{சிவாஜிகணேசனின் தங்கமலை இரகசியம் இல்லை }
லாவோட்ஸு கூறுகிறார், எதன் மூலம் இந்த இருப்புகள் இருக்கின்றனவோ அதற்கான வழி தாவோ எனப்படுகிறது. தாவோவிற்கு வடிவமோ, பெயரோ இல்லை, அது அனைத்தினதும் ஆதியாக இருப்பதன் சாரம் (essence), வாழ்வின் மூலமான சாரத்தை காணமுடியாது.
இது உயர் தளத்திற்கான ஒளியைக் கொண்டுள்ளது. இந்த உயர்தள ஒளியை காணமுடியாது, ஆனால் அது இரண்டு கண்களில் நிலை கொண்டுள்ளது. இன்று நான் உனக்கு தங்க மலரை அடைவதற்கான வழியினை காட்டி அடைவதற்குரிய உதவியை செய்கிறேன், இனி இதுபற்றி விபரமாக விளக்குகிறேன் கேள்;
உயர்ந்தது என்பதன் விளக்கம் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பதாகும். இதை ஸ்ரீ வித்தையிலும் காயத்ரி வித்தையிலும் அனுத்தர ஆம்னயம் என்று கூறுவார்கள்.
வாழ்க்கையின் இரகசியம் என்பது இயக்கத்தினூடாக இயக்கமற்ற சலனமற்ற நிலையை அடைவதில் உள்ளது என்பதை புரிந்து கொள்வாய்.
ஒருவன் எதையும் நேரடியாக அடைவதற்கு முயற்சிக்க கூடாது, அதாவது பிரபஞ்ச மகாசக்தியை நேர தான் அடையவேண்டும் என்று எண்ணக் கூடாது என்கிறார் லாவோட்ஸு. இதன் பொருள் பிரபஞ்ச மகா சக்தியைப் பற்றி அறிய அதன் உண்மைத் தன்மையான பேரண்டமான பிரபஞ்சத்தில் உண்மைத் தன்மையை அறிய முற்பட்டால் அது கிடைக்காது.
ஆனால் அதன் மாதிரிவடிவமான மனித உடலில் (ஹசிங் என்று சீனமொழியில் கூறப்படுகிறது) இதைப் பற்றி அறிய முயற்சிக்கலாம்.
இதையே சட்டமுனிச் சித்தர்
அண்டத்திலுள்ள்தே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிணமுமொன்றே
அறிந்துதான் பாக்கும் போதே என்பார்.
லாவோட்ஸு ஒருவன் தங்கமலரை அடைவதில் கவனமாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும், தவறான பாதையில் சென்று விடக்கூடாது. இந்த வரிகள் ஒரு சாதகன் தான் உயர்ந்த நிலை அடையவேண்டும் என்ற உத்வேகத்தில் தவறாக எதையும் செய்து உடலைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை குறிக்கிறது.
தங்கமலரானது ஒளியின் ஒரு குறியீட்டு வடிவம், இந்த ஒளி என்ன நிறம் என்பதை குறிக்க பயன்படும் குறியீட்டு வடிவம். இதுவே உயர்சக்தி.
ஆகவே அக இரசவாததின் மூலம் பிரபஞ்ச மூல ஒளியான தங்க நிற ஒளியை தனது உடலில் பாய்ச்சி பிரபஞ்ச மூலசக்தியை ஈர்க்க வேண்டும்.
தொடரும்....
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.