குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

அகத்தியர் கூறும் பிராணனின் இயக்கம்



**************************************
தசவாயு பற்றிய பாடல் ஒன்று அகத்தியர் ரத்ன கிரிகடம் என்ற நூலில் உள்ளது
இந்தப்பாடலின் பிராணன் பற்றிய வரிகள் அரிய யோக நுணுக்கத்தைச் சொல்லுகிறது. பிராணனின் துல்லிய செயற்பாட்டினைக் கூறுகிறது. அதுபற்றி இங்கு சிறுவிளக்கம் அறிவோம்.
வாயுக்கள் பத்து என்று கூறினாலும், அனைத்திற்கும் மூலமானதையே பிராணன் என்றும் உடலில் செய்யும் செயல்களின் வகைப்படுத்தலிலேயே பத்தாகிறது. மேலும் பிராணனில் இருந்து தான் மற்ற வாயுக்கள் உருவாகிறது என்பதை விட பிராணன் உடலில் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்போது அவற்றிற்கு அவற்றின் தொழில் சார்ந்து பெயரிடுகிறோம் என்பதே மிகப்பொருத்தமானது. இந்தப்புரிதல் இல்லாமல் இதுபற்றி ஆராய முயன்றால் யானைதடவிய குருடன் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிராணன் மூலாதாரம் எனும் குகையில் (பிலத்தில்) இருக்க அதிலிருந்து பிரியாமல் அபானன்ம் வியானன், சமானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் தனஞ்செயன் என்று பத்தாகிறது என்றே பாடல் தொடங்குகிறது. பாடலில் பிலம் என்பதும் பிரியா வியானன் என்பதும் மிக முக்கியமான சொற்கள்.
இனிப்பாடலை ஒரு மூன்று தடவை படித்து விடுங்கள், பாடலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நாம் பாடலை எழுதியவர் கூறிய மன நிலைக்குச் செல்வோம். எனவே பாடலைப் புரிவது இலகுவாகும்.
பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்
பிரியாவியானன் சமானனொடு கூர்மன்
நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன் தானாகும்
நற்தேவதத்தன் ஒடு தனஞ்செயன் பத்தாகும்
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து
சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய்
கலக்கமற நாசிவழி ஓடும் நிராறில் கடுகியெட்டு
உட்புகுந்து கழியும் ஓர்நான்கே
பிலம் என்றால் குகை? உடலில் எது குகை மூலாதார ஸ்தானம் குகை, இந்தக் குகையிலிருந்துதான் பிராணன் தோற்றம் பெறுகிறது, பிறகு அடுத்த வரியில் பிராணனோட மற்றும் பிரியா வியானன் என்ற வரிகள் இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவை என்ற குறிப்பைத் தருகிறது.
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய் கலக்கமற நாசிவழி ஓடும் என்ற வரிகளின் பிராணன் எப்படி செயற்படுகிறது என்பது பற்றி விளக்கம் வருகிறது.
மூலாதாரத்தில் தோன்றி பின் சுழுமுனை நாடிவழியே (இதை முள்ளந்தண்டு வழியாக பாய்வதாக பாவிக்கலாம்) எழுந்து, சிரசளவு முட்டி – சிரசில் சுழி (cowlick) எனச்சொல்லப்படும் இடத்தில் முட்டி பின்னர் வகிட்டின் வழி கீழிறங்கி விழிகழுக்கு நேர் கீழே என்றால் பீனியல் சுரப்பியும், பிட்ரியூட்ரி சுரப்பியும் இருக்கும் இடத்தை தாக்கி, இது சரியாக எமது நாசியும் இரு புருவமத்தியும் தாக்கி கலக்கமில்லாமல் வன்மையான ஆறு ( நிராறு) போல் ஓடும் மூச்சில் கடுகி – கலந்து எட்டு அங்குலம் உட்புகுந்து நான்கு அங்குலம் வீணாகிறது. இங்கு கவனிக்க வேண்டியது உள்மூச்சில் கிடைக்கும் மொத்தப்பிராணன் 12 அளவு என்பது சூஷ்கமாக எட்டு உடலில் சேர மிகுதி நான்கு மூச்சிற்கான வீணாகிறது என்கிறார்.
இந்த வரிகள் பிராணனின் ஸ்தூல சூக்ஷ்ம செயற்பாட்டை தெளிவாக குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மூச்சின் போதும் மூலாதாரத்திலிருந்து எழுந்து தலையுச்சியை தாக்கி கண்களுக்கு கீழே உள்ள பிட்யுட்ரீ சுரப்பியை (Pituitary gland) தாக்கி ஆறுபோல் செல்லும் மூச்சில் கலந்து காற்றிலில் இருந்து வரும் வெளிப்பிராணனில் எட்டு அளவுவினை உடலினுள் புகுத்துகிறது. இந்த செயலுக்கு நான்கு அளவு (digit) பிராணன் செலவாகிறது என் கிறார்.
இங்கு Pituitary gland என்பதை அகத்திய குறிப்பிடவில்லை என்றாலும் நவீன உடலியலில் அந்த இடத்துடன் பொருந்தி வருவதால் இதையே பாடல் குறிப்பிடுகிறது என்று கொள்ளலாம்.
இதற்கான விளக்கப்படம் இத்துடன் இணைத்துள்ளேன்!
விஞ்ஞான பைரவ தந்திரத்தின் 01, 02, 03, 04, 05 மற்றும் 16வது உத்திகளின் விளக்கமாக இந்தப்பாடல் வரிகள் இருக்கிறது என்பது மிகச்சிறப்பான விஷயமும் கூட! இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...