குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 08, 2020

சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம்.
காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்கள் 27 தடவைகள் செய்ய சொன்னீர்கள் ஆரம்பத்தில் 27ம் மிக கஷ்டமாக இருந்தது அடுத்து மாலையை அதாவது 108 செய்ய சொன்னீர்கள் அப்போது 108 செய்யத் துவங்கும்போது அந்த 27 மிக இலகுவாக இருந்தது நவராத்திரி நாட்களில் 10 மாலை சொன்னீர்கள் பத்துமாலை செய்யும்போது இந்த 108 மாலை வந்து இலகுவாக இருந்தது லகு அனுஷ்டானம் என்று 27 மாலை சொன்னீர்கள் 10மிக மிக இலகுவாக இருந்து. ஆரம்பத்தில் சாதனை செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு என்னுடைய நேரமும்,மனமும், வேலைப்பளுவின் காரணமாக மிக சிரமத்தில் இருந்தோம் மீண்டும் ஒரு மூன்று மாதம் செய்யத் தொடங்கும்போது இயற்கையாகவே எங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது இவற்றுக்கான காரணம் என்ன அண்ணா காயத்ரி தேவியின் அருளா சாதனையின் ஒரு படிநிலை உயர்வா அவ்வாறு இது நிகழ்ந்தது தயவு செய்து சொல்லவும்!

இதற்குரிய அறிவியல் காரணம் நாம் புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யும் போது அந்த அனுபவம் மூளையில் தனக்குரிய பாதையை புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு குறித்தளவு காலம் மனம் குறித்த விஷயத்தில் பழகியிருக்க வேண்டும். இந்தக்காலப்பகுதியில் மூளைக்கு அழுத்தம் கொடுக்காமல் மெதுவாகத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
உதாரணமாக 27 தடவை தினசரி 45 நாட்கள் ஜெபம் செய்வதை முதலாவது வாகனம் ஓட்டும் வகுப்பிற்குச் செல்வதை உதாரணமாகக் கொள்ளுனகள், இப்போது உங்களுக்கு steering, break, clutch balance, mirror ஆகியவற்றுடன் பரிட்சையமான நிலை உருவாகியிருக்கும், இதுவே முதலில் 45 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்யுங்கள் என்று சொல்வதன் காரணம்! இந்த நாற்பத்து ஐந்து நாட்களுக்குள் மனம் ஒன்றி உங்கள் மூளை சாதனையின் அங்கங்களை விரும்பினால் இனி நீங்கள் வேகத்தை அதிகரிக்க accelerator இனை அழுத்தலாம். ஆகவே அடுத்த 45 நாட்கள் 54 எண்ணிக்கை செய்து வாருங்கள் என்று சொல்லுகிறோம். ஆரம்பத்தில் 10 km வேகத்தில் ஓட்டிப்பழகிய உங்களில் இப்போது 20 Km வேகத்தில் ஓடப் பழக்குவது போன்றது. இப்படி உங்களுக்கு தைரியம் வரும் வரை செய்யசொல்லி தைரியம் வந்தபின்னர் 108 இல் ஓடச் சொல்லுகிறோம்.
தினசரி 108 செய்யச் சொல்லுவது என்பது இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வரை தைரியமாக சென்று வரலாம், சற்று வேகமாகவும் ஓட்டலாம் என்பதற்குரிய பயிற்சி! ஆனால் தேர்ந்த ட்ரைவர் போல் 10 மணித்தியால் தொடர்ச்சியாக நீண்டதூரப் பயணம் செய்யக்கூடாது!
இப்படி சிறுதூரம் நீண்ட நாட்கள் ஓட்டப் பழகிய பின்னர் நீண்ட பயணத்திற்கு பழக்குவதற்காக லகு அனுஷ்டானம் செய்யச் சொல்லுகிறோம். இப்போது நீங்கள் சிறிது அதிக தூரம் ஓடப்பழகி இருப்பீர்கள், நன்கு வாகனம் ஓட்டக்கூடிய அனுபவஸ்தர் என்று அர்த்தம், அதுபோல் லகு அனுஷ்டானம் செய்யும் ஆற்றல் வந்தால் உண்மையில் சற்று அனுபவமான சாதகர் என்ற அளவில் உங்கள் மூளை, உடல், அந்தக்கரணங்கள் தயாராகியிருக்கும்.
சாதனை என்பது உடல் என்ற வாகனத்தில் குண்டலினி எனும் சக்தியை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு கொண்டு செல்லும் பயணம். இதிற்கு உடலை, மனதை, அந்தக்கரணங்களை, நாடிகளை சரியாக சுத்தி செய்வதற்கு நீண்டகால, பலமான அத்திவாரத்துடன் பொறுமையாகக் கட்டியெழுப்ப்பும் முறையையே சாதனை என்று சொல்லுகிறோம்.
லகு அனுஷ்டானம் முடித்து பின்னர் 45 நாட்களில் 125,000 செய்யும் பண்பினைப் பெற்றால் இந்தப்பயணத்தை இன்னும் துரிதப்படுத்தலாம்.
இப்படி மனதையும், உடலையும், குறிப்பாக உங்கள் மூளையையும் மெதுவாக கெடுத்துவிடாமல் அத்திவாரத்திலிருந்து கட்டமைக்கும் முறையையே சாதனையாகச் சொல்லித்தருகிறோம்.
மூன்று மாதங்கள் சென்றபின்னர் இயற்கையாகவே உங்களுக்கு நேரம் இருப்பதற்குக் காரணம் உங்கள் மூளையில் - மனதில் இருந்த தேவையற்ற எண்ணங்களுக்கு செலவாகும் நேரம் தற்போது மிச்சமாகி இருக்கும். தேவையற்ற எண்ணங்களில் மனம் ஆர்வம் கொண்டு நேரத்தை வீணாகாமல் மனம், மூளை மீள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
10 மாலைகள் செய்ய முடிகிறது என்பது நிச்சயமாக ஒரு சிறந்த முன்னேற்றமே! ஆனால் சாதனையில் நாம் முன்னேறிவிட்டோம் என்று பூரிப்படைவது அகத்தியர் யோக ஞானத்திறவுகோலின் முதல் உபதேசத்தில் வரும் "மதிகெட்டு விள்ளாதே மனமிக மகிழ்ந்திடாதே" என்ற வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஏனென்றால் சாதனை மிக நீண்ட பயணம், பல பிறப்புக்கள் பொறுமையாக முயற்சித்து பயிற்சியுடன் முன்னேறவேண்டியது!
ஆகவே நீங்கள் அடைந்திருப்பது மிக நல்ல முன்னேற்றம், ஆனால் பயணம் இன்னும் இருக்கிறது என்பதை ஞாபகத்திலிருத்தி சாதனையைத் தொடருங்கள்
இறுதியாக இது காயத்ரி தேவியின் அருளா என்ற கேள்விக்குப் பதில்; அன்னையின் அருள் எறும்பு முதலான சாதனை செய்பவர், செய்யாதவர்கள் அனைத்தின் மீதும் படர்ந்து கொண்டிருக்கிறது; நாம் சாதனையினால் எமது பரிணாமத்தை உயர்த்தும் செயலில் பக்குவப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம்! எங்களுக்கு மாத்திரம் அன்னையின் அருள் கிடைக்கவில்லை! நாம் குருவின் அருளால் சாதனையால் பரிணாம உயர்விற்கு பயன்படுத்தும் அளவிற்கு தகுதியடைந்திருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்!

Monday, May 04, 2020

குரு அகத்திய காயத்ரி சாதனியும் நவக்கிரக தோஷங்களும்

வணக்கம் ஐயா,
நான் தங்களின் blog ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். நான் நவகிரக காயத்ரி சாதனை - சந்திர காயத்திர மந்திர சாதனை துவங்க ஆவலாய் உள்ளேன். தினமும் சந்திர ஓரையில் சாதனை பண்ண இயலாவிட்டால் வேறு உகந்த நேரத்தில் பண்ணலாமா ? அல்லது சந்திர ஹோரையில்தான் கட்டாயம் சாதனை புரியவேண்டும் ?

அன்பரே,
சாதனை மூலம் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்பது உண்மை! ஆனால் அது நாமாக பொதுவாக நம்பிவரும் நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்க முறை. இதன் அடிப்படை குறித்த சில காலத்திற்கு (மாதங்களுக்கு, வருடங்களுக்கு) சிரத்தையாக தினசரி சாதனை செய்யும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
தற்போதைய fast food யுகத்தில் இருக்கும் எமக்கு அதைப்போன்ற துரித பரிகாரங்கள் போன்று எமது மனம் விரும்பிய விஷயங்களை நம்பிச் செய்யும் முறை அல்ல சாதனை.
சாதனைக்கு என்று ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதன்படி எமது அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்) கட்டியமைக்கப்படும் போது நாம் அந்த பரம்பொருளின் பேரோளியை ஏற்றுக்கொள்ளும் பண்பும், ஆற்றலும், வலுவும் உள்ளவர்களாக இருப்போம்.
இந்தப்பரம்பொருளின் பேரோளி எம்மில் சேரத்தொடங்க நாம் முதலில் எமது மனதின் பிடியிலிருந்து வெளிவருவோம். பிறகு புத்தி தெய்வ உருமாற்றம் பேறுவதால் சித்த விருத்தியின் பிடியிலிருந்து வெளிவருவோம். இந்த இரண்டும் சரியாக நடைபெறும்போது எமது பிராண சக்தி இழப்புக் குறைந்து விடுவதால் உடல் அதிக உயிர்ப்புடன் நோய்கள் குணமாகும்.
இப்படி நடைபெறுவதற்கு ஒவ்வொருவருடைய அந்தக்கரணத்தின் அமைப்புக்கு ஏற்றவகையில் சாதனையின் காலம் வேறுபடும். பலரும் அதிக ஜெபத்தின் மூலம் துரிதமாக தமது அந்தக்கரணங்களை மீளமைத்துக்கொள்ள முடியும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு விட முடியும் என்று நம்புகிறார்கள். இது முழுமையான உண்மை அல்ல!
எமது மனம்-புத்தி-சித்தம் உடனடியாக சாதனையினை ஏற்றுக்கொள்ளாது; அதிக சந்தேகங்கள், குழப்பங்கள், அதிஆவல், அதிஆசை, பயங்கள், உணர்ச்சிகளும் சாதனயுடன் போராடத்தொடங்கும். இந்தப்போராட்டத்தில் வெற்றிபெற சீரான நீண்டகால தினசரி சாதனை அவசியம்! இப்படி நீண்டகால தினசரி சாதனையினூடாக எம்மை நிலை நிறுத்திக்கொண்டு குறித்தளவு ஜெப எண்ணிக்கையையும் பூர்த்தி செய்யும் போது எமது வாழ்கைப் பிரச்சனைகளுக்கு சாதனை தீர்வினைத் தரும்.
இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை!
இனி அந்தக்கரணங்களை சமப்படுத்தினால் எமது 90% பிரச்சனை தீர்ந்தாலும் எமக்கு வெளிச்சூழல் சில பாதிப்புக்களைத் தரும், இவற்றுள் முக்கியமானவை நவக்கிரக தோஷங்கள் எனப்படுபவை. கிரங்கள் எமக்கு எந்தப்பலனையும் தாமாகத் தருவதில்லை; நாம் செய்த கர்மத்தை கணக்கு வைத்துக்கொண்டு அதற்குரிய பலனைச் சரியாகச் செய்யும் பணியைத்தான் அவை செய்கிறது.
காயத்ரி உபாசனையில் நவக்கிரகங்கள் நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரணத்திலிருப்பவை! காயத்ரியின் சவிதாவின் பேரோளி மத்தியில் இருக்க நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரண சக்தியாக இருக்கிறது.
ஆகவே ஒரு சாதகன் காயத்ரி மந்த்ரித்தை முதலில் சாதகம் செய்து பின்னரே ஆவரண தேவதைகளுக்கு வரவேண்டும். எனவே நவக்கிரக காயத்ரி சாதனை என்பது ஒரு சாதகன் குறித்தளவு குரு அகத்திய காயத்ரி சாதனையின் பின்னர் கிரக பிரபாவங்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் நவக்கிரக சாதனை செய்யலாம்!
ஆனால் ஜனாதிபதியின் ஆணையைப் பெற்ற ஒருவன் கிராம அலுவலகரின் உதவியை உடனடியாகப் பெறுவதைப் போன்றதே இது!

ஆகவே சிரத்தையாக காயத்ரி சாதனையில் கவனம் வையுங்கள்! அதன் பிறகு நவக்கிரக சாதனை தேவையா இல்லையா என்பது பற்றி வழிகாட்டல் கிடைக்கும்!

Friday, May 01, 2020

சாதனையின் ஒழுங்கு முறையின் பயன் என்ன?

சாதகர்களின் கேள்விகள்;

எனக்கு காயத்ரி மந்திரம் மாத்திரம் பிடித்திருக்கிறது, நீங்கள் கூறும் ஒழுங்கில் இல்லாமல் தனியே காயத்ரி மந்திரம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்? பலன் கிடைக்குமா? அல்லது நீங்கள் கூறிய சித்த வித்யா குருமண்டல நாமாவளி, அகத்திய மூல குரு மந்திரம், ஜெப சங்கல்பம், காயத்ரி மந்த்ர ஜெபம், சித்த சாதனை, துதி என்ற இந்த ஒழுங்கை கட்டாயம் பின்பற்றவேண்டுமா?

எமது பதில்;
உங்கள் சித்தம் (ஆழ்மனம்) தூய்மையாக இருந்தால் உடனடியாக நிச்சயம் பலன் தரும்! ஆனால் இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை!
ஆகவே அனைவருக்கும் பயன் தரும் வகையில் சாதனை கட்டமைக்கப்பட வேண்டும்.
நாம் எமது தாழ் இயல்புகளில் இருந்து வெளியேறி உயர் தெய்வ குணங்களுக்கு செல்ல அதை அடைந்தவர்களுடைய உதவியும், பயணப்பாதையும் அவசியம். இதற்கு நாம் குருமண்டலத்துடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இதனால் சித்த வித்யா குருமண்டல் நாமாவளி சாதனை ஒழுங்கில் முதலாவதாக இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து குருமார்களும் ஒளி நிலை அடைந்த உயர் தெய்வ சக்திகள்! இது ஒரு மண்டலமாக பேரொளி நிலையில் வழிகாட்டும் சக்திகள்!
நீங்கள் சாதனை புரியும் குருபரம்பரையின் மூல குரு அகத்திய மாமகரிஷி! குருதேவர் அனைவரையும் உயர் நிலை அடைவிக்க ஆவல் கொண்ட தேவி ஸ்வரூபம் (அகஸ்தியமயி) அடைந்த தேவியின் ஆற்றல். ஆகவே அவரை மூலகுரு மந்திரத்தின் மூலம் தொடர்பு கொள்வது எமது பயணத்தின் இறுதி இலக்கில் இருந்து மாறாமல் இருக்க உதவி செய்யும்.
இவற்றை முடித்த பின்னர் அடுத்து வரும் சாதனையின் அங்கம் அந்தக்கரணங்களை சுத்தி செய்பவை.
எந்த ஒரு செயலும் நடைபெற ஒரு மையம் (center) அவசியம். அந்தக்கரணத்தில் அதை ஆங்காரம் என்று சொல்லுவோம். இந்த ஆங்காரத்தை கட்டமைத்தால்தால் மனம் இயங்கும். ஆகவே நாம் செய்யும் சாதனைக்கு ஏற்ற ஆங்காரம் கட்டமைக்கப்படுவதற்கு சங்கல்பம் அவசியம்.
அதன்பிறகு மனமும், புத்தியும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சலனிக்கும் மனம் ஒழுகாக்க காயத்ரி மந்திர ஜெபம் செய்விக்கிறோம். தொடர்ச்சியான ஜெபம் மனதை ஒழுங்கு படுத்தும். அந்த ஜெபம் உருவாக்கும் ஒளி புத்தியைத் தூண்டி பரம்பொருளுடன் இணைக்கும்.
அடுத்த அந்தக்கரணத்தின் பாகம் சித்தம் கடைசியாக இருக்கும் சாதனையின் அங்கமான சித்த சாதனை இதை ஒழுங்குபடுத்தும்.
ஆக சாதனையின் முழு அங்கங்களையும் தரப்பட்ட ஒழுங்கு முறையில் செய்ய அந்தக்கரணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தெய்வ உருமாற்றம் நிகழும்.
இறுதியாக எமது வாழ்விற்கு தேவையான 16 செல்வங்களையும் துதியாக செய்து சாதனையைப் பூர்த்தி செய்கிறோம்.
ஆகவே அன்பரே இந்த சாதனையின் ஒழுங்கு ஆழமான யோக நுணுக்கத்தை அடைப்படையாகக் கொண்டது. ஆகவே உங்கள் மனப்போன போக்கில் சாதனை செய்யாமல் உபதேசிக்கப்பட்ட ஒழுங்கில் சாதனையைச் செய்து வாருங்கள்.
துரித பலனும் முன்னேற்றமும் காண்பீர்கள்!

சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

ஒரு சாதகரின் கேள்வி:
அண்ணா, சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

 1. எமக்கு தேவையானதைப் பெற இறைவன் எமது மனம், புத்தி, உடல் என்பவற்றைத் தந்திருக்கிறான்.
 2. இவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எம்மைப் பயிற்சிப்பதே காயத்ரி சாதனையின் நோக்கம்.
 3. காயத்ரி சாதனையின் மூலம் மனம், புத்தி, பண்புகள் நுண்மையடைவதாலும் பிராண ஆற்றலும், அதிர்வும் அதிகரிப்பதால் எமக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்குரிய ஆற்றல் உள்ளவர்களாக நாம் சக்தி பெறுவோம்.
 4. எமது தேவை என்பது தர்மத்திற்கு உட்பட்டதாகவும், பேராசை அற்றதாகவும், அடிப்படையானதாகவும், வாழ்வில் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கானதாகவும் இருக்க வேண்டும்.
 5. எமது அடிப்படைத்தேவைகளில் அதி முக்கியமான மூன்று தேவைகளை மாத்திரம் சாதனையின் முடிவில் வேண்டுதலாக வைக்கலாம். 
 6. இப்படி வைப்பதால் தேவியே செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வாள் என்று நம்பிக்கொண்டு செயலற்று சோம்பேறியாக இருக்கக்கூடாது. இப்படிப் பிரார்த்திக்க அது நிறைவேறுவதற்குரிய சூழலை மெதுவாக உருவாக்கும், அதை நாம் புத்திக்கூர்மையால் உணர்ந்து செயலில் ஈடுபட வேண்டும். 
 7. நாம் வைக்கும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அந்தக்கோரிக்கை உங்கள் முன்னேற்றத்திற்கானது இல்லை, தற்போதைய காலத்தில் சாத்தியமில்லை என்பதை அறிந்த பிரபஞ்ச ஞானசக்தி அவற்றைத் தடுக்கலாம்.
 8. இப்படி நடைபெறவில்லை என்பதால் மனம் சோர்ந்து சாதனையைத் தவறவிட்டால் நாம் வைரச்சுரங்கத்தில் கடைசி அடி மண்ணை வெட்டாமல் சென்றவர்களாவோம்.
 9. நாம் எங்கு தவறு விடுகிறோம் என்பதை எமது புத்தியால் கூர்ந்து கவனித்துத் தீர்க்க வேண்டும், மீண்டும் மீண்டு முயற்சி செய்யவேண்டும். அதற்குரிய காலம் சரியாகி எமது பக்குவமும் சரியாக இருக்கும் போது காரியம் நடைபெறும்.
 10. குரு-அகத்திய-காயத்ரி சாதனா முறை வாழ்வின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து எம்மை பரிணாமத்தில் படிப்படியாக உயர்த்தும்.

ஜெப சாதனைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதே காரணம் என்ன?ஒரு சிரேஷ்ட சாதகரின் கேள்வி;
ஐயா தங்கள் இரு தினங்களுக்கு முன் லகு அனுஷ்டானம் பற்றி ஒரு சாதகர் உடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அதில் அவர் ஐந்து மணி நேரத்தில் 27 மாலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அப்படியென்றால் ஒரு மணி நேரத்திற்கு 5 மாலைக்கு மேல் செய்துள்ளார் இது இவ்வளவு விரைவாக காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா பலன் கிட்டுமா நான் பத்து மாலை செய்வதற்கு ஆறு மணிநேரம் ஆகிறது .மேலும் நான் வார அறிக்கை தவறாமல் அனுப்பி வருகிறேன் நீண்டநாட்களாக தாங்கள் அதற்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை.

எமது பதில்:
இனி உங்கள் பிரதான கேள்விக்கான பதிலுக்கு வருவோம்.
 1. ஜெபம் என்பது எமது மனதில் எழும் எண்ண அலைகளை மந்திரத்தின் சொல், ஓசைகளால் பிரதியீடு செய்யும் செயல் (replacing activity).
 2. இதன் நோக்கம் எமது மூளையில், மனதில் எழும் எண்ணங்களை தெய்வ சக்தியை ஈர்க்கும் மந்திர சொற்களால் பிரதியீடு செய்து எமது மனதில் எழும் எண்ண அலைகளை குறைப்பது.
 3. சாதாரணமாக நாம் கண்டவற்றைப் படித்து, மனதை அலை பாயவைத்து, வேண்டாத செய்கை செய்து மனதில் தேவையற்ற எண்ணங்கள் எழுந்த வண்ணமாக எமது ஆழ்மனமாகிய சித்தத்தில் விருத்திகளை உருவாக்கிக் கொண்டு இருப்போம். இத்தகைய நிலையில் நாம் ஜெப சாதனை செய்யத் தொடங்குவோம்.
 4. இந்த நிலையில் ஜெப சாதனை செய்யத் தொடங்கும் போது ஒரு தடவை மந்திரம் சொன்னவுடன் மனம் தனக்கு விரும்பிய எண்ணத்தின் பின்னால் சென்று சுற்றி விட்டு அடுத்த ஜெபத்திற்கு வரும். இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும் இடையில் மனம் தனக்கு விரும்பிய இடம் எல்லாம் சுற்றி 108 முடிக்கும் போது சராசரி ஆரம்ப சாதகனுக்கு ஒரு மாலை (108) செய்து முடிக்க 20 - 30 நிமிடங்கள் ஆகிவிடும்.
 5. காலம் செல்லச்செல்ல காயத்ரி மந்திரத்தின் பிராண ஆற்றலை ஏற்கும் பக்தியும், அகப்பண்பும் இருக்குமானால் அன்னையின் புத்தியைத் தூண்டும் ஒளி எங்கள் மனதில் பாயத் தொடங்க எமது மனதின் சலனம் குறையத் தொடங்கும். இதற்கு காயத்ரி சங்கல்பத்தில் கூறப்படும் நோக்கத்தையும், சித்த சாதனையில் கூறப்படும் பண்புகளும் எம்மில் வளர்க்கும் முயற்சியும் எமது அகங்காரத்தைக் குறைந்து சாதனை செய்ய வேண்டும்.
 6. இப்படி புத்தியைத் தூண்டும் அந்தப்பேரோளி எமது மனதில் பாயத்தொடங்க எமது மனம் எண்ணச்சலனங்கள் குறைந்து ஏகாக்கிரம் அடையத்தொடங்கும்.
 7. இப்படி ஏகாக்கிரமடைந்த மனம் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து விட்டு மந்திர ஜெபத்தில் மாத்திரம் நிலைபெறத்தொடங்க எமது ஜெபத்திற்கான கால அளவு குறையும்.
 8. இப்படி தேர்ந்த கூர்மையடைந்த ஏகாக்கிரமுடைய சாதகன் 108 தடவை ஒரு மாலை ஜெபம் செய்ய 6 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு மணித்தியாலத்தில் 10 - 11 மாலை செய்ய முடியும். இந்த நிலை நீண்டகாலப்பயிற்சி, சிரத்தையான மனத்தூய்மை என்பவற்றை அடைந்திருந்தால் மாத்திரமே சாத்தியம்.
 9. சிலர் விழிப்புணர்வு நழுவி துரிதமாக ஜெபத்தை முடித்துவிட்டதாக நம்புவார்கள், இடையில் தூக்கம் வந்திருக்கும். இத்தகையவர்கள் உடல் அதிக பிராண சக்தியை ஏற்க பக்குவப்படாததால் ஏற்படும் நிலை; இத்தகையவர்கள் உடல்பயிற்சி, ஆசனம், உணவு ஒழுக்கங்கள் மூலம் தமது உடலைத் தயார்ப்படுத்த வேண்டும்.
 10. உங்களுக்கு அதிக நேரம் ஜெபம் செய்வதற்கு எடுக்கிறது என்றால் மேற்கூறியதைப்போல் சித்த விருத்திகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
 11. சாதனை அனுபவத்தை எழுதி அனுப்பிய சாதகர் மணித்தியாலத்திற்கு 05 மாலைகளே ஜெபிக்கிறார், ஆகவே அவரது மனமும் விகல்பத்தில் சஞ்சரிக்கிறது. இன்னும் முழுமையாக ஏகாக்கிரமடையவில்லை!
 12. ஆகவே உங்களுடைய கருத்தின் தொனியில் அவர் வேகமாக ஜெபிக்கிறார் அதனால் பலன் கிடைக்காது என்ற சாதனையின் நுணுக்கம், இலக்குத் தெரியாத சாதனை அனுபவம் இல்லாதாவர்களின் கூற்றை ஒப்பிக்காமல் சாதனை என்பது மனதின் சலனத்தைக் குறைக்கும் பயிற்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
 13. மனதின் எண்ணச்சலனம் குறைந்தால் சரியான உச்சரிப்புடன் ஒரு மாலை அளவு 06 நிமிடங்களில் முடிக்கலாம்!
 14. ஒரு மாலை அளவினை சொல்லுவதற்கு எடுக்கும் நேரம் என்பது வேகமாகச் சொல்லுவதில் இல்லை, உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் ஏற்படுத்தும் தடைகளில் இருக்கிறது என்று உணருங்கள்.
 15. உதாரணம் கூறுவதாக இருந்தால் மைலாப்பூரிலிருந்து மீனம்பாக்கம் போவதற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்றால் வெறும் 20 நிமிட பயணம் மாத்திரமே! ஆனால் peak hours இல் இரண்டு மணி நேரம் பிடிக்கும். தூரம் மாறவில்லை, நெரிசல் எமது வேகத்தைக் குறைக்கிறது. இதைப்போல் மந்திரங்களில் உள்ள அட்சரங்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே அளவு நேரத்தில்தான் உச்சரிப்பார்கள், ஒரு சில மாத்திரைகள் (செக்கன்) கூடிக்குறையலாம். அதிக நேரம் எடுப்பதற்குக் காரணம் மனம் எங்காவது ஊர்வம்பு அளக்கப்போய்விடுவதே 😂🤣😁
 16. இந்தப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சாதனையைத் தொடர்ச்சியாகச் செய்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை, தொடர்ச்சியாக்ச் செய்யும் போது எப்போதாவது அன்னையின் திருவருள் மனதில் ஒளி பாய்ச்சும் போது எமது மனச்சலனம் குறைந்து சாதனையில் முன்னேறுவோம்.

சாதகர்களின் காயத்ரி சாதனை அனுபவங்கள்

குருமண்டலத்திடம் சாதனை பயிலும் சாதகர் ஒருவரின் லகு அனுஷ்டானக் அனுபவக் குறிப்பு;

******************************************************************


அன்பின் அண்ணா

இன்றுடன்  லகு அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு நாளை முதல் கல்ப சாதனை தொடங்குகிறேன். 


மார்ச் - ஏப்ரல் 2020 லகு அனுஷ்டானம் சாதனை அனுபவம்.

உங்கள் அறிவுறுத்தலின்படி நான் என்னில் கவனித்த குண மாற்றங்கள்

 • காலை எழுவது மிகவும் சிரமமாக இருக்கும். இந்த லகு அனுஷ்டானம் ஆரம்பித்தது முதல் காலை 3.30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். மேலும் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து செயல்படுத்தும் தீர்மானம் இருக்கையில் அனைத்துதும் அனுகூலமாக அமைகிறது என்பதை உணர்ந்தேன்.

 • மனதில் எந்நேரமும் திருப்தியற்ற நிலை இருந்தது. அதனால் கோபம் எரிச்சல் போன்ற குணங்கள் வெளிப்பட்டன இதனிலிருந்து எவ்வாறு வெளிவருவது என யோசித்தேன். அப்பொழுது என்னில் ஒரு குரல் மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்து செயல்படு என அறிவுறுத்தியது. அவ்வாறு செய்தவுடன் கோபம் எரிச்சல் குறைந்ததுடன் உற்சாகமாகவும் வேலை செய்ய முடிந்தது. அத்துடன் கோபம் எரிச்சலின் காரணமாக தவறு செய்ய நேரிட்டால் அதற்கு முன்னரே ஒரு குரல் என்னை தடுத்து மனதை திசை திருப்பிவிடுகிறது.
 • நான் காலை மாலை என பிரித்து லகு அனுஷ்டானம் செய்தேன். இம்முறை காயத்ரி அனுஷ்டானம் மாலை செய்கையில் வீட்டில் சத்தமாக பட்டு கேட்பது, பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு சாதனை செய்ய சிரமாக இருந்தது. அப்போது எழுந்து அவர்களை நன்றாக திட்ட தோன்றியது. எனினும் சாதனை முடியும் வரை எழுவது இல்லை என சங்கல்பம் கொண்டிருந்தேன். ஆகையால் தேவியிடம் "அம்மா நான் இந்த சத்தத்தை தாண்டி மனம் ஒருமித்து சாதனை பக்குவத்தை இன்னும் அடையவில்லை தயவு கூர்ந்து என்னை வழிநட த்துவாயாக" என வேண்டினேன். சிறிது நேரத்தில் என் தாயார் அங்கு வந்து வீட்டில் உள்ளோர் எனக்கு சிரமம் தருவதை உணர்த்தினார். அன்றில் இருந்து சாதனை செய்யும்போது அமைதியாக இருக்கும்
 • தேவைக்கு அதிகமாக இணைய தளத்தில் இருப்பது, you tube பார்ப்பது என தேவையற்று நேரம் விரயம் செய்தேன். சில நாட்களாக என்னுள் ஒரு குரல் நீ இந்த நேரத்தை பலனுள்ளதாக செயல்படுத்தலாம் என கூறி செய்ய வேண்டிய காரியத்தையும் அறிவுறுத்துகிறது. இதனால் எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரும் செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கிறது.
 • செய்யும் காரியங்களில்  ஈடுபாடு அதிகம் ஆகிறது.  ஈடுபாட்டுடன் செய்வதால் திருப்தி அதிகரிக்கிறது. இதனால் நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது.
 • தீய எண்ணங்கள் ஏற்படுகையில், நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும்  கல்யாண குணம் உடையவள் என்று ஒரு குரல் எதிரொலிக்கும், அதை தொடர்ந்து அத்தகைய எண்ணங்களில் இருந்து மனதை ஒருவர் திருப்பிவிடுவதை உணர்ந்துள்ளேன். அத்துடன் தீய எண்ணத்தை நீக்கும் விதமாக நல்ல எண்ணம் ஒன்று பதிவிட்டது.
 • ஒரு காரியத்தை செய்யவேண்டும் என திட்டமிட்டபடி செய்து முடித்துவிடுகிறேன்.  தடைகள் இருப்பின் அதனை எவ்வாறு செய்வது என அறிந்து அதனை நீக்கும் வழிகளை கண்டறிந்து செயல்படும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. 
 • பிறர்க்கு உதவி செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.  காயத்ரி சாதனைக்கு பின் நான் செய்யும் உதவிகள் அதிகரித்துள்ளது. அதுவும் தேடிச் சென்று உதவும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.  
 • செயல், பேச்சு மற்றும் எண்ணங்கள் யாரையும் பாதிக்கும் விதமாக இல்லாமல் நன்மை பயக்கும் விதமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொ ள்கிறேன். என்னையும் மீறி ஒருவரை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் அது எனக்கு உணர்த்தப்படுவதுடன் மீண்டும் அவ்வாறு நடக்காமல் இருக்க வழியையும் காட்டுகிறது….
 • முன்பு ஒரு காரியத்தை செய்வதனால் அந்த காரியத்தை செய்வதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிந்தித்து அதில் உள்ள சிரமங்களை காரணமாக கொண்டு அதை செய்வதை தள்ளிப்போட்டுவிடுவேன். இப்போது ஆராய்ந்து அந்த செயலில் ஈடுபடுவதால் தவறு இல்லை எனில் முயற்சி செய்து பார்க்கும் தைரியம் அதிகரித்ததுள்ளது.
 • முந்தைய லகு அனுஷ்டானகளின் போது உடல் உபாதைகள் இருந்தது இம்முறை அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை மனம் இலகுவாகவும் அமைதியாகவும் உள்ளது .
 • என்னுள் ஒரு வழிகாட்டி இருந்து என்னை வழிநடத்துவது போல் உணர்கிறேன்.
 • என்னை யாரேனும் நினைத்து தகவல் சொல்ல நினைத்தால் அது முன்னரே எனக்கு உணரத்தப்பட்டுவிடும். அன்று நீங்கள் கல்ப சாதனை செய்வதற்கு அனுப்பிய மெசேஜ் அப்படியே எனக்கு உணத்தப்பட்டது. சிறிது நேரத்தில் உங்களது மெசேஜ் வந்தது. அது போல் பல முறை நடந்து உள்ளது.

என்னால் உணர முடிந்த மாற்றத்தை இதில் பகிர்ந்துள்ளேன் அண்ணா. அத்துடன் சித்த சாதனையில் கவனம்  செலுத்தி அந்த பண்புகளை வளர்க்க முயற்சிகளை செய்கிறேன்.

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...