உருளைக் கிழங்கு போண்டா சாப்பிட்டு வயிற்று வலி வந்தால் உருளைக் கிழங்கு நன்றாக பழிவாங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தன்னை பாதுகாக்க உருளைக் கிழங்கு வீசிய வலையில் தம்பி மாட்டிவிட்டார்!
உருளைக் கிழங்கு சொலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்து நபர்கள் எல்லோரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சொலனைன் (solanine) என்ற விஷத்தை கட்டாயம் வைத்திருப்பார்கள். அதில் இந்த உருளைக் கிழங்கு சாக்கோனைன் என்ற (chaconine) மேலதிகமாக இன்னொரு ஆயுதத்தையும் வைத்திருக்கும். இது பொதுவாக தான் யாருக்கும் உணவாகி விடக் கூடாது என்று தன்னை பாதுகாத்துக் கொண்டு தனது இனத்தைப் பெருக்க வைத்திருக்கும் ஆயுதங்கள் தான் இந்த சொலனைனும் சாக்கோனைனும்! இந்த நச்சுப் பயல்கள் இரண்டு பேரும் வெளியே வந்து தமது நச்சு வேலையைக் காட்ட சூரிய ஒளி தேவை!
சூரிய ஒளி கிழங்கு மேல்பட்டவுடன் தாம் இருக்க வேண்டிய நிலத்திற்குள் இருந்து எதிரிகளுக்கு உணவாகக் கூடிய பகுதிக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்துக் கொண்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்க சொலனைனையும் சாகோனைனையும் தயாரிக்கத் தொடங்குவதுடன் பச்சைய உற்பத்தியையும் அதிகரிக்கிறது. உருளைக் கிழங்கில் பச்சை நிறம் காணப்பட்டால் உருளைக் கிழங்கு தன்னை பாதுகாக்க தன்னுடைய மெய்ப் பாதுகாவலர்கள் இருவரையும் களமிறக்கி விட்டார் என்பதை நாம் தான் அறிந்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.