இன்றைய கருத்தரங்கில் பகிரப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்:
Nishānthan Ganeshan இனது உரையில் இலங்கையில் இன விகிதாசரமும் கல்வித் தகமை விகிதாசாரமும் என்ற ஆய்வுத் தரவு மிக அருமையாக இருந்தது! சிங்களவர் சனத் தொகையில் அதிகமாயிருக்க பல்கலைக்கழகத் தெரிவில் குறைவாகவும் இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் தமது சனத்தொகை விகிதத்தை விட பல்கலைக்கழக விகிதாசாரத்தில் Merit இற்கூடாக அதிகவிகிதத்தில் காணப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஏறத்தாள சனத்தொகை விகித அடிப்படையில் இருக்க, மலையகத் தமிழர்கள் 0.04 விகிதத்தில் {எனது ஞாபகத்தில் இருந்தவாறு???} இருக்கிறார்கள் என்ற ஆய்வுத்தரவு வந்திருந்த அனைத்து மாணவர்களையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும! நிசாந்தன் கலாநிதிப் பட்ட ஆய்வாளன் என்ற தனது திறனை அழகாக சமூக உணர்வுடன் வெளிப்படுத்தியிருந்தார்!
அடுத்தது மாத்தளையின் இளம் சட்டத்தரணி Logesh Waran, மாத்தளை வரலாற்றில் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகிய விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களில் ஒருவர். சமூக நலத்துடன் தனது நண்பர் குழாமை சமூகப் பணிக்கு வழிகாட்டும் நல்ல இளைஞன்! வந்திருந்த எல்லோரையும் கவரும் வகையில் உத்வேகப்படுத்தி பேசினார்! முன்னேற நினைப்பவர்களுக்கு எதுவும் தடை இல்லை என்பதை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தினூடாக பகிர்ந்திருந்தார்! மாத்தளை தமிழ் சமூகத்திற்கு கிடைத்த நல்ல வரப்பிரசாதம்!
அடுத்தது அண்ணன் அருண்நாத், ஏன் நாம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் அதற்கான அருமையான பதிலாக; நாளைக்கு எங்களதும் உங்களதும் பிள்ளைகள் இந்த சமூகத்தில் தான் வாழப் போகிறார்கள், அவர்களின் சுற்றத்தில் வாழ்வதற்கு நல்ல பண்புள்ள, கல்வியறிவு உள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்!
இப்படி ஒரு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அறிவித்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்த இளநிலை பொறியிளாளன் Ravi Shankar க்கு பாராட்டுகள்! தனது நேரத்தை கணணித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு செலவழித்து வருகிறார்!
வந்திருந்த எல்லாப் பழைய மாணவர்களுக்கும் கற்பித்த, கற்பித்துக் கொண்டிருக்கிற புனிதவதி ஆசிரியர் அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்!
மிக மகிழ்வுடன் திருப்தியான மாலைப்பொழுது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.