குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 24, 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு

இன்று (22/02/2016) அகத்தியர் ஞானம் முப்பது பாடல் தொகுப்பிற்கு குருவருளால் நாம் எழுதிய அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் சம்பிரதாய பூர்வமாக சென்னையில் வெளியிடப்பட்டது.

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு
*****************************************************************

22/02/2016 அன்று சென்னை திருவான்மியூர் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சம்பிரதாய ரீதியில் பௌர்ணமி காயத்ரி - ஸ்ரீ வித்யா பூஜையின் பின்னர் வெளியிடப்பட்டது.

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை தீர்க்காம்ஸ ரேகையில் மக நட்சத்திரம், குரு, சந்திரன், சூரியன், பூமி ஆகிய ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவதே மாசி மகம். ஆனால் இந்த 2016ம் வருடம் தீர்க்காம்ஸ, அட்சாம்ஸம் ஆகிய இரண்டு ரேகையிலும் வரும் இந்த மாசி மகம் பல்லாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அபூர்வ நிகழ்வாகும். அகத்தியர் தனது தவத்தை பூர்த்தி செய்து சித்தி பெற்றது இப்படியான ஒரு அபூர்வ நாளில் என்று புராணங்கள் கூறுகின்றது. பூமியில் தெய்வ காந்த அலைகள் பரவும் இந்த அபூர்வ நாளில் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானம் தனது முதலாவது நூலை வெளியிடுவது இறை அருளே.

இந்நூல் மன்மத வருடம், மாசி மாதம், 10ம் நாள் (22/02/2016) திங்கட்கிழமை, கும்ப ராசியில் சூரியன் நிற்க, சிம்ம ராசியில் குரு, பூர்ண சந்திரம் மக நட்சத்திரத்தில் இருக்க, ரிஷப இலக்கின காலத்தில் சூரியன் உச்சம் பெறும் மகாமகம் புண்ணிய காலத்தில் இந்த நூல் ஸ்ரீ காயத்ரி யாகத்தின் பின்னர் பிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் குருமண்டல ஆசியுடன் வெளியிடப்பட்டது.

பொது அறிமுக விழா எதிர்வரும் மார்ச் 13ம் திகதி நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் பங்கு பற்றி நூலின் பிரதியை பெறலாம்.
எதிர்பாராமல் தமிழ் நாட்டின் இரு பிரபலங்கள் பங்குபற்றி நூலை வெளியிட்டு வைத்தனர்.

மேலும் பூஜைக்கு மூன்று அபூர்வ கோமுகி சங்குகள் வந்து சேர்ந்தமை குருநாதரின் பரிபூரண ஆசிக்குரிய நிமித்தம் என்பதில் ஐயமில்லை .

IG கிருஷ்ணமூர்த்தி ஐயா எமது ஆத்ம ஞான யோக சபை உறுப்பினர், யோக சாதகர்.

நூலை வெளியிடுபவர் Mr. S.S. Krishnamoorthy, IPS. IG of Police (Rtd), South Zone, Madurai,முதல் பிரதி பெறுபவர்: Mr. K. Kamalakumar, State President, youth wing, Bharathiya Janatha Party, Tamilnadu,

பதிப்பாசிரியர்: Dr. B.P. Pranav Bp, Pranav Swastha Stanam, Thiruvanmiyoor, Chennai, Tamil Naduபிரணவ் ஸ்வஸ்த ஸ்தானத்தில் உள்ள பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் விளக்கு, இந்த விளக்கில் உள்ள நூற்றி எட்டு திரிகள் நட்சத்திர தொகுதியையும், பின்னர் பன்னிரண்டு ராசிமண்டலம், நவகோள்கள், அஷ்ட திக்கு பாலகர்கள்  என முழு அண்டத்தின் அமைப்பையும்  விளக்கும்.  பிரதி பௌர்ணமி பூஜையின் போது இந்த விளக்கு எரிக்கப்பட்டு காயத்ரி, ஸ்ரீ வித்யா மந்திர ஜெபம் நடாத்தப்படும். 

Wednesday, February 17, 2016

சித்தர்களின் அண்ட பிண்ட தொடர்பு இரகசியம் - ஜோதி – ஷம்அண்டத்தில் உள்ளதே பிண்டம் 
பிண்டத்தில் உள்ளதே அண்டம் 
அண்டமும் பிண்டமும் ஒன்றே 
அறிந்துதான் பார்க்கும்போதே
சட்டைமுனி சித்தர் -

அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள தொடர்பினை அறிந்து எப்படி மனிதனின் அகத்திலும் புறத்திலும் ஜோதிஷம். இன்று ஜோதிஷம் தமது குறைகளை நிவர்த்திக்கவும், எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை அறியவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இந்த பண்டைய ஞானத்தின் உண்மை நோக்கம் ஆழ்ந்த தன்னையறியும் தத்துவ ஞானத்துடன் தொடர்புடையது. நான் யார்? நான் வாழும் பூமி எப்படி செயற்படுகிறது? எனக்கும் இந்த பூமிக்கும், வானப்பரப்பில் நாம் காணும் வான் பொருட்களுக்கும் தொடர்பு உண்டா? இந்த தொடர்பால் எனது வாழ்க்கையும், நான் வாழும் சூழலின் தன்மையும் தாக்கமுறுகிறதா? அப்படியானால் அந்த தொடர்புகளை எப்படி அறிந்து கொள்வது? அதற்கு ரிஷிகளும் சித்தர்களும் கண்ட ஞானம்தான் ஜோதிஷம். 

இந்த அரிய ஞானத்தை ஆழமாக அறிந்து கொள்ள கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 05. 30 – 07.00 வரை நவக்கிரக, நட்சத்திர, துருவ நட்சத்திர தியான சாதனையுடன் கலந்துரையாடல் தொடங்கப்படுகிறது. 

முதல் வகுப்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள்; ஜோதிஷம் வேதத்தின் அங்கம், ஜோதிட சாஸ்திரத்தின் வரைவிலக்கணம், ஜோதிடத்தின் பிரிவுகள், ஜோதிடத்தின் பயன்பாடு, ஜோதிடம் கற்க விரும்பும் மாணவரிடம் இருக்க வேண்டிய பண்புகள். 

இரண்டாவது வகுப்பு: வேதகால ரிஷிகளின் ஜோதிடத்தில் உள்ள பிரிவுகள், ஜோதிடத்தினது தர்க்க ரீதியான விளக்கம், அண்டத்தினதும் பிண்டத்தினதும் விளக்கம், அண்டத்துடனும், பிண்டத்துடனும் ஒத்திசைந்து வாழவேண்டியதன் முக்கியத்துவமும் அதில் ஜோதிடத்தின் பங்கும், பஞ்ச பூதங்கள், 

மூன்றாவது வகுப்பு: ஜோதிடத்தின் வரலாறு. 

இதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரக் கற்பித்தலில் என்ன கற்பிக்கப்படும் என்ற விபரம் தரப்படும். 

உரை நிகழ்த்துபவர்: ஸ்ரீ ஸக்தி சுமனன் (Dr. T. Sumanenthiran) 


வகுப்பின் நோக்கம்
 • நிச்சயமாக இந்த வகுப்பு ஜாதகம் பார்க்கும் இடம் இல்லை. 
 • அறிவுத்தாகமும், சிரத்தையும் கொண்ட மாணவர்கள் பங்குபெறலாம். 
 • வகுப்பின் நோக்கம் ஜோதிடத்தின் அடிப்படை கோட்பாடுகளை தெளிவாக விளங்கி கற்றல், ஆராய்தல், தெளிதல். 
 • ஜோதிட மூல நூற்களை விளங்கி கற்றல் 
 • வகுப்பில் பங்கு கொள்பவர்கள் தமது ஜாதகத்தை பலன் பார்க்கும் இடமாக பயன்படுத்த கூடாது. 
 • ஜோதிடத்தை தன்னை  அறிவதில் பயன்படுமா  என்ற  நோக்கில் கற்க ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த வகுப்பு பயன்படும். 
இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் இங்கு வலைத்தளத்தில் பதிவுகளாக பதியப்படும். 


Wednesday, February 10, 2016

வானியல் விளக்கம் - பகுதி 01

ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் வானியலின் புரிதல். பண்டைய இந்திய ரிஷிகளின் சமூகத்தில் வானியலும், வானியல் தாக்கத்தால் ஏற்படும் மனிதனின் வாழ்க்கையும் மிக அரிய விஞ்ஞானமாகும். ஜோதிடர் என்று கூறுபவரின் அடிப்படை அறிவு வானியலில் இருக்க வேண்டும். பண்டைய ஜோதிடர்கள் என்று கூறப்படும் ரிஷிகள் பூமியின் சுழற்சி, கால நிலை மாற்றங்கள், பூமியில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகள், சந்திர சூரியரின் இயக்கம், இரவு, பகல் என்பவற்றின் கால அளவு, கிரகங்களும், நடச்சத்திரங்க்களும் வானத்தில் இணைவதால் ஏற்படும் சூக்ஷ்ம மாற்றங்கள் என்பன பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து தமது அறிவை தொகுத்து இருந்தனர். இதில் ஆச்சரியமான விடயம் என்ன வென்றால் இன்று காணப்படும் சிக்கலான தொலைநோக்கிகள், ரொக்கெட் தொழில் நுட்பம் என்பன இல்லாமல் இவற்றை துல்லியமாக கணித்து கூறியமையாகும். 

பூமியை மையமாக கொண்ட கணிதம் 

ரிஷிகள் இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் இடைவிடாமல் இயங்குவதை நன்கு அறிந்திருந்தார்கள். இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இயங்காமல் இருப்பதில்லை என்ற அறிவு அவர்களுக்கு இருந்ததால், தமது கணிப்புகள் தமக்கு தூரமான ஒன்றை அசையாதது என்று அனுமானித்துக்கொண்டு கணிப்பது கஷ்டம் என்பதனை அறிந்திருந்தார்கள். ஆகவே சார்பு இயக்கம் ஒன்றின் மூலமே விடயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவை அவர்கள் பெற்றிருந்தார்கள். தாம் வசிக்கும் பூமியை மையமாக வைத்துக்கொண்டு தம்மை சுற்றியுள்ள அண்மித்த கிரகங்களதும், நட்சத்திரங்களதும் தாக்கம் எப்படி பூமியில் வாழும் உயிர்கள் மீதும், இயற்கை மீதும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதனை கணித்தார்கள். ஆகவே இந்திய வானியலினதும், ஜோதிடவியலதும் கணித அடிப்படை பூமியை மையமாக கொண்டது. இது பூமியை பிரபஞ்சம் சுற்றுகிறது என்ற பண்டைய மூடநம்பிக்கை இல்லை. நவீன வானியல் சூரியனை மையமாக கொண்ட வானியல், ஆனால் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் வானியல் பூமியை மையமாக கொண்ட சார்பு கணிதமாகும். ரிஷிகள் சூரியன் கோள்மண்டலத்தின் மையம் என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளை அந்த கோள்களின் பூமி மீது, மனிதன் மீதான தாக்கம் எப்படி என்பதிலேயே கவனம் செலுத்தி இருந்தனர். 

அதேபோல் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் அசைந்தாலும் துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்கள் சார்பாக அசையாமல் இருப்பதாக கொள்ளப்படுகிறது. 

இராசி மண்டலம் : வானத்தில் 180 டிகிரியில் ஒரு வளையம் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் செல்வதாக கற்பனை செய்யவும். இந்த வளையத்தில் ஒழுங்கில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களின் கூட்டம் பூமியின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்துவதாக கண்டறிந்தார்கள். நக்ஷ + ஸ்திரம் என்றால் அசையாமல் இருப்பது என்று பொருள். இந்த வளையத்தில் காணப்படும் நட்சத்திர கூட்டத்தின் பெயர் இராசி மண்டலம் எனப்படும். இந்த இராசி மண்டலத்தை அளவை புள்ளியாக வைத்துக்கொண்டு வானத்தில் இருக்கும் கிரகம், ஏனைய நக்ஷத்திரங்கள் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்த வளையம் முழுமையாக 360 பாகையினை கொண்டிருக்கும். ஒவ்வொரு நட்சத்திரமும் 13'20' அளவினை கொண்டிருக்கும். இதன் படி மொத்த நட்சத்திர மண்டலமும் இருபத்தியேழு நக்ஷத்திரங்களை கொண்டிருக்கும். 

நக்ஷத்திர மண்டலம் நிலையாக திரை போல இருக்க அந்த திரையில் அசையும் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் வான்போருட்கள் கிரகங்கள். இவை இராசி மண்டலத்தின் மேற்கிலிருந்து கிழக்காக அசையும். கிரகங்கள் என்ற பெயரில் ஒரு விளக்கம் இருக்கிறது. கிரகம் என்றால் கௌவ்வி பிடிப்பது என்று அர்த்தம். அதாவது இராசி மண்டலத்தில் மெதுவாக நகர்ந்து நக்ஷத்திரத்தின் சக்திகளை கௌவ்வி பூமிக்கு அனுப்புவது என்று பொருள். பண்டைய இந்திய வானியலில் ஒன்பது கிரகங்கள் கூறப்படுகின்றன. அவையாவன சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது என்பன. இன்றைய வானியலில் பாவிக்கப்படும் ஆங்கிலச் சொல்லான planet என்பது சூரியனை சுற்றி நகரும் வான் பொருட்களை குறிக்கும். ஆனால் இந்திய வானியலில் குறிக்கப்படும் கிரகம் என்ற சொல் நக்ஷத்திர மண்டலத்தில் இருந்து சக்தியை ஈர்த்து பூமிக்கு செலுத்துபவற்றை குறிக்கும். இந்த விளக்கத்தின் படி கிரகங்களாக கொள்ளப்படும் ராகு, கேது என்பவை உண்மையில் கணிதப் புள்ளிகள். இவையும் பூமியில் நக்ஷத்திரங்களின் சக்தியை அனுப்புவதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதால் அவையும் கிரகங்களாக கொள்ளப்படுகின்றன. ஆகவே இந்திய வானியல், ஜோதிடவியலின் சொற்களின் விளக்கங்களை அப்படியே புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இந்த இராசி மண்டத்தில் சூரியன் சுற்றி வரும் பாதை சூரியப்பாதை என்று கூறப்படும். இந்த பாதை இராசி மணடலத்தை நடுவில் கடந்து செல்லும் போது 23'28' ஆல் பூமியின் மத்திய கோட்டுடன் சரிந்து காணப்படும். 

இராசிகள் 

இராசி மண்டலம் பன்னிரண்டு சம பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு 30 பாகை பகுதியும் இராசி என்று அழைக்கபடும். ஒவ்வொரு இராசியும் இரண்டே கால் நட்சத்திரங்களை கொண்டிருக்கும். இராசி மண்டலத்தின் குறித்த நட்சத்திர தொகுதி இராசி மண்டலத்தின் தொடக்கமாக கொள்ளப்படும். இந்த புள்ளியில் இருந்து இருபத்தியேழு நட்சத்திரங்களை கொண்ட பன்னிரெண்டு இராசிகள் வகுக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் கிரகங்கள் இந்த இராசி மண்டலத்திற்கு மேலே நிற்கும் போது அவை குறித்த இராசியில் நிற்பதாக குறிக்கப்படும். 

சூரியனில் இருந்து சனி வரையிலான ஏழு கிரகங்களும் இந்த இராசிகளுக்கு அதிபதியாக குறிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் அந்த கிரகங்களின் மூல சக்தி குறித்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்தது என்பதாகும். உதாரணம் சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடு என்றால் சூரியனது மூல சக்தியின் தோற்றம் சிம்மத்தில் இருந்து வந்தது என்று அர்த்தம். இராகு கேதுவிற்கு வீடு இல்லை என்று கூறுவது அவை உண்மையாக் பிரபஞ்சத்தில் ஸ்தூலமாக இல்லை என்பதால் ஆகும். 

Tuesday, February 09, 2016

பஞ்ச பூத கோட்பாட்டினை பிரயோகிப்பது எப்படி ?

இந்த பிரபஞ்சம் படைக்கப்படிருப்பது ஐம்பூதங்களால் என்று சித்தர் – இந்திய தத்துவம் கூறும். மேலைத்தேய ஆன்மீகர்களும் இந்த ஐம்பூதக் கொள்கையினை ஏற்றுக்கொள்கிறார்கள். வெறுமனே தத்துவத்தை பிரயோகித்து பயன்படுத்தாத நூலறிவாளர்கள் மேலைத்தேய ஆன்மீக கோட்பாட்டில் நான்கு பூதங்களே உள்ளன என கூச்சலிடுவதை கேட்க கூடியதாக இருக்கிறது. அத்தகையவர்கள் இந்த கட்டுரையினை கடைசி வரை வாசியுங்கள். இந்த கட்டுரையில் எப்படி இந்த பஞ்ச பூதக்கொள்கையினை மூலிகை, தாவரம் என்பவற்றிற்கு பிரயோக ரீதியாக பாவிப்பது என்பது பற்றி சொல்லித்தரப்போகிறேன். இன்று பலர் சித்த மருத்துவம், ஆயுள்வேதம் படித்த பல மருத்துவர்கள் பஞ்ச பூதத்தின் செய்கையினை பிரயோக ரீதியில் பயன்படுத்துவதில்லை. இதனால் இவை வேறு கோட்பாட்டு அறிவு என்ற வகையில் பார்க்கப்பட்டு ஏளனாமாக பார்க்கப்பட்டு வருகிறது. பொதுவாக சித்த வைத்தியர்கள் மூலதத்துவம் என்றால் ஏளனமாக ஒன்றுக்கும் உதவாதது என்ற பார்வையில் பார்த்து தமது தனித்துவத்தை இழந்து வருவதை இன்று அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இந்த சிறு கட்டுரை ஒரு ஒளிவிளக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

எமது சித்தாந்தம் பெரும் பிரளயத்தில் இருந்து உலகம் மெதுவாக தோன்றியதாக கூறுகிறது. பிரளயம் என்பது குழப்பமான தன்மை (chaos), இந்த பிரளயத்தின் அதிர்வினையையே நடராஜர் என்று குறித்து வைத்தனர். இந்த பிரளய குழப்பத்தில் இருந்து ஒரு ஒழுங்கு தோன்றியதை பஞ்சீகரணம் என்றார்கள். இந்த பஞ்சீகரணத்தில் ஆகாயத்தில் இருந்து, வாயு, வாயுவில் இருந்து அக்னி, அக்னியில் இருந்து அப்பு, அப்புவில் இருந்து பிருதிவி என்று ஒழுங்கில் பூதங்கள் பிரிந்தன. இவற்றில் ஆகாயம் தவிர்ந்த மற்ற நான்கும் மனிதனால் ஸ்தூல புலன்களால் உணரக்கூடியவை. ஆகாய பூதம் மனிதனை மனிதன் என்று கூறுவதற்கு காரணமான மனமாக, உணர்வாகிய ஆன்மாவுடன் சேர்ந்து மனிதனில் மாத்திரம் முழுமையாக இயங்குகிறது. ஆகாய பூதத்தை தனது மனத்தால் ஆட்சி செய்ய கூடியவன் மனிதன் என்பதாலேயே மனிதன் இன்று சக்தி வாய்ந்த உயிரினமாக விளங்குகிறான். மற்றைய உயிரினங்களில் இந்த ஆகாய பூதம் அவை உருவாவதற்கு உரிய மூலசக்தியாக இருக்கின்றதே அன்றி முழுமையாக செயற்படுத்த கூடிய நிலையில் இல்லை, இன்னொரு வார்த்தைகளில் கூறுவதானால் மற்ற உயிரினங்களில் மனம் ஒரு உணரும் கருவியாக மாத்திரம் இருக்கின்றதே அன்றி, தனது உணர்வின் இச்சையால் செயற்படுத்தப்படும் கருவியாக இல்லை. 

இதனால் மேலைத்தேய ஞானிகள் எல்லாவற்றிற்கும் பொதுவான வாயு, அக்னி, அப்பு, ப்ருதிவி ஆகிய நான்கையும் four element என்றும் உணர்வுடன் கூடிய மனதிற்கு மூலமான ஆகாயத்தை ஐந்தாவது பூதமாக “quinta essential” ஆக குறிப்பிடுகின்றனர். quinta essential என்பது ஆகாய பூதத்தில் இருந்து உருவான மனமும், உணர்வாகிய ஆன்மாவும் சேர்ந்த கலவை. ஆனால் சித்தர் தத்துவத்தில் அண்ட ஆகாயத்தை ஆகாய பூதம் எனவும் பிண்டத்தில் அது உருவாகும் நிலையினை அந்தக்கரணங்கள் என்றும், உணர்வை தனியே ஆன்மா என்றும் வகைப்படுத்தி வைத்தனர். ஆகவே சித்தர் தத்துவம் மிகவும் நுண்மையாக பகுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பியல்பு!

பஞ்சீகரண தத்துவ அடிப்படையில் பார்த்தால் எந்த ஒருபூதமும் தனித்த ஒரு நிலையில் பூதமாக இல்லை. ஒன்றில் இருந்து மற்றொன்று உருமாற்றப்பட்டே பூதங்கள் உருவாகின்றன. 

இந்த ஐந்து பூதங்களும் வெறுமனே ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட கற்கள் போல் காணப்படவில்லை. ஒவ்வொரு பூதமும் தான் அடுத்த பூதமாக மாறுவதற்குரிய ஆற்றலை கொண்டிருக்கின்றன. இந்த ஆற்றலால் தான் அவை அழிவிற்கும் உட்படும்போது ஒன்றுடன் ஒன்று கலந்து மீண்டும் தனது ஆரம்ப நிலைக்கு செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதேபோல் ஒரு பூதம் மற்றொரு பூதமாக மாறுவதற்குரிய பண்பினையும் கொண்டிருக்கும். இதற்கு ஒவ்வொரு பூதத்திற்கும் இரண்டு இயல்புகள் காணப்படும்; 

 • முதலாவது அதன் அடிப்படை பண்பு 
 • இரண்டாவது அது மற்றைய பூதமாக உருமாறுவதற்குரிய இயல்பு 
அக்னியை எடுத்துக்கொண்டால் அதன் அடிப்படை உஷ்ணம், மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு வரட்சி, 

ப்ருதிவியை எடுத்துக்கொண்டால் அடிப்படை வரட்சி, மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு குளிர்ச்சி. 

நீரை எடுத்துக்கொண்டால் அடிப்படை குளிர்ச்சி, மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு ஈரம், 

வாயுவினை எடுத்துகொண்டால் அடிப்படை ஈரம், மற்றைய பூதமாக உருமாருவதற்குரிய பண்பு உஷ்ணம். 

இந்த அடிப்படையினை வைத்துக்கொண்டு இரண்டு எதிர் எதிர் பூதங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். 
 • நீரும் அக்னியும் 
 • நிலமும் வாயுவும் 
அடுத்த பாகுபாடு 
 • நீரும் நிலமும் பாரமானவை, இவற்றின் செயல் மெதுவானவை 
 • அக்னியும் வாயுவும் இலகுவானவை, இவற்றின் செயல் விரைவனவை 
இதனை சற்று விரிவாக விளங்கி கொள்வோம். அக்னியை புனிதமானது என்று கூறுவதன் பொருள் இது இலகுவானதும், உஷ்ணமானது, நிறத்தினை தருவது, தன்னுடன் சேரும் பொருட்களை உருமாற்றக் கூடிய ஆற்றல் இருப்பதாலும், இது தூய்மைப்படுத்தும். ப்ருதிவி தத்துவம் பாரம் கூடியது, குளிர்ச்சியானது, பிருதிவி தத்துவம் சரியான விகிதத்தில் மனதில் கொண்டு வரக்கூடியவர்களது எண்ணம் உறுதியானதாக இருக்கும். அப்பு பூதம் பாயக்கூடியது, உணர்ச்சி மிக்கது, எல்லாவற்றுடனும் கலக்க கூடியது. வாயு பூதம் எங்கும் பரவக்கூடியது, உஷ்ணமானது, அசையக்கூடியது. மனிதனில் உருவாகும் எண்ணங்கள் வாயுத்தன்மை உடையவை. 

இந்த பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலும் வேறு வேறு விகிதத்தில் கலந்துள்ளது. 

இனி மூலிகை, தாவரங்களில் இந்த பூதங்கள் எப்படி செயல் கொள்கிறது என்று பார்ப்போம். 

பொதுவாக தாரவரங்களின் வேர்ப்பகுதி, கிழங்கு என்பன ப்ருதிவி தத்துவம், அப்பு தத்துவம் இலைகளிலும், தாவர சாறுகளிலும், மணமும், இலகுத்தன்மையும், அக்னி தன்மை பழுத்த பழங்களிலும், விதைகளிலும் காணப்படும். 

இதை வைத்துக்கொண்டு பொதுவான தாவர வர்க்க சரக்குகளை இலகுவாக வகைப்படுத்திக்கொள்ள முடியும். 

மனித உடலில் எலும்பும், நரம்பும் ப்ருதிவி தத்துவம், நிணநீர் தொகுதியும், பாய்மங்களும் அப்பு தத்துவம், சுவாசத்தொகுதி வாயு தத்துவம், எல்லாவற்றையும் இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும், உடல் சூட்டினை காக்கும் இரத்தம் அக்னி தத்துவம். இந்த அடிப்படையினை வைத்துக்கொண்டு உடலின் தன்மைகளை அறிய முடியும். 

பூமியை எடுத்துக்கொண்டால் பாஷாணம் முதலான தாது வர்க்கம் அனைத்தும் ப்ருதிவி பூதத்தின் தன்மை அதிகமாகவும், அப்புத்தன்மை தாவர வர்க்கத்திலும், வாயு பூத தன்மை விலங்கிலும், அக்னி தன்மை மனித இனத்திலும் அதிகமாக இயற்கையாகவே உள்ளது. 

மனித இனம் ஒரு வினோதமான இனம், எமது முன்னோர்கள் உலகை அறிவதற்குரிய ஞானத்தை எளிமையாக சுருக்கி பஞ்ச பூதமாக்கி நான்கு பூதங்களை உனது புலன்களால் அறியலாம் என்றும் அதனை அறிவதற்கு உரிய மனதை ஆக்கும் எல்லாவற்றுக்கும் மூலமான ஆகாயம் எனவும் கூறி வைத்தனர். இது ஒரு எளிய பிரயோக கோட்பாடு. ஆனால் நாம் இன்று இரசாயனவியல் என பாவிக்கும் மூலகங்கள் எவற்றையும் கண்களால் காணமுடியாது. அணுக்களின் வடிவம் என்பது நேரே பார்த்தறியாத கணிதத்தின் மூலம் நிறுவப்பட்ட அறிவியல் நிறுவல்கள். இவற்றை சாதாரண ஒருவன் பிரயோகித்து எந்த பயனும் பெற முடியாது. ஆனால் பஞ்ச பூத கோட்பாட்டினை விளங்கி கொண்ட எவரும் இதனை தமது வாழ்க்கைக்கு பிரயோகித்து பயன் பெறமுடியும். 

எதிர்வரும் காலத்தில் இது பற்றி மேலும் பதிவிடுவோம்!

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...