று அற்றவருமில்லை, மனைவி மக்களுடன் தொழில் செய்து உலகவாழ்க்கை வாழ்பவரெல்லாம் சம்சாரியுமில்லை. ஒருவரது ஆன்ம முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கையினை மறுப்பதால் உண்டாவதல்ல, வாழ்ந்து அதில் பெற்ற அனுபவத்தினால் படிப்படியாக எமது மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என்பவற்றை வசப்படுத்தி உலகில் இருந்தவண்ணம் தாமரை இலை நீர் போல் வாழ்தலே சித்தர் வாழ்க்கை. ஆன்மிக வாழ்க்கையினால் நாம் அனுபவஞானமே பேறவேண்டுமன்றி அனைத்தையும் துறந்துவிட்டு ஓடுவதல்ல! 

உங்கள் மனதின் எண்ண விருத்திகளும், ஆழ் மனப்பதிவுகளும் எப்படி உங்களில் செயல் புரிகின்றது என்பதனைப் புரிந்துகொண்டு அதன்படி எமது மனதை மெது மெதுவாக கட்டுப்படுத்தி மனதின் தளையிலிருந்து விடுபட்டு ஆன்ம அனுபவத்தினை பெறுவதே உண்மையான சாதனை வழி, இதை விடுத்து வேறு எதைச் செய்தாலும் மீண்டும் மீண்டும் இந்த சுழலில்தான் சுழல்வீர்களே தவிர மனதின் பிடியில் இருந்து விடுபடமாட்டீர்கள். 

ஆக தியானம் செய்வதற்கோ, ஞானம் பெறுவதற்கோ இல்லறம் ஒரு தடையில்லை, உங்கள் மனமே தடையாகும். குருநாதர் அகத்தியர் - லோபாமுத்திரை அம்மையார், காகபுசண்டர்-பகளாதேவி, வள்ளுவர் - வாசுகி என பெரும்பாலும் அநேக சித்தர்கள் தமது மனைவியுடனேயே இல்லறத்திலிருந்து சாதனை புரிந்தனர். அவர்கள் யாரும் கூறவில்லை இல்லறம் தடை என்று, ஆனால் ஒரு விடயத்தினை கவனத்தில் கொள்ளவேண்டும், இல்ல+அறம், அறத்துடன் வாழ்ந்தாலே இறைவாழ்க்கை, அல்லது இல்லை. 

இப்படியான கருத்து வருவதற்கு சித்தர்களில் இன்னொரு வகுப்பினரின் கருத்துக்களை தவறாக விளங்க்கிகொண்டமையும் காரணமாகலாம். பட்டினத்தார், பத்திரகிரியார் பாடல்கள் எல்லாம் உலக வாழ்க்கையினை சாடுவதாக காணப்படும். இதனை பொருள் கொள்ளும் போது அதனை தற்காலத்து பொருள் கூறும் ஆசிரியர்கள் விரக்தி நிலைப்பொருளாக உரைக்கின்றனர். அது விரக்தி நிலையில்லை "நிவிருத்தி" நிலை, எல்லாம் அனுபவித்து சலித்ததால் இனி என் இவை என்று பாடியவை, பட்டினத்தார் ராஜாவிற்கு பணம் கொடுக்க கூடியளவு செல்வந்தன், போக பாக்கியங்களையும் அ னுபவித்து இதெல்லாம் என்ன? என்று பாடியவை. 

உங்களின் அடுத்த விடயம் பிரம்மச்சார்யம் சார்ந்தது, பிரம்மச்சார்யம் என்பது பிரம்மத்தை ஆச்சரித்து (சார்ந்து) இருத்தல் என்று பொருள். விந்தினை வலுக்கட்டாயமாக அடக்குதல் என்று பொருளல்ல, பிரம்மத்தில் மனதை வைக்க, மனம் அடங்க, அதனுடாக, பிராணன் அடங்கி தானாக விந்து கட்டுப்படுத்தலே உண்மையான பிரம்மச்சார்யம். அதை விடுத்து வலுக்கட்டாயமாக அடக்கினால் ஆண்மை அற்றுப்போகும். 

நீங்கள் வாசித்து அறிந்த "தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது)" என்ற கருத்து ஒருவகையில் உண்மையானதே, ஒரு சில சித்தமருத்துவர்களும், யோக ஆசிரியர்களும் வீணாக பீதியை கிளப்பி தம்மை பெரியவர்களாக காட்டிக்கொள்ள இப்படியான கருத்துக்களை பரப்பி ஆழ் மனத்தில் பதிவித்து விடுகிறார்கள். இதை உறுதியென அநேகர் நம்பி பெரும் உடல் மனக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர் . உண்மையில் காம சக்தி இல்லாத ஒருவன் எக்காரியத்தினையும் செய்யமுடியாது. காமம் என்பதும் பசி, கோபம், போன்றவொரு உணர்ச்சியே. அதனை அழித்து விட்டால் விதை இல்லாது போய்விடும். அதன் பின் ஆன்மிகமும் இல்லை, இல்வாழ்க்கையும் இல்லை.

விந்து சக்தியினை சரியான முறையில் பிராணாயாமத்தினால் ஆறாதாரங்களில் பிராண சக்தியுடன் கலந்து உயர் பரிணாமத்தினை அடைவதே குண்டலினி யோகத்தின் நோக்கம். இது முழு விழிப்புணர்வுடன் நடைபெறுவது. இப்படி நடைபெறும் போது உங்களது உணர்வின் கட்டுப்பாடு உடல் மீது கட்டாயம் இருக்கும். அதனால் ஆண்மை இழந்து விடுவோம் என்ற பயம் தேவையில்லை. சரியாக விளங்கிக்கொண்டு செய்தால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. அரைகுறை விளக்ககொண்டு, ஆழ்மனத்தில் பயத்தோடு செய்தால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. 

எமது முன்னோர்கள் காமத்தினை அடக்கச் சொல்லவில்லை, அனுபவித்து உயர்நிலை அடையவே வழிகாட்டினர். காமத்தினை அனுபவித்தல் என்பதன் பொருள் இக்காலத்தைப்போல் அல்லாமல் உணர்வை உயரிய பொருளில் வைத்து (எப்படி எனின் கோயில் சிற்பங்களில் ஆண் - பெண் உறவுகளை சித்தரித்து) அதனை புனிதமாக அணுகினார்கள். அதனால் அது சமூகத்திற்கும் தனி மனிதனிற்கும் உளவியல் ரீதியாக ஆரோக்கியமான ஒன்றாக விளங்கியது. இது அவர்களுக்கு இயல்பான பிரம்மச்சாரியத்தினை தந்தது. ஆனால் இன்று சமூகம் அப்படி இல்லை. இதனாலேயே இப்படியான பயங்கள் மனதினை ஆட்டிப்படைகிறது.

போகர் என்ற பெயரே போகத்தின் மூலம் யோகத்தினை அடைந்தவர் என்பதினால்தான். திருமூலரின் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் பரியங்க யோகத்தில் விரிவாக இதைப்பற்றி கூறியுள்ளார். இந்த தளத்தில் இது பற்றி இதற்கு மேல் விவாதிக்க முடியாது ஆதலால் குருவருள் இருப்பின் தனியான வலை ஒன்று அமைத்து இது பற்றி விவாதிப்போம்.

உங்களது இந்தக்கேள்வி எமது பாரம்பரிய அகவாழ்கையின் சிறப்பினை நாம் இழந்து நிற்கிறோம் என்பதனையும் மறைமுகமாய் சுட்டிக்காட்டுகிறது.

வாசகர்களே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!

மற்றைய கேள்விக்கான பதில்கள் தொடரும்...

சத் குருபாதம் போற்றி

Thursday, June 14, 2012

சித்தர்களின் உணர்வு (Conscious) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்பது எப்படி ?


இவ்விரு பதிவுகளையும் வாசித்துவிட்டு இதனை வாசிக்கவும்.
அகத்தியர், போகர், கொங்கணவர் போன்ற சித்தர்கள் பற்றி நாம் இன்றும் ஏன் பேசிக்கொண்டு இருக்கிறோம்? அவர்களின் தாக்கம் எவ்வாறு இவ்வளவு காலம் இந்த பூவுலகில் இருக்கிறது ?அவர்களை நினைத்து பிரார்த்திப்பவர்கள் தரிசனம் பெறுகிறார்கள், நோய் நீங்கப்பெறுகிறார்கள், இப்படி பற்பல அற்புதங்கள் , அதற்கான காரணம்தான் என்ன? சித்தர்கள் எப்படி இதைச்சாதிக்கிரார்கள்?இதற்கு விடை அகத்தியர் கற்ப தீட்சை, அகத்தியர் பூரணசூஸ்திரம் 216 (தாம‌ரை நூல‌க‌ம் வெளியிட்டுள்ள‌து) ஆகியவற்றில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து, பாடல் வருமாறு,
விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில்
வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில்
தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்
முளையுமடா அதனடுத்த தெற்கே காத
மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே.

தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்
பின்னையே பிடித்தவிடங்க் கையிருக்கப்
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால்
இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு
பொன்னையே தேடாதே கற்பந் தேடு
பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே.

இந்த‌ப் பாட‌ல்க‌ளின் பொதுப்பொருளும் பொதிகைமலையில் பொன்னிமளை விளையும் பூமியில் வெள்ளைச் சாரை பாம்புள்ளது, அதனைப்பிடித்து தின்றால் இருபதினாயிரம் ஆண்டுகள் வாழலாம் என பொதுப்பொருள் கொள்ளலாம்.

அகத்தியர் பூரணசூஸ்திரம் 216 பாடல்களில் குறிவிலக்கத்தினையும் கூறி இந்த பதிவினை நிறைவு செய்வோம். இந்தப்பாடலில் குருதேவர் அகத்தியர் பிராணசக்தியான குண்டலினியை சுழுமுனையின் நடுவில் உள்ள சித்திர நாடியினூடாக செலுத்தும் போது ஏற்படும் அனுபவங்களை தடங்கல்களை நீக்கி எப்படி காயசித்தி செய்வது என்பது பற்றி பரிபாசையாக கூறியுள்ளார்.

விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில் வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி: கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை, பொன்னிமிளை என்பது மூலாதாரம் என்பதனைக் குறிக்கும். சூஷ்மஉடலில் மூலாதாரத்திலிருந்து கிழக்காகஎன்றால் சூரியண்டலத்தினை நோக்கி அதாவது மேல் நோக்கி, மூன்று காதம் என்றால் மூன்று விரலளவு எனக் கொள்ளலாம், மூலாதாரத்தில் இருந்து முன்று விரலளவு தூரத்தில் உள்ளது பொதிகை எனக்குறிக்கப்படும் யோக நாடிகளது உற்பத்தி ஸ்தானம்‍ எனக்குறிக்கப்படும் காண்டம்

தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில் தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்: அந்தயோகநாடிகது உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து தாமிரரணி நதியிலிருந்து வரும் அருவிகள் போல்யோகநாடிகள் உருவாகின்றன.

முளையுமடா அதனடுத்த தெற்கே காத மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்: நீங்கள் கிழக்காக சூரியனை நோக்கி நின்றால் தெற்குப்பக்கம் ப்புறமாய் ரும், பொதிகை எனப்படும் யோகநாடிகது உற்பத்தி ஸ்தானமான காண்டத்திலிருந்து இருந்து ஒரு விரவு ப்பக்கமாய் பார்த்தால், மூன்று பாகமாய் (குருத்துக்கள்) உள்ள சுழுமுனை (சுழுமுனை, வஜ்ரை, சித்திரை நாடிகள்தான் இந்த மூன்று குருத்து)நேராக (மரமாக) நிற்கும்.

தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்: அதனுள் சூரியபிரகாசமுடையஜ்ரநாடி

தன்னோடு வெண்சாரை தானும் உண்டே: அதனுள் வெண்ணிறமானசித்திரநாடி

தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்: உன்னை நீ அறியும் காலத்தில் பிராணன் இந்தநாடிகளுல் செல்லப்பார்க்கும்.

சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்: அப்படியானநேரத்தில், அதாவது ன்னை அறியும் நேக்கத்துடன் யோக சாதனை புரியும் காலத்தில் இந்தடுமையமானசித்திரநாடியினுள் பிராணனை செலுத்துவாயானால்,அந்தப் பிராணன் சித்திரநாடியினூடாக‌  டிப்படியாக ஒவ்வொரு ஆதாரங்களினுள்ளும் செல்லும்.

பின்னையே பிடித்தவிடங் கையிருக்கப்: அப்படி ஒரு ஆதாரக்கத்தினை விழிப்படையச் செய்து இருக்கும் நேரத்தில்,

பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்: இது யோகசாதனையில் ரும் ங்கல்களை குறிக்கும், ஒரு ஆதாரச் க்கம் விழிப்படைந்து குண்டலினியாகியபிராணக்தி மேலேறும் போது எமது சித்த விருத்திகள் சரியாக எரிக்கப்பட்டிராவிட்டால் மீண்டும் இந்த சித்திர நாடியின் (வெண்சாரையும்), வஜ்ர நாடியும் (சோதிவிருட்சம்) அதிக  பிராண ஓட்டத்தினால் குறித்தம்ஸ்காரத்தினை விழிப்படையவைக்கும். அவ்வாறானநிலையில் பிடித்தவிடம் கையிலிருக்கஅதாவது விழிப்படைந்தஆதாரம் விழிப்பிலிருக்க‌, இரு நாடிகளும் பொருந்திப் போகும்.

மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால் இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு: அப்படியானநிலையில் விழிப்படைந்தஆதாரச் க்கத்தினூடு பிராணணை நிலைப்படுத்தி காயசித்தியினைப்பெறவேண்டும், அப்படியான நிலையில் இருபதினாயிரம் வருடங்கள் வாழலாம் என்கிறார், அதாவது எமது சூட்சும உடலின் பிராண அதிர்வு இருபதினாயிரம் ஆண்டுகள் இந்த பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதே இதன் பொருள்.

பொன்னையே தேடாதே கற்பந் தேடு பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே: இப்படி ஒரு ஆதாரம் விழித்து பிராணனோ க்தி நிறைந்துவிட்டால் வரும் அதீத சக்தி கொண்டு பொன்னைத் தேடாதே, பூரண கற்ப நிலையடைய புருவமத்தி வரை ஒழுங்காக பிராண சக்தியினை கொண்டு சென்று பரம் பொருளை அடைவாயாக!

அடுத்து இதன் பயன்பாடு விரிவான விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

தற்போது வாசகர்களுக்கு விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். சித்தர்கள் தமது ஆதார சித்திக்கேற்பவே இந்த பூமியில் அவர்களது உணர்வு நிலைத்து நிற்கிறது. தமது பிராணசக்தியினை ஆறாதாரம் வழி செலுத்தி நிலைத்து நிற்கச்செய்யும் யோகியின் , சித்தரின் உணர்வு பல்லாயிரம் ஆண்டு நிலைத்து அவர்களை நினைக்கும் அனைவருக்கும் உதவிபுரிந்து வரும். காவல் தெய்வங்கள், சிறு தெய்வங்கள் குலதெய்வங்கள் என்பவைகூட இப்படியான ஆதார சித்தியடைந்து தமது உணர்வினை பூவுலகில் பதிப்பித்து விட்டுச்செல்பவையே. அவர்களது பிராணசக்தி ஒன்றிய நிலைக்கேற்ப அவர்களது தெய்வசக்தி இருக்கும். கீழ் ஆதாரங்களில் ஒடுங்கினால் சிறுதெய்வங்களாக குறித்த ஒரு பகுதியினருக்கு மட்டும் உதவுபவர்களாக (உதாரணம்: குலதெய்வங்கள், கிராமதேய்வங்கள் ) மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலுடன் இருப்பார்கள். விருப்பு வெறுப்புடன் பலிபூஜை காணிக்கை கொடுத்தால் காரியம், பழிவாங்கல் என்பவற்றை செய்வார்கள்). கீழ் ஆதாரங்கள் என்பவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் சுத்தியடையாமல் இச்சக்தி விழிப்படைந்தவர்கள்.

அனாகதம் முதல் ஆஞ்ச (புருவ மத்தி) வரை விழிப்படைந்தவர்கள் அவர்களுக்கு அடுத்தநிலையிலிருந்து மக்களை வழிகாட்டும் ஞ்ன குருக்கள். இந்த நிலையினை அடைந்தவர்கள் உலக நன்மைக்காக தம்மை ஈடுபடுத்தி மொத்த மனிதகுலமும் பரிணாமத்தில் உயரவேண்டும் என்ற நோக்கில் தமது பிராண சக்தியினை பயன்படுத்தி மக்களை வழிகாட்டுவர். பெரும்பாலான சித்தர்கள் இந்தப்பிரிவினை சேர்ந்தவர்கள்.

புருவமத்திக்கு மேல் பிராணசக்தியினை நிலையாக விழிப்படைய செய்து பராசக்தியுடன் ஒன்றிய சித்தர்கள் ஆற்றல் அந்த பராசக்தியின் ஆற்றலுக்கு நிகரானது. நாம் வணங்கும் மகாசித்தர் அகஸ்தியர், போகர், காகபுஜண்டர் போன்ற சித்தர்கள் கிருஷ்ணர் போன்றவர்கள் இந்த நிலையினை அடைந்தவர்கள்.

இந்தப் பாடலின் விளக்கம் மூலம் குருதேவர் ஒவ்வருவரும் தமது சாதனை மூலம் குண்டலினி விழிப்பித்து இப்ப்பிரபஞ்ச்சத்தில் அனைவருக்கும் உதவும் தெய்வ சக்தியாகலாம் என்ற சூட்சுமத்தினை விளக்கியுள்ளார். இதனை அறிந்து அனைவரும் தெய்வசக்தியாகிடலாம் என்று சாதனை செய்திடுவோம்.
குருபாதம் போற்றி!

Wednesday, June 13, 2012

எனது மனத்தளம் # 02: சித்த வித்யா பதிவுகளும் பயன்பாடுகளும்

எமது வலைத்தள வாசகர்கள் அனைவரும் ஊக்கமுடன் பதிலளிக்க வேண்டிய பதிவு இது, ஏனெனில் எமது பதிவுகள் பதிவிடும் நாட்களில் சராசரியாக 300 தொடக்கம் 500 வரையிலான பக்க வாசிப்பு களையும் சாதாரண நாட்களில் 100 தொடக்கம் 200 வரையிலான பக்க வாசிப்புகளையும் கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் எழுதும் பதிவுகள் இத்தனை பேரையாவது சென்றடைகிறது என்பதில் மகிழ்வடைகிரோம். எனினும் பின்னூட்டமிடும் அன்பர்களின் அளவு மிகக்குறைவு. ஒருசிலரே கருத்து தெரிவிக்கின்றனர். மந்திர சாஸ்திரம், யந்திரம், தாந்திரிகம் வைத்தியம் இரசவாதம் என பல விடயங்களை எழுதலாம் எண்ணும் போதும் எமது மனதில் எழும் கேள்விகள் இவை;
 1.  இவற்றைப் படிப்பதற்கு வாசகர்கள் இருக்கின்றார்களா?
 2. எமது எழுத்து நடை வாசகர்களுக்கு விளங்க  கூடிய வகையில் உள்ளதா?
 3. இதனால் என்ன பயன்பாடு ?
 4. உண்மையில் எத்தனை நபர்கள் ஆர்வமுடன் வாசிக்கின்றனர்?
என்பவையாகும். இவற்றை புரிந்து வாசகர்களுக்கு பயன்படும் வகையில் எழுதுவதே நன்று ஆதலால் மேலும் பதிவுகள் எழுதி பக்கங்களை எழுதி குவிக்காமல்

வாசகர் முன்மொழிவுகளை பெறலாம் என எண்ணியுள்ளோம்.ஆகவே எமது

பதிவுகளை வாசிக்கும் நண்பர்கள் உங்களது சிரமம் பாராது குறைந்தது ஒருவரியில் அல்லது நேரம் இருப்பின் விரிவான முன்மொழிவுகளையும் பின்னூட்டமிடவும். இதன் மூலம் எமது வலைப்பதிவு உங்களுக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாக இருக்கிறது? என்னவிதமான முன்னேற்றங்களை செய்யலாம் என்பதனை அறிந்துகொள்ளலாம் என எண்ணுகிறோம்.

இந்த விடயத்தில் சிரமம் பாராமல் பதிலளிப்பீர்கள் என எண்ணுகிறோம்.

Tuesday, June 12, 2012

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 03


பகுதி – மூன்று: சாதனை

 1. முதலில் விநாயகர் கவசம் மனப்பாடமாயிருப்பின் மிக நல்லது, அல்லாதிருப்பின் பகுதி 02 இனை பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.
 2. விநாயகர் படத்தினை பிரிண்ட் செய்து உங்கள் கண்ணுக்கு நேராக இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்.
 3. அதுபோல் இலக்கமிடப்பட்ட மனித உருவத்தினையும் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள், இது உங்களை/சாதனை செய்பவரது மாதிரியுருவாகும்.
 4. காலையில் அல்லது மாலையில் குறித்த நேரத்தினை ஒதுக்கி கொள்ளுங்கள், (காலை மாலை 05.30 - 06.30 வரையிலான நேரம் பொருத்தமானது),
 5. ஒரு பாயினை/துணியினை விரித்து கிழக்கு நோக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள், ஒரு தீர்த்தப்பாத்திரத்தில் தூய தண்ணீர் வைத்துக் கொண்டு மூன்று தடவை உள்ளங்கையில் ஊற்றி உறிஞ்சிக் குடித்துக் கொள்ளுங்கள்.
 6. பின்னர் மெதுவாக மூச்சினை உங்களால் முடியுமான அளவு உள்வாங்கி, முடியுமான அளவு வெளிவிடவும், கவனிக்கவும் மூச்சினை அடக்குவதோ, அளவிற்கு மீறி உள்ளிழுப்பதோ வெளிவிடுவ்தோ கூடாது. இயல்பாக உங்களால் இயன்றளவு ஆனால் விழிப்புணர்வுடன் செய்யவும்.
 7. பின்னர் உங்கள் குருவை அல்லது அகஸ்திய மகரிஷியை மானசீகமாக வணங்கி அவர்களது ஆசியினை பெற்றுக்கொள்ளவும்.
 8. அதன் பின் மனதில் முனிவரது தோற்றத்தினை மனதில் பாவித்து "ஓம் காசிப மாமுனிவரே போற்றி" என 09/27/54/108 தடவை ஜெபித்து அவரது ஆசியினை பெறுவதாக பாவித்துக்கொள்ளவும்.
 9. இதன் பின் "கோபாலனாகிய  (உங்கள் பெய) நான் விநாயக சக்தியினை எனது மனதில், பிராணனில், உடலில் விழிப்படைய செய்யப்போகிறேன், குருவருளாளும், இறையருளாலும் அது சித்தியடையட்டும்" என சங்கல்பம் செய்து கொள்ளவும்.
 10. அதன் பின் உங்கள் முன் உள்ள இலக்கமிடப்பட்ட விநாயகர் படத்தினை ஒன்று முதல் 38 வரையிலான பகுதிகளை பார்த்து உங்களது உடலிலுள்ள அந்த பாகங்களுடன் தொடர்பு படுத்தி பாவித்து வரவும்.
 11. முதலாவது "வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க" விநாயகரது 01 என இலக்கமிடப்பட்ட பகுதியிலிருந்து உங்களது உடலின் தலை முடிப்பகுதியிற்கு தங்க நிறமுள்ள ஒளி வந்து சேர்வதாக மனதில் பாவிக்கவும். இதுபோல் அடுத்த வரியில் உள்ள "வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க; எனும் போது தலையில் ஒளிசேர்வதாக பாவிக்கவும். இப்படி 01 முதல் 30 வரையில் உடல் அங்கங்கள் ஒவ்வொன்றையும் மனதில் பார்த்து வரவும்.
 12. அதன் பின் 31 வது வரி "கிழக்கினிற் புத்தீசர் காக்க;" என்பது வரும் போது உடல் முழுவதும் ஒளி மண்டலமாகி உங்கள சூழ ஒளியாலானகவசம் இன்று கிழக்குதிசையி (நீங்கள் கிழக்கு திசை பார்த்து அமர்ந்திருப்பதால்)உங்களுக்கு முன்னால் தொடங்கி, கடிகார சுழற்சி போல் அதாவது கிட்டத்தட்ட ஒரு 10 அடி தூரத்திற்கு ஒளிவட்டம் உங்கள் உடலிலிருந்து விரிந்து கிழக்கு திசையிலிருந்து தென் கிழக்காக (அக்கினியிற் சித்தீசர் காக்க;) விரிந்து தெற்காக, (உமாபுத்தரிரர் தென் திசை காக்க;), தென் மேற்காக (மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க) மேற்காக (விக்கினவர்த் தனர் மேற்கென்னுந் திக்கதனிர் காக்க;) வட மேற்காக (வாயுவிற் கசகன்னர் காக்க;)  வடக்காக (திகழ் உதீசி தக்க நிதிபன்காக்க;) வட கிழக்காக (வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;) வந்து சூழ்ந்து கொள்வதை பாவிக்கவும்.
 13. இப்போது உங்கள் உடலினை சூழ விநாயக சக்தி கவசமாக நிறைந்துள்ளது. உங்கள் மனம், பிராணன், உடல் அனைத்தும் விநாயகருக்குரிய சக்தி நிறைந்துள்ளது. ஆதலால் எந்த தீய சக்திகளும் உங்களை அண்டமுடியாது, இந்த பாவனையுடன் அடுத்த வரிகளை ஜெபியுங்க்கள் "ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;" என்றவாறு உங்களை சூழவுள்ள தீய சக்திகள் விலகி செல்வதாக பாவிக்கவும்.
 14. இப்பொழுது உங்களை சூழவுள்ள அந்த தெய்வ சக்தியினை உங்களை அண்டியுள்ள உறவினர்கள், செல்வம், பொருள், பதவி, பட்டங்கள் என்பவற்றை நிலைத்திருக்கும் வண்ணம் செய்வதற்கு உங்களில் காணப்படும் இந்த தெய்வ சக்தி அவற்றில் பாய்ந்து நிலைகொள்வதாக பாவித்து (உதாரணமாக உங்கள் மனைவி/கணவன், பிள்ளைகளுக்கு செல்வதாக மனதில் பாவித்து) அடுத்த வசனத்தினை கூறவும்; மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்; பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்கவென்றி சீவிதம் கபிலர் காக்க;கரியாதியெலாம் விகடர் காக்க;
 15. இறுதியாக உங்கள் மனம், பிராணன், உடல் ஆகியவற்றில் இந்த தெய்வசக்தி நிலையாக காணப்பட்டு அனைத்தும் பிரபஞ்சத்திலுள்ள விநாயக சக்தியுடன் கலந்து அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்வுறுவதாக பாவித்து "என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும் ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும் மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்." என்று ஜெபித்து சற்று நேரம் அந்த ஆனந்த நிலையினை அனுபவித்து சாதனியினை முடித்துக் கொள்ளவும்.
 16. பாவனை என்பது மனதில் விழிப்புணர்வுடன் உருவகப்படுத்திப்பார்த்தலாகும் (aware visualization), சாதாரண கற்பனையில் (imagination) மனம் தனது இஷ்டப்படி செல்லும், பாவனையில் மனம் எனது உணர்வின் விருப்பபடி செல்லும்.
 17. ஆரம்பத்தில் கட்டாயம் தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்துவரவேண்டும்.
 18. இதனை தொடர்ச்சியாக செய்துவர உங்கள் ஆழ்மனதில் கட்டளை  சொற்களாக இவை பதிந்து குறித்த காலத்திற்கு பின்பு (சில வருட சாதனையின் பின்) நீங்கள் கூறினாலும் கூறாவிட்டாலும் ஆழ்மனதிலிருந்து விழிப்படைந்து பல அற்புதங்களை செய்யும். இதன் அறிவியல் விளக்கம் என்னவெனில், ஆழ்மனமே (sub conciseness mind) அனைத்திற்கும் அடிப்படை, ஆழ்மனதில் தெய்வ சக்தியை பதிப்பித்தால் அதனை ஆகர்ஷித்து நல்ல காரியங்களை செய்விக்கும், தீய சக்திகளை ஆகர்ஷிக்கும் எண்ணங்களைப் பதிப்பித்தால் தீய காரியங்களை செய்விக்கும். இந்த விநாயகர் கவச சாதனையினால் எமது ஆழ்மனதில் தெய்வ சக்தியை பதிப்பிக்கிறோம். அதன் பயனாக மேல்மனம், உடல் என்பன நல்ல சக்தியை பெற்று இன்பமான வாழ்க்கையினைத் தரும். 
 19. இதனை செய்வதால் கிடைக்ககூடிய பலன்கள் எவை என்பது 46 வது வரியில் கூறப்பட்டுள்ளது, அவற்றை பயிற்சியின் மூலம் உங்கள் சொந்த அனுபவமாக்கிக் கொள்வதே சிறந்தது. 
 20. உங்களது மனதின் ஏகாக்கிர சக்தி, பிராணபலம்,கர்மம் அல்லது ஆழ்மனப்பதிவுகள் என்பவற்றிகேற்ப இந்த சாதனை முடிவில் சங்கல்பிக்கும் எண்ணங்கள் சித்தியாகும். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதன் பல மடங்கு பலன் முதலில் உங்களிலேயே தாக்கத்தை ஏற்படுத்தி மற்றவற்றில் ஏற்படுத்தும் என்பதனை மறந்து விடாதீர்கள். அதாவது ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும் என மனதில் எண்ணி பிரார்த்தித்தால் அது முதலில் உங்கள் மனம், பிராணனில் செயற்பட்டே அவருக்கு பலன் கொடுக்கும், இதே விதிதான் தீய எண்ணத்திற்கும் என்பதனை மறந்துவிடாதீர்கள். ஆதலால் குருபக்தியினை தவறவிடாதீர்கள். 
 21. ஆரம்பத்தில் மனதினைப் இந்த பாவனையில் பழக்கி செய்வதற்கு 15 - 20 நிமிடங்கள் ஆகலாம், பழகிய பின் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய வாறு மனம் பழகிவிடும். 
 22. இதனைப்பயன்படுத்தி இன்புற்றிருக்க குருதேவரையும், அகஸ்திய மகரிஷியயும், எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் பாதம் பணிகிறோம்.

முக்கிய குறிப்பு
நான் விநாயகரை வழிபடுவதில்லை, முருகனைத்தான் வழிபடுவேன், இல்லை உங்கள் பதிவை நான் வாசித்தாலும் நான் முகம்மதியன், கிருஸ்தவன், அல்லது ஒரேயொரு மஹாசக்திதான் உள்ளது என்ற நம்பிக்கை உடையவன் எனக்கு விநாயகர் போல் பல தெய்வ வழிபாட்டில் இஷ்டமில்லை, அப்படியானால் எமக்கு இந்த விநாயகர் கவசத்தினால் பயன் இல்லை என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம், சித்தர்கள் மனிதகுலம் தொடங்கி இப்பிரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் உரியவர்கள், அதன் அடிப்படையினையும் விளக்கியுள்ளார்கள், இந்த பதிவின் தலைப்பில் என்ன கூறியுள்ளோம் தாந்திரீக பிரயோகம் என்றல்லவா உள்ளது, அப்படியானால் அது ஒரு உத்தி (technique), அந்த உத்தியினை இப்படி மத நம்பிக்கையினை கலக்காமல் செய்ய முடியாதா? என சில அன்பர்களது கேள்விகள் எம்மை நோக்கி எழுவதை உணர்கிறோம். அதற்கான பதில் நிச்சயமாய் முடியும் எனபதாகும். ஆகவே இந்த விநாயகர் கவசத்தில் கூறிய முறையினை வேறு தெய்வ மத நம்பிக்கை உடையவர்களும் பயன்படும் வண்ணம் எடுத்துரைக்கலாம் என எண்ணியுள்ளோம். அதனைப்படித்து பயன்பெற விரும்புபவர்கள் அடுத்த பதிவினை கட்டாயம் வாசிக்கவும். 

சத்குரு பாதம் போற்றி

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...