ஸக்தியின் இயல்பும், பைரவத்தின் இயல்பும் பற்றிப் பார்த்தோம். இனி விஞ்ஞான பைரவதாந்திரம் கூறும் உத்திகள் பற்றி பார்ப்போம்.
ஒருவன் தனது மனதின் சலனத்தை இல்லாமல் ஆக்கி மனம் அலையாக இயங்கும் தன்மையை நிறுத்தி பைரவத்துடன் ஒன்று உத்திகளைக் கூறுவதே விஞ்ஞான பைரவ தாந்திரம்.
இந்த உத்திகள் 112 இதில் கூறப்பட்டுள்ளது. புத்தர் பாவித்த ஆனாபானா சதி, விபாசனா இவையும் இதனுள் அடக்கம்.
இதில் கூறப்பட்டுள்ள உத்திகள் தாரணை என்றே சம்பிரதாயப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. நூலில் இது "கவனம் கலையாமல் இருப்பதற்கான உபதேசம்" என்றே குறிப்பிடப்படுகிறது.
இறுதியில் இந்த உத்திகளை பைரவர் பரமாம்ருதமுத்தமம் என்கிறார். இதன் பொருள் உயர்ந்த, அமரத்துவமான, இறுதி எல்லை என்கிறார்.
இந்த நூலின் சிறப்பு இதில் புராணத் தன்மையுடைய எந்த தேவையற்ற தகவலையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சாதாரண மனிதன் பயிற்சிக்க கூடிய யுக்திகளை மட்டுமே பேசுகிறது. ஆகவே தத்துவ விளக்கங்கள் இன்றி அனுபவ பயிற்சியை மட்டுமே கூறுகிறது.
இந்த உபதேசத்தின் நோக்கம் மனதை விகல்பம் அற்ற நிலைக்கு இந்தப் பயிற்சிகள் மூலம் கொண்டு வந்து நிர்விகல்ப நிலையை அடைந்து பைரவத் தன்மை அடைவது.
இதில் கூறப்பட்டுள்ள தாரணைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பயிற்சிக்கக் கூடியவை. ஒரு தாரணை சித்தித்தாலும் சாதகன் பைரவ நிலையை அடைவான் (140 சுலோகம்)
மேலும் 148 சுலோகத்தில் சுவாரசியமாக ஒரு சாதகன் ஒன்றில் சித்தி பெற்றால் தனது திருப்திக்காக மற்றைய பயிற்சிகளை ஒன்றின் பின் ஒன்றாக பயிற்சித்து தனது நிலையைப் பூர்த்தி செய்யமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதிலிருக்கும் ஒரு பயிற்சியே ஒருவனுக்கு பரிபூரண சித்தியைக் கொடுக்க வல்லது.
பல உத்திகளை பயிற்சிப்பதால் ஒருவன் பலவித ஆன்மீக முன்னேற்றங்களைப் பெறமுடியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.