விஞ்ஞான பைரவ தந்திரத்தின் முதல் மூன்று உத்திகள் உள் மூச்சு வெளி மூச்சினை கவனித்தல்! இந்த உத்தியே புத்த பகவான் பயன்படுத்திய தியானமுறை! இதை பாலியில் ஆனா பானா ஸதி என்று கூறுவார்கள். ஆனா என்றால் உள்மூச்சு, பானா என்றால் வெளிமூச்சு, ஸதி என்ற விழிப்புணர்வு அல்லது கவனித்தல்!
இதுவே சித்தர்களின் வாசியோகத்தின் அடிப்படை முதல் பயிற்சி! ஆக வேர்கள் ஒன்றாக இருக்க கிளைகள் பல!
புத்தரிற்கு தாமரையை படைத்தல் ஒரு குறியீடு!
சேற்றிலிருந்த தாமரை சூரியனைத் தேடி தன்னை மலர்விக்க எழுவது போல், ஒருவன் உலக துன்பங்களைத் தாண்டி தன்னை ஞானத்தில் மலர்விக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு.
காயத்ரி, லக்ஷ்மி போன்ற தெய்வங்கள் தாமரை மேல் அமர்ந்திருத்தல் என்பதன் குறியீட்டு விளக்கமும் ஒருவன் தனது உடல் வாழ்க்கையில் உள்ள அசுத்தங்களை நீக்கி தன்னில் தெய்வ சக்தியை மலர்விக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே!
தாமரையைப் படைத்து குறித்த குணங்களை எம்மில் விழிப்பிக்கச் செய்ய வேண்டுகிறோம்.
வெண்தாமரை - மனச்சுத்தி
செந்தாமரை - அன்பும் கருணையும்
நீலோத்பலம் - அறிவுடன் ஞானத்தைப் பெறல்
ஊதா - விழிப்புணர்வு
நேற்று அனுராதபுரத்தில் புத்தர் பரிபூரண விழிப்புணர்வு பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையின் கீழ் எதிர்பாராத விதமாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தரிற்கு வெண்தாமரை மலர் படைத்தல் மனச் சுத்திக்கான வேண்டுதல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.