சுக்கில தாதின் உற்பத்தி:
கோடிக்கணக்கான எலும்பு மஞ்ஞை/மற்றும் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுக்கிலம் உருவாகிறது. ஆயுர்வேத சித்த உடல் தத்துவங்களின் படி உண்ணும் உணவிலிருந்து ஏழுவித உடலில் அடிப்படை தாதுக்கள் உருவாகின்றன. இந்த ஏழும் ரச,ரக்த,மாம்ச,மேதா, அஸ்தி, சுக்ல என்பனவாகும். நாம் உண்ணும் அன்னத்திலிருந்து இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாக்கமடைகின்றன. இவற்றில் ஏழாவது தாது சுக்ல தாது எனப்படுவது. இது மற்றைய ஆறுதாதுக்களினதும் சுருக்கி, வலிமைப்படுத்தப்பட்ட தாது. இதனாலேயே இதன் பெறுமதி அதிகம்!
ஆயுர்வேத நூலாரின் படி சுக்கிலம் உடல் பூராகவும் பரவியுள்ளது. (சர்வ சரீர கதஹ)சுக்கிலமானது பாலில் நெய் கலந்திருப்பதுபோலும், கரும்பில் சக்கரைகலந்திருப்பதுபோலும் சுக்கிலம் உடலிற் கலந்திருக்கிறது. ஆகவே சித்தர்கள் கூறும் விந்தின் பொருளை இதனுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். உடல் பூராகவும் சுக்கிலம் உள்ளது எனக் கூறப்படுகிறது.
அடுத்து ஆணில் சுக்கிலமானது உடல்பூராகவும் நுண்மையாக படர்ந்திருந்து உடலுறவில் விந்துடன் வெளியேறுகிறது. இதன் மூலம் ஒரு சில விடயங்களை புரிந்துகொள்வோம்.
எமது உடல் உண்ணும் உணவுடன், பிரபஞ்ச பிராணசக்தியினையும் ஈர்த்து சப்த தாதுக்களாக வளர்ச்சியடைகிறது. இந்த தாதுக்கள் ஒவ்வொன்றும் செறிவாக்கப்பட்டு உடலினை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்பரிணாமத்தினை நோக்கி செலுத்தும் பணியினை செய்கிறது.
இப்படி செறிவு படுத்தப்பட்ட (Concentrated) தாதுவான சுக்கிலம் அல்லது விந்து உடல் பூராகவும் நுண்மையாக பரவியுள்ளது. இந்த நுண்மையான பரவல் சாதாரண உடலுறவின் மூலம் வெளியாகிறது. இது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் பாலில் நெய் கலந்திருத்தல் என்றால் பால் உடல், நெய் சுக்கிலம், சாதாரண உடலுறவில் பாலை கடைந்து நெய் எடுக்காமல் பழுதாக்குவது போலவே மனிதன் வாழ்கின்றான். ஆனால் தாந்திரீகம், பரியங்க யோகம் பயின்றவன் இந்த உடலெங்கும் பரவியுள்ள சுக்கிலத்தினை சரியான பொறிமுறையான கடைதல் (யோகசாதனை) மூலம் உயர்ந்த மனோ ஆன்ம சக்தியான நெய்யினை பெற்றுக்கொள்ளவேண்டும்.
பால் கறந்தபின்பு குறித்த நேரத்திற்குள் காய்ச்சி, உறையவைத்து தயிராக்கி, தயிரை கடைந்து நெய்யாக்கிக் கொள்ளவேண்டும். அல்லாமல் அதனை ஒரே பாத்திரத்தில் இட்டு பல நாட்கள் வைத்திருந்தால் அது கெட்டு நாற்றம் எடுக்கத்தொடங்கி விடும். இதைப்போலவே சுக்கிலத்தின் தன்மையும், உண்ட அன்னமும், பிராணசக்தியும் உடலினுள் சப்த தாதுக்களை உருவாக்கி, ஒன்றில் இருந்து ஒன்று செறிவாக்கி, இறுதியாக மன,பிராண, புத்திகளை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்ந்த சக்தியாக்கும் சுக்கிலத்தினை உருவாகிறது. இதனை சரியான முறையில் கடைந்து பக்குவப்படித்தி நெய்யாக்கி பயன்படுத்த முடியும் எனில் நல்லது, இல்லாமல் அதனை வலிந்து அடக்காமல் இயல்பான வழியில் விட்டுவிடவேண்டும். அப்படி அடக்கினால் பால் கெட்டு வீணாகி விடுவது போல் உடலிலும் மனத்திலும் நோயினை தோற்றுவித்து விடும். இதனை உடலில் வரும் பதின்நான்கு வேகங்களை அடக்குவதால் தோன்றும் நோய்களைப்பற்றி சித்தர்கள் விவரித்துள்ளதன் மூலம் ஒப்பீட்டு அறியவும்.
அடுத்து ச்ரகர் முதலான ஆயுர்வேத நூலார் பெண்களின் உடலில் உள்ள சுக்கிலத்தினைப்பற்றிய குறிப்பினை தருகிறார்கள். அது "சுக்கிலதாதுவானது உடலுறவின்போது பெண்களில் சுரந்து வெளியாகிறது, ஆனால் அது கர்ப்ப உற்பத்தியில் பயன்படுவதில்லை" என்பதாகும். இதன் மூலம் சுக்கிலம் என்பது உடல் சுரப்பும் அதனுடன் கலந்த பிராண சக்தியே என்பது புலனாகிறது. ஆயுர்வேதத்தில் சித்தர்கள் வலியுறுத்திக்காட்ட வந்த விடயம் "உடலுறவில், விந்து வெளியேற்றத்தில் அதிக பிராணசக்தி உடலில் இருந்து வெளியாகின்றது" என்பதே அன்றி விந்தினை அடக்குவதை அல்ல! இப்படி வெளியாகும் சக்தி சரியான முறையில் ஈடுகட்டப்படாவிட்டால் உடல் நோயினை, வயதாதலை நோக்கி விரைவாகச்செல்லும் என்பதினை புரிந்து கொள்ளவேண்டும்.
சுக்கிலத்தினை கடைந்து நெய்யாக்கும் செயன்முறைதான் "தியானம்", தியானம் என்பதன் பொருளும் பலரும் பலவாறாக விளங்கப்படுத்தி இருக்கிறார்கள், அதுபற்றி வேறொரு பதிவில் தனியாக விளக்குவோம்.
இங்கு நாம் கூறவரும் விடயத்தின் சுருக்கம் இதுதான், நீங்கள் சரியான பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டுமாயின் , சரியான தியானத்தினை மட்டும் செய்யுங்கள். அதனைவிடுத்து வேறு எந்த செய்முறையும் செயற்கையான முறையில் உங்கள் உடலின் வேகத்தினை அடக்கும் செய்முறைதான். இப்படி தியானம் செய்யும் போது விந்து நீக்கும் காம எண்ணம் மனதில் எழுந்தால் அதனால் சலனமுற்று தவறு செய்ததாக வருந்தி தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவேண்டும். அப்படி முயற்சிக்கும் போது ஒரு நாள், ஒரு பிறப்பில் அது கைகூடும், அதுவன்றி விவேகானந்தர் பிரம்மச்சாரியாக இருந்தார் என்று நானும் அதுபோல இருப்பேன் என்று உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயலக்கூடாது,விவேகானந்தர் போன்றோர் பல பிறப்புகளில் எடுத்த முயற்சி, நீண்ட தியான சாதனையே அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தது என்று உணர்ந்து சரியான வழியில் முயற்சிக்கவேண்டும். அதேவேளை மனிதனின் செயற்பாட்டில் உடலுறவில்தான் அதிக சக்தி வெளியாகிறது என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்.
இப்படி ஆன்மீகத்தில் எதுவும் விருப்பமில்லை என்றால் அதீத உணர்ச்சிக்கு அடிமையாகி (obsession), உள்ளீட்டினை (Input) விட அதிக வெளியீடு(output) செய்யாமல் மிதமாக(balanced) காமத்தினை அனுபவிக்க வேண்டும்.
நன்றி
ReplyDeleteதெளிவான விளக்கம்!!
ReplyDeleteVery useful message. Thank you Guruji
ReplyDelete