இன்று மாலை மாத்தளை தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்டத்தில் A/L படிக்கின்ற, படித்து முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!
நான் படித்து வளர்ந்த மாத்தளை சமூகத்திற்கு கல்வியாளனாக என்னால் இயன்ற ஒரு சிறிய நேரப் பங்களிப்பு!
எல்கடுவ, கம்மடுவ பெருந்தோட்ட பாடசாலை மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்!
பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருக்கும் இத்தனை திறமையான, உத்வேகமுள்ள மாணவர்களைக் காணும் போது, இந்தத் தலைமுறையை கல்வியின் பலத்தால் மேலெழச் செய்வதே மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதான இலக்குகளில் ஒன்று!
நாம் அடையாளம் கண்ட சமூகத்தால் உதவக் கூடிய விஷயங்கள்:
1. பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்கள் உயர்கல்வியிலும், தொழில்திறனிலும் மிக ஆர்வத்துடனும் திறமையுடனும் இருக்கிறார்கள்.
2. வெளியுலகில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய குறைவான தகவல்களே அவர்களுக்கு கிடைக்கிறது.
3. வாய்ப்புகள், தகவல்கள் கிடைத்தாலும் அவற்றை பின்பற்றுவதற்குரிய தொடர்ச்சியான உத்வேகப்படுத்தல் (motivation) கிடைப்பதில்லை.
4. பெற்றோர்கள் தகுந்த நிதிவளம் இல்லாதிருப்பதால் கல்வியைத் தொடர போதுமான நிதிவசதி இன்மை.
மலையக சமூகத்தை கல்வியில் முன்னேற்றம் காணுவதற்கு மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த இலக்கிற்கு உதவக் கூடிய எவருடனும் கைகோர்த்துச் செல்ல ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
அரசியல்வாதிகள், சமூக நலன் விரும்பிகளும் இந்தப் பணியில் சேர்ந்து உதவலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.