விஞ்ஞான பைரவ தாந்திர உத்திகளை புரிவதற்கு ஸக்தியின் இயல்புகளை புரிதல் அவசியம்.
ஸக்தி இரண்டு தன்மை உடையவள்.
முதலாவது பிரபஞ்சம் விரிவதற்கு காரணமானவள். நாத ரூபமாக வெளிப்பட்டு வாக்கும் மொழியுமாக விரிந்து அகண்ட பிரபஞ்சத்தை ஆக்குகிறாள்.
இரண்டாவது, அவளே மூல பரசிவத்தை அடையும் ஒன்றறக் கலக்கும் வழியுமாகவும் இருக்கிறாள்.
விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் அடிக்கடி ஸக்தியைப் பற்றி குறிப்பிடும் போது "சிவத்தை அடைவதற்குரிய வாயில் ஸக்தி" என்றே குறிப்பிடப்படுகிறது.
சிவம் ஸக்தி இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு இல்லை என்பது மிக உறுதியாக விஞ்ஞான பைரவ தாந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஸக்தியினுடைய பாதைக்குள் ஒருவன் புகுந்தால் மட்டுமே சிவத்தை அடைந்து சிவமாக முடியும் என்ற உண்மை கூறப்பட்டுள்ளது.
21வது சுலோகத்தில் விளக்கிலிருந்து ஒளிரும் ஒளிக்கற்றைகள் சிவ ஸக்தியிற்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. சிவம் விளக்கின் சுடராக அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சக்தியாக இருக்கிறது. அந்தக் கதிர்கள் கண்களின் பட்டால் மட்டுமே சுடர் தெரியும். அதுபோல் சிவத்தை அடைய ஸக்தியின் கதிர்களை ஏற்காத ஒருவன் சிவத்தை அடையமுடியாது.
ஆகவே சிவத்தை அடைய இருக்கும் மிகச்சிறந்த வழி ஸக்தி என்கிறது விஞ்ஞான பைரவ தாந்திரம்.
திரிக தத்துவத்தின் படி சிவம் பரா, பராபரா, அபரா ஆகிய மூன்று நிலைகளில் இருப்பதுபோல் ஸக்தியும் மூன்று நிலைகளில் வெளிப்பட்டு சிவத்தை உணர துணைபுரிகிறாள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.