Posts

Showing posts from November, 2015

எனது பாட்டனாரிடம் இருந்த சித்த வைத்திய நூல்களின் தொகுப்பு

எனது பாட்டனார் வேதாரண்யத்தில் வாழ்ந்த ஸ்ரீ சோமாஸ்கந்த குருக்களிடம் முறைப்படி தனது பதினாறாவது வயதிலிருந்து வைத்தியம் கற்றவர். மேலும் தாய் வழி மௌனகுரு சித்தரின் வைத்திய முறைகளை  கற்றவர். இந்த நூற்கள் வேதாரண்யத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் சேகரித்திருக்கலாம். நாட்டுச் சூழ்நிலை காரணமாக மாதகல் கிராமத்தில் இருந்து அனைவரும் வெளியேறிய  போதும், தனது  ஊரினை விட்டு வெளிவர மாட்டேன் என்று இறுதிக்காலம் வரை அங்கேயே வாழ்ந்து மறைந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் ஊர் இருக்கும்போது இந்த நூல்களை சுவடிகளை காப்பாற்றுவதற்கு நெற் பெட்டகத்தில் அடியில் வைத்து பாதுகாத்து பின்னர் சுமுக நிலையில்  எனது அத்தையாரிடன் கொடுத்து எனது கைகளுக்கு இறுதியாக வந்து சேர்ந்தது. 
தொகுப்பின் படி  நூற்றி பதினைந்து நூற்கள் அதில் முதல் நாற்பத்து ஐந்து நூற்கள் காணாமல் போய்விட்டது.  ஆக மொத்தம் இந்த தொகுப்பில் எழுபத்து ஏழு நூற்கள் கையிருப்பில் உள்ளன. 
இவற்றில் சிலது தாமரை நூலக பதிப்பில் வந்திருக்கின்றன. அப்படி வெளிவராதவற்றை எனது பாட்டனாரின் வைத்திய சேவை நினைவாக பதிப்பிக்கலாம் என்று இருக்கிறேன். குருவருளும் திருவருளும் கூட வேண்டும்! 
அக…

அகஸ்திய மகரிஷியின் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா - மனோன்மணி பூசை அகவல்

Image
கடந்த 2014 December மாதத்தில் மனோன்மணி பூசை அகவல் என்று ஒரு பதிவு இட்டிருந்தோம்.  பதிவு இங்கே,  இந்த மனோன்மணி பூசை அகவல் தொடர்பான பின்னணித் தகவலும் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி அடுத்து வெளிவர உள்ள நூல் பற்றிய விபரங்கள் இங்கு குருவின் ஆணைக்கு அமைய பகிர்கின்றோம்.

இந்த அகவல் என்னைப் பொறுத்த வரையில் மிகவும் அதிமுக்கியமான மந்திர பாராயணம்.  எனது தந்தையின் உபதேசப்படி சிறுவயதில்  அகத்திய மகரிஷியை குருவாக எண்ணி வணங்கும் போது, எனது தந்தையார் கந்தர்சஷ்டி கவசம் படிப்பார், தாய் விநாயாகர் கவசம் படிப்பார், இவர்கள் படிக்காத வழக்கில் இல்லாத அகத்தியர் பாடிய தோத்திரம் ஒன்றை நானும் பாடவேண்டும் என்று  எண்ணிய காலத்தில் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்த அற்புத தோத்திரம் இது.  இந்த தோத்திரத்தை  எனது காயத்ரி தீட்சை கிட்டும்வரை பல வருடங்கள் அனுதினமும் படித்து வந்தேன். இதன் பொருள் அக்காலத்தில் அறியும் பக்குவம் இருக்கவில்லை. பின்னர் காயத்ரி உபாசனையில் செல்லும்போது இதனை படிப்பது நின்று விட்டது. 
பல்லாண்டுகளின் பின்னர் ஸ்ரீ வித்யா உபாசனை தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் குருநாதர் ஆணைக்கு அமைய அ…

அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு கூட்டுதியானம் - 01

நேற்றைய (12 Nov 2015) காயத்ரி - ம்ருத்யுஜெய பூஜை ஹோமத்தின் பின்னர் நடைபெற்ற கூட்டுப்பிராத்தனையில் பிரார்த்தனைக்கு விண்ணப்பித்த அன்பர்களது பெயர்கள் ஒவ்வொன்றாக  வாசிக்கப்பட்டு கீழ்வருமாறு  பிரார்த்திக்கப்பட்டது. 
எமது பூஜையில், தியானத்தில் பங்கேற்ற அனைவரது  குடும்பத்தில், இல்லத்தில் அகத்திய மகரிஷியின் அருளாசியும், சித்த வித்யா குருமண்டல குருமார்களின் அருளாசியும் அருளாற்றலும், துருவ நட்சத்திரத்தின் அருள் ஆற்றலும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும், ஆதிபராபட்டாரிகையின் அருளாற்றலும் பரவி அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா! அவர்கள் அனைவரும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம், பொறுமை, ஈகை பொருந்தி ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி, அன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி பெற்றிட வேண்டும்! 
பேரன்புடன்  
ஸ்ரீ ஸக்தி சுமனன்

நீங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்கப்படுகிறது!

Image
அன்பர்களே,

எமது வலைத்தளத்தை வாசிக்கும் நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள யோக ஞான விளக்கங்களை புரிந்து, அதுபடி நின்று, குருவருள் பெற்று, உலகவாழ்விலும், ஆன்ம வாழ்விலும் முன்னேற, தெய்வ குணத்தை பெற்று தெய்வ சக்தி பெற்றிட உங்கள் அனைவருக்கும் ஆக வேண்டி தினமும் பிரார்த்திக்கும் படி குருநாதர் கூறிய வாக்குக்கு அமைய இதுவரை ஸ்ரீ ஜோதி சாதனைக்கு பதிந்தவர்களதும், காயத்ரி சாதனைக்கு பதிந்தவர்களது பெயரும் ஏற்கனவே எமது தினசரி வாரந்திர தியான சாதனையில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. 
மேற்கூறிய சாதனையில்  இணையாமல் உங்கள் பெயரை பிரார்த்தனையில் இணைத்து  தெய்வ சக்தியின், குருமண்டலத்தின் அருளை பெற விரும்புபவர்கள் கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றவும், 
கீழ்வரும் பிரார்த்தனை வாக்கியத்தை நிரப்பி sithhavidya@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிடவும் உ+ம்: (தஞ்சாவூரில்) பிறந்த, ஜென்ம நட்சத்திரம் (உ+ம்: பூர) நட்சத்திரத்தில் உதித்த, உங்கள் தாயின் பெயர் (உ+ம்: ஸ்ரீமதி லக்ஷ்மியின்) மகன்/ மகள் உங்கள் பெயர் உ+ம்: ஹரிஹரன்
உதாரண வாக்கியம் வருமாறு: தஞ்சாவூரில் பிறந்த…

தமிழ்நாட்டில் தரிசித்த தலங்கள்.

இந்த வருட தமிழ்நாட்டு பயணத்தில் தரிசித்த தலங்கள்.
திருபரங்குன்றம் மதுரை மீனாட்சிகள்ளழகர்பழமுதிர்சோலைஅழகர் - இராக்காயி அம்மன் சுனை எட்டயபுரம் வெக்காளியம்மன் சித்தர் பீடம் திருச்செந்தூர் இராமேஸ்வரம் பிள்ளையார் பட்டி தேவிப்பட்டணம் தாயுமானார் உச்சிப்பிள்ளையார் கோவில்ஈஸ்வராய தபோவனம் பண்ணாரி அம்மன் பவானி சங்கமேஸ்வரர்திருச்செங்கோடு நாமக்கல் ஆஞ்சநேயர்குணசீலம் ஸ்ரீ ரங்கம் திருவானைக்கா தஞ்சை பிருகதீச்வ்ரம் சரஸ்வதி மகால் திருக்கருக்காவூர் திருவாலங்குடிதிருநாகேஸ்வரம்உப்பிலி அப்பன்ஐவர் வாடி பிரத்தியங்கிரா தாரசூரம் ஐராவதேஸ்வரர் பட்டீஸ்வரம் சுவாமிமலை வைத்தீஸ்வரன் கோவில் சிதம்பரம் தில்லைக்காளி வடலூர் வள்ளலார் வேலூர் பொற்கோவில்  காஞ்சி காமாட்சி காஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் திருத்தணி வடபழனி 

மகாலக்ஷ்மி சாதனா - வித்யாரண்ய சம்புடித ஸ்ரீ சூக்தம்

Image
இந்த மந்திர சாதனையினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம்.  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 
தேவிபுரம் குருஜி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் விசாகப்பட்டினம்,ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்த நாத சரஸ்வதி அவர்களால் அவருடைய மாணவர்களுக்கு உபதேசிக்கப்பட்டது. கீழ்வரும் தமிழாக்கம் அவருடைய பூர்ணாபிஷேக தீக்ஷா சீடர் ஸ்ரீ ஸக்தி சுமனன்  அவர்களால் செய்யப்பட்டது. 
யார் அளவற்ற செல்வத்துடன் நிறைவாக வாழ விரும்புகிறார்களோ அவர்கள் கீழ்வரும் கீழ்வரும் மந்திர ஸம்புடித ஸ்ரீ சூக்தத்தை காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் தினசரி தொடர்ச்சியாக 44 நாட்கள் ஜெபித்து வர சித்தியாகும்.
வித்யாரண்யா மிகச்சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகர். ஸ்ருங்கேரி பீடத்தை மீளஸ்தாபித்தவர். விஜய நகர பேரரசை உருவாக்கியவர். கீழ்வரும் மந்திரத்தை தினசரி தனது நாட்டின் வளத்திற்காக ஜெபித்து வந்தார்..
கீழ்வரும் மந்திரங்கள் வித்யாரண்ய சம்புடிக ஸ்ரீ சூக்தத்தில் மகாலக்ஷ்மியை ஆவாஹிர்ப்பதற்கு அமைக்கபட்டுள்ளது. 1.கமாலத்மிகா மந்திரம் : { ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீ…