மதம் ஒரு அபின் என்று கார்ல்மார்க்ஸ் கூறினார். அவர் கூறியதன் அர்த்தம் தொழிலாளிகளுக்கு மதம் உண்மையான தீர்வினைக் கொடுக்க முடியாவிட்டாலும் அபின் அடித்தால் வரும் வலி நிவாரணம் போன்று தனது மனதை சமாதானப்படுத்த இருக்கும் ஒரு வாய்ப்பு மதம் என்ற அர்த்தத்தில் கூறினார்.
வலி நிவாரணத்திற்கு கஞ்சா அடிப்பவன் மனதில் வன்மத்தை, குழப்பத்தை தூண்டினால் சமூகவிரோத செயல்களை செய்வதைப் போன்ற நிலை தான் "மத அபினிகளின்" இன்றைய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர சம்பவங்கள்!
மதத்தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், தாங்கள் கொடுக்கும் மத போதனை என்ற அபினி அவர்களுக்கு வலி நிவாரணத்திற்கு கொடுக்கும் மருந்தாக மட்டும் இருக்க வேண்டும். அவர்கள் மனதைச் சாந்தப்படுத்தி நிம்மதியைக் கொடுப்பதாக மட்டும் இருக்க வேண்டும். அபினி அடித்தவனைத் தூண்டி தமது வன்முறை பண்பை அபினி அடித்தவர்கள் மனதில் புகுத்தி சமூகத்தின் சம நிலையை குழப்பக்கூடாது.
தத்துவார்த்த அடிப்படையில் சைவமோ, பௌத்தமோ, கிருஸ்தவமோ, இஸ்லாமோ காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட வாழ்க்கை முறை. இவற்றின் பயன்பாடு எமது அகவாழ்க்கையை மேம்படுத்தி அன்பு, பண்பு, பாசம் பரிவுள்ளவர்களாக எம்மை மாற்றிக்கொள்வது.
இப்படி இல்லாமல் கூட்டம் சேர்த்து, ஆட்டம் போட்டு, வன்முறைதைத் தூண்டுவது அபினியடித்த கூட்டம் போன்ற வன்முறை சமூகத்தை உருவாக்கக்கூடாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.