Posts

Showing posts from August, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 02

கண்ணைய யோகியார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது சாதாரண மனிதன் போல் எந்த பகட்டும் இல்லாமல் தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு மாத்திரம் தமது கைப்பட பாடங்களாக யோக வித்தை, சித்த வித்தை, மந்திர தந்திர நுட்பங்களை எழுதிக் கொடுத்து நேரடி செய்முறை விளக்கங்களும் கொடுத்து கற்பித்து வந்தார். இப்படிக் கற்றவர்களில் இலங்கை காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் முதன்மையானவர், கிட்டத்தட்ட 44 வருடங்கள் இலங்கையில் இருந்து கொண்டு சென்னைக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் சென்று அவரிடம் அனைத்து வித்தைகளும் கற்றுக்கொண்டவர். அவர் தான் குருவிடம் கற்ற வித்தைகளை அனைவரும் பயன் படும்படி சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டு வந்துள்ளார். இந்த புத்தகங்கள் இலங்கை நுவரெலியாவில் காயத்ரி பீடத்தில் விற்பனைக்கு உள்ளன. அவை பற்றிய சிறிய அறிமுக விபரங்க்கள் வருமாறு;
எளிய முறை யோகப்பயிற்சி: யோக சாதனை இன்று பலராலும் பயிற்றுவிக்கப்படுகிறது, அவை எல்லோராலும் செய்யக்கூடிய அளவிற்கு எளிமையாக இருப்பதில்லை, உதாரணமாக பிரணாயாமம், ஆசனம், தாரணை, தியானம், சமாதி என்பன அனிவராலும் விளங்கிகொள்ள முடிவதில்லை. இப்படியான உயர்ந்த விடயங்களை எளிய வடிவில் அந…

சூஷ்ம பார்வையில் ஆக்ஞா சக்கரத்தின் செயல் முறை (சூட்சும பார்வை பகுதி 05)

Image
சென்ற பதிவில் தெய்வ ஜோதி வடிவாக காணப்படும் சகஸ்ரார சக்கரம் பற்றிப் பார்த்தோம். இந்த சக்கரமே சக்தியின் மூலம். இந்த பதிவில் இந்த சக்கரத்தின் ஒளி பரவுவதன் மூலம் சூட்சும பார்வையினை மனிதனிற்கு வழங்கும் சக்கரமான ஆக்ஞா சக்கரம் பற்றி பார்ப்போம். சகஸ்ரார ஒளி ஒவ்வொரு சக்கரங்களில் பாயும் போதும் அந்த சக்கரத்திற்குரிய சூஷ்ம சக்திகளை பெறுவோம் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் ஆக்ஞா சக்கரம் சூஷ்ம பார்வையினைத் தரக்கூடியது. 
இது மனிதனின் இரு புருவங்களுக்கு நடுவே நெற்றியில் இருக்கிறது. மனிதனது மன எண்ணங்களின் வேகங்களுக்கு உத்வேகங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த சக்கரமே. ஒருவன் ஆழ்ந்து சிந்திக்கும்போது புருவமத்தி சுருங்கி மடிவதனை அவதானிக்கலாம். ஒருவன் மனதினை ஏகாக்கிரப்படுத்தும் போது இந்த சக்கரம் செயல்படவேண்டும். அதன் மறுதலையாக இந்த சக்கரத்தினை செயற்படுத்தினால் மனம் ஏகாக்கிரமடையும். ஒருவன் தனது கண்களை உட்புறமாக திருப்பு புருவத்தினை நோக்கு செலுத்தி ஒரு விடயத்தினை சிந்திக்கும் போது ஆழமாக சிந்திக்கலாம். இதனை நீங்கள் உங்கள் அனுபத்திலேயே உணரலாம். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் சிறிது நம நமப்பு உணர்…

சூட்சும பார்வை (பகுதி 04)- சில யோக இரகசியங்கள் - சகஸ்ரார சக்கரத்தின் செயல் முறை

Image
மனிதன் சூட்சுமத் தன்மைகளை அறியும் ஆற்றல் உள்ளவன் என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் மனிதனது சூட்சும தன்மை எப்படி செயற்படுகிறது என்று பார்ப்போம். பொதுவாக யோகம், சித்தர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு மனிதனில் ஆறு ஆதாரங்கள், குண்டலினி என்பன இருப்பது பற்றி அறிந்திருப்பார்கள். இது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் கூறப்போவதில்லை, அது இதன் நோக்கத்திற்கு அமைவானது இல்லை. சூட்சும பார்வையுடன் நேரடியாக தொடர்புடைய சக்கரம் சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் ஆகும். 
இதுபற்றிய ஒரு யோக இரகசியத்தினை குருவருளால் கூறுவோம். 
இதில் சகஸ்ரார சக்கரம் என்பது உடலில் தலை உச்சியிற்கு மேல் பரவியுள்ள சூஷ்ம உடலில் காணப்படும் சக்கரமாகும். இதுவே மனிதனில் ஆன்ம ஒளியினை பிரகாசிக்க செய்யும் சக்கரமாகும். பொதுவாக கீழ் சக்கரங்கள் செயற்படும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சகஸ்ராரத்தின் ஒளி குறைந்த அளவிலும், ஒழுக்கம், தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு அதிகளவிலும் காணப்படும். தன்னை அறிந்து இறைவனை அறிந்தவர்களுக்கு இது வெளிப்படையாகவே தெரியும். இதனை குறிக்கவே சித்தியடைந்த மகான் களின் தலையின் பின்னால் ஒளிவடிவம் குறிக்கப்படுகிறது. இந்…

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 01

Image
எமது பதிவுகளைப்படிக்கும் பலர் ஆர்வத்துடன் யோக, மன, சித்த ரகசியங்களை பதிவிடும்படியும் மேலதிக விபரங்களைதரும்படியும் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரது ஆவலையும் தாகத்தினையும் தீர்க்கும் வண்ணம் எம்மால் எழுதுவதற்கு காலதேவனும், எமது நாளந்த கடமைகளும் அனுமதிப்பதில்லை. இந்தபதிவுகளில் வரும் விடயங்கள் அனைத்தும் எமது தேடலிலும் குருநாதரிடம் பயின்றவற்றையும் சுருக்கு இந்த துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. ஆர்வம் உடையவர்களுக்கு சரியான பாதை தெளிவு எமது பதிவுகளால் கிடைக்குமானால் குருஅருள் எனக்கொள்க!
எமது நேரக்குறைவு காரணமாக மிகச்சொற்பமான அளவே எம்மால் இதற்காக அர்ப்பணிக்க முடிகிறது என்பதில் மனவருத்தமே! யோக வித்தையில், சித்த வித்தையில் ஆர்வம் உடையவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.
அந்த வரிசையில் முதலாவது நூல் 
மானச யோகம்
ஆசிரியர்: டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகி.

ஆசிரியர் பற்றிய அறிமுகம்
கண்ணைய யோகியார் ஐந்தாவது வயதிலேயே அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பொதிகை, நீலகிரிப்பகுதிகளில் உள்ள சூ…