இந்த நூல் சென்ற முறை மதுரை மீனாட்சி அம்மையை தரிசித்துவிட்டு வெளியே வந்த போது இருந்த புத்தக நிலையத்தில் நண்பர் Karthik உடன் சென்று துலாவியபோது கையில் கிடைத்தது! பல மாதங்களுக்குப் பிறகு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது கைகளில் கிடைத்தது.
ஜெயமோகன் முன்னுரை எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மிகச் சுவாரசியமான புத்தகம், புத்தகத்தை கீழே வைக்காமல் 100/249 பக்கங்கள் படித்தாயிற்று.
இந்திய வேளாண் மரபு, வேளாண் வரி - சுரண்டலின் தொடக்கம், வேளாண் அறிவியல், இயற்கை நியதிகளின் மீறல், இந்திய வேளாண்மையின் சரிவு, நவீன வேளாண்மையின் ஊடுருவல், உணவுப் பற்றாக்குறை உண்மை நிலை, சுதந்திர இந்தியாவின் வேளாண்மை, அமெரிக்க உணவு உதவியும், PL 489 உம், வீரிய விதைகளின் தொழில் நுட்ப வரலாறும், பசுமைப் புரட்சி இந்தியாவில் அரங்கேறிய கதை, மாயச் சுழலில் சிக்கிய விவசாயம், இன்றைய வேளாண் நெருக்கடி, சர்வாதிகாரத்துக்கு வன்முறை, எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம், சமுதாய மாற்றத்திற்கான அடிப்படை, வேளாண்மையின் இறுதி லட்சியம் என்ன? என 17 தலைப்புகளில் சுவாரசியமாக கதையாக சொல்லுகிறது.
நவீன சிந்தனையால் கவரப்பட்டு பாரம்பரிய அறிவியலை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
பாரம்பரியம் என்றவுடன் கண்ணை மூடிக் கொண்டு வக்காளத்து வாங்காமல், அதேவேளை பாரம்பரியத்தின் ஞானத்தை மறுக்காமல் அழகாக கருத்துகளை முன்வைக்கிறது.
இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.