அகத்திய மகரிஷி அருளிச்செய்த‌ மனோன்மணி பூசை அகவல்

இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்துவிட்டு நானும் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அவர் செய்வதாக இருக்க கூடாது என்ற வீம்புடன் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது தினசரி பாராயணம்தான் இந்த மனோன்மணி அகவல்.

அப்போது இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டதன் காரணம் "அகத்திய மாமுனிவர் அருளியது" என்று அதன் தலைப்பில் இருந்த அறிமுகம் மட்டுமே. அர்த்தம் புரியாமல் சிறுவயதில் விளையாட்டாக வீம்பிற்கு படித்ததன் பலனோ என்னவோ, அதன் இறுதி வரிகளில் கூறப்பட்டதுபோல் "குருவடிவாயு பதேசங் கொடுத்துன் திருவடி தந்தருள் சிவசிவா சரணம்" என்ற பலன் எனது வாழ்வில் மெய்ப்பட்டது.

ஆம் குருவடிவாய் காயத்ரி மஹாமந்திர உபதேசமும், ஸ்ரீ வித்யா உபதேசமும் தேடாமலே கிடைக்கப்பெற்றது! 

ஆக தேவியை உபாசிக்க வேண்டும் என பேராவல் கொண்ட அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை படிக்க பலன் உண்டு என்பது எமது அனுபவ உண்மை!
ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே
ஆதியே பரையே சோதியே சுடரே
ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி
ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே
உருவடி வான வுத்தமக் கொழுந்தே
அருவடி வான ஆதிய நாதி
ஓங்கி றோமான ஓங்கார றீங்கிலியே
ஆங்கிறோ மான ஆதி யனாதி
புவனப் பதியே போற்றி சிவய நம
சிவய நம வென்று சிந்திப்போர்க்கு
அபாய மறுக்கும் மறு கோணத்தி
சற் கோணத்தி சற பாணத்தி
சொற் பவனத்தி சூக்ஷ்ம ரூபி
திரிபுர பவா திகழொளி பவா
பரிபுர பவா பவனொளி பவா
சயளொளி பவா சரஹன பவா
ஆயிளொளி யான அகார றீங் கிலியே
பராபரப் பொருளே பளிங்கொளி யாளே
நிராதார மான நிஷ்கள ரூபி
சவ்வுங் கிலியும் யவ்வுமா னவளே
யவ்வும் உவ்வும் சவ்வுமா னவளே
வாசி என்னும் வளரொளிக் கொழுந்தே
பூசனை புரியும் புவனப் பதியே
கிறிபுங் கிலியுஞ் சங் வங் யங்குச
ஆற்பனத் துஞ்சி யமுத வர்ஷினி
இறியும் இறீயும் றியுமானவளே
றீங்காரத்திலிருக்கும் வடுக்கா வங் யங்
வடுகா யங் வங் ஆபத் தாரணா
பஞ்சாட்சரத்தின் பழம்பொருளாதி
நெஞ்சாட்ச் சரத்தி னிறைந்திருப் பவளே
பிரிவரை யில்லாப் பெண்ணுக் கரசே
சிவாய வென்னும் தெரிசனப் பொருளே
பூவார் குழலே புவனா பதியே
சாற்றும் பொருளே சவுந்தரி யாளே
யேற்று மடியார்க்கு கிருதயத்தி லேழுதாப் பொருளே
அவ்வுயி ராளே யவயசாட்சி யமுதவர்ஷினி
செய்வினை தீர்க்கும் திரிகோணத்தி
ஐயுங் கிலியு முன்பத்தோ ரட்சரமுந்
துய்யுஞ் சவ்வுமாய்த் தோன்றி நின்றவளே
பேயனாகிலும் பெற்றருள் பிள்ளையைத்
தாயே காக்கத் தானுனக்கே பாரம்
யாநின் னுடையான அருவுரு வாளே
சரணஞ் சரணம் நமஸ்தே சரணம்
வன சௌந்தரி போற்றி நமஸ்தே
குருவடிவாயு பதேசங் கொடுத்துன்
திருவடி தந்தருள் சிவசிவா சரணம்அகவல் முற்றிறு

Comments

  1. mikka nandri aiya, yaar eluthiya paadal endru ithu naal varayil theriyaamal padithu vanthen, therivithamaikku mikka nandri, padikka padika aanathamaga irukkirathu.

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு