சிவத்தின் மறைப்பும் வெளிப்பாடும் பற்றிய விளக்கத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அனைத்தும் சிவமாக இருக்க, ஏன் சிவம் புறவய உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி முதலாவதாக எழுகிறது அல்லவா?
இதற்கு திரிக தத்துவம் கூறும் விளக்கம் ஒரே ஒரு காரணம் மட்டுமே.
தனது உண்மை ஸ்வரூபத்தை அறிவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த உலகத்தை சிவம் படைக்கிறது என்பதுதான்.
அபி நவகுப்தரே காஷ்மீர சைவத்தின் மிகப் பெரிய ஆசான். அவர் சிவம் இதற்கான விளக்கமாக ஒன்றாக இருக்கும் போது, படைப்பிற்கு முன்னர் முழுமையான ஒரே பிரக்ஞையாக சிவம் இருந்தது. ஆனால் தனது அந்த நிலையை ஏற்பதற்கு என்று எதுவும் இல்லாததால் தனது இயல்பை பரிமாற படைப்பை உருவாக்கியது என்று கூறுகிறார்.
இப்படி தனது இயல்பை இன்னொருவர் உணர்வது சிவத்திற்கு பேரின்பத்தைத் தருவதால் ஸக்தியை தன்னில் இருந்து வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தொடங்கினான்.
இப்படி தன்னை மறைத்து மீண்டும் கண்டுபிடிக்கும் விளையாட்டால் வரும் இன்பத்தை பெறுவதற்காக மனிதனில் சிவத் தன்மை மறைக்கப்பட்டு தனது உண்மை இயல்பை மறைக்கக் கூடியவாறு ஸக்தியை உருவாக்கி இந்த இன்பத்தைப் பெறுகிறான்.
அடிப்படையில் இந்த விளக்கம் மிக எளிமையாக பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதனது இயல்புகளையும் இயற்கையான ஒன்றாக எடுத்துக் கொள்வதையே விஞ்ஞான பைரவ தந்திரம் வலியுறுத்துகிறது. ஒருவன் தனது இயல்பை சரியாக புரிந்துக் கொள்வதற்கு இந்த தத்துவம் எந்த வித நம்பிக்கையையும், ஒழுக்கங்களையும் போதிக்காமல் உலகம், மனிதனது குணங்கள் எல்லாம் இயற்கையான ஒன்று என்று தனது இயல்பாக ஏற்றுக் கொண்டு, தனக்குள் மறைந்துள்ள சிவமாகிய உயர்ந்த விழிப்புணர்வினை அறிந்துணர முயற்சிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்குகிறது.
இது தந்திர மார்க்கத்தில் உள்ள சிறப்பியல்பு, இந்த ஒழுக்கங்களை பின் பற்றினால் தான் இது என்ற நிபந்தனையை ஆரம்ப சாதகனுக்கு விதிக்காது! சாதகனது இயல்பிலிருந்து படிப்படையாக முன்னேறிச் செல்லும் வழியைக் காட்டும்.
அதனாலேயே இந்த நூலில் 112 உத்திகள் தரப்பட்டுள்ளது. இந்த 112 உத்திகளில் கட்டாயம் ஒரு உத்தியாவது சாதகனுக்கு தனது உண்மை நிலையான பைரவ நிலையை அடைய கட்டாயம் உதவும் என்பது இந்த தந்திரத்தின் சிறப்பு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.