தாவோவின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று பிரபஞ்சம் அடிப்படையில் இருமைகளால் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த இருமைப் பண்பின் ஒரு முனை ஒளிமயமான யங் என்ற தத்துவம். மறுமுனை யின் என்ற இருள் தத்துவம்.
இந்த இருமைகள் பிரிக்கமுடியாதவை. ஒரே மூலவஸ்துவிலிருந்து தோன்றியவை, இருள் இருந்தால் அங்கு ஒளி இருப்பதற்கான சாத்தியம் நிச்சயம் உண்டு, அதுபோல் ஒளி இருந்தால் இருள் இருப்பதற்கான சாத்தியமும் இருள் இருந்தால் ஒளி இருப்பதற்கான சாத்தியமும் நிச்சயம் இருக்கிறது.
மனிதன் இந்த இரண்டினது எல்லைக்கும் செல்லாமல் சரி சமமாக இருப்பதையே தாவோ எனப்படுகிறது. மனிதன் ஒளியில் எல்லைக்கோ அல்லது இருளின் எல்லைக்கோ செல்வது இரண்டும் தவிர்க்கப்படுகிறது.
ஒருவன் எல்லையற்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவனாக இருந்தால் அவன் தன்னை சம நிலைக்கு கொண்டு வருவதன் மூலம், தாவோவின் மூலம் ஆரோக்கியமானவனாக இருக்கலாம்.
தாவோ என்றால் சம நிலை,
இருளுக்கும் ஒளியிற்குமான சம நிலை,
சொர்க்கத்திற்கும் பூமிக்குமான சம நிலை,
நல்லதிற்கும் கெட்டதிற்குமான சம நிலை,
ஆணுக்கும் பெண்ணுக்குமான சம நிலை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.