உலகத்தின், சமூகத்தின் வரலாறுகளின் டிசைன் எப்போதும் ஒன்று தான்!
தர்மம் - அதர்மம்
தர்மம் என்பது "த்ர" என்ற சமஸ்க்ருத அடிச்சொல்லில் இருந்து வந்தது, இதன் பொருள் அச்சாணி, எது இயக்கத்தினை சீராக்க அச்சாணியாக இருக்கிறதோ அது தர்மம்,
அரசன் - குடிகள்,
அரசன் தர்மம் தவறாத சமூகத்தின் இயக்கத்தைப் பிணைக்கும் அச்சாணி போன்று, நிழல் தரும் ஆலமரம் போன்ற தலைமை, குடிகள் அந்த தலைமையின் நிழலால் காப்பாற்றப்படும் சிறு மரங்கள்.
அரக்கன் - அடிமைகள்,
சுய நலத்திலும், இன்பத்திலும் திளைக்கும், அதிகார மமதையிலும் உள்ள அச்சாணியை தனது சுய விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் அரக்கன், அவனால் துன்பமுறும் ஏழை மக்கள் அடிமைகள்!
தர்மம் - மக்கள் : வாழ்வின் அடிப்படையை பிரபஞ்ச இயக்கத்துடன் போதிக்கும் வாழ்க்கை முறை, அதைப் பின்பற்றி தம் வாழ்வை அமைதியும், இன்பமுடனும் வாழும் சமூகம்.
மதம் - மக்கள் : சுயநலமும், பிளவும் ஏற்படுத்தும் அமைப்புகள், அதை நம்பி தாமும் அழிந்து சமூகத்தையும் அழிக்கும் மிருகங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.