அசூயை என்பது மிகப் பொல்லாத ஒரு துர்குணம். மனிதனின் ஆற்றலை வீணடிக்கும் ஒரு உணர்ச்சி!
பொறாமை என்று இதனைப் பொருள் கொண்டாலும் அதைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் உணர்ச்சி!
ஒருவர் மேல் அசூயை ஏற்பட்டால் நாம் நினைத்துக் கொண்ட எண்ணத்திற்கு மேல் அவர் எவ்வளவு நல்ல குணம் இருந்தாலும், பரந்த மனம் இருந்தாலும் எம்மால் அவற்றை புரிந்துக் கொள்ளவோ, அறிந்துக் கொள்ளவோ முடியாதபடி மனநிலை வந்துவிடும்!
அசூயை ஏற்பட்ட மனம் செக்குமாட்டிற்கு உதாரணம் கூறமுடியும். செக்கு மாடு ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும். அது போல் அசூயை ஏற்பட்டவர் தாம் குறை கூற விரும்புபவரை எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார், ஆனால் இவர் குறை கூறும் நபரோ வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல் தனது இலக்குகளை துளைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருப்பார்!
அசூயை ஏற்பட்டால் மனம் விரியாது! மனம் தீக்கோழி ஆகிவிடும்! அல்லது கண்மூடி உலகம் இருண்டு விட்டது ஆபத்து இல்லை என நினைக்கும் பூனை போன்று ஆகிவிடும்! யதார்த்தம் விலகி கற்பனை உலகில் சஞ்சரித்து வீணான பிரச்சனைகளை நாமாக உருவாக்கிக் கொண்டு மற்றவர்களை குறை கூறிக் கொண்டு இருப்போம்.
ஆகவே ஊரோடு சேர்ந்து ஓடுகிறோம் என்பது அவசியமான பண்பாக இருந்தாலும் எதற்காக ஓடுகிறோம் என்று விழிப்புணர்வு இல்லாமல் ஓடினால் முன்னே படுகுழி இருந்தால் கூட்டமாக விழுந்து சாகவேண்டியது தான்!
இவ்வளவும் எதற்கு என்று கேட்கிறீர்களா, நண்பர் ஒருவர் நேசமணி ட்ரெண்டிங் ஒரு எதிர்ப்பு அரசியலில் குறியீடு என்று கூறினார்! அதற்குத் தான்!
எதிர்ப்பு அரசியலா அசூயை அரசியலா என்பது ஆராயப்பட வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.