Posts

Showing posts from January, 2015

காயத்ரி மந்திரமும் நட்சத்திர மண்டல சக்திகளும்

Image
காயத்ரி மந்திரத்தில் மூன்று பதங்கள் காணப்படுகின்றன. முதலாவது பதம் "தத் ஸவிதுர்வரேணியம்" - மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை ஈர்பதாகவும்,

"பர்கோ தேவஸ்ய தீமஹி" பதம் சிம்மம், கன்னி, துலாம், விருட்சிக நட்சத்திர மண்டலங்களின் சக்தியை ஏற்பதாகவும்,

"தியோ யோநஹ ப்ரசோதயாத்" தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளின்  நட்சத்திர  மண்டல சக்திகளை ஈர்ப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆக காயத்ரி மந்திரம் தொடர்ச்சியாக சாதனை செய்துவர பூமிக்கு சக்தி வழங்கும் நட்சத்திர மண்டலங்களின் சக்தி மனிதனின் சூக்ஷ்ம மண்டலங்களில் நிறைந்து  மனிதனை சக்தியுள்ளவனாக்கும்.

இந்த வலைத்தளத்தினை தொடர்ச்சியாக வாசிக்கும் நண்பர்களுக்கு!

அன்பின் நண்பர்களே,

இந்த வலைத்தளத்தினை வாசிக்கும் நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். 
இதில் உள்ள விடயங்கள்  ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் அதேவேளை நான் கற்ற விடயங்களை மீட்டு ஒழுங்கு படுத்தும் முயற்சியாக செய்து வருகிறேன். 
மேலும் ஆன்மீக உபாசனை மூலம் தமது வாழ்க்கையினை முன்னேற்ற விரும்புபவர்கலுக்காக ஸ்ரீ யந்திர சாதனையும், காயத்ரி சித்த சாதனையும் கொடுத்துள்ளோம். 
இவை பற்றி உங்கள் கருத்துக்களை  தெரிவியுங்கள்!
மேலும் எவ்வகையாக விடயங்களை சேர்த்துக்கொள்ளலாம், விரிவாக எழுதவேண்டும் என்பதனையும் தெரிவியுங்கள். 
இந்த பதிவினை பார்க்கும் நண்பர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்!
அன்புடன் 
சுமனன்

காயத்ரி பிராண சாதனை

மந்திரத்தினை வெறுமனே இயந்திர கதியில் ஜெபிப்பதால் பெரிதாக பயன் எதுவும் கிட்டுவதில்லை. மந்திர சாதனையின் தேவை மனதை ஒருமைப்படுத்த என்று கூறப்பட்டாலும் அடிப்படியில் மந்திர ஜெபம் பிராண சாதனை. அதாவது மந்திரம் சித்தியான நிலையில் மந்திர ஜெபத்தின் போது ஒருவரின் காரண சரீரம் அதீத பிரபஞ்ச பிராணனை ஈர்க்கும். இதனை மந்திரத்தினை மூச்சில் கலப்பதன் மூலம் எளிதாக சாதிக்கலாம்.
இத்தகைய முறைகள் ஒழுங்காக தினசரி காயத்ரி ஜெபம், தியானம், சாதனை செய்யும் மாணவர்களுக்கு குருமாரால் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு சித்தர்களின் இரகசிய சாதனை முறையாகும்.

காயத்ரி தீக்ஷை

காயத்ரி மந்திரம் ஜெபிப்பதற்கு தீக்ஷை அவசியமா எனப் பலர் கேட்டு வருகிறார்கள். குருவை அண்டி சேவை செய்து தீக்ஷா பெறுவது என்பது இந்தக்காலத்தில் கடினமாக இருப்பதால் சாதகரின் நன்மை கருதி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மிக உயர்ந்த காயத்ரி சாதகரின் குரலில் காயத்ரி மந்திரத்தினை இணைத்துள்ளோம். இந்த காயத்ரி மந்திர உச்சரிப்பை கேட்பதே ஒருவர் தீக்ஷை பெறுவதற்கு  சமனானது! பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் இருபத்தி நான்கு காயத்ரி புரச்சரணம் முடித்த தற்காலத்திய ரிஷி!  ஒரு புரச்சரணம் என்பது 24 இலட்ச ஜெபம் கொண்டது. இந்த அரிய  ஓடியோவினை உங்கள் மோபைலில்  தரவிறக்கி கொண்டு தினசரி ஐந்து நிமிடங்கள் கேட்டு வந்தீர்களே ஆனால் உங்களுக்கு  உயர்ந்த காயத்ரி சாதனை செய்யும் பக்குவம் தானாக வரும்! 
அத்துடன் நாம் தந்துள்ள குருநாமங்களை  விடாமல் உச்சரித்து வரவும். 
https://sites.google.com/site/mantrajapafiles/


மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை

Image
திருமணம் என்பது இரு ஆன்மாக்களின் இணைவு, திருமணத்தின் மூலம் இருவேறு விருப்பம், உணர்வு கொண்ட இருவர் தமது சொந்த நோக்கங்களை தியாகம் செய்து புதிய உறுதிமொழியுடன் ஒருவருக்கு ஒருவர் இணையாக தம்மை உருவாக்கி கொண்டு இன்பமுடன் வாழும் வழி! ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த உலகில் தனித்திறமைகளுடன், விருப்பு வெறுப்புகளுடன் அதே வேலை சில குறைகளுடன் பிறந்திருக்கின்றனர். அவர்கள் திருமணம் எனும் இணைவின் மூலம் தமது திறமைகளை இணைத்து, குறைகளை ஒருவர் ஆற்றலில் இருந்து மற்றொருவர் மூலம் நிவர்த்தித்து இன்பமாக வாழும் செயல் முறையே திருமணம். இதன் மூலம் குறித்த ஆணும், பெண்ணும் முழுமையான ஆளுமையினை பெறுகின்றனர். இந்தக் காரணத்திற்காக மனித குலத்திற்கு திருமணம் என்ற ஒரு பொறிமுறை தேவையாக இருக்கிறது. இதன் மூலம் இரண்டு ஆன்மாக்களின் மனம், உடல், உணர்வு இணைந்து தமது வாழ்விலு, தம்மை சூழ உள்ள குடும்ப, சமூகத்திலும் மன, பௌதீக, ஆன்மீக இன்பங்களை உருவாக்குவதே திருமணத்தின் இலக்கு!
இத்தகைய திருமண வாழ்க்கையிற்கு கணவனும், மனைவியும் தம்முடைய எண்ணங்கள், செய்கைகள், நோக்கங்களில் சிறந்த தெளிவுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த தெளிவிற்கு மனதிற்கு கொடுக்…

சித்தர்களின் வைகுண்ட ஏகாதசி விளக்கம்

Image
இன்று வைகுண்ட ஏகாதசி! ஏகாதசி என்பது தீமை என்ற உணர்வு எமக்குள் வராமல் இருக்கும் படி எமது ஆத்ம சக்தியினை வளர்த்துக்கொள்வது, விஷ்ணு என்பது எமது உயிராகிய ஆத்மா பெற்ற காக்கும் சக்தி, விஷ்ணுவை வணக்குவது உயிர் தீமைகளில் இருந்து தன்னை காக்கும் சக்தியினை பெறுவது, விரதம் என்பது எம்முள் உள்ள தீய உணர்வுகளிற்கு மேலும் சாப்பாடு கொடுக்காமல் உயிரினை ஒளியாக்குவது! இப்படி செய்து தெளிவான நிலை பெறுதலே ஏகாதசி விரதம்! 
அப்படியானால் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கும் என்பது என்ன? 
உடலில் உள்ளதுதான் சொர்க்க வாசல்! உயிருக்கு ஆதாரம் சுவாசம், சுவாசம் செல்லும் வழி மூக்கு, கண்களால் பார்க்கு எதுவும் உணர்வுடன் கலந்து உயிரில் பதியும் தன்மை உடையது, நாம் எந்த குணத்தை எண்ணுகிறோமோ அது உடலில் விளைந்து சுவாசத்தில் கலந்து உயிரில் பதிகிறது. இதுவே எமது நாளந்த வாழ்க்கையில் நடைபெறுகிறது. 
தீமையை காக்கும் சக்தி பெற சொர்க்க வாசல் திறக்க வேண்டும் என்பது எமது எண்ணங்களை நிறுத்தி தூய்மையானவற்றை மட்டும் எடுக்க கண்களுக்கு மத்தியில் மூக்கு முடியும் இடமாகிய "புருவமத்தியை" திறக்க வேண்டும், இதுவே சொர்க்க வாசல் திறப்பு…

அனைவருக்கும் இனிய 2015 புதிய வருடம்!

Image
அனைவருக்கும் இனிய 2015 புதிய வருடம்! நண்பர்கள், உலகில் உள்ள அனைவரும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா! ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அசைந்திடா பக்தியன்பு, வீரம் தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! அன்புடன் சுமனன்