சமூக விஷயங்களில் நன்மை செய்வதில் நிச்சயம் போட்டி இருக்க வேண்டும்! உன்னை விட நான் இன்னும் பெரிய நன்மை செய்கிறேன் பார் என்ற போட்டி! ஆனால் எந்த வித குரோதம், அசூயை இருக்கக் கூடாது! பிறகு அது ஒரு குடம் பாலில் துளி விஷமாகிவிடும்!
குரோதம் என்பது இவர் என்ன பெரிய ஆளா, இவரிற்கு நல்ல பாடம் புகட்டுகிறேன் என்ற பகைமை!
அசூயை என்பது பொறாமை!
இந்த இரண்டு உணர்ச்சிகளும் மனிதன் தனது ஆற்றலை சரியாக பயன்படுத்த விடாமல் தடுக்கும் அரக்கர்கள்!
ஆக சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்புபவனும், மன அமைதி வேண்டுபவனும் தன்னில் இந்த உணர்ச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஹோமோசேப்பியன் என்ற மனித இனத்தின் வலிமை தனித்த தனியனாக இல்லை என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது. கல்வி இருப்பவனிடம் பணம் இருக்காது, பணம் இருப்பவனிடம் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் திறன் இருக்காது! உணவை உற்பத்தி செய்பவனிடம் விற்கும் ஆற்றல் இருக்காது! இப்படி தனித்தனியே ஒவ்வொருவனும் எதையும் செய்ய முடியாது என்பதால் தான் கூட்டாக சமூகமாக இயங்குகிறோம்!
இப்படி சமூகமாக இயங்கும் போது எம்மிடம் இருக்கும் ஆற்றலைப் பகிர்ந்து இல்லாத ஆற்றலை மற்றவர்களிடமிருந்து பெற்று மகிழ்ச்சியாக ஒன்றுபட்டு வாழுகிறோம்!
இதைப் புரியவைக்கத் தான் ஊர்கூடி தேரிழுக்கச் சொன்னார்கள்! எல்லோரும் ஒரு திசையில் ஒன்றாக இழுத்தால் தான் தேர் நகரும்! தனி ஒருவன் முதலில் இழுத்தாலும் நகராது! கடைசியில் இழுத்தாலும் பலனில்லை! எல்லோரும் ஒன்றாக இழுப்பதில் தான் முன்னேற்றம்!
இலங்கையின் மிகப்பெரிய தேர்பவனி மாத்தளை முத்துமாரியம்மன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.