குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

Sir John WoodroffeSir John Woodroffe, இவரால்தான் மேற்கு உலகம் "தந்திரா" "குண்டலினி" என்ற வார்த்தைகளை தெரிந்துகொண்டது. இவர் பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வங்காள தேச கல்கத்தாவில் பணியாற்றியார். நீதிமன்றத்தில் பணியாற்றிய A. B. Ghose என்பாரினால் தந்திர மார்க்கத்தில் ஆர்வமேற்பட்டு அவருடன் சேர்ந்து ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்திர சாஸ்திர நூற்களை வெளியிட்டார்.
ஸ்ரீ அவலானந்தா என்ற தீக்ஷா நாமம் உடையவர்.
இவர் ஆங்கிலேயராக இருந்தாலும் இவரது நூற்களில் கருத்துக்கள் பாரம்பரியம் மாறாத குருபரம்பரைக்குரிய விஷயங்களே கூறப்பட்டிருக்கும். இதற்கு காரணம் இந்த நூற்களை உண்மையில் முதல் வரைபு வரைந்தவராக A. B. Ghose கருதப்படுகிறார். இவர்கள் வெளியிட்ட நூற்களில் உள்ள ஆர்தர் ஆவலோன் எனும் பெயரில் ஆர்தர் என்பது A. B. Ghose இனையும் ஆவலோன் என்பது ohn Woodroffe இனையும் குறிப்பதாக கருதுகிறர்கள்.
இவர் எழுதிய நூற்களில் Serpent power என்ற நூல் பிரபலமானது. யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் இவரது நூலை அவரது மாணவராகிய செல்லத்துரை சாமிகளுக்கு கொடுத்து நன்கு படிக்கச் சொல்லி பின்னர் குண்டலினி சாதனை சொல்லிக்கொடுத்ததாக செல்லத்துரை சாமிகளுடன் 2003ம் ஆண்டளவில் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள சிவதொண்டன் நிலையத்தில் உரையாடும் காலத்தில் கூறியுள்ளார். யோகர் சுவாமிகளின் ஆணைக்கமைய செல்லத்துரை சாமி அவர்கள் இந்த நூலை மொழிபெயர்த்து சிவதொண்டனில் வெளியிட்டு பின்னர் குண்டலினி சக்தி என்ற நூலாக தொகுத்திருந்தார்.
அதன் ஒரு பிரதி தந்து சாதனைக்கு உதவும் என்று என்னையும் படிக்கச்சொல்லியிருந்தார்.
Sir John Woodroffe, Tantra and Bengal என்ற இந்த நூல் SOAS University of London வெளியிட்டிருக்கிறது. JW இன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்கிறது.

கதைகளும் வரலாறுகளும்

கதைகளும் வரலாறுகளும் சலனமுறும் மனதிற்கு சற்று ஆற்றுப்படுத்தி காரியத்தை சாதிக்கும் வல்லமை தரும் ஒருவித ஊக்கிகள்!
இரசாயனவியல் கற்றவர்கள் ஊக்கிகள் பற்றி அறிந்திருப்பார்கள். ஊக்கிகள் தாக்கத்தில் பங்குபெறாது, ஆனால் ஊக்கி இல்லாமல் தாக்கம் நடைபெறாது.
இவ்வாறான ஒன்றே எமது புராணங்களும், இதிகாசங்களும்! எமது மனதை மேம்படுத்தும் கருத்துக்களை மனதுக்கு உவந்து கொடுக்கும் ஒருவித முறையாகவே அவை இருக்கிறது.
இன்று பலரும் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நவீன தொல்லியல் மூலம் நிறுவினால்தான் உண்மை என்ற போக்கில் சிந்திக்கிறார்கள். அப்படி நிறுவினால் மிக்க மகிழ்ச்சி!
அப்படி நிறுவப்பட முடியாவிட்டால் அதில் கூறப்பட்ட அனைத்தும் பொய் என்று வாதிடும் முட்டாள்தனத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போதைய நடைமுறை, எமது தாத்தா, பூட்டனார் காலத்தில் அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் தாத்தாவே இல்லை என்று நினைப்பதைப்போன்றது இது.
இதைப்போல்தான் அகத்தை பண்படுத்தும் முயற்சியில் இறங்கும் பலர் புறவயப்பட்டு தமது தேடலை மேற்கொண்டு குழம்பிப் போய் விடுகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் குண்டலினி எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? எந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள்.
யதார்த்தத்தில் இந்தக் கேள்விகளுக்குரிய பதில் எதுவும் பலனைத்தராது. குண்டலினி என்பது ஒருவன் தனது உணர்வை உயர்ந்த தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஒரு குறியீடு. இதைப்பற்றி ஆராய்வதால் இந்த நிலை கிட்டாது! அதற்குரிய பயிற்சியை சரியாக செய்தால் கிட்டும் நிலை இது!
ஆனால் குழம்பிய மனத்திற்கு இந்தக்கேள்விகளும் மனம் திருப்தியுறும் பதில்களும் அவசியம்! அதனால் தான் இத்தனை நூறு நூற்களும், உபதேசங்களும்!

யோகத்தில் சித்தி

யோகத்தில் சித்தி என்பது சாதகன் தன்னில் தகுந்த பக்குவத்தை ஏற்படுத்தலிலும், இறையின் கருணையிலும் மட்டும் தங்கியிருக்கிறது.
யோகத்தில் முயற்சி என்பது எமது மனதிலும் உடலிலும் தெய்வ சக்தியை விழிப்பிக்க தகுந்த "பக்குவத்தை" ஏற்படுத்துவது.
இப்படி பக்குவம் பெற்றாலும் எம்மை விட உயர்ந்த ஆற்றலின் கருணை இன்றி எதுவும் நடந்து விடாது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் சரியாக புரிந்த சாதகன் தனது முயற்சியில் உறுதியும் தான் எவ்வளவு முயன்றாலும் தெய்வத்தின் கருணையையே சித்திக்கு காரணம் என்ற ஞானத்துடன் தனது சாதனையைத் தொடர வேண்டும்.

கோயில்களின் தேவை

கோயில்கள் சிந்தனையின் எழுச்சி மையமாக வேண்டும். மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்கள்! இப்படியான மக்கள் ஒன்று கூடும் இடங்கள் இன்று வியாபாரச் சந்தைகளாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய மக்கள் கூடும் இடங்கள் மக்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஸ்தாபனங்களாக இருக்க வேண்டும்.
கோயில்கள் மக்களின் அறிவினையும், மனத்தினையும் வளர்க்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் உடையவையாக இருக்க வேண்டும். வெறும் மனதிற்கு கேளிக்கையும் இன்பம் மட்டும் தருபவையாக இல்லாமல்!

மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

மனதைக் கட்டுப்படுத்த முடியுமா? மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
மனம் ஒரு ஆற்றல், ஆற்றலைக் கட்டுப்படுத்தினால் பலனுண்டு! ஆபத்தும் உண்டு! அணைகட்டும் நீர் மின்சாரமாவது போல் எண்ணத்தைக் கட்டும் மனம் மகாசக்தியாகும்! அணையில் கட்டிய நீர் உடைந்தால் பெருஞ் சேதமாவது போல் ஏகாக்ரமடைந்த மனம் பக்குவமில்லா உடலை சேதமாக்கும்!
மனதைக் கட்டுப்படுத்துவது என்ற முயற்சி சற்றே அபத்தமானது! ஆனால் மனதை ஒழுங்குபடுத்தல் என்பது அவசியமானது.
இதை யோக மொழியில் சீரிய ஏகாக்கிரமென்பர். ஏகாக்கிரம் என்றால் மனஒருமை என்று பெயர். ஏகாக்கிரம் என்பது மனதைக் கட்டுப்படுத்தல் அல்ல, மனதில் தோன்று எண்ணங்களை ஒழுங்குபடுத்தல்.
சீரிய ஏகாக்கிரம் என்றால் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை ஒரு logical order - தர்க்கப்படிமுறையில் சரியாக சிந்தித்தல்.
இந்தப்படிமுறையில் தர்க்க மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதில் இருக்கவேண்டும். தர்க்க மனம் திருபதியுறாமல் ஆழ்மனம் திறக்காது. ஆழ்மனம் திறக்காமல் மனமது அடங்காது!
ஒரு காரியத்தில் ஏன் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் காரியத்தில் இறங்கினால் தர்க்க மனமும் ஆழ்மனமும் சண்டையிட்டே காலம் போய்விடும்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் வழி தர்க்க மனதின் கேள்விகளுக்கு திருப்தியான பதிலைச் சொல்லி சமாதானப்படுத்தல்,
இதற்குரிய எளிய வழி கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டு அந்தக் கேள்விக்கான பதில் திருப்தி என்றால் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியத்தை செய்தல்.
1) இந்தக்காரியத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்?
2) நாம் செய்யும் இந்தக்காரியத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் எவை?
3) காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
இந்த மூன்று கேள்விக்களுக்கும் திருப்தியான பதில் இருந்தால் மட்டும் காரியத்தில் இறங்க வேண்டும். பலர் இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் காரியத்தில் இறங்கி மனம் கட்டுப்படவில்லை, காரியம் சரியாகவில்லை என்று புலம்புவார்கள்.
ஆக மனதைக்கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அறிவைச் செம்மைப்படுத்த வேண்டும். அறிவைச் செம்மைப்படுத்த சரியான கேள்வியும், அதற்குரிய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சரியான பதில்களும் தெரியவேண்டும்.

கோயில்கள் தேவையா?

நண்பர் ஒருவர் கோயில் கட்டுவதை சாடியுள்ளீர்கள் என்று கவலைப்படுகிறார். கோயில் கட்டுவது நிச்சயமாக தவறு இல்லை தேவையானதும் கூட, ஆனால்,
என்ன நோக்கத்திற்காக கோயில் கட்டுகிறோம்?
யாருக்காக கோயில் கட்டுகிறோம்?
கட்டிய கோயிலிற்கு சமூகம் என்ன செய்யப்போகிறது?
கட்டிய கோயில் சமூகத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்யப்போகிறது?
கோயிலின் தத்துவம், சிறப்பு அகத்தினை அறியும் புறத்தில் உள்ள மாதிரியாக இருக்க அவற்றைப் பற்றி சமூகத்திற்கு எதையும் கற்பிக்காமல் செலவழிக்கும் காசு அதைச் செய்பவர்களின் புகழும் பாடும் நோக்கம்!
நோக்கத்தில் தெளிவற்ற செயல் குழப்பத்தையே மிஞ்சுவிக்கும்!
கோயில் சமூக அமைப்பின் ஒரு மையம், அந்த மையம் சமூகத்தேவையின் நோக்கத்தில் தெளிவு இல்லாமல், மக்களின் மனத்தை பண்படுத்தாமல், ஒற்றுமையை வளர்க்காமல் பகட்டையும், அறியாமையையும் வளர்க்கும் மையங்களாகி விடக்கூடாது!
கோயிலிற்கு போனால் வாழ்வு உயரவேண்டும் என்றால் கோயிலில் மனதை செம்மைப்படுத்தும் வழிகள் சொல்லித்தரப்பட வேண்டும்.
கோயிலிற்கு செலவழிக்கும் பெரும்பணத்தை சிறிதாக்கி கோயிலைச் சுற்றி சமூகம் பண்பிலும், பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் வளரும் நிறையத் திட்டங்களை உருவாக்கலாம்! இப்படியான அமைப்பில் கோயில் மைய ஆன்மாவாக இருக்க சமூகம் அறிவிலும், பொருளாதாரத்திலும், ஆற்றலிலும் மேன்மையுறும்.
என்பது பற்றிய வருத்தங்களே!

இலக்குப் பற்றி ஸ்ரீ அன்னைஇலக்கு அற்ற வாழ்க்கை என்பது பரிதாபகரமான வாழ்க்கை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இலக்கினை உடையவர்களாக இருக்கவேண்டும். ஆனால் உங்கள் இலக்கின் தரம்தான் வாழ்க்கையின் தரம் என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கு உயர்வானதாகவும் பரந்ததாகவும், தன்னலமற்றதாகவும், பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்: இது உங்களது வாழ்வையும் மற்றவர்கள் வாழ்வையும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக்கும்! 
ஸ்ரீ அன்னை , (The Mother, CWM 12:3)
இன்றைய பலரின் நாளாந்த பிரச்சனைகளுக்கு பெரிதும் பங்களிப்பது தமது இலக்கு எது என்று தெரியாத சிந்திக்காத, நிர்ணயிக்காத வாழ்க்கை முறை.

அகத்தியர் கூறும் பிராணனின் இயக்கம்**************************************
தசவாயு பற்றிய பாடல் ஒன்று அகத்தியர் ரத்ன கிரிகடம் என்ற நூலில் உள்ளது
இந்தப்பாடலின் பிராணன் பற்றிய வரிகள் அரிய யோக நுணுக்கத்தைச் சொல்லுகிறது. பிராணனின் துல்லிய செயற்பாட்டினைக் கூறுகிறது. அதுபற்றி இங்கு சிறுவிளக்கம் அறிவோம்.
வாயுக்கள் பத்து என்று கூறினாலும், அனைத்திற்கும் மூலமானதையே பிராணன் என்றும் உடலில் செய்யும் செயல்களின் வகைப்படுத்தலிலேயே பத்தாகிறது. மேலும் பிராணனில் இருந்து தான் மற்ற வாயுக்கள் உருவாகிறது என்பதை விட பிராணன் உடலில் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்போது அவற்றிற்கு அவற்றின் தொழில் சார்ந்து பெயரிடுகிறோம் என்பதே மிகப்பொருத்தமானது. இந்தப்புரிதல் இல்லாமல் இதுபற்றி ஆராய முயன்றால் யானைதடவிய குருடன் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிராணன் மூலாதாரம் எனும் குகையில் (பிலத்தில்) இருக்க அதிலிருந்து பிரியாமல் அபானன்ம் வியானன், சமானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் தனஞ்செயன் என்று பத்தாகிறது என்றே பாடல் தொடங்குகிறது. பாடலில் பிலம் என்பதும் பிரியா வியானன் என்பதும் மிக முக்கியமான சொற்கள்.
இனிப்பாடலை ஒரு மூன்று தடவை படித்து விடுங்கள், பாடலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நாம் பாடலை எழுதியவர் கூறிய மன நிலைக்குச் செல்வோம். எனவே பாடலைப் புரிவது இலகுவாகும்.
பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்
பிரியாவியானன் சமானனொடு கூர்மன்
நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன் தானாகும்
நற்தேவதத்தன் ஒடு தனஞ்செயன் பத்தாகும்
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து
சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய்
கலக்கமற நாசிவழி ஓடும் நிராறில் கடுகியெட்டு
உட்புகுந்து கழியும் ஓர்நான்கே
பிலம் என்றால் குகை? உடலில் எது குகை மூலாதார ஸ்தானம் குகை, இந்தக் குகையிலிருந்துதான் பிராணன் தோற்றம் பெறுகிறது, பிறகு அடுத்த வரியில் பிராணனோட மற்றும் பிரியா வியானன் என்ற வரிகள் இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவை என்ற குறிப்பைத் தருகிறது.
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய் கலக்கமற நாசிவழி ஓடும் என்ற வரிகளின் பிராணன் எப்படி செயற்படுகிறது என்பது பற்றி விளக்கம் வருகிறது.
மூலாதாரத்தில் தோன்றி பின் சுழுமுனை நாடிவழியே (இதை முள்ளந்தண்டு வழியாக பாய்வதாக பாவிக்கலாம்) எழுந்து, சிரசளவு முட்டி – சிரசில் சுழி (cowlick) எனச்சொல்லப்படும் இடத்தில் முட்டி பின்னர் வகிட்டின் வழி கீழிறங்கி விழிகழுக்கு நேர் கீழே என்றால் பீனியல் சுரப்பியும், பிட்ரியூட்ரி சுரப்பியும் இருக்கும் இடத்தை தாக்கி, இது சரியாக எமது நாசியும் இரு புருவமத்தியும் தாக்கி கலக்கமில்லாமல் வன்மையான ஆறு ( நிராறு) போல் ஓடும் மூச்சில் கடுகி – கலந்து எட்டு அங்குலம் உட்புகுந்து நான்கு அங்குலம் வீணாகிறது. இங்கு கவனிக்க வேண்டியது உள்மூச்சில் கிடைக்கும் மொத்தப்பிராணன் 12 அளவு என்பது சூஷ்கமாக எட்டு உடலில் சேர மிகுதி நான்கு மூச்சிற்கான வீணாகிறது என்கிறார்.
இந்த வரிகள் பிராணனின் ஸ்தூல சூக்ஷ்ம செயற்பாட்டை தெளிவாக குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மூச்சின் போதும் மூலாதாரத்திலிருந்து எழுந்து தலையுச்சியை தாக்கி கண்களுக்கு கீழே உள்ள பிட்யுட்ரீ சுரப்பியை (Pituitary gland) தாக்கி ஆறுபோல் செல்லும் மூச்சில் கலந்து காற்றிலில் இருந்து வரும் வெளிப்பிராணனில் எட்டு அளவுவினை உடலினுள் புகுத்துகிறது. இந்த செயலுக்கு நான்கு அளவு (digit) பிராணன் செலவாகிறது என் கிறார்.
இங்கு Pituitary gland என்பதை அகத்திய குறிப்பிடவில்லை என்றாலும் நவீன உடலியலில் அந்த இடத்துடன் பொருந்தி வருவதால் இதையே பாடல் குறிப்பிடுகிறது என்று கொள்ளலாம்.
இதற்கான விளக்கப்படம் இத்துடன் இணைத்துள்ளேன்!
விஞ்ஞான பைரவ தந்திரத்தின் 01, 02, 03, 04, 05 மற்றும் 16வது உத்திகளின் விளக்கமாக இந்தப்பாடல் வரிகள் இருக்கிறது என்பது மிகச்சிறப்பான விஷயமும் கூட! இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்!

லம்போதராய நமஹ - யோக விளக்கம்

லம் - போதராய , இதைப் பொதுவாக பெருத்த வயிறு உடையவன் என்று பொருள் கொள்வார்கள். ஆனால் யோக விளக்கம் லம் ( लं laṃ) என்ற மந்திர அட்சர அதிர்வால் போதம் எனும் ஞானத்தைத் தருபவன் என்று பொருள்.
இதையே ஔவைப்பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலாலெழுப்பும் கருத்தறிவித்து என்று பாடுகிறார்.
மூலாதாரத்தை लं laṃ என்ற மந்திர வித்தெழுத்தால் பேதிக்க பிராணனை மூண்டெழுந்து கனலாகி குண்டலினியாகி சிரசைத் தாக்கி அமிர்தம் பொழிவிக்கும் வல்லமை உள்ளவன் லம்போதரன்!
இனி ஔவையாரும் அகத்தியரும் கூறியதை சேர்த்துப்பார்ப்போம். சாதாரணமாக பிராணன் மூலாதராத்திலிருந்து எழுந்து சிரசைத்தாக்கி நாசியில் வரும் பிராணனில் சேர்ந்து உடலில் புகுகிறது. இதை அகத்தியர் பெருமானார் தனது பாடலில் விளக்குகிறார். இது சாதாரண உடலில் நடைபெறும் செய்கை.
இது எப்படி கனலாகி, குண்டலினியாகி அமிர்தத்தை விளைவிக்கிறது என்பதை ஔவையார்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
என்கிறார்.
விண்டெழு மந்திரம் என்பதன் பொருள் லம் என்ற பீஜம். இந்த பீஜ மந்திரத்தால் பிராணனைக் கனலான அக்னித்தன்மை உடையதாக்கினால்
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠
புரியும் என்கிறார்.
இதற்கு லம் அட்சர ஒலி தேவை. இதுவே கணபதி உபாசனையின் விளக்கமும் கூட. ஸ்ரீ வித்யாவில் கணபதி இல்லாமல் செல்லக்கூடாது எனபதும் இந்தக்காரணம் கருதியே, கணபதியின் லம் பீஜ சக்தி விழிப்புறாமல் பிராணன் யோகக்கனலாக மாறாது.
{ யோக ஆர்வக்கோளாறுகளுக்கு ஒரு குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்தும் அறிவுப்பகிர்வு மட்டுமே, எதையும் முயற்சித்துப்பார்ப்பது என்பது குருவின் அனுமதியுடன் மட்டுமே, இல்லாது தானாக குண்டலினி எழுப்புகிறேன், சுண்டெலி எழுப்புகிறேன் என முயற்சித்து மன, உடல் உபாதைக்களுக்கு உள்ளாகக்கூடாது,}

ஸ்ரீ கிருஷ்ணனின் யோகம்

பகவத் கீதையில் அம்ருதத்துவத்திற்கான வழி
ஸ்ரீ -பகவத் கீதை அத்தியாயம் 15 - வசனம் 1
மூலம்=
ஸ்ரீ-பகவான் உவாச
ஊத்வா-மூலம் அத:ஷாகம்
அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி
யஸ் தம் வேத ஸ வேத-வித்
உரை=
ஸ்ரீபகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஊர்த்வ-மூலம் — மேலே வேர்களுடன்; அத: — கீழ் நோக்கிய; ஷாகம் — கிளைகள்; அஷ்வத்தம் — ஆலமரம்; ப்ராஹு: — கூறப்படுகின்றது; அவ்யயம் — நித்தியமான; சந்தாம்ஸி — வேத பதங்கள்; யஸ்ய — அதன்; பர்ணானி — இலைகள்; ய: — எவனொருவன்; தம் — அதை; வேத — அறிகின்றானோ; ஸ:-அவன், வேத — வித்—வேதங்களை அறிந்தவன்
இதன் சரியான தமிழ்ப் பொருள்:
இந்த சுலோகத்தின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு : ஊர்த்துவ வேர்களைக்கொண்டதும் கீழ் நோக்கிய கிளைகள் கொண்டதுமான ஆலமரம் அம்ருதத்துவத்தின் குறியீடு, இந்த அமரத்துவ மரத்தினைப்போசிக்கும் இலைகள் சந்தஸ், எவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் வேதங்களை அறிந்தவன் ஆவான்! இங்கு ஆலமரம் எப்படி தன்னை நீண்டகாலம் அழிவற்று வைத்திருக்க இலைகளின் துணையுடன் இருக்கிறதோ, அதுபோல் அறிவாளி வேதங்களின் சந்தஸை பயிற்சியில் கொண்டுவந்தவன், மூச்சை அறிந்து எல்லா அறிவையும் பெற்று தன்னை அம்ருதத்துவமாக்கிக் கொள்வான் என்பதன் உவமானம்!
இங்கு யோகீஸ்வரர் கிருஷ்ணன் மூச்சை ஊர்த்துவமாக்கி மந்திர சந்தஸால் அறிவினை விழிப்படையச்செய்தால் அமரத்துவம் பெறலாம் என்ற உத்தியைக் கூறுகிறார்.

Wednesday, February 13, 2019

01. சூழலியல் தத்துவம் – Environmental Philosophyஇருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சனைகளாக சூழலியல் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன. புவியின் வரலாற்றில் மனிதன் இனம் சூழல் மாசுபடலுடன் சண்டையிட வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்தபின்னர் இந்த நூற்றாண்டு உயிர்பல்வகைமை அழிவுகளின் உயர்ந்த காலப்பகுதியாக அறியப்பட்டுள்ளது. வில்சன் என்பார் தனது ஆய்வறிக்கையில் (“Threats to Biodiversity,” Scientific American, 1989) தினசரி 100 உயிர்ப்பல்வகைமை இனங்கள் அழிவுற்றுவருவதாக கணக்கிட்டு அடுத்துவரும் பத்தாண்டுகளின் இந்த விகிதம் இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம் எனக் கணக்கிட்டுள்ளார்.

இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், வளி என்பன தமது இயல்புத்தன்மையினை இழந்து, மாசடைந்து, குறைந்து வருகிறது. 1804ம் ஆண்டில் ஒரு பில்லியன் சனத்தொகை அடுத்த இரு நூறு ஆண்டுகளில் ஏழுமடங்காகி 2018ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 7.7 பில்லியன் ஆகியுள்ளது. கணிப்பீட்டின் படி அடுத்த 15 வருடங்களில் இன்னும் ஒரு பில்லியன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரிப்புடன் வளங்கள் குறைவடைதலும், சூழல் மாசடைதலும் அதிகரிக்கப்போகிறது. சனத்தொகை அதிகரிப்பு வளங்களின் தேவையை அதிகரிப்பது என்பதை விட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று உருவாக்கப்படும் மாயைகள் அதிகமாக உயிர்த்தொகுதியின் வளத்தினை சுரண்டுகிறது. உதாரணமாக இன்றைய ஆடம்பர வாழ்க்கையின் நட்சத்திர ஹோட்டல்களின் நீர் மற்றும் வளங்களின் பயன்பாட்டினால் ஒரு விருந்தினருக்கு தரும் உபசரிப்பிற்கு செலவாகும் வளத்தை சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு மனிதனது பயன்பாட்டில் நூறு நபர்களுக்கு பயன்படுத்தக்கூடியதான ஆடம்பர வாழ்க்கை முறையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

அபயகரமான விஷக்கழிவுகளும், அணு இரசாயனக் கழிவுகளும் அதிகரிக்கின்றது. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இன்றி சூழலைப்பாதிக்கக் கூடியவை.

வளிமாசடைதலினால் ஏற்படக்கூடிய பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அதிகரிப்பால் புவி வெப்பமாதல் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்.

இந்தப் பிரச்சனைகளின் தீர்விற்காக உலக அரங்கில் அனைத்து நாட்டு அரசுகளும் தீர்வுத்திட்டத்தை தமது அரசியலில் ஒருபாகமாக முன்னெடுத்து வருகின்றன.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ரிபப்ளிகன் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸனினால் சூழல் மாசடைதல் தொடர்பான மூன்று முக்கிய சட்டங்களை அமுல்படுத்தியதிலிருந்து சூழல் மாசடைதல் தொடர்பான சட்ட நெறிமுறைகள் உலக அரங்கில் முன்னெடுக்கப்பட்டுத் தொடங்கியது.

இன்றைய காலகட்டத்தின் சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்களை பொல்லாதவர்களாக கற்பிக்கும் மனம் இதன் பாதகங்களை அறிந்தபின்னர் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களளவில் நன்மையானதாக அவர்களது அறிவின் எல்லைக்குள் நம்பியே எடுத்திருக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் சடுதியான சனத்தொகைப்பெருக்கம் மனிதகுலத்தை உணவு, நீர், மின்சாரம், நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட்டு நீண்டகாலம் வாழுதல் போன்றவற்றின் தேவையை மட்டும் அடிப்படையாக வைத்துகொண்டு அபிவிருத்திக்கொள்கைகளையும், அறிவியலையும் முன்னெடுக்கத்தொடங்கியது. எனினும் சூழலியலில் சிக்கற்தன்மையினையும் விளைவுகளையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இன்னொரு முறையாகச் சொன்னால் ஒரு முடிவு எடுக்கமுன்னர் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடக்கூடிய தீர்மானிக்கும் பொறிமுறை இருக்கவில்லை.

இங்குதான் சூழலியலிற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்க வேண்டிய தேவை உண்டாகிறது. மனிதன் தனக்கு நன்மை தரும் என்று தீர்மானிக்கு அனைத்தும் இயற்கையால் நன்மையான விளைவாக தரப்படுமா? அதன் பாதகங்கள் என்ன? குறுகியகாலத்தில் நன்மை எனக்கருதப்படுவது நீண்டகாலத்தில் தீமையாகலாமா? இப்படி ஒரு சுய உணர்வுடன் நிதானமாக சிந்தித்து தீர்மானிக்கும் தன்மையைத் தரும் ஒரு தத்துவ அடிப்படையினை அனைத்து முடிவுகளும் கொண்டிருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

தொடரும்….


Sunday, February 10, 2019

ஆன்மீகமும் லௌகீகமும்

இன்று பலர் தம்மை ஆன்மீகத்தில் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்! இப்படி தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உண்மையில் நான் குழப்பமாகி விடுகிறேன்!
ஒருமுறை ஒரு அன்பர் தன்னை உங்களைப்போன்று நானும் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு நான் சிரித்துக்கொண்டு நான் ஆன்மீகத்தில் இல்லை! என்றேன். அவருக்கு திகைப்பாகிவிட்டது! அது எப்படி நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றித்தானே எழுதுகிறீர்கள்! பிறகெப்படி ஆன்மீகவாதி இல்லை எனலாம் என்றார்! எனது பதில் நான் ஆன்மீகம் எழுதவில்லை, எனக்கு மிகப்பிடித்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன், நீங்கள் அதை ஆன்மீகமாகப் பார்கிறீர்கள் என்றேன்!
பலர் ஆன்மீகம், லௌகீகம் என்று தம்மை வேறுபடுத்தி உயர்வாக காட்டினால்தான் தாம் உயர்கிறோம் என்று நினைப்பது மனதின் ஒரு மாயை!
மனதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறிமுறையையே ஆன்மீகம், மனதை உயர்ந்த சிந்தனைக்கு செலுத்தாத எதையும் ஆன்மீகம் என்று சொல்ல முடியாது! ஆக ஆன்மீகத்தின் எளிய விளக்கம் உணர்வாகிய ஆன்மாவை எதுவெல்லாம் உயர்ந்த நிலையில் வைக்கிறதோ அதுவெல்லாம் ஆன்மீகம்.
மனம் தனது புலன்களின் வழி புற உலக இன்பத்தை அனுபவிக்கும் நிலையையே லௌகீகம் என்கிறோம். இந்த அனுபவம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை!
லௌகீகம் மண் என்றால் ஆன்மீகம் செடி!
மண் இல்லாமல் செடி முளைக்காது, ஆனால்
மண் செடியை அழிக்காத தன்மையுள்ளதாக, வளர்க்கும் வழியாக இருக்க வேண்டும்.
செடி வளரவேண்டும் என்றால் மண்ணைத்தான் சரியாக பதப்படுத்த வேண்டும். ஆக ஒருவன் தனது உலக வாழ்வாகிய மண்ணை சரியாக பண்படுத்த மனம் செம்மையாகி உணர்வு உயரும்.
பலர் ஆன்மீகம் என்று தமது உலக வாழ்க்கையாகிய மண்ணை பாலைவனமாக்கி வளமற்றதாக்கிவிடுவதையே இன்று நாம் காண்கிறோம்! இப்படி ஆகியபின்னர் அதில் எந்த விதையையும் விதைக்க முடியாது!

Tuesday, February 05, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 08


சிவத்தின் மறைப்பும் வெளிப்பாடும் பற்றிய விளக்கத்தைப்பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

அனைத்தும் சிவமாக இருக்க, ஏன் சிவம் புறவய உலகத்தை உருவாக்கவேண்டும் என்ற கேள்வி முதலாவதாக எழுகிறது அல்லவா? 

இதற்கு திரிக தத்துவம் கூறும் விளக்கம் ஒரே ஒரு காரணம் மட்டுமே.

தனது உண்மை ஸ்வரூபத்தை அறிவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த உலகத்தை சிவம் படைக்கிறது என்பதுதான். 

அபி நவகுப்தரே காஷ்மீர சைவத்தின் மிகப்பெரிய ஆசான். அவர் சிவம் ஒன்றாக இருக்கும்போது, படைப்பிற்கு முன்னர் முழுமையான ஒரே பிரக்ஞையாக சிவம் இருந்தது. ஆனால் தனது அந்த நிலையை ஏற்பதற்கு என்று எதுவும் இல்லாததால் தனது இயல்பை பரிமாற படைப்பை உருவாக்கியது. 

இப்படி தனது இயல்பை இன்னொருவர் உணர்வதது சிவத்திற்கு பேரின்பத்தைத் தருவதால் ஸக்தியை தன்னில் இருந்து வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை படைக்கத்தொடங்கினான். 

இப்படி தன்னை மறைத்து மீண்டும் கண்டுபிடிக்கும் விளையாட்டால் வரும் இன்பத்தை பெறுவதற்காக மனிதனில் சிவத்தன்மை மறைக்கப்பட்டு தன து உண்மை இயல்பை மறைக்கக்கூடியவாறு ஸக்தியை உருவாக்கி இந்த இன்பத்தைப் பெறுகிறான். 

அடிப்படையில் இந்த விளக்கம் மிக எளிமையாக பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதனது இயல்புகளையும் இயற்கையான ஒன்றாக எடுத்துக்கொள்வதையே விஞ் ஞான பைரவ தந்திரம் வலியுறுத்துகிறது. ஒருவன் தனது இயல்பை சரியாக புரிந்துகொள்வதற்கு இந்த தத்துவம் எந்தவித நம்பிக்கையையும், ஒழுக்கங்களையும் போதிக்காமல் உலகம், மனிதனது குணங்கள் எல்லாம் இயற்கையான ஒன்று என்று தனது இயல்பாக ஏற்றுக்கொண்டு, தனக்குள் மறைந்துள்ள சிவமாகிய உயர்ந்த விழிப்புணர்வினை அறிந்துணர் முயற்சிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்குகிறது.

இது தந்திர மார்க்கத்தில் உள்ள சிறப்பியல்பு, இந்த ஒழுக்கங்களை பின்பற்றினால் தான் இது என்ற நிபந்தனையை ஆரம்ப சாதகனுக்கு விதிக்காது! சாதகனது இயல்பிலிருந்து படிப்படையாக முன்னேறிச் செல்லும் வழியைக் காட்டும். 

அதனாலேயே இந்த நூலில் 112 உத்திகள் தரப்பட்டுள்ளது. இந்த 112 உத்திகளில் கட்டாயம் ஒரு உத்தியாவது சாதகனுக்கு தனது உண்மை நிலையான பைரவ நிலையை அடைய கட்டாயம் உதவும் என்பது இந்த தந்திரத்தின் சிறப்பு! 

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
சந்தோஷத்திற்காக!
எழுதுவது என்பது ஒரு மன ஏகாக்கிரப்பயிற்சி! தொடர்ச்சியாக எழுதுவதற்கு, விஷயங்களைக் கோர்த்து எழுதுவதற்கு மனதின் எண்ணங்கள் சரியான ஒழுங்கில் அடுக்கப்படவேண்டும். இப்படி அடுக்கப்பட்ட எண்ணங்கள் எழுத்தில் வார்த்தையாக வரவேண்டும். இப்படி வந்தால் மனம் ஏகாக்கிரமடைகிறது!
ஆக எழுதுதல் ஒரு ஏகாக்கிரம் அல்லது தாரணை எனும் ஒரு யோகப்பயிற்சி!
இன்று பலர் தியானம் செய்கிறோம் என்றும் யோகம் செய்கிறோம் என்று கண்களை மூடி முயற்சிக்கிறார்கள். இதற்கு மனம் ஒருமைப்பட்டு சீராக இயங்க வேண்டும்.
மனம் ஒருமைப்பட எமக்கு பிடித்ததை ஒழுங்காக எழுதுவது ஒரு எளிய மார்க்கம்! இப்படி சீராக எழுதும் ஆற்றல் வந்தால் மனம் ஏகாக்கிரம் அடையும்! இப்படி ஏகாக்கிரமடைந்த மனம் ஒரு வித சந்தோஷத்தை அடையும்!

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 07


விஞ்ஞான பைரவ தந்திரத்தை புரிந்துகொள்வதில் காஷ்மீர சைவத்தின் பிரபஞ்ச தோற்றவியல் கோட்பாட்டினை அறிந்து கொள்வது அவசியம்.
காஷ்மீர சைவத்தின் படி ஒரே வஸ்துவானம் சிவமே இந்தப் பிரபஞ்சம். இதை பைரவம் என்று அழைக்கிறோம். இந்த பைரவமே இயற்கை, இது அனைத்திலும் வியாபகமாகியுள்ளது. இது எல்லையற்ற பிரகாசத்தினை தன்னுள் கொண்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்தபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பைரவ பிரகாசத்தினை தன்னுள்ளே கொண்டுள்ளது. இந்த ஒளியே பிரக்ஞையாக ஒவ்வொரு உயிரிலும் உயிரற்றதிலும் வெளிப்படுகிறது.
சிவம் தனது புற இயற்கையை தன்னிலிருந்து தனியாக தான் அனுபவிப்பதற்காக பிரித்து வைத்துக்கொண்டுள்ளது. இப்படிப் பிரிந்த கூறு ஸக்தி எனப்படுகிறது. இதுவே ஸக்தி எனப்படுகிறது.
பலரும் ஸக்தி சிவத்திலிருந்து பிரிந்து தனித்து இயங்கும் ஒன்றாக கற்பனை செய்வார்கள், அப்படியல்ல், சிவத்தின் புறவயப்பட்ட ஸக்தி இந்த புற உலகத்தையும், மன தையும், புரிதல்களையும், பொருட்களையும் தோற்றுவித்துகொண்டு தன்னை வெளிப்படுத்துகிறது. ஆனால் எப்போதும் சிவத்தின் ஒருபாகமாகவே இயங்குகிறது. சிவத்திலிருந்து பிரிந்த நிலை என்பது எப்போதும் இல்லை.
சிவம் சக்தியை கொண்டிருப்பவர் - ஸக்திமான்
புற உலகம் அவரது - ஸக்தி

ஸக்தியை கொண்டிருப்பவரும் ஸக்தியும் வேறானது அல்ல, அது பேதங்களற்றது, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது.
சிவமும் சக்தியும் நெருப்பும் வெப்பமும் போல் ஒன்றிணைந்திருக்கிறது.
இப்படி இருமையற்ற ஒன்றாக சிவமும் ஸக்தியும் ஒன்றாக இருந்தால் எப்படி பிரிக்கப்பட்ட இந்த உலகம் தோற்றம் பெறமுடியும் என்ற கேள்விக்கு காஷ்மீர சைவம் ப்ரதிபிம்பபாவனா என்ற கோட்பாட்டினைக் கூறுகிறது.
இதனை பிரதிபலிப்புக் கோட்பாடு (theory of reflection) என்று கூறலாம். இது பிரபஞ்சமானது சிவத்தின் பிரக்ஞையின் பிரதிபலிப்பு (Reflection) என்று கூறுகிறது.
சிவத்தினுடையை பிரக்ஞையைத் தாண்டி எதுவும் இருக்க முடியாது. ஆகவே இந்தப்பிரபஞ்சமே சிவத்தின் பிரதிபலிப்பு மட்டுமே. ஆகவே நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சம், உலகம் வாழ்க்கை என்பவை சிவத்தின் பிரக் ஞையின் பிரதிபலிப்பு மட்டுமே!
ஏன் இந்த பிரதிபலிப்பு ஏற்பட வேண்டும் என்ற கேள்விக்கு திரிக தத்துவம் கூறும் பதில் ஸ்வாதந்ரய, அறுதியான சிவத்தின் இச்சா சக்தி (absalute independent will)! அது அவனுடைய சுதந்திரம் என்பதுதான்!
சுருக்கமாக, சிவம் இந்த புற உலகத்தை தனது வெளிப்பாடான ஸக்தியினால் உருவாக்கினார், இந்த ஸக்தி அவரிலிருந்து வேறுபட்ட பிரிந்த ஒன்றல்ல, இதன் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது; இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் அவனது எல்லையற்ற இச்சாசக்தியின் சுயவிருப்பில் நடைபெறுகிறது, கண்ணாடியில் காணும் பிம்பம் போல், அவனது சொந்த இச்சாசக்தியின் பிரதிபலிப்புகளே இந்தப்பிரபஞ்சம்!

Monday, February 04, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 05


சென்றபதிவில் ஸக்தியின் தன்மை பற்றிப்பார்த்தோம். இந்தப்பதிவில் பைரவரின் தன்மை பற்றிப்பார்ப்போம்.
விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் பைரவர் என்ற சொல் பொதுவாக நாம் பயன்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை.
பைரவர் என்பது வணங்கப்படவேண்டிய கடவுள் என்ற அர்த்தத்தில் இங்கு பாவிக்கப்படவில்லை. பைரவம் என்றால் சிவத்தினுடைய பேரொளி விழிப்புணர்வு என்ற அர்த்தத்திலேயே உணரவேண்டும்.
தேவி காதலுடன் தன்னைப்பற்றி அறியவே கேள்விகளை கேட்கிறாள், அவளைப்பற்றி அறிவதே இறுதியில் பைரவருடைய இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவளும் பைரவரும் வேறானவர்கள் அல்ல.
அவளது சந்தேகங்கள் இந்தபிரபஞ்சத்தில் பலவித சக்திகளும், சப்தங்களும், அதன் கூறுகளும் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த குழப்ப நிலையில் இருந்து பைரவருடைய இயல்பை எப்படி அறிவது என்பதே!!
ஏழு தொடக்கம் பதின்மூன்று வரையுள்ள உரையாடலில் தாந்திரீக கோட்பாடுகளில் பைரவரைப்பற்றிக் கூறப்பட்ட அனைத்து கோட்பாடுகளையும் பற்றிய சந்தேகங்களை நீக்கி பின்னர் தனது உயர்ந்த இயல்பைப்பற்றி கூறுகிறார்.
பைரவம் எல்லாவேற்றுமைகளையும் கடந்தது.
பைரவம் எல்லா எண்ணங்களையும் தத்துவங்களையும் கடந்தது
பைரவத்தை அறிய ஒருவன் தனது அகத்தை மட்டுமே துணைகொண்டு ஆனந்தத்தின்மூலம் வார்த்தைகளால் கூறமுடியாத அகண்ட விஸ்வரூபத்தை அனுபவிக்க முடியும்.
முழுமையான பேரானந்தத்தால் மட்டுமே பைரவத்தை அறிய முடியும்.
இதை சாதிப்பதற்கு சில நடைமுறைப் பயிற்சிகள் அவசியம்.
பைரவத்தை நேரடியாகவும் சரியாகவும் உணர்வதற்கான நடைமுறைப் பயிற்சிகளே இந்த விஞ்ஞான பைரவ தாந்திரம்.

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 04


விஞ்ஞான பைரவ தாந்திர உத்திகளை புரிவதற்கு ஸக்தியின் இயல்புகளை புரிதல் அவசியம்.

ஸக்தி இரண்டு தன்மை உடையவள்.

முதலாவது பிரபஞ்சம் விரிவதற்கு காரணமானவள். நாத ரூபமாக வெளிப்பட்டு வாக்கும் மொழியுமாக விரிந்து அகண்ட பிரபஞ்சத்தை ஆக்குகிறாள்.

இரண்டாவது, அவளே மூல பரசிவத்தை அடையும் ஒன்றறக் கலக்கும் வழியுமாகவும் இருக்கிறாள்.

விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் அடிக்கடி ஸக்தியைப் பற்றி குறிப்பிடும் போது "சிவத்தை அடைவதற்குரிய வாயில் ஸக்தி" என்றே குறிப்பிடப்படுகிறது.

சிவம் ஸக்தி இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு இல்லை என்பது மிக உறுதியாக விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஸக்தியினுடைய பாதைக்குள் ஒருவன் புகுந்தால் மட்டுமே சிவத்தை அடைந்து சிவமாக முடியும் என்ற உண்மை கூறப்பட்டுள்ளது.

21வது சுலோகத்தில் விளக்கிலிருந்து ஒளிரும் ஒளிக்கற்றைகள் சிவ ஸக்தியிற்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. சிவம் விளக்கின் சுடராக அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சக்தியாக இருக்கிறது. அந்தக்கதிர்கள் கண்களின் பட்டால் மட்டுமே சுடர் தெரியும். அதுபோல் சிவத்தை அடைய ஸக்தியின் கதிர்களை ஏற்காத ஒருவன் சிவத்தை அடையமுடியாது.

ஆகவே சிவத்தை அடைய இருக்கும் மிகச்சிறந்த வழி ஸக்தி என்கிறது விஞ்ஞான பைரவ தாந்திரம்.

திரிக தத்துவத்தின் படி சிவம் பரா, பராபரா, அபரா ஆகிய மூன்று நிலைகளில் இருப்பதுபோல் ஸக்தியும் மூன்று நிலைகளில் வெளிப்பட்டு சிவத்தை உணர துணைபுரிகிறாள்.

தாவோவின் தங்க மலர் இரகசியம் - 01 {The Secret of the Golden Flower}Related image

{சிவாஜிகணேசனின் தங்கமலை இரகசியம் இல்லை}

லாவோட்ஸு கூறுகிறார், எதன் மூலம் இந்த இருப்புகள் இருக்கின்றனவோ அதற்கான வழி தாவோ எனப்படுகிறது. தாவோவிற்கு வடிவமோ, பெயரோ இல்லை, அது அனைத்தினதும் ஆதியாக இருப்பதன் சாரம் (essence), வாழ்வின் மூலமான சாரத்தை காணமுடியாது.

இது உயர்தளத்திற்கான ஒளியைக் கொண்டுள்ளது. இந்த உயர்தள ஒளியை காணமுடியாது, ஆனால் அது இரண்டு கண்களில் நிலை கொண்டுள்ளது. இன்று நான் உனக்கு தங்க மலரை அடைவதற்கான வழியினை காட்டி அடைவதற்குரிய உதவியை செய்கிறேன், இனி இதுபற்றி விபரமாக விளக்குகிறேன் கேள்;

உயர்ந்தது என்பதன் விளக்கம் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பதாகும். இதை ஸ்ரீ வித்தையிலும் காயத்ரி வித்தையிலும் அனுத்தர ஆம்னயம் என்று கூறுவார்கள்.
வாழ்க்கையின் இரகசியம் என்பது இயக்கத்தினூடாக இயக்கமற்ற சலனமற்ற நிலையை அடைவதில் உள்ளது என்பதை புரிந்து கொள்வாய்.
ஒருவன் எதையும் நேரடியாக அடைவதற்கு முயற்சிக்க கூடாது, அதாவது பிரபஞ்ச மகாசக்தியை நேர தான் அடையவேண்டும் என்று எண்ணக்கூடாது என்கிறார் லாவோட்ஸு. இதன் பொருள் பிரபஞ்ச மகா சக்தியைப்பற்றி அறிய அதன் உண்மைத் தன்மையான பேரண்டமான பிரபஞ்சத்தில் உண்மைத்தன்மையை அறிய முற்பட்டால் அது கிடைக்காது.
ஆனால் அதன் மாதிரிவடிவமான மனித உடலில் (ஹசிங் என்று சீனமொழியில் கூறப்படுகிறது) இதைப்பற்றி அறிய முயற்சிக்கலாம்.

இதையே சட்டமுனிச் சித்தர்

அண்டத்திலுள்ள்தே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிணமுமொன்றே
அறிந்துதான் பாக்கும் போதே என்பார்.

லாவோட்ஸு கூறுகிறார் தங்கமலரை அடைவதில் ஒருவன் கவனமாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும், தவறான பாதையில் சென்று விடக்கூடாது. இந்த வரிகள் ஒரு சாதகன் தான் உயர்ந்த நிலை அடையவேண்டும் என்ற உத்வேகத்தில் தவறாக எதையும் செய்து உடலைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை குறிக்கிறது.

தங்கமலரானது ஒளியின் ஒரு குறியீட்டு வடிவம், இந்த ஒளி என்ன நிறம் என்பதை குறிக்க பயன்படும் குறியீட்டு வடிவம். இதுவே உயர்சக்தி.

ஆகவே அக இரசவாததின் மூலம் பிரபஞ்ச மூல ஒளியான தங்க நிற ஒளியை தனது உடலில் பாய்ச்சி பிரபஞ்ச மூலசக்தியை ஈர்க்க வேண்டும்.

தொடரும்....

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 03அனேக சைவ ஆகமங்கள் சிவனும் ஸக்தியும் அல்லது பைரவரும் பைரவியும் உரையாடுவது போன்ற வடிவிலேயே இருக்கும்.
விஞ்ஞான பைரவ தாந்திரம் ருத்திரயாமளத்தின் ஒரு பகுதி. இன்று ருத்திரயாமளம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த ருத்திரயாமளம் ஸக்தி சிவனிடம் கேட்டது.

ஆக இந்த தந்திரம் சிவஸக்தி ஐக்கிய ரூபமாக மிளிர்ந்தது எனப்படுகிறது. இது திரிகபேதம் என காஷ்மீர சைவத்தில் கூறப்படுகிறது. இத்தகைய தந்திரம் எல்லா தந்திரங்களின் சாரம் போன்றது.
ஆக விஞ்ஞான பைரவ தாந்திரம் எல்லா தந்திர நூற்களினாலும் அடையப்படும் உயர்ந்த நிலையை தெளிவாக காட்டுகிறது.
இதன் முதல் உரையாசிரியர் க்ஷேமராஜா என்பவர் முதலாவது சுலோக உரையில் இப்படிக்கூறுகிறார்:
சைவ தத்துவங்கள் வேதங்களை விட சிறந்தது
வாம தந்திரம் சைவத்தைவிட சிறந்தது
தக்ஷிண தந்திரம் வாமத்தை விட சிறந்தது
கௌல தந்திரம் தக்ஷிணத்தை விட சிறந்தது
திரிக தந்திரம் கௌலத்தை விட சிறந்தது.
திரிகம் என்றால் மூன்று என்று அர்த்தம், சிவம், ஸக்தி, நர (மனிதன்) என்ற மும்மைகள் குறிக்கப்படும்.
சிவத்தின் சக்திகள் பரா, பராபரா, அபரா ஆக மூன்று,
நரனாகிய மனிதன் தனது உண்மை நிலையான சிவம் என்பதை தன்னையறிவதன் மூலம் சிவமாகலாம் என்பதே திரிக தத்துவம்.
சிவத்தின் இந்த மும்மை சக்திகளில் பரா என்பது சிவத்தின் அகச்சக்தி, இதனால் சிவம் எல்லையற்ற பரம்பொருளாக திகழ்கிறது,
பராபரா என்பது சிவம் அறியும் அல்லது செயலாற்றும் சக்தி, இது இடை நிலை சக்தியாக இருக்கிறது.
அபரா என்பது சிவத்தின் புறச்சக்தியும் கீழ் நிலைச் சக்தியுமாக கூறப்படுகிறது.
ஆகவே திரிக தத்துவம் மனிதன் சிவத்தின் அபரா ரூபமாக இருக்கிறான், அவன் பரா நிலையை பராபரா சக்தியின் உதவி கொண்டு அடையலாம்.
இதன் படி பரா நிலையை அடையும் அல்லது பயிற்சிக்கும் சாதகன் சம்பவோபாய என்றும், பராபரா சக்தியை சாதனை செய்பவன் சாக்தோபாய என்றும் அபரா நிலை சாதகன் அன்வோபாய என்றும் அழைக்கப்படுவான்.
இதில் சம்பவோபாய நிலை அதிஉன்னத நிலையாக திரிக சைவத்தில் கூறப்படுகிறது. இதன் படி ஒருவன் தனது மனதை எண்ணங்கள் அற்ற நிர்விகல்ப நிலையிற்கு கொண்டு வந்தால் அவன் தான் சிவம் என்று உணரும் நிலை.
இதை பயிற்சிப்பதற்கான 112 உத்திகளை கூறுவதே விஞ்ஞான பைரவ தாந்திரம்.

Sunday, February 03, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 02


***********************
விஞ்ஞான பைரவ தாந்திரம் காஷ்மீர சைவ தாந்திரீகரான அபி நவ குப்தரினால் "சிவவிஞ்ஞான உபநிஷத் - சிவத்தைப்பற்றிய ஆன்மீக அறிவு என்று கூறப்படுகிறது.

மேலும் விஞ்ஞான என்பது அனுபவ அறிவினைக்குறிப்பது, பொதுவாக இறைவனைப்பற்றிய விஷயங்கள் வெறும் தத்துவ வார்த்தை மூலமான விளக்கமாக இருக்க இந்த தந்திரம் அதை எப்படி அனுபவத்தில் கொண்டுவருவது என்பது பற்றிக் கூறுகிறது.
பைரவ என்பது மேலான உண்மை விழிப்புணர்வு என்பதே இந்த நூலில் கூறப்பட்ட விளக்கம், பொது வழக்கில் பைரவர் என்ற பெயரில் வழங்கப்படும் விளக்கமல்ல!
பயா சர்வம் ரவயதி சர்வதோ வ்யாபகோ கிலே
இதி பைரவ சப்தஸ்ய சந்ததோச்சாரனாச்சிவஹ

இதன் பொருள் பைரவ என்பது யார் பயத்தையும், எல்லா சப்தங்களாலும் இந்தபிரபஞ்சத்தை நிரப்பி நிறைந்திருக்கிறாரோ அவரே பைரவர், யார் பைரவா என்ற சொல்லை கூறுகிறாரோ அவர் அந்தக்கணமே சிவமாகிறார் என் கிறது இந்த சுலோகம்.
பைரவ என்ற சொல்லில் பை என்பதை சமஸ்க்ருதத்தில் இருவகையாக விளக்கம் சொல்லப்படுகிறது.
பயம் என்பது ஒன்று, மற்றது பிரகாசமான ஒளி, இந்த இரண்டும் பைரவரின் குணங்களும் பண்புமாகும்.
வ்யாபகத்வம் எனும் எங்கும் நிறைந்த தன்மையே எல்லாம் வல்ல இறையின் பண்பாகும்.
அபி நவகுப்தர் பைரவர் என்பதை வேறுவிதமாக விளக்குகிறார், ஒருமனிதனில் உணரக்கூடிய தன்மையில் இருக்கும் விழிப்புணர்வு பைரவம் எனப்படுகிறது.
பொதுவாக ஆகமதந்திரங்களில் நான் கு பாகங்கள் இருக்கும் கிரியா பாதம் - சடங்குகள் பூஜைகளைப்பற்றிக் கூறும், சர்யா பாதம் வாழ்கைமுறை பற்றிய அறிவுரையைக்கூறும், வித்யா பாதம் தத்துவ விளக்கம் பற்றிக்கூறும், யோகபாதம் ஆன்ம சாதனைபற்றிக்கூறும்.
ஆனால் விஞ்ஞான பைரவ தாந்திரம் தனியாக யோகபாதமாக மட்டுமே இருக்கிறது. தத்துவ விளக்கங்கள் எதுவும் இன்றி நேராக பயிற்சிக்கு செல்கிறது.

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 01


***********************
அண்மையில் ஒரு நண்பர் விஞ்ஞான பைரவ தாந்திரம் என்றால் என்ன என்று கேட்டிருந்தார். மற்றுமொருவர் இதுபற்றி உரையாடியிருந்தார் அதற்காக இந்தப்பதிவு.
விஞ்ஞான என்றால் ஸமஸ்க்ருதத்தில் அறிவு அல்லது புரிதல் என்று பொருள் 
பைரவம் என்றால் இறைவன் அல்லது விழிப்புணர்வு என்று பொருள்
தந்திரம் என்றால் உத்தி அல்லது வழிமுறை என்று பெயர்
விஞ்ஞான பைரவ தாந்திரம் மொத்தமாக 112 தாரணை உத்திகளைக் கூறுகிறது.
பைரவருக்கும் பைரவிக்கும் அல்லது சிவனுக்கும் சக்திக்கும் இடையிலான 163 ஸ்லோகங்களுள்ள உரையாடலில் இந்த உத்திகள் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது காஷ்மீர சைவத்தின் திரிக தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நூல்.
சிவமும் நாமும் வேறு அல்ல, மனதின் குழப்பத்தால் நாம் சிவம் என்பதை அறியமுடியாமல் இருக்கிறோம் என்பதே இந்த தத்துவத்தின் அடிப்படை, மனதை ஸ்தம்பிக்க வைத்தால் நாம் சிவம் என்பதை அனுபவமாக உணரலாம் என்பதே காஷ்மீர சைவத்தின் அடிப்படை பயிற்சி.
இப்படி மனதை ஸ்தம்பித்து விழிப்புணர்வைப்பெறுவதற்குரிய 112 தாரணை முறைகள் விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூல் தேவிக்கும் சிவனுக்கும் நடைபெறும் உரையாடலாக இருக்கிறது. பொதுவாக எல்லா தாந்திர நூற்களுமே சிவனுக்கும் தேவிக்குமான உரையாடலாகவே இருக்கும். இதன் காரணம் அறிவுப்பரிமாற்றம் ஆழமான அன்பிருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதைக்காட்டுவதாகும்.
இதற்கு கஷ்மீர சைவ குரு லக்ஷ்மன் ஜூவினுடைய உரை மிக நல்ல விளக்கம்.
ஒஷோ எடுத்தாண்ட தாந்திர நூற்களில் இது மிக முக்கியமானது.

போகரும் புவனேஸ்வரி தேவியும்


***********************************************
ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்ட தியானத்தின் பின்னர் அன்னை அண்டத்தின் இயக்கத்தையெல்லாம் காட்டி அண்டத்திலிருந்து சக்திகளை எல்லாம் தாவர வர்க்கமும், தாது வர்க்கமெல்லாம் எப்படி ஈர்த்து வளர்கிறது என்று போகனுக்கு காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்து தெளிந்துகொண்டிருந்த போகனுக்கு அன்னை தன் புன்சிரிப்புடன் கேட்டாள்
போகா, எனக்கு ஏன் புவனேஸ்வரி என்று பெயர்? உனக்கு ஏன் போகன் என்று பெயர்?
அதற்கு போகரோ,
அன்னையே, தாங்கள் அண்டத்தின் இயக்கத்தை பூமியில் வனங்கள் எனும் தாவர வர்க்கத்தின் மூலம் ஈர்த்து பூமியை வளப்படுத்தும் தலைவி என்பதால் பு + வன + ஈஸ்வரி, பூமியிலுள்ள வனங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரி,
இந்த ஞானத்தையெல்லாம் தங்கள் அருளால் போகித்து பேரின்பம் காண்பதால் எனக்குப் பெயர் போகன் என்றார்.
அன்னையும் சிரித்துக்கொண்டு வனத்திலுள்ள மூலிகைகள் எல்லாம் எப்படி அண்டத்துடன் தொடர்புகொள்கிறது என்ற ஞானம் பெற்றாய் போகா, பெற்ற ஞானத்தை பாமரனும் பயன் பெற விஷத்தை அமிர்தமாக மாற்றி ஆறறிவு தத்துவத்தை விளக்கி நவபாஷாணச் சிலையை தயார் செய்து பிரதிஷ்டை செய்வாய் என்று ஆசி கூறி பேரொளியாய் மறைந்தாள்.
{அவரவர் மன நிலைக்குத் தக்க கதையாகவோ, கருத்தாகவோ, கற்பனையாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்,  }

சித்தரியல் ஆய்விற்கான முன்மொழிவு

இன்று பலரும் சித்தர்கள் இப்படிக்கூறியுள்ளார்கள், அப்படிக்கூறியுள்ளார்கள் என்று ஆள் ஆளுக்கு பதிவு போட்டுக்கொண்டு தகவல் களஞ்சியமாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் அனேகமானவை எவராவது எழுதுவதை கண்மண் தெரியாமல் பிரதி செய்து போடுவது.
இப்படி மற்றொருவர் கூறியதை தகவலாக பகிர்ந்து கொண்டு இருக்காமல் நாம் இந்த சமூகத்திற்கு பிரயோசனமாக ஏதாவது செய்ய விரும்பினால் அர்ப்பணிப்புடன் ஏதாவது ஒரு சித்தரின் நூலை எடுத்து ஆழமாக கற்று, அதில் கூறிய பயிற்சிகளை அனுபவமாக கண்டு, தமது அனுபவத்துடன் விளங்க கூறுவது உபயோகமானது.
மேலும் கருத்துக்கூறும் போது ஆழமாக கற்றபின்னர் கருத்துக்கூறுவதும், தமது அனுபவத்தினூடாக கருத்துக்கூறுவதும் அந்த துறைக்கு நன்மை பயப்பவை!
அதீத நம்பிக்கையின் அடிப்படையிலும், யதார்த்த மனதிற்கு ஒவ்வாத விதத்திலும், சுய அனுபவம் இன்றியும் கூறப்படும் கருத்துக்கள் அந்தத்துறையை வளரவிடாமல் தடுத்து விடும்.
இன்று சித்த மருத்துவத்தில் இத்தகைய ஒரு பிளவு நிலை காணப்படுகிறது. BSMS படித்த பட்டதாரிகள் சித்த மருத்துவத்தின் அடிப்படையை அதன் சூக்ஷ்மத்தன்மையினையும் தத்துவங்களையும் புரிந்து கொள்ளாமல் அவற்றை நவீன ஆய்விற்கு உட்படுத்தித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க, அடுத்த பக்கம் நாம் சித்தர் பரம்பரை என்று மனம்போன போக்கில் அந்த சித்தர் சொன்னார் இந்தச் சித்தர் சொன்னார், என்று ஒரு கூட்டம் கருத்து வீசிக்கொண்டு இருக்க கடைசியில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விவாதத்தில் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாமல் காலம் கழிந்து கொண்டு போகும்.
சித்த மருத்துவத்தை வேர்களைப் புரிய அது எழுதப்பட்ட தமிழ் மொழியின் நுணுக்கங்கள் புரிய வேண்டும், தமிழ் மொழியின் நுணுக்கம் புரிந்தாலும் அவை பிரயோகிக்கப்பட்ட நிலையின் குழூஉக் குறி தெரியவேண்டும், குழூஉக்குறி தெரிந்தாலும் பின்னர் காலத்திற்கு ஏற்ப எப்படி அதை பிரயோகிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு வேண்டும், இந்த அனுபவ அறிவு வந்தால் அது இக்காலத்து நவீன அறிவியலில் எங்கு பொருந்துகிறது, எங்கு பொருந்தவில்லை என்ற நுண்ணறிவினால் ஆய்தல் வேண்டும். இப்படி ஒரு முறைப்படுத்தப்பட்ட பலரின் ஒருங்கிணைந்த உழைப்புத்தான் அந்தத்துறையை முன்னேற்றும்!

தாவோவின் மூன்று நிதியங்கள்

சித்தர்களின் ஸ்ரீ வித்யா பஞ்சாக்ஷர காயத்ரி உபாசனை சாதனை முறைக்கு மிகப்பொருந்தி வரக்கூடிய யோகமுறை தாவோப் பயிற்சியாகும்.
தாவோ என்பது சீன பண்டைய மறையியல் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த தத்துவத்தில் மனிதன் உடலே கோவில், உடலை செம்மைப்படுத்தி உபயோகப்படுத்துவதால் அண்டத்தின் நட்சத்திர சக்திகளை ஏற்று உயிரை வளர்த்து பேரொளி நிலை அடைய வைக்கலாம் என்பதே அடிப்படை தத்துவம்.
இதற்கு மனிதனிடம் காணப்படும் மூன்று சொத்துக்கள் காணப்படுப்படுகிறது.
1) சீ எனும் பிராணன், இதை மூச்சால் ஒழுங்கு படுத்த வேண்டும்.
2) ஜிங்க் எனப்படும் விந்து அல்லது சுக்கிலம், இதை உடல் பயிற்சியால் ஒழுங்கு படுத்த வேண்டும்.
3) சென் எனப்படும் மனம், இதை விழிப்புணர்வால் எண்ணங்கள் அற்றதாக ஆக்க வேண்டும்.
இப்படி மூன்று நிதியங்களையும் சரியாக ஒழுங்குபடுத்தி தனது உடலிற்குள் ஒளி நிலைப்படுத்த க் கூடிய பயிற்சியை நீண்டகாலம் செய்துவரும் சாதகன் தனது ஒளியுடலை வளர்த்து மகாகாரண சரீரம் பெறுகிறான்.
இதை காயத்ரி சாதனையில் பஞ்ச பூத சாதனை, பஞ்சகோச சாதனை என்று கூறுகிறோம். இப்படி பஞ்ச பூத கோஸங்களை சுத்தி செய்த சாதகன் ஸ்ரீ வித்யா சாதனையூடாக உயர் மண்டலங்களின் சக்தியை ஈர்த்து தனது ஒளியுடலை பெருக்கலாம் என்பதே சித்தர்களின் வாசி சிவ யோகங்களில் அடிப்படை.
பெரும் பாலான சித்தர்கள் பஞ்சாஷர மந்திர வித்தெழுத்துக்களையே இந்த சாதனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஐந்தெழுத்து பஞ்சபூதங்களை உடலில் சமப்படுத்தி ஈர்த்து உயிரை அழியா நிலை ஆக்குவதால் - அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்!

முத்திரை குத்தல்

மனிதனின் தர்க்க மனதின் (Rationale mind) பதட்டங்களில் அதிமுக்கியமான ஒன்று எப்போதும் எதற்கும் இது இப்படி என்று முத்திரை குத்துவது!
இப்படி முத்திரை குத்திப்பழகும் மனதிற்கு தான் உருவாக்கும் அந்த முத்திரையை தாண்டி பார்ப்பதையும், உணர்தலையும், ஆழமாக ஊடுருவிப்பார்க்கும் பண்பையும் இழந்து விடுகிறது.
நாம் ஒன்றைப்பற்றி முத்திரைகுத்தும் போது நாம் குத்தும் முத்திரையையே பார்க்கிறோமேயன்றி அசலான நிலையை அல்ல!
நாம் அனுமானிக்கும் ஒவ்வொன்றும் அடுத்த கணம் மாறும் என்ற நிலையாமையை உணர்ந்தவனுக்கு வாழ்வின் ஓட்டம் வெறும் விளையாட்டு! மாறுவதை உணர மறுத்து மனம் செய்யும் மாயாஜாலங்களில் ஒன்று இந்த முத்திரை குத்தல்!

ஆன்மா + மீகம் = ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் ஆன்மா+மீகம்,
மீகம் உயர்வு அடைதல்
ஆன்மா உயர்வு அடைதல்,
ஆன்மா என்பது நாம் புலன் வழி ஏற்கும் உணர்வெல்லாம் நம் உடலில் பதிவாகி உடலை இயக்கும் உணர்வு.
ஆக ஆன்மாவை உயர்த்த வேண்டும் என்றால் புலன்கள் வழி இயங்கும் மனதை சரி செய்ய வேண்டும்.
மனம் சரியாக இயங்க வேண்டும் என்றால் உடலை சரியாக பராமரிக்க வேண்டும்.
மனம் சரியாக இயங்க அறிவு சரியாக இயங்க வேண்டும். ஆக புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும்.
மனம் சரியாக இயங்க ஆழ்மனமான சித்தம் உதவவேண்டும். சித்தத்தை சுத்தி செய்ய வேண்டும்.
மனம் சரியாக இயங்க எமது சூழல் சரியான விஷயத்தை மனதிற்கு தர வேண்டும்.
இப்படி மனதையும் மனதை தாக்கும் உடல், புலன்கள், அறிவு, சித்தம், சூழல் எல்லாவற்றையும் சரி செய்து மனதின் வழி எம்மில் பதியும் உணர்வினை தூய்மை செய்தலே ஆன்மீகம்.
மேற்குறித்த வழியிற்கு பயன்படும் அனைத்தும் ஆன்மீகம் தான்!

தாவோவின் மறையியல் தத்துவம் - 03

ஆண் + பெண் = தாவோ
யங் + யின் = தாவோ
சிவம் + சக்தி = தாவோ
ஆக்க சக்தி (creative force) அல்லது ஆற்றலின் ஊற்று யங் எனப்படுகிறது.
ஆக்கசக்தியை பெற்று வளர்க்கும் நிலை யின் எனப்படுகிறது. இந்த இரண்டு சக்திகளும் சரியாக இணையும் போது பிரபஞ்ச படைப்பு நிகழ்கிறது.
மனிதர்களிலும், உயிரினங்களிலும் ஆண் வர்க்கத்தில் யங் சக்தி அதிகாக வெளிப்படும் நிலையிலும் யின் சக்தி உறை நிலையிலும் இருக்கிறது.
பெண் வர்க்கத்தில் யின் சக்தி அதிகமாக வெளிப்படு நிலையிலும் யங் சக்தி உறை நிலையிலும் இருக்கிறது.
இந்த இரண்டு இணையும் போது படைப்பு நிகழ ஆரம்பிக்கிறது.
ஆண் முழுமையாக யங் சக்தி நிறைந்தவன் அல்ல, ஒப்பீட்டளவில் அதிகமானவன், அவனுக்குள் யின் சக்தி இருக்கிறது.
அதுபோல் பெண் முழுமையாக யின் சக்தி நிறைந்தவள் அல்ல, ஒப்பீட்டளவில் அதிக யின் சக்தி உடையவள், அவளுக்குள் யங் சக்தி உண்டும்.

தாவோவின் மறையியல் தத்துவம் - 02


தாவோவின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று பிரபஞ்சம் அடிப்படையில் இருமைகளால் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த இருமைப்பண்பின் ஒரு முனை ஒளிமயமான யங் என்ற தத்துவம். மறுமுனை யின் என்ற இருள் தத்துவம்.
இந்த இருமைகள் பிரிக்கமுடியாதவை. ஒரே மூலவஸ்துவிலிருந்து தோன்றியவை, இருள் இருந்தால் அங்கு ஒளி இருப்பதற்கான சாத்தியம் நிச்சயம் உண்டு, அதுபோல் ஒளி இருந்தால் இருள் இருப்பதற்கான சாத்தியமும் இருள் இருந்தால் ஒளி இருப்பதற்கான சாத்தியமும் நிச்சயம் இருக்கிறது.
மனிதன் இந்த இரண்டினது எல்லைக்கும் செல்லாமல் சரி சமமாக இருப்பதையே தாவோ எனப்படுகிறது. மனிதன் ஒளியில் எல்லைக்கோ அல்லது இருளின் எல்லைக்கோ செல்வது இரண்டும் தவிர்க்கப்படுகிறது.
ஒருவன் எல்லையற்ற தீயபழக்கவழக்கங்கள் உள்ளவனாக இருந்தால் அவன் தன்னை சம நிலைக்கு கொண்டுவருவதன் மூலம், தாவோவின் மூலம் ஆரோக்கியமானவனாக இருக்கலம்.
தாவோ என்றால் சம நிலை,
இருளுக்கும் ஒளியிற்குமான சம நிலை,
சொர்க்கத்திற்கும் பூமிக்குமான சம நிலை,
நல்லதிற்கும் கெட்டதிற்குமான சம நிலை,
ஆணுக்கும் பெண்ணுக்குமான சம நிலை!

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...