குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 31, 2017

கால நேமியின் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி?கால நேமி என்ற அரக்கன் நாம் நல்ல செயலுக்காக அர்ப்பணித்து செயலாற்றும் போது எம்மை தவறான செயலில் தடுத்து, குழப்பும் எமக்குள் இருந்து வரும் எண்ணம். இதையே காலநேமி என்ற குழப்பும் அரக்கனாக புராணங்கள் குறிப்பிடுகிறது.

இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றால் அதற்கு பதில்? தர்க்க சாஸ்திரம் ஒரு சாதகனுக்கு அவசியமான பண்பு தனது மனதை எப்படி சிந்திக்க பழக்குவது என்பது. 

மனதில் எழும் எண்ணத்தை அதற்குரிய காரணத்துடன் சிந்திக்க எப்போதும் மனதை பழக்குவது. மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் இந்த எண்ணம் எதற்காக எழுகிறது என்பது என்பதை சிந்திப்பதும் அந்த எண்ணம் தர்மத்திற்கு அமைவாக சரியானதா பிழையானதா என்பதை அந்த துறைக்குரிய வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
உதாரணமாக ஆன்மீகத்தில் எது சரி எது பிழை என்பது சித்தர் பாடல்களிலும் யோக சூத்திரத்தில், பகவத்கீதை, என்பவற்றில் கூறியுள்ளது.
வியாபாரத்தை சரியாக எப்படி செய்வது என்பது பொருளியலிலும், வியாபார துறை வல்லுனர்களிடமும் கற்றுக்கோள்ளலாம்.
சரியாக சிந்திப்பது என்பது மூன்று பகுதிகளை உடையது;
உணர்ச்சிவசப்படாமல் ஒருவன் தனது எண்ணத்தை கீழ்வரும் மூன்று கேள்விகளையும் கேட்கவேண்டும்.

 1.  இந்த எண்ணம் நான் பின்பற்றும் தர்மத்திற்கு அமைவாக நல்லதா தீயதா?
 2. இந்த எண்ணத்தால் நான் பெறப்போவது என்ன? இழக்கப்போவது என்ன?
 3. இந்த எண்ணத்தால் மற்றவர்களுக்கு நன்மையா தீமையா?

இந்த மூன்று கேள்விகளும் எம்மை காலநேமியில் செல்வாக்கிலிருந்து காப்பாற்றும்.

Monday, October 30, 2017

காலநேமியும் நமது வாழ்க்கையும், யோக சாதனையும்!

இராமயணம், மகாபாரதத்தில் வரும் ஒரு இராக்ஷத கதாப்பாத்திரம் கால நேமி! புராணங்கள் என்பது எங்கோ எப்போதோ நடந்த அற்புதக்கதைகள் அல்ல! முற்காலத்தில் மனிதனது வாழ்வியலை விளங்கிக்கொள்ள சுவைபடக் கூறப்பட்ட கதைகள்தான் புராணங்கள். இதில் ஒரு மனிதன் தனக்குள்ளும், சமூகத்துடனும் நடாத்தும் போராட்டங்களை, நல்ல குணத்தை தேவராகவும், தீய குணத்தை அசுரர் எனவும் குறித்துக்காட்டினார்கள். 

இனி கால நேமியின் முக்கியத்துவத்தை பார்ப்போம். 

கால நேமியின் முதலாவது சாதனை: கும்பகர்ணன் (அறிமுகம் தேவையில்லை) சிறந்த யோக சாதகன். ஆறுமாதங்கள் விழித்து சாதனை செய்து ஒரு நாள் உறக்கத்துடன் மீண்டும் ஆறுமாதம் யோக சாதனை செய்ய வரம் வேண்டி தவம் புரிகிறான். ஸ்கந்த புராணத்தின் படி தபஸ் பூர்த்தியாகும் நேரத்தில் காலநேமி கும்பகர்ணணை குழப்பி நித்திரை வரம் வாங்க வைத்து விடுகிறான். இப்படி நடந்திருக்காவிட்டால் சிறந்த யோக சாதகனும் ஞானவானுமான கும்பகர்ணன் இராவணனிற்கு சிறந்த மதியுரையாளனாக இருந்திருக்க இராவணனின் அழிவு நடந்திருக்காது. 

இரண்டாவது மாரீசன், மாரீசன் தவத்தின் மூலம் தனக்கு ஸ்வர்க்க பதவி கிடைக்க வரம் வேண்ட கால நேமியின் தூண்டலால் ஸ்வர்ணம்ருங்க (பொன்மான்) வரம் கேட்டு இராமபாணத்தால் அழிந்தான். 

காலநேமி (காலநேமியே கம்சன்) பூதனா எனும் அரக்கிக்கு பிள்ளை இல்லாத மனக் குறையை பாவித்து குட்டி கிருஷ்ணனுக்கு பாலூட்ட வைத்து அரக்கியான பூதனாவின் உடலில் உள்ள விஷத்தால் பிள்ளையை கொல்ல திட்டமிடுகிறான். இறுதியில் பூதனா கிருஷ்ணனால் கொல்லப்படுகிறாள். 

அடுத்து சூர்ப்பணகைகைக்கு இராமன் மேல் ஆசையை தூண்டி விடுகிறான். இறுதியில் சூர்ப்பணகைக்கு நடந்தது என்ன என்பது பற்றி இராமாயணம் படித்த அனைவருக்கும் தெரியும். 

மந்தாரா எனும் கூனியை குழப்பி கைகேயி மூலம் இராமனை வன வாசம் அனுப்பியது கால நேமியே!

இனி இந்த புராணக்கதைகளின் உண்மை விளக்கத்திற்கு வருவோம். இந்த கதாப்பாத்திரம் ஒவ்வொரு மனதிற்குள்ளும் இருக்கும் வில்லனையே குறிக்கிறது. எம் எல்லோருக்குள்ளும் மிக நுண்மையான குழப்பமாக எப்போதும் காலநேமி வசித்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையை அவர்களே ஆராய்ந்து பார்த்தால் இந்தக்  காலநேமியால் இழந்த்து எவ்வளது என்பது நன்கு தெரியும்.  

கட்டுபாடு அற்றது, கவனம் அற்ற, நல்ல செயல்களில் ஆர்வம் அற்ற மனம் கால நேமியின் ஆளுகைக்கு உட்பட்டது. இது அசுர குணங்களையும், தீய இலக்குகளையும், உடல் இச்சைகளையும் வாழ்வின் இலக்காக்கி கொண்டு ஒருவனை அழிக்கும். புராணங்களில் கால நேமியின் செயற்பாட்டினை பார்த்தால் நல்ல முயற்சி செய்பவனை தீய எண்ணத்தை எழுப்பி மனதை குழப்பி அழிவில் செலுத்தும் செயலையே செய்பவனாக வர்ணிக்கப்படுகிறான். இந்த கால நேமியே நல்ல குருவிடம் உபதேசம் பெற்றவர்களை சாதனை செய்ய விடாமல் குரு காட்டிய வழியில் செல்ல விடாமல் மனதை குழப்புவது.

சரி கால நேமி எங்கே இருக்கிறான்? இவன் எங்கோ வானத்திலோ, நரகத்திலோ இருக்கும் அசுரன் அல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணங்களாக மறைந்திருந்து கூடவே இருந்து செயற்படுகிறான். ஒருவன் தனது உணர்ச்சிகளையும், மன எண்ணங்களையும் கவனமாக ஆராய்ந்து தான் குருகாட்டிய வழியில் சென்றுகொண்டு இருக்கிறேனா என்று ஒவ்வொரு கணமும் ஆராயாமல் எவரும் காலநேமியின் ஆளுகைக்குள் இருந்து தப்ப இயலாது. இவனது ஆற்றல் எந்த வயது மனிதனையும் எந்த நேரத்திலும் மாயையில் ஆழ்த்தி செயல் புரியவைத்து துன்பபடவைப்பது. 

ஆகவே யோகம் பயில்பவர்களும் சரி, சாதாரண வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் சரி காலநேமி பற்றி கவனமாக இருக்க வேண்டும்!

Wednesday, October 25, 2017

அகத்தியர் கூறும் வைத்தியன் இலக்கணம்

 
 
பார்தனில் வேதந்தன்னைப் பார்த்ததில் பெரியோன் சொன்ன
சீர்பெரு வாகடத்தைச் செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரியுமுடன் பிறப்பா என்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையானாக
மெய்யது சொல்வானாக வினங்குரு மறவானாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன திரக்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே!
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள்கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலானவைகளுள்ளான் செகம்திலிருக்க் மட்டு
மேதினியதனில் காலன் விதியில்லால் வியாதியுண்டோ
சினவெறியேறு போலதிடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமெனவுயிரைக்காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளானேத்தமுள்ளா னெற்கையால் தோற்றமுள்ளான்
மனமதில் தயவுமுள்ளான் வைத்தியனாகு மென்றே
 
அகத்தியர் வைத்தியம் 2000 நூலில் ஒரு வைத்தியன் பெற்றிருக்க வேண்டிய மனப்பண்புகள் பற்றி மேலேயுள்ள பாடல் அறிவிக்கிறது. 
 
எமக்கு முன்னர் இந்த உலகில் வேதம் எனும் அறிவின் துணைகொண்டு பிணிதீர்க்கும் வாகடத்தை தமது அனுபவத்தாலும் அறிவாலும் தொகுத்துத்தந்த பெரியோர்கள் வைத்தியனுக்குரிய குணங்கள் என கீழ்வரும் குணங்களை வரையறுக்கிறார்கள்
 1. சொன்ன சொல் மாறாதவனாக
 2. தனது நினைவில் மனைவியை தவிர அனைத்துப் பெண்களையும் சகோதரியாக எண்ணும் மனப்பக்குவம் உள்ளவனாக
 3. பொய் உரைக்காதவனாக
 4. புகழும் அறிவும் உடையவனாக
 5. உண்மை கூறுபவனாக
 6. தனது குருவை மறவாதவனாக
 7. மனதில் தாட்சணியமும் இரக்கமும் உடையவனாக
 8. பாவச்செயல் செய்யாமல் நன்மையில் நடப்பவனாக
 9. ஒவ்வொரு மாதமும் வைத்திய நூற்களை கற்றவனாக
 10. கற்றதன் பொருளை எப்போதும் மனதில் ஆராய்ந்தவனாக
 11. இந்த புவியில் வாழுமட்டும் யமனின் விருப்பம் இன்றி எவருக்கும் உயிர் பிரியுமேயன்றி வியாதியால் அன்று என்பதை உணர்ந்தவனாக
 12. சினம் கொண்ட சிங்கம் போன்ற மனத்திடம் உடையவனாக
 13. தன்னை நாடிவரும் உயிரை காக்கும் கருணை உள்ளவனாக
 14. நல்ல உயர்ந்த பண்புகள் கொண்ட குடும்பத்தில் உதித்தவனாக
 15. நல்ல தோற்றமுள்ளவனாக
 16. மானதில் தயை உள்ளவனாக
இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளார்.

Friday, October 20, 2017

சித்த ஆயுள் வேத மருத்துவமும் அறிவியல் முறையும் (Scientific Method)


தமிழகத்தில் நிலவேம்பு குடி நீர் பற்றிய விவாதாங்கள் வழமையான குழப்ப சூழ் நிலையை உருவாக்குகிறது. Facebook இல் வரும் வாதப்பிரதிவாதங்களை பார்க்கும்போது “வதந்தியும், மனம்போன போக்கில் கருத்து தெரிவிக்கும் விதண்டாவாதங்களும், அறிவியல் முறை (Scientific Method) என்றால் என்ன என்ற புரிதலற்ற அரைகுறை அறிவும், வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மூடத்தனமும், மக்களின் அறியாமையை காசாக்கும் கயமையும் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
இனி சித்த – ஆயுள் வேத மருத்துவம் (எவரும் சித்தமருத்துவம் வேறு ஆயுள் மருத்துவம் வேறு என்று கொடிபிடித்து போராட வரவேண்டாம், இரண்டின் அடிப்படைதத்துவம் ஒன்று, ஆயுள்வேத வட நாட்டில் வளர்ந்த்து, சித்த மருத்துவம் தென்னாட்டில் வளர்ந்தது) என்பன அறிவியல் தன்மைக்கூடாக பரிசோதிக்கப்பட்டதா? என்ற வாதப்பிரதி வாதங்கள் நடைபெறுகின்றன.
இந்தக்கேள்விக்கு பதில் கண்டு பிடிக்க முன்னர் அறிவியல் முறை (Scientific Method)  என்றால் என்ன என்பது பற்றி சற்று விரிவாக பார்ப்போம். அறிவியல் என்பது மனிதன் புதிய அறிவைப் பெறுவதற்குரிய உத்திகளைக் கொண்ட ஒரு சிந்தனைப்பொறிமுறை. இந்த வரைவிலக்கணத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் என்பது அமெரிக்காகாரன் சொல்வதோ, WHO சொல்வது மட்டுமல்ல! எந்த ஒரு மனிதனும் இயற்கையை (Nature) அவதானித்து (Observation) அந்த அவதானங்களை தொகுத்து, கேள்விகளை (Questions) உருவாக்கி, அந்தக்கேள்விகளுக்குரிய அனுமானப்பதில்களான கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதிக்ககூடிய எதிர்வுகூறல்களை (Testable prediction) பரிசோதித்து பின்னர் அதற்கான தரவுகளை தொகுத்து ஆராய்ந்து (Data analysis) முடிவுகள் பெறப்படுகின்றன. இந்த முடிவுகள் தொடர்ந்தும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப்பட்டு மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படும்போது கோட்பாடுகள் (Theory) உருவாக்கப்படுகிறது. மேலே கூறிய அத்தனை படிகளுமே அறிவியல் முறை எனப்படுகிறது.
அடுத்தது அனுமானங்களை உருவாக்குவதற்குரிய அடிப்படை சிந்தனை தர்க்க ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இந்த அடிப்படையில் சித்த ஆயுள் வேதத்தின் நோய் என்பது தோஷங்களின் சம நிலை இன்மையால் உடலின் இயக்கத்தில் ஏற்படும் தடைகள் ஆரம்ப நிலையாகவும், இந்த நிலை நீடிக்கும்போது அது உடலின் அடிப்படை அலகுகளான தாதுக்களை தாக்குவதும் நோய் என வரையறுக்கப்படுகிறது. நோயின் பிரதான காரணம் மனிதன தனது அகத்தில் உண்டாக்கும் சம நிலை இன்மை, அல்லது புறத்தாக்கத்தால் ஏற்படும் அகச்சம நிலை இன்மை. இந்த வரைவிலக்கணம் பல ஆயிரம் ஆண்டு பழமையான வரைவிலக்கணம்.
நவீன மருத்துவம் நோய் என்பது உடலின் சாதாரண நிலை பாதிப்படைவது நோய் எனப்படும் என வரையறுக்கிறது. இதற்கான காரணங்கள் நுண்கிருமிகள், பாரம்பரியம், எனப்புறக்காரணிகளை கொண்டு வரைவிலக்கணப்படுத்துகிறது.
இரண்டு வரைவிலக்கணங்களையும் கவனமாக வாசித்தால் இரண்டு முறையும் ஒரே பிரச்சனையை எப்படி அணுகுகிறது என்பது விளங்கும். சித்த ஆயுர்வேதத்தில் நோயிற்கான ஒரே காரணம் “மனிதன் தனது சம நிலையை இழத்தல்” ஆகவே காரணம் தெளிவானது ஆகவே விடை எளிதானது. உனக்கு நோய் வந்தால் இழந்த சம நிலையினை பெறுவதற்கு முயற்சி செய்! இந்த முயற்சிக்கு மருந்துகள் வெளியில் இருந்து தரப்படும் சுத்திகரிப்பான் மட்டுமே, மற்றவை உடலிற்கு என்று ஒரு பேரறிவு இருக்கிறது, அது மற்றவற்றை பார்த்துக்கொள்ளும் என்று பதில் தரும்.
ஆனால் நவீன மருத்துவம் நோயிற்கு உரிய காரணம் நுண்கிருமிகள் என்று வெளியே தேட ஆரம்பிக்கிறது. உடலுக்கு வெளியே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே எப்போதும் நோய்க்கு மருந்து இல்லை. இதனாலேயே நவீன மருத்துவம் மருந்தில்லா நோய்கள் என்ற ஒரு பகுப்பை வைத்திருக்கிறது.
மேலும் சித்த ஆயுள் வேதத்தின் மூல நூற்கள் பல ஆயிரம் வருடங்களாக இயற்கையை (Nature) அவதானித்து (Observation) அந்த அவதானங்களை தொகுத்து, கேள்விகளை (Questions) உருவாக்கி, அந்தக்கேள்விகளுக்குரிய அனுமானப்பதில்களான கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதிக்ககூடிய எதிர்வுகூறல்களை (Testable prediction) பரிசோதித்து பின்னர் அதற்கான தரவுகளை தொகுத்து ஆராய்ந்து பெறப்பட்ட முடிவுகளையே அகத்தியர் வைத்திய காவியம், சரக சம்ஹிதை (சம்ஹிதை என்றால் தொகுப்பு என்று பொருள்) சுசுருத சமிதை, தேரையர் காப்பியம், குணபாடம் என்பவை. இப்படி அறிவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட அறிவைனை இழந்து விட்டு இன்று முட்டாள்களாக எதை நம்புவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.
இப்படி பாரம்பரியமாக பல்லாயிரம் வருடங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட அறிவு நிச்சயம் சமூகத்திற்கு பலனளிக்கும். எனினும் சமூகம் சரியான விழுமியம் இல்லாமல் இப்படி இலகுவாக கிடைக்கும் விஷயத்தையும், மக்களின் மரண பயத்தையும் பணமாக்க முயலும் கயவர்களாலேயே போலிகள் பெருகி உண்மை நிலையும் நிலைக்க முடியாத தன்மை உருவாகிவிட்ட்து.
இதற்கு மனிதனின் சிந்தனை முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். முற்காலத்தில் தனது தேவை எது என்பதை வரையறுத்து அதற்கு மேல் எதையும் அபகரிக்காத மக்கள் இருந்தார்கள். வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகள் சாப நிவர்த்தி செய்து, இயற்கையின் அனுமதியுடன் பறிக்கப்பட்டன். இதனால் சமூகத்தின் வளம் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையுடன் இருந்தது. ஆனால் இன்று அனைவரும் அனைத்தையும் அடையவேண்டும் என்ற மாயையும், மக்களின் அறியாமையும். இன்று புனித தலங்கள் என்று தமது பேராசைகளை நிறைவேற்றவும், பாவங்களை தொலைக்கிறோம் என்று மலைகளுக்கு செல்லும் பெருந்திரளான மக்கள் தமது பாவத்தையும் போக்காமல் இயற்கைய அழிக்கும் பாவத்தையே செய்கிறார்கள்.
இறுதியாக சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக சரியானது. பல ஆயிரம் வருடம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த சமூகத்தின் கண்டுபிடிப்புகள் இவை. இவற்றை சரியாக கற்று, தெளிந்து, அனைவருக்கும் பயன்படும் வகையில் பிரயோகிப்பது அனைவரது கடமையும் கூட. அதேவேளை இந்த எளிமையான ஆனால் உயர்ந்த அறிவை சுய நலமிகள் தமது அதிகார, பொருளாசைக்கு பயன்டுத்தும்போது அது குழப்பங்களை விளைவிக்கும்.
இந்த கூற்றை அறிவியல் என்பதன் வரைவிலக்கணம் தெரியாமல் WHO ஏற்றுக்கொண்டுள்ளதா? போன்ற மூடக்கேள்விகளுக்கு பதில் தந்து நாம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

Thursday, October 19, 2017

அகத்தியர் குரு மந்திர கூட்டு ஜெபம்

ஏற்கனவே அகத்தியர் யோக ஞானத்திறவுக்கோல் நூலில் தரப்பட்ட அகத்திய மூல குரு மந்திரம் தினசரி ஜெபம் செய்பவர்கள் மட்டும் இந்தப்படிவத்தை பூர்த்தி செய்யவும்.
ஸ்ரீ மெய்ஞான குருநாதர் அகத்திய மகரிஷியினை குருவாக ஏற்று சாதனை செய்யும் அன்பர்கள் அனைவரும் கூட்டு ஜெபமாக செய்ய அது ஒருவருக்கும் தனிப்படவும், கூட்டுக்காந்தமாக அவர்களை சூழ உள்ளவர்களுக்கும் சமூகத்திற்கும் பயன் தரும்.
இந்த முயற்சி சிறு துளி பெரு வெள்ளம் என்ற தத்துவத்திற்கு அமைய ஒவ்வொருவரும் செய்யும் ஜெபம் எமது சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 0530 - 0700 மணிவரை நடைபெறும் யக்ஞத்தில் பதிவு செய்த அனைவரது பெயரும் அன்னை ஸ்ரீ காயத்ரியினதும் குருநாதர் பாதத்தில் வைத்து சங்கல்பம் செய்து அனைவருக்கும் ஆன்ம பௌதீக முன்னேற்றம் கருதி
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா,
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என பிரார்த்திக்கப்படும்.
இந்த முறை அவரவர் வீட்டிலிருந்து தினசரி நாம் குறிப்பிடும் முறைப்படி சிறிது நேரம் ஒதுக்கி சாதனை செய்து வர வேண்டும். அத்துடன் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை தினசரி சிறிது நேரம் பொருளுணர்ந்து கற்று வர படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படும்.
இந்த சாதனா முறை இந்தப்பதிவில் தரப்பட்டுள்ளது: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_42…
முறையாக தினசரி சாதனை செய்ய விரும்புபவர்கள் சங்கத்தின் மின்னஞ்சலுக்கு sithhavidya@gmail.com விண்ணப்பம் அனுப்பி ஸ்ரீ காயத்ரி - குரு சாதனா முறை பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 40 நாட்கள் தரப்பட முறையில் பயிற்சித்து தமது சுய அனுபவத்தின் மூலம் சாதனை பலனளிக்கிறதா என்பதை அறிந்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
https://goo.gl/forms/DNz49vJqnnVR1gzg2

வள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்

 வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்;  ச -  உண்மையே சகரமாய்,  ர - விஷயநீக்கமே ரகரமாய்,  வ - நித்திய திருப்தியே வகரமாய்,  ண - நிர்விஷயமே ண...