நண்பர் ஒருவர் கோயில் கட்டுவதை சாடியுள்ளீர்கள் என்று கவலைப்படுகிறார். கோயில் கட்டுவது நிச்சயமாக தவறு இல்லை தேவையானதும் கூட, ஆனால்,
என்ன நோக்கத்திற்காக கோயில் கட்டுகிறோம்?
யாருக்காக கோயில் கட்டுகிறோம்?
கட்டிய கோயிலிற்கு சமூகம் என்ன செய்யப் போகிறது?
கட்டிய கோயில் சமூகத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்யப் போகிறது?
கோயிலின் தத்துவம், சிறப்பு அகத்தினை அறியும் புறத்தில் உள்ள மாதிரியாக இருக்க அவற்றைப் பற்றி சமூகத்திற்கு எதையும் கற்பிக்காமல் செலவழிக்கும் காசு அதைச் செய்பவர்களின் புகழும் பாடும் நோக்கம்!
நோக்கத்தில் தெளிவற்ற செயல் குழப்பத்தையே மிஞ்சுவிக்கும்!
கோயில் சமூக அமைப்பின் ஒரு மையம், அந்த மையம் சமூகத் தேவையின் நோக்கத்தில் தெளிவு இல்லாமல், மக்களின் மனத்தை பண்படுத்தாமல், ஒற்றுமையை வளர்க்காமல் பகட்டையும், அறியாமையையும் வளர்க்கும் மையங்களாகி விடக்கூடாது!
கோயிலிற்கு போனால் வாழ்வு உயரவேண்டும் என்றால் கோயிலில் மனதை செம்மைப்படுத்தும் வழிகள் சொல்லித்தரப்பட வேண்டும்.
கோயிலிற்கு செலவழிக்கும் பெரும் பணத்தை சிறிதாக்கி கோயிலைச் சுற்றி சமூகம் பண்பிலும், பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் வளரும் நிறையத் திட்டங்களை உருவாக்கலாம்! இப்படியான அமைப்பில் கோயில் மைய ஆன்மாவாக இருக்க சமூகம் அறிவிலும், பொருளாதாரத்திலும், ஆற்றலிலும் மேன்மையுறும். என்பது பற்றிய வருத்தங்களே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.