குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 25, 2019

எது உண்மை அழகு!

இலங்கை பாடசாலைத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் நாலடியாரும் கம்பராமாயணப் பாடல்களுக்கு நாம் படிக்கும் காலத்தில் இருந்தவை!

நாலடியாரில் உள்ள கீழ்வரும் பாடல் கல்வியின் முக்கியத்துவத்தைக் கூறும்:

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

இன்று உள்ளவர்கள் பலரிற்கு சிந்தனைக்குத் தேவையான பாடல்! இதன் பொருள் தற்காலத்து வழக்குப்படி:

trim செய்து, தாடி எடுத்து, மொழ மொழ என்று வடிவான மூஞ்சியை வைத்திருப்பதோ, அழகாக உடை உடுத்தி கோட்டு சூட்டு டீ சேர்ட்டு போட்டு மற்றவர்களுக்கு நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதோ உண்மை அல்ல!

உங்களைவிட சிறியவர்கள், இளையவர்கள் நல்ல செயல் செய்யும் போது நெஞ்சத்தில் நல்ல எண்ணத்துடன், தெளிந்த அறிவுடன், நடுநிலையான மனதுடன் வழிகாட்டும் அறிவினைக் கொண்ட கல்வியே உண்மையழகு! 

எப்போது சமூகம் இந்த அழகினைக் காணத் தொடங்குகிறதோ அப்போது அந்தச் சமூகம் அழகாகத் தொடங்குகிறது!


தலைப்பு இல்லை

சமூக விஷயங்களில் நன்மை செய்வதில் நிச்சயம் போட்டி இருக்க வேண்டும்! உன்னை விட நான் இன்னும் பெரிய நன்மை செய்கிறேன் பார் என்ற போட்டி! ஆனால் எந்த வித குரோதம், அசூயை இருக்கக் கூடாது! பிறகு அது ஒரு குடம் பாலில் துளி விஷமாகிவிடும்! 

குரோதம் என்பது இவர் என்ன பெரிய ஆளா, இவரிற்கு நல்ல பாடம் புகட்டுகிறேன் என்ற பகைமை!

அசூயை என்பது பொறாமை! 

இந்த இரண்டு உணர்ச்சிகளும் மனிதன் தனது ஆற்றலை சரியாக பயன்படுத்த விடாமல் தடுக்கும் அரக்கர்கள்! 

ஆக சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்புபவனும், மன அமைதி வேண்டுபவனும் தன்னில் இந்த உணர்ச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

ஹோமோசேப்பியன் என்ற மனித இனத்தின் வலிமை தனித்த தனியனாக இல்லை என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது. கல்வி இருப்பவனிடம் பணம் இருக்காது, பணம் இருப்பவனிடம் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் திறன் இருக்காது! உணவை உற்பத்தி செய்பவனிடம் விற்கும் ஆற்றல் இருக்காது! இப்படி தனித்தனியே ஒவ்வொருவனும் எதையும் செய்ய முடியாது என்பதால் தான் கூட்டாக சமூகமாக இயங்குகிறோம்! 

இப்படி சமூகமாக இயங்கும் போது எம்மிடம் இருக்கும் ஆற்றலைப் பகிர்ந்து இல்லாத ஆற்றலை மற்றவர்களிடமிருந்து பெற்று மகிழ்ச்சியாக ஒன்றுபட்டு வாழுகிறோம்! 

இதைப் புரியவைக்கத் தான் ஊர்கூடி தேரிழுக்கச் சொன்னார்கள்! எல்லோரும் ஒரு திசையில் ஒன்றாக இழுத்தால் தான் தேர் நகரும்! தனி ஒருவன் முதலில் இழுத்தாலும் நகராது! கடைசியில் இழுத்தாலும் பலனில்லை! எல்லோரும் ஒன்றாக இழுப்பதில் தான் முன்னேற்றம்! 

இலங்கையின் மிகப்பெரிய தேர்பவனி மாத்தளை முத்துமாரியம்மன்!


அர்த்த சாஸ்திரம் - 03

இது பாரத ரிஷிகளின் கேள்விக்கான, தர்க்கத்திற்கான அறிவியல், விஞ்ஞானம். ஆரம்பத்தில் சமூகம் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மட்டுமே வாழ்க்கை என்று இருந்த போது ஆன்விக்ஷிகி என்ற புத்தியின் ஆற்றல் ஆன்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வேதாங்கமான உபநிஷத்துக்கள் ரிஷிகளின் ஆன்விக்ஷிகி ஆற்றல்கள் பிறந்த ஞானம். கட உபநிஷத்தில் நசிகேதனின் கேள்வி கேட்கும் ஆற்றல் ஆன்விக்ஷிக்கான உதாரணம்.

ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்புபடுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான காரணத்தை அறிதல்.

கௌடில்யர் அரசன் அல்லது தலைமை நிர்வாகி. ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.

ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.

ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும்போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக் கொள்ளும். புத்தி ஏற்றுக் கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.

ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமல் எந்த சாஸ்திரப் படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது. நிர்வாகத்திலும் இருக்க முடியாது! 

இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்தது தான் காரணம்.

ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை, புத்தியை பயன்படுத்துபவர்களுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.


எண்ணங்களை விதைத்தல்!

பத்து வருடங்களுக்கு முன்னர் பாடசாலையில் எமது வகுப்பில் படித்த நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மாத்தளையின் கல்விசார் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடங்கினோம்! 

எனக்குத் தெரிந்து அதுவே பழைய மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து செய்த கல்விசார் முதல் முயற்சியாக இருந்திருக்க வேண்டும்! 

அந்த விதை இன்று பலருக்கு இத்தகைய செயலில் ஈடுபட ஊக்கம் கொடுத்திருக்கிறது! ஒரு முதன்மை ஊக்கியாக இருக்கிறது. 

இன்று பல்வேறு குழுக்களால் கல்விசார் செயற்பாடுகள் மாத்தளையில் நடைபெறுகிறது! இது ஆரோக்கியமான விஷயம்! 

கோயில்கள், கற்றவர்கள், பண வசதி உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து மாத்தளை மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வியில் பங்களிப்புச் செலுத்த வேண்டும்! 


Sunday, February 24, 2019

தலைப்பு இல்லை

இன்றைய கருத்தரங்கில் பகிரப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்: 

Nishānthan Ganeshan இனது உரையில் இலங்கையில் இன விகிதாசரமும் கல்வித் தகமை விகிதாசாரமும் என்ற ஆய்வுத் தரவு மிக அருமையாக இருந்தது! சிங்களவர் சனத் தொகையில் அதிகமாயிருக்க பல்கலைக்கழகத் தெரிவில் குறைவாகவும் இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் தமது சனத்தொகை விகிதத்தை விட பல்கலைக்கழக விகிதாசாரத்தில் Merit இற்கூடாக அதிகவிகிதத்தில் காணப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஏறத்தாள சனத்தொகை விகித அடிப்படையில் இருக்க, மலையகத் தமிழர்கள் 0.04 விகிதத்தில் {எனது ஞாபகத்தில் இருந்தவாறு???} இருக்கிறார்கள் என்ற ஆய்வுத்தரவு வந்திருந்த அனைத்து மாணவர்களையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும! நிசாந்தன் கலாநிதிப் பட்ட ஆய்வாளன் என்ற தனது திறனை அழகாக சமூக உணர்வுடன் வெளிப்படுத்தியிருந்தார்!

அடுத்தது மாத்தளையின் இளம் சட்டத்தரணி Logesh Waran, மாத்தளை வரலாற்றில் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகிய விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களில் ஒருவர். சமூக நலத்துடன் தனது நண்பர் குழாமை சமூகப் பணிக்கு வழிகாட்டும் நல்ல இளைஞன்! வந்திருந்த எல்லோரையும் கவரும் வகையில் உத்வேகப்படுத்தி பேசினார்! முன்னேற நினைப்பவர்களுக்கு எதுவும் தடை இல்லை என்பதை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தினூடாக பகிர்ந்திருந்தார்! மாத்தளை தமிழ் சமூகத்திற்கு கிடைத்த நல்ல வரப்பிரசாதம்!

அடுத்தது அண்ணன் அருண்நாத், ஏன் நாம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் அதற்கான அருமையான பதிலாக; நாளைக்கு எங்களதும் உங்களதும் பிள்ளைகள் இந்த சமூகத்தில் தான் வாழப் போகிறார்கள், அவர்களின் சுற்றத்தில் வாழ்வதற்கு நல்ல பண்புள்ள, கல்வியறிவு உள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்! 

இப்படி ஒரு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அறிவித்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்த இளநிலை பொறியிளாளன் Ravi Shankar க்கு பாராட்டுகள்! தனது நேரத்தை கணணித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு செலவழித்து வருகிறார்! 

வந்திருந்த எல்லாப் பழைய மாணவர்களுக்கும் கற்பித்த, கற்பித்துக் கொண்டிருக்கிற புனிதவதி ஆசிரியர் அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்! 

மிக மகிழ்வுடன் திருப்தியான மாலைப்பொழுது!


தலைப்பு இல்லை

இன்று மாலை மாத்தளை தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்டத்தில் A/L படிக்கின்ற, படித்து முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

நான் படித்து வளர்ந்த மாத்தளை சமூகத்திற்கு கல்வியாளனாக என்னால் இயன்ற ஒரு சிறிய நேரப் பங்களிப்பு! 

எல்கடுவ, கம்மடுவ பெருந்தோட்ட பாடசாலை மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்! 

பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருக்கும் இத்தனை திறமையான, உத்வேகமுள்ள மாணவர்களைக் காணும் போது, இந்தத் தலைமுறையை கல்வியின் பலத்தால் மேலெழச் செய்வதே மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதான இலக்குகளில் ஒன்று! 

நாம் அடையாளம் கண்ட சமூகத்தால் உதவக் கூடிய விஷயங்கள்:

1. பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்கள் உயர்கல்வியிலும், தொழில்திறனிலும் மிக ஆர்வத்துடனும் திறமையுடனும் இருக்கிறார்கள். 

2. வெளியுலகில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய குறைவான தகவல்களே அவர்களுக்கு கிடைக்கிறது. 

3. வாய்ப்புகள், தகவல்கள் கிடைத்தாலும் அவற்றை பின்பற்றுவதற்குரிய தொடர்ச்சியான உத்வேகப்படுத்தல் (motivation) கிடைப்பதில்லை. 

4. பெற்றோர்கள் தகுந்த நிதிவளம் இல்லாதிருப்பதால் கல்வியைத் தொடர போதுமான நிதிவசதி இன்மை. 

மலையக சமூகத்தை கல்வியில் முன்னேற்றம் காணுவதற்கு மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த இலக்கிற்கு உதவக் கூடிய எவருடனும் கைகோர்த்துச் செல்ல ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

அரசியல்வாதிகள், சமூக நலன் விரும்பிகளும் இந்தப் பணியில் சேர்ந்து உதவலாம்!


அர்த்த சாஸ்திர கற்கை - 02

அர்த்த சாஸ்திரத்தின் முதல் ஸ்லோகம் ஓம், சுக்கிரன், பிரகஸ்பதி ஆகிய மூன்றையும் வணங்கி சுருக்கமாக தொடங்குகிறார். 

நேற்றைய பதிவில் சுக்கிரன், பிரஹஸ்பதி ஆகிய இருவரையும் ஏன் வணங்கினார் என்பதைப்பார்த்தோம்! 

இன்று ஏன் ஓம் என்ற மந்திரத்துடன் தொடங்குகிறது? என்று பார்ப்போம். 

ஓம் என்பது இந்த உலகு தோன்றுவதற்கு ஏதுவான அ + உ + ம் என்ற நாதத்தின் (vibration) சப்தம். இந்த அதிர்வே பிரபஞ்ச இயக்கத்திற்கு மூலமாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஒத்திசைவிலேயே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒத்திசைந்த (Harmony) இயக்கத்திற்கு பிரபஞ்சத்தின் அடிப்படையுடன் ஒருவனுக்கு எப்போதுமே ஒத்திசைவு இருக்க வேண்டும். அதனாலேயே எமது ரிஷிகள் எந்த மந்திரமாக இருந்தாலும் ஓம் சேர்த்தார்கள். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் நிர்வாக, அரசியல் ஒழுங்கைப் போதிக்கிறது. ஆகவே அந்த அர்த்த சாஸ்திர ஒழுங்கு பிரபஞ்சத்தின் ஒழுங்குடன் ஒத்திசைந்து இருக்க வேண்டுமல்லவா! ஆகவே அர்த்த சாஸ்திரம் பிரபஞ்ச ஒழுங்குடன் அமைக்கப்பட்டது என்பதை குறிக்க ஓம் என்ற பிரணவத்துடன் தொடங்குகிறது.


Saturday, February 23, 2019

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் சென்னையில் வெளியிட்டு மூன்று வருடங்கள் பூர்த்தி! 
இதுவரை 2000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன!

Sir John Woodroffe



Sir John Woodroffe, இவரால்தான் மேற்கு உலகம் "தந்திரா" "குண்டலினி" என்ற வார்த்தைகளை தெரிந்துகொண்டது. இவர் பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வங்காள தேச கல்கத்தாவில் பணியாற்றியார். நீதிமன்றத்தில் பணியாற்றிய A. B. Ghose என்பாரினால் தந்திர மார்க்கத்தில் ஆர்வமேற்பட்டு அவருடன் சேர்ந்து ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்திர சாஸ்திர நூற்களை வெளியிட்டார்.
ஸ்ரீ அவலானந்தா என்ற தீக்ஷா நாமம் உடையவர்.
இவர் ஆங்கிலேயராக இருந்தாலும் இவரது நூற்களில் கருத்துக்கள் பாரம்பரியம் மாறாத குருபரம்பரைக்குரிய விஷயங்களே கூறப்பட்டிருக்கும். இதற்கு காரணம் இந்த நூற்களை உண்மையில் முதல் வரைபு வரைந்தவராக A. B. Ghose கருதப்படுகிறார். இவர்கள் வெளியிட்ட நூற்களில் உள்ள ஆர்தர் ஆவலோன் எனும் பெயரில் ஆர்தர் என்பது A. B. Ghose இனையும் ஆவலோன் என்பது ohn Woodroffe இனையும் குறிப்பதாக கருதுகிறர்கள்.
இவர் எழுதிய நூற்களில் Serpent power என்ற நூல் பிரபலமானது. யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் இவரது நூலை அவரது மாணவராகிய செல்லத்துரை சாமிகளுக்கு கொடுத்து நன்கு படிக்கச் சொல்லி பின்னர் குண்டலினி சாதனை சொல்லிக்கொடுத்ததாக செல்லத்துரை சாமிகளுடன் 2003ம் ஆண்டளவில் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள சிவதொண்டன் நிலையத்தில் உரையாடும் காலத்தில் கூறியுள்ளார். யோகர் சுவாமிகளின் ஆணைக்கமைய செல்லத்துரை சாமி அவர்கள் இந்த நூலை மொழிபெயர்த்து சிவதொண்டனில் வெளியிட்டு பின்னர் குண்டலினி சக்தி என்ற நூலாக தொகுத்திருந்தார்.
அதன் ஒரு பிரதி தந்து சாதனைக்கு உதவும் என்று என்னையும் படிக்கச்சொல்லியிருந்தார்.
Sir John Woodroffe, Tantra and Bengal என்ற இந்த நூல் SOAS University of London வெளியிட்டிருக்கிறது. JW இன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்கிறது.

கதைகளும் வரலாறுகளும்

கதைகளும் வரலாறுகளும் சலனமுறும் மனதிற்கு சற்று ஆற்றுப்படுத்தி காரியத்தை சாதிக்கும் வல்லமை தரும் ஒருவித ஊக்கிகள்!
இரசாயனவியல் கற்றவர்கள் ஊக்கிகள் பற்றி அறிந்திருப்பார்கள். ஊக்கிகள் தாக்கத்தில் பங்குபெறாது, ஆனால் ஊக்கி இல்லாமல் தாக்கம் நடைபெறாது.
இவ்வாறான ஒன்றே எமது புராணங்களும், இதிகாசங்களும்! எமது மனதை மேம்படுத்தும் கருத்துக்களை மனதுக்கு உவந்து கொடுக்கும் ஒருவித முறையாகவே அவை இருக்கிறது.
இன்று பலரும் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நவீன தொல்லியல் மூலம் நிறுவினால்தான் உண்மை என்ற போக்கில் சிந்திக்கிறார்கள். அப்படி நிறுவினால் மிக்க மகிழ்ச்சி!
அப்படி நிறுவப்பட முடியாவிட்டால் அதில் கூறப்பட்ட அனைத்தும் பொய் என்று வாதிடும் முட்டாள்தனத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போதைய நடைமுறை, எமது தாத்தா, பூட்டனார் காலத்தில் அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் தாத்தாவே இல்லை என்று நினைப்பதைப்போன்றது இது.
இதைப்போல்தான் அகத்தை பண்படுத்தும் முயற்சியில் இறங்கும் பலர் புறவயப்பட்டு தமது தேடலை மேற்கொண்டு குழம்பிப் போய் விடுகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் குண்டலினி எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? எந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள்.
யதார்த்தத்தில் இந்தக் கேள்விகளுக்குரிய பதில் எதுவும் பலனைத்தராது. குண்டலினி என்பது ஒருவன் தனது உணர்வை உயர்ந்த தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஒரு குறியீடு. இதைப்பற்றி ஆராய்வதால் இந்த நிலை கிட்டாது! அதற்குரிய பயிற்சியை சரியாக செய்தால் கிட்டும் நிலை இது!
ஆனால் குழம்பிய மனத்திற்கு இந்தக்கேள்விகளும் மனம் திருப்தியுறும் பதில்களும் அவசியம்! அதனால் தான் இத்தனை நூறு நூற்களும், உபதேசங்களும்!

யோகத்தில் சித்தி

யோகத்தில் சித்தி என்பது சாதகன் தன்னில் தகுந்த பக்குவத்தை ஏற்படுத்தலிலும், இறையின் கருணையிலும் மட்டும் தங்கியிருக்கிறது.
யோகத்தில் முயற்சி என்பது எமது மனதிலும் உடலிலும் தெய்வ சக்தியை விழிப்பிக்க தகுந்த "பக்குவத்தை" ஏற்படுத்துவது.
இப்படி பக்குவம் பெற்றாலும் எம்மை விட உயர்ந்த ஆற்றலின் கருணை இன்றி எதுவும் நடந்து விடாது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் சரியாக புரிந்த சாதகன் தனது முயற்சியில் உறுதியும் தான் எவ்வளவு முயன்றாலும் தெய்வத்தின் கருணையையே சித்திக்கு காரணம் என்ற ஞானத்துடன் தனது சாதனையைத் தொடர வேண்டும்.

கோயில்களின் தேவை

கோயில்கள் சிந்தனையின் எழுச்சி மையமாக வேண்டும். மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்கள்! இப்படியான மக்கள் ஒன்று கூடும் இடங்கள் இன்று வியாபாரச் சந்தைகளாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய மக்கள் கூடும் இடங்கள் மக்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஸ்தாபனங்களாக இருக்க வேண்டும்.
கோயில்கள் மக்களின் அறிவினையும், மனத்தினையும் வளர்க்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் உடையவையாக இருக்க வேண்டும். வெறும் மனதிற்கு கேளிக்கையும் இன்பம் மட்டும் தருபவையாக இல்லாமல்!

மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

மனதைக் கட்டுப்படுத்த முடியுமா? மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
மனம் ஒரு ஆற்றல், ஆற்றலைக் கட்டுப்படுத்தினால் பலனுண்டு! ஆபத்தும் உண்டு! அணைகட்டும் நீர் மின்சாரமாவது போல் எண்ணத்தைக் கட்டும் மனம் மகாசக்தியாகும்! அணையில் கட்டிய நீர் உடைந்தால் பெருஞ் சேதமாவது போல் ஏகாக்ரமடைந்த மனம் பக்குவமில்லா உடலை சேதமாக்கும்!
மனதைக் கட்டுப்படுத்துவது என்ற முயற்சி சற்றே அபத்தமானது! ஆனால் மனதை ஒழுங்குபடுத்தல் என்பது அவசியமானது.
இதை யோக மொழியில் சீரிய ஏகாக்கிரமென்பர். ஏகாக்கிரம் என்றால் மனஒருமை என்று பெயர். ஏகாக்கிரம் என்பது மனதைக் கட்டுப்படுத்தல் அல்ல, மனதில் தோன்று எண்ணங்களை ஒழுங்குபடுத்தல்.
சீரிய ஏகாக்கிரம் என்றால் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை ஒரு logical order - தர்க்கப்படிமுறையில் சரியாக சிந்தித்தல்.
இந்தப்படிமுறையில் தர்க்க மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதில் இருக்கவேண்டும். தர்க்க மனம் திருபதியுறாமல் ஆழ்மனம் திறக்காது. ஆழ்மனம் திறக்காமல் மனமது அடங்காது!
ஒரு காரியத்தில் ஏன் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் காரியத்தில் இறங்கினால் தர்க்க மனமும் ஆழ்மனமும் சண்டையிட்டே காலம் போய்விடும்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் வழி தர்க்க மனதின் கேள்விகளுக்கு திருப்தியான பதிலைச் சொல்லி சமாதானப்படுத்தல்,
இதற்குரிய எளிய வழி கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டு அந்தக் கேள்விக்கான பதில் திருப்தி என்றால் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியத்தை செய்தல்.
1) இந்தக்காரியத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்?
2) நாம் செய்யும் இந்தக்காரியத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் எவை?
3) காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
இந்த மூன்று கேள்விக்களுக்கும் திருப்தியான பதில் இருந்தால் மட்டும் காரியத்தில் இறங்க வேண்டும். பலர் இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் காரியத்தில் இறங்கி மனம் கட்டுப்படவில்லை, காரியம் சரியாகவில்லை என்று புலம்புவார்கள்.
ஆக மனதைக்கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அறிவைச் செம்மைப்படுத்த வேண்டும். அறிவைச் செம்மைப்படுத்த சரியான கேள்வியும், அதற்குரிய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சரியான பதில்களும் தெரியவேண்டும்.

கோயில்கள் தேவையா?

நண்பர் ஒருவர் கோயில் கட்டுவதை சாடியுள்ளீர்கள் என்று கவலைப்படுகிறார். கோயில் கட்டுவது நிச்சயமாக தவறு இல்லை தேவையானதும் கூட, ஆனால்,
என்ன நோக்கத்திற்காக கோயில் கட்டுகிறோம்?
யாருக்காக கோயில் கட்டுகிறோம்?
கட்டிய கோயிலிற்கு சமூகம் என்ன செய்யப்போகிறது?
கட்டிய கோயில் சமூகத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்யப்போகிறது?
கோயிலின் தத்துவம், சிறப்பு அகத்தினை அறியும் புறத்தில் உள்ள மாதிரியாக இருக்க அவற்றைப் பற்றி சமூகத்திற்கு எதையும் கற்பிக்காமல் செலவழிக்கும் காசு அதைச் செய்பவர்களின் புகழும் பாடும் நோக்கம்!
நோக்கத்தில் தெளிவற்ற செயல் குழப்பத்தையே மிஞ்சுவிக்கும்!
கோயில் சமூக அமைப்பின் ஒரு மையம், அந்த மையம் சமூகத்தேவையின் நோக்கத்தில் தெளிவு இல்லாமல், மக்களின் மனத்தை பண்படுத்தாமல், ஒற்றுமையை வளர்க்காமல் பகட்டையும், அறியாமையையும் வளர்க்கும் மையங்களாகி விடக்கூடாது!
கோயிலிற்கு போனால் வாழ்வு உயரவேண்டும் என்றால் கோயிலில் மனதை செம்மைப்படுத்தும் வழிகள் சொல்லித்தரப்பட வேண்டும்.
கோயிலிற்கு செலவழிக்கும் பெரும்பணத்தை சிறிதாக்கி கோயிலைச் சுற்றி சமூகம் பண்பிலும், பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் வளரும் நிறையத் திட்டங்களை உருவாக்கலாம்! இப்படியான அமைப்பில் கோயில் மைய ஆன்மாவாக இருக்க சமூகம் அறிவிலும், பொருளாதாரத்திலும், ஆற்றலிலும் மேன்மையுறும்.
என்பது பற்றிய வருத்தங்களே!

இலக்குப் பற்றி ஸ்ரீ அன்னை



இலக்கு அற்ற வாழ்க்கை என்பது பரிதாபகரமான வாழ்க்கை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இலக்கினை உடையவர்களாக இருக்கவேண்டும். ஆனால் உங்கள் இலக்கின் தரம்தான் வாழ்க்கையின் தரம் என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கு உயர்வானதாகவும் பரந்ததாகவும், தன்னலமற்றதாகவும், பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்: இது உங்களது வாழ்வையும் மற்றவர்கள் வாழ்வையும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக்கும்! 
ஸ்ரீ அன்னை , (The Mother, CWM 12:3)
இன்றைய பலரின் நாளாந்த பிரச்சனைகளுக்கு பெரிதும் பங்களிப்பது தமது இலக்கு எது என்று தெரியாத சிந்திக்காத, நிர்ணயிக்காத வாழ்க்கை முறை.

அகத்தியர் கூறும் பிராணனின் இயக்கம்



**************************************
தசவாயு பற்றிய பாடல் ஒன்று அகத்தியர் ரத்ன கிரிகடம் என்ற நூலில் உள்ளது
இந்தப்பாடலின் பிராணன் பற்றிய வரிகள் அரிய யோக நுணுக்கத்தைச் சொல்லுகிறது. பிராணனின் துல்லிய செயற்பாட்டினைக் கூறுகிறது. அதுபற்றி இங்கு சிறுவிளக்கம் அறிவோம்.
வாயுக்கள் பத்து என்று கூறினாலும், அனைத்திற்கும் மூலமானதையே பிராணன் என்றும் உடலில் செய்யும் செயல்களின் வகைப்படுத்தலிலேயே பத்தாகிறது. மேலும் பிராணனில் இருந்து தான் மற்ற வாயுக்கள் உருவாகிறது என்பதை விட பிராணன் உடலில் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்போது அவற்றிற்கு அவற்றின் தொழில் சார்ந்து பெயரிடுகிறோம் என்பதே மிகப்பொருத்தமானது. இந்தப்புரிதல் இல்லாமல் இதுபற்றி ஆராய முயன்றால் யானைதடவிய குருடன் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிராணன் மூலாதாரம் எனும் குகையில் (பிலத்தில்) இருக்க அதிலிருந்து பிரியாமல் அபானன்ம் வியானன், சமானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் தனஞ்செயன் என்று பத்தாகிறது என்றே பாடல் தொடங்குகிறது. பாடலில் பிலம் என்பதும் பிரியா வியானன் என்பதும் மிக முக்கியமான சொற்கள்.
இனிப்பாடலை ஒரு மூன்று தடவை படித்து விடுங்கள், பாடலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நாம் பாடலை எழுதியவர் கூறிய மன நிலைக்குச் செல்வோம். எனவே பாடலைப் புரிவது இலகுவாகும்.
பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்
பிரியாவியானன் சமானனொடு கூர்மன்
நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன் தானாகும்
நற்தேவதத்தன் ஒடு தனஞ்செயன் பத்தாகும்
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து
சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய்
கலக்கமற நாசிவழி ஓடும் நிராறில் கடுகியெட்டு
உட்புகுந்து கழியும் ஓர்நான்கே
பிலம் என்றால் குகை? உடலில் எது குகை மூலாதார ஸ்தானம் குகை, இந்தக் குகையிலிருந்துதான் பிராணன் தோற்றம் பெறுகிறது, பிறகு அடுத்த வரியில் பிராணனோட மற்றும் பிரியா வியானன் என்ற வரிகள் இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவை என்ற குறிப்பைத் தருகிறது.
இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய் கலக்கமற நாசிவழி ஓடும் என்ற வரிகளின் பிராணன் எப்படி செயற்படுகிறது என்பது பற்றி விளக்கம் வருகிறது.
மூலாதாரத்தில் தோன்றி பின் சுழுமுனை நாடிவழியே (இதை முள்ளந்தண்டு வழியாக பாய்வதாக பாவிக்கலாம்) எழுந்து, சிரசளவு முட்டி – சிரசில் சுழி (cowlick) எனச்சொல்லப்படும் இடத்தில் முட்டி பின்னர் வகிட்டின் வழி கீழிறங்கி விழிகழுக்கு நேர் கீழே என்றால் பீனியல் சுரப்பியும், பிட்ரியூட்ரி சுரப்பியும் இருக்கும் இடத்தை தாக்கி, இது சரியாக எமது நாசியும் இரு புருவமத்தியும் தாக்கி கலக்கமில்லாமல் வன்மையான ஆறு ( நிராறு) போல் ஓடும் மூச்சில் கடுகி – கலந்து எட்டு அங்குலம் உட்புகுந்து நான்கு அங்குலம் வீணாகிறது. இங்கு கவனிக்க வேண்டியது உள்மூச்சில் கிடைக்கும் மொத்தப்பிராணன் 12 அளவு என்பது சூஷ்கமாக எட்டு உடலில் சேர மிகுதி நான்கு மூச்சிற்கான வீணாகிறது என்கிறார்.
இந்த வரிகள் பிராணனின் ஸ்தூல சூக்ஷ்ம செயற்பாட்டை தெளிவாக குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மூச்சின் போதும் மூலாதாரத்திலிருந்து எழுந்து தலையுச்சியை தாக்கி கண்களுக்கு கீழே உள்ள பிட்யுட்ரீ சுரப்பியை (Pituitary gland) தாக்கி ஆறுபோல் செல்லும் மூச்சில் கலந்து காற்றிலில் இருந்து வரும் வெளிப்பிராணனில் எட்டு அளவுவினை உடலினுள் புகுத்துகிறது. இந்த செயலுக்கு நான்கு அளவு (digit) பிராணன் செலவாகிறது என் கிறார்.
இங்கு Pituitary gland என்பதை அகத்திய குறிப்பிடவில்லை என்றாலும் நவீன உடலியலில் அந்த இடத்துடன் பொருந்தி வருவதால் இதையே பாடல் குறிப்பிடுகிறது என்று கொள்ளலாம்.
இதற்கான விளக்கப்படம் இத்துடன் இணைத்துள்ளேன்!
விஞ்ஞான பைரவ தந்திரத்தின் 01, 02, 03, 04, 05 மற்றும் 16வது உத்திகளின் விளக்கமாக இந்தப்பாடல் வரிகள் இருக்கிறது என்பது மிகச்சிறப்பான விஷயமும் கூட! இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்!

லம்போதராய நமஹ - யோக விளக்கம்

லம் - போதராய , இதைப் பொதுவாக பெருத்த வயிறு உடையவன் என்று பொருள் கொள்வார்கள். ஆனால் யோக விளக்கம் லம் ( लं laṃ) என்ற மந்திர அட்சர அதிர்வால் போதம் எனும் ஞானத்தைத் தருபவன் என்று பொருள்.
இதையே ஔவைப்பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலாலெழுப்பும் கருத்தறிவித்து என்று பாடுகிறார்.
மூலாதாரத்தை लं laṃ என்ற மந்திர வித்தெழுத்தால் பேதிக்க பிராணனை மூண்டெழுந்து கனலாகி குண்டலினியாகி சிரசைத் தாக்கி அமிர்தம் பொழிவிக்கும் வல்லமை உள்ளவன் லம்போதரன்!
இனி ஔவையாரும் அகத்தியரும் கூறியதை சேர்த்துப்பார்ப்போம். சாதாரணமாக பிராணன் மூலாதராத்திலிருந்து எழுந்து சிரசைத்தாக்கி நாசியில் வரும் பிராணனில் சேர்ந்து உடலில் புகுகிறது. இதை அகத்தியர் பெருமானார் தனது பாடலில் விளக்குகிறார். இது சாதாரண உடலில் நடைபெறும் செய்கை.
இது எப்படி கனலாகி, குண்டலினியாகி அமிர்தத்தை விளைவிக்கிறது என்பதை ஔவையார்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
என்கிறார்.
விண்டெழு மந்திரம் என்பதன் பொருள் லம் என்ற பீஜம். இந்த பீஜ மந்திரத்தால் பிராணனைக் கனலான அக்னித்தன்மை உடையதாக்கினால்
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠
புரியும் என்கிறார்.
இதற்கு லம் அட்சர ஒலி தேவை. இதுவே கணபதி உபாசனையின் விளக்கமும் கூட. ஸ்ரீ வித்யாவில் கணபதி இல்லாமல் செல்லக்கூடாது எனபதும் இந்தக்காரணம் கருதியே, கணபதியின் லம் பீஜ சக்தி விழிப்புறாமல் பிராணன் யோகக்கனலாக மாறாது.
{ யோக ஆர்வக்கோளாறுகளுக்கு ஒரு குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்தும் அறிவுப்பகிர்வு மட்டுமே, எதையும் முயற்சித்துப்பார்ப்பது என்பது குருவின் அனுமதியுடன் மட்டுமே, இல்லாது தானாக குண்டலினி எழுப்புகிறேன், சுண்டெலி எழுப்புகிறேன் என முயற்சித்து மன, உடல் உபாதைக்களுக்கு உள்ளாகக்கூடாது,}

ஸ்ரீ கிருஷ்ணனின் யோகம்

பகவத் கீதையில் அம்ருதத்துவத்திற்கான வழி
ஸ்ரீ -பகவத் கீதை அத்தியாயம் 15 - வசனம் 1
மூலம்=
ஸ்ரீ-பகவான் உவாச
ஊத்வா-மூலம் அத:ஷாகம்
அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி
யஸ் தம் வேத ஸ வேத-வித்
உரை=
ஸ்ரீபகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஊர்த்வ-மூலம் — மேலே வேர்களுடன்; அத: — கீழ் நோக்கிய; ஷாகம் — கிளைகள்; அஷ்வத்தம் — ஆலமரம்; ப்ராஹு: — கூறப்படுகின்றது; அவ்யயம் — நித்தியமான; சந்தாம்ஸி — வேத பதங்கள்; யஸ்ய — அதன்; பர்ணானி — இலைகள்; ய: — எவனொருவன்; தம் — அதை; வேத — அறிகின்றானோ; ஸ:-அவன், வேத — வித்—வேதங்களை அறிந்தவன்
இதன் சரியான தமிழ்ப் பொருள்:
இந்த சுலோகத்தின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு : ஊர்த்துவ வேர்களைக்கொண்டதும் கீழ் நோக்கிய கிளைகள் கொண்டதுமான ஆலமரம் அம்ருதத்துவத்தின் குறியீடு, இந்த அமரத்துவ மரத்தினைப்போசிக்கும் இலைகள் சந்தஸ், எவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் வேதங்களை அறிந்தவன் ஆவான்! இங்கு ஆலமரம் எப்படி தன்னை நீண்டகாலம் அழிவற்று வைத்திருக்க இலைகளின் துணையுடன் இருக்கிறதோ, அதுபோல் அறிவாளி வேதங்களின் சந்தஸை பயிற்சியில் கொண்டுவந்தவன், மூச்சை அறிந்து எல்லா அறிவையும் பெற்று தன்னை அம்ருதத்துவமாக்கிக் கொள்வான் என்பதன் உவமானம்!
இங்கு யோகீஸ்வரர் கிருஷ்ணன் மூச்சை ஊர்த்துவமாக்கி மந்திர சந்தஸால் அறிவினை விழிப்படையச்செய்தால் அமரத்துவம் பெறலாம் என்ற உத்தியைக் கூறுகிறார்.

பகவத் கீதையில் அம்ருதத்துவத்திற்கான வழி

ஸ்ரீ -பகவத் கீதை அத்தியாயம் 15 - வசனம் 1

மூலம்=ஸ்ரீ-பகவான் உவாச

ஊத்வா-மூலம் அத:ஷாகம்

அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்

சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி

யஸ் தம் வேத ஸ வேத-வித்

உரை =

ஸ்ரீபகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஊர்த்வ-மூலம் — மேலே வேர்களுடன்; அத: — கீழ் நோக்கிய; ஷாகம் — கிளைகள்; அஷ்வத்தம் — ஆலமரம்; ப்ராஹு: — கூறப்படுகின்றது; அவ்யயம் — நித்தியமான; சந்தாம்ஸி — வேத பதங்கள்; யஸ்ய — அதன்; பர்ணானி — இலைகள்; ய: — எவனொருவன்; தம் — அதை; வேத — அறிகின்றானோ; ஸ:-அவன், வேத — வித்—வேதங்களை அறிந்தவன்

இதன் சரியான தமிழ்ப் பொருள்:

இந்த சுலோகத்தின் சரியான தமிழ் மொழிப் பெயர்ப்பு : ஊர்த்துவ வேர்களைக் கொண்டதும் கீழ் நோக்கிய கிளைகள் கொண்டதுமான ஆலமரம் அம்ருதத்துவத்தின் குறியீடு, இந்த அமரத்துவ மரத்தினைப்போசிக்கும் இலைகள் சந்தஸ், எவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் வேதங்களை அறிந்தவன் ஆவான்! இங்கு ஆலமரம் எப்படி தன்னை நீண்டகாலம் அழிவற்று வைத்திருக்க இலைகளின் துணையுடன் இருக்கிறதோ, அதுபோல் அறிவாளி வேதங்களின் சந்தஸை பயிற்சியில் கொண்டு வந்தவன், மூச்சை அறிந்து எல்லா அறிவையும் பெற்று தன்னை அம்ருதத்துவமாக்கிக் கொள்வான் என்பதன் உவமானம்!

இங்கு யோகீஸ்வரர் கிருஷ்ணன் மூச்சை ஊர்த்துவமாக்கி மந்திர சந்தஸால் அறிவினை விழிப்படையச் செய்தால் அமரத்துவம் பெறலாம் என்ற உத்தியைக் கூறுகிறார்.


தலைப்பு இல்லை

சிந்தையைத் தூண்டும் கருத்தை விதைத்த அண்ணன் மருத்துவர் விநாயக சுந்தரிற்கு (Vinayaga Sundar) நன்றி!

காலையிலிருந்து கணபதி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் கருத்துப் பகிர்ந்து சுவாரசியமாக்குகிறார்கள். 

லம்போதரன் ஐயா பகிர்ந்த பாடலிற்கு நாம் பொருள் கூற அண்ணன் விநாயக சுந்தரம் மீண்டும் லம்போதராய என்று பதில் போட அதற்கு நாம் பதில் போட வந்த சுவாரசியமான பதிவு

லம் - போதராய , இதைப் பொதுவாக பெருத்த வயிறு உடையவன் என்று பொருள் கொள்வார்கள். ஆனால் யோக விளக்கம் லம் ( लं laṃ) என்ற மந்திர அட்சர அதிர்வால் போதம் எனும் ஞானத்தைத் தருபவன் என்று பொருள். 

இதையே ஔவைப்பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலாலெழுப்பும் கருத்தறிவித்து என்று பாடுகிறார். 

மூலாதாரத்தை लं laṃ என்ற மந்திர வித்தெழுத்தால் பேதிக்க பிராணனை மூண்டெழுந்து கனலாகி குண்டலினியாகி சிரசைத் தாக்கி அமிர்தம் பொழிவிக்கும் வல்லமை உள்ளவன் லம்போதரன்! 

இனி ஔவையாரும் அகத்தியரும் கூறியதை சேர்த்துப் பார்ப்போம். சாதாரணமாக பிராணன் மூலாதாரத்திலிருந்து எழுந்து சிரசைத்தாக்கி நாசியில் வரும் பிராணனில் சேர்ந்து உடலில் புகுகிறது. இதை அகத்தியர் பெருமானார் தனது பாடலில் விளக்குகிறார். இது சாதாரண உடலில் நடைபெறும் செய்கை. 

இது எப்படி கனலாகி, குண்டலினியாகி அமிர்தத்தை விளைவிக்கிறது என்பதை ஔவையார் 

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

என்கிறார். 

விண்டெழு மந்திரம் என்பதன் பொருள் லம் என்ற பீஜம். இந்த பீஜ மந்திரத்தால் பிராணனைக் கனலான அக்னித் தன்மை உடையதாக்கினால்

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠

புரியும் என்கிறார். 

இதற்கு லம் அட்சர ஒலி தேவை. இதுவே கணபதி உபாசனையின் விளக்கமும் கூட. ஸ்ரீ வித்யாவில் கணபதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதும் இந்தக் காரணம் கருதியே, கணபதியின் லம் பீஜ சக்தி விழிப்புறாமல் பிராணன் யோகக்கனலாக மாறாது. 

{யோக ஆர்வக்கோளாறுகளுக்கு ஒரு குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்தும் அறிவுப் பகிர்வு மட்டுமே, எதையும் முயற்சித்துப் பார்ப்பது என்பது குருவின் அனுமதியுடன் மட்டுமே, இல்லாது தானாக குண்டலினி எழுப்புகிறேன், சுண்டெலி எழுப்புகிறேன் என முயற்சித்து மன, உடல் உபாதைக்களுக்கு உள்ளாகக்கூடாது,}


அகத்தியர் கூறும் பிராணனின் இயக்கம்

இன்று காலை Dr. லம்போதரன் ஐயா (Ramanathan Lambotharan) அவர்கள் தனது காலக்கோட்டில் தசவாயு பற்றிய பாடல் ஒன்று அகத்தியர் ரத்ன கிரிகடம் என்ற நூலிலிருந்து பகிர்ந்திருந்தார். 

இந்தப் பாடலின் பிராணன் பற்றிய வரிகள் அரிய யோக நுணுக்கத்தைச் சொல்லுகிறது. பிராணனின் துல்லிய செயற்பாட்டினைக் கூறுகிறது. அதுபற்றி இங்கு சிறுவிளக்கம் அறிவோம். 

வாயுக்கள் பத்து என்று கூறினாலும், அனைத்திற்கும் மூலமானதையே பிராணன் என்றும் உடலில் செய்யும் செயல்களின் வகைப்படுத்தலிலேயே பத்தாகிறது. மேலும் பிராணனில் இருந்து தான் மற்ற வாயுக்கள் உருவாகிறது என்பதை விட பிராணன் உடலில் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்போது அவற்றிற்கு அவற்றின் தொழில் சார்ந்து பெயரிடுகிறோம் என்பதே மிகப் பொருத்தமானது. இந்தப் புரிதல் இல்லாமல் இது பற்றி ஆராய முயன்றால் யானைதடவிய குருடன் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

பிராணன் மூலாதாரம் எனும் குகையில் (பிலத்தில்) இருக்க அதிலிருந்து பிரியாமல் அபானன், வியானன், சமானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் தனஞ்செயன் என்று பத்தாகிறது என்றே பாடல் தொடங்குகிறது. பாடலில் பிலம் என்பதும் பிரியா வியானன் என்பதும் மிக முக்கியமான சொற்கள். 

இனி பாடலை ஒரு மூன்று தடவை படித்து விடுங்கள், பாடலை மீண்டும் மீண்டும் படிக்கும் போது நாம் பாடலை எழுதியவர் கூறிய மன நிலைக்குச் செல்வோம். எனவே பாடலைப் புரிவது இலகுவாகும். 

பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன் எனும்

பிரியாவியானன் சமானனொடு கூர்மன்

நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன் தானாகும்

நற்தேவதத்தன் ஒடு தனஞ்செயன் பத்தாகும்

இலக்கமுடன் பிரண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து

சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய்

கலக்கமற நாசிவழி ஓடும் நிராறில் கடுகியெட்டு

உட்புகுந்து கழியும் ஓர்நான்கே

பிலம் என்றால் குகை? உடலில் எது குகை மூலாதார ஸ்தானம் குகை, இந்தக் குகையிலிருந்துப்தான் பிராணன் தோற்றம் பெறுகிறது, பிறகு அடுத்த வரியில் பிராணனோட மற்றும் பிரியா வியானன் என்ற வரிகள் இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவை என்ற குறிப்பைத் தருகிறது. 

இலக்கமுடன் பிராண நிலை மூலமதிற் தோன்றி எழுந்து சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய் கலக்கமற நாசிவழி ஓடும் என்ற வரிகளின் பிராணன் எப்படி செயற்படுகிறது என்பது பற்றி விளக்கம் வருகிறது. 

மூலாதாரத்தில் தோன்றி பின் சுழுமுனை நாடிவழியே (இதை முள்ளந்தண்டு வழியாக பாய்வதாக பாவிக்கலாம்) எழுந்து, சிரசளவு முட்டி – சிரசில் சுழி (cowlick) எனச் சொல்லப்படும் இடத்தில் முட்டி பின்னர் வகிட்டின் வழி கீழிறங்கி விழிகழுக்கு நேர் கீழே என்றால் பீனியல் சுரப்பியும், பிட்ரியூட்ரி சுரப்பியும் இருக்கும் இடத்தை தாக்கி, இது சரியாக எமது நாசியும் இரு புருவமத்தியும் தாக்கி கலக்கமில்லாமல் வன்மையான ஆறு ( நிராறு) போல் ஓடும் மூச்சில் கடுகி – கலந்து எட்டு அங்குலம் உட்புகுந்து நான்கு அங்குலம் வீணாகிறது. இங்கு கவனிக்க வேண்டியது உள்மூச்சில் கிடைக்கும் மொத்தப்பிராணன் 12 அளவு என்பது சூஷ்கமாக எட்டு உடலில் சேர மிகுதி நான்கு மூச்சிற்கான வீணாகிறது என்கிறார். 

இந்த வரிகள் பிராணனின் ஸ்தூல சூக்ஷ்ம செயற்பாட்டை தெளிவாக குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மூச்சின் போதும் மூலாதாரத்திலிருந்து எழுந்து தலையுச்சியை தாக்கி கண்களுக்கு கீழே உள்ள பிட்யுட்ரீ சுரப்பியை (Pituitary gland) தாக்கி ஆறுபோல் செல்லும் மூச்சில் கலந்து காற்றிலில் இருந்து வரும் வெளிப்பிராணனில் எட்டு அளவுவினை உடலினுள் புகுத்துகிறது. இந்த செயலுக்கு நான்கு அளவு (digit) பிராணன் செலவாகிறது என்கிறார். 

இங்கு Pituitary gland என்பதை அகத்தியர் குறிப்பிடவில்லை என்றாலும் நவீன உடலியலில் அந்த இடத்துடன் பொருந்தி வருவதால் இதையே பாடல் குறிப்பிடுகிறது என்று கொள்ளலாம். 

இதற்கான விளக்கப் படம் இத்துடன் இணைத்துள்ளேன்! 

விஞ்ஞான பைரவ தந்திரத்தின் 01, 02, 03, 04, 05 மற்றும் 16வது உத்திகளின் விளக்கமாக இந்தப்பாடல் வரிகள் இருக்கிறது என்பது மிகச்சிறப்பான விஷயமும் கூட! இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்!


தலைப்பு இல்லை

நேற்று தற்போதைய பாடசாலை மாணவர்களின் நிலைப் பற்றிய உரையாடலின் பின்னர் இந்தப் பிரச்சனைகளுக்கு வாழ்வின் இலக்கு பற்றிய தெளிவின்மையும் ஒரு காரணம் என்ற நினைப்புடன் உறங்கச் சென்ற பின்னர் இன்று காலையில் எழுந்தவுடன் கண்களில்பட்ட செய்தியின் தமிழாக்கம்: 

இலக்கு அற்ற வாழ்க்கை என்பது பரிதாபகரமான வாழ்க்கை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இலக்கினை உடையவர்களாக இருக்கவேண்டும். ஆனால் உங்கள் இலக்கின் தரம் தான் வாழ்க்கையின் தரம் என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கு உயர்வானதாகவும் பரந்ததாகவும், தன்னலமற்றதாகவும், பகிர்ந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்: இது உங்களது வாழ்வையும் மற்றவர்கள் வாழ்வையும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக்கும்! 
ஸ்ரீ அன்னை , (The Mother, CWM 12:3)

இன்றைய பலரின் நாளாந்த பிரச்சனைகளுக்கு பெரிதும் பங்களிப்பது தமது இலக்கு எது என்று தெரியாத சிந்திக்காத, நிர்ணயிக்காத வாழ்க்கை முறை.

Friday, February 22, 2019

தலைப்பு இல்லை

நண்பர் ஆசிரியர் Ramesh Sivagnanam அவர்கள் இன்றைய பாடசாலை மாணவர்களின் நிலை பற்றிய பதிவு கீழே. 

சுருக்கமாக வாழ்க்கையில் இலட்சியம் எதுவும் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற சிந்தனையற்ற சமூகம் ஒன்று உருவாகி வருகிறது என்பதே செய்தி! 

நாம் எங்கு பிழைவிடுகிறோம்? தனிமனித முன்னேற்றம் என்று எதைப் பிள்ளைகள் மனதில் பதிவிக்கிறோம்? 

ஒருவன் தான் செய்வது தனக்கு இன்பம் பயக்கிறது என்ற மாயையினாலேயே தவறு செய்கிறான். எது இன்பம் என்பது பற்றிய தவறான புரிதல்! 

பெற்றோர்களது சிந்தனையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் அவசியம் தேவை! 
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று வந்திருந்தது. பெயர் ஞாபகம் இல்லை, அந்தப் படத்தின் கதை சுருக்கமாக நான்கு இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்கள் குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், பிள்ளைகளைக் கவனிப்பதில்லை! அவர்கள் வாழும் சூழல் கொள்ளையும், போதைப் பொருள் பாவனையும் நிறைந்திருக்க இறுதியில் இவர்களும் கொள்ளையர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களானவர்களாவும், கிரிமினல்களாக மாறி இறப்பது தான் கதை! 

மனித மனத்திற்கு வலிமையாக கடிவாளம் ஒன்று இருக்க வேண்டும். அது பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்து வருவதே பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனதைக் கட்டமைக்கும், அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வாழும் சமூகம் பெற்றோராக மாறி மனதின் விழுமியத்தை உருவாக்கும்! 
ஆசிரியர் ரமேஷ் அவர்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளில் பெற்றோர்களின் ஆற்றலின்மை, அறிவின்மை, நேரமின்மை என்பவை பெரும் பங்கு வகிக்கிறது. 

போதைப் பொருள் ஒழிக்கிறோம் என்று போதைப் பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் NGO வகையறா விழிப்புணர்வுகளிலும் பார்க்க பிள்ளைகளின் மனதின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்கலைகள், விளையாட்டுக்களில் பங்குபெற மிகுந்த ஊக்கத்துடன் சமூக நிகழ்வுகள் ஒழுங்குபடுத்த வேண்டும். 

போதைப் பொருளை தடுக்கிறோம் என்று துஷ்டர்களுடன் வம்பிழுப்பதை விட மனவலிமையும், துஷ்டர்கள் நெருங்காத மனதை உடைய வலிமையான பிள்ளைகளை உருவாக்குவதற்கு எல்லோரும் பாடுபடவேண்டும். வியாபாரம் இருப்பது பொருள் வாங்குபவன் இருப்பதால் வியாபாரியை விரட்டி அடிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அந்தப் பொருள் தேவையில்லாத வாழ்க்கை முறையை உருவாக்குவதன் மூலமே போதைப்பொருளை இல்லாதாக்க முடியும்!

தலைப்பு இல்லை

Skepticism has acted as a double-edged sword. On the one hand it destroyed worthless theories, on the other it has cut up many a sane, though premature, hypothesis. 

This sword should not be used to murder concepts that would be lamented a few decades hence. The history of science abounds in tragic accidents of this kind. 

Andrew Tomas - Oasis of Guiding Lights


தலைப்பு இல்லை

நண்பர் ஒருவர் கோயில் கட்டுவதை சாடியுள்ளீர்கள் என்று கவலைப்படுகிறார். கோயில் கட்டுவது நிச்சயமாக தவறு இல்லை தேவையானதும் கூட, ஆனால், 

என்ன நோக்கத்திற்காக கோயில் கட்டுகிறோம்?

யாருக்காக கோயில் கட்டுகிறோம்?

கட்டிய கோயிலிற்கு சமூகம் என்ன செய்யப் போகிறது?

கட்டிய கோயில் சமூகத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்யப் போகிறது? 

கோயிலின் தத்துவம், சிறப்பு அகத்தினை அறியும் புறத்தில் உள்ள மாதிரியாக இருக்க அவற்றைப் பற்றி சமூகத்திற்கு எதையும் கற்பிக்காமல் செலவழிக்கும் காசு அதைச் செய்பவர்களின் புகழும் பாடும் நோக்கம்!

நோக்கத்தில் தெளிவற்ற செயல் குழப்பத்தையே மிஞ்சுவிக்கும்! 

கோயில் சமூக அமைப்பின் ஒரு மையம், அந்த மையம் சமூகத் தேவையின் நோக்கத்தில் தெளிவு இல்லாமல், மக்களின் மனத்தை பண்படுத்தாமல், ஒற்றுமையை வளர்க்காமல் பகட்டையும், அறியாமையையும் வளர்க்கும் மையங்களாகி விடக்கூடாது! 

கோயிலிற்கு போனால் வாழ்வு உயரவேண்டும் என்றால் கோயிலில் மனதை செம்மைப்படுத்தும் வழிகள் சொல்லித்தரப்பட வேண்டும். 

கோயிலிற்கு செலவழிக்கும் பெரும் பணத்தை சிறிதாக்கி கோயிலைச் சுற்றி சமூகம் பண்பிலும், பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் வளரும் நிறையத் திட்டங்களை உருவாக்கலாம்! இப்படியான அமைப்பில் கோயில் மைய ஆன்மாவாக இருக்க சமூகம் அறிவிலும், பொருளாதாரத்திலும், ஆற்றலிலும் மேன்மையுறும். என்பது பற்றிய வருத்தங்களே!


ஞானசித்தன் பிதற்றல் - 03

உயிராக சிவனவன் உள்ளிருக்கையில் ஓடித்திரிந்து சிவனருள் வேண்டுமோ?

பயிராக தெய்வகுணம் வளர்க்க மண்ணான மனம் செம்மையாக்க வேண்டுமல்லோ?

மனமது செம்மையாக்க பணமது தேவையோ? 

குணமது செம்மையானால் மனமதில் சிவம் மிளிராதோ?


மனதைக் கட்டுப்படுத்த முடியுமா? மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

மனம் ஒரு ஆற்றல், ஆற்றலைக் கட்டுப்படுத்தினால் பலனுண்டு! ஆபத்தும் உண்டு! அணைகட்டும் நீர் மின்சாரமாவது போல் எண்ணத்தைக் கட்டும் மனம் மகா சக்தியாகும்! அணையில் கட்டிய நீர் உடைந்தால் பெருஞ் சேதமாவது போல் ஏகாக்ரமடைந்த மனம் பக்குவமில்லா உடலை சேதமாக்கும்!

மனதைக் கட்டுப்படுத்துவது என்ற முயற்சி சற்றே அபத்தமானது! ஆனால் மனதை ஒழுங்குபடுத்தல் என்பது அவசியமானது. 

இதை யோக மொழியில் சீரிய ஏகாக்கிரமென்பர். ஏகாக்கிரம் என்றால் மன ஒருமை என்று பெயர். ஏகாக்கிரம் என்பது மனதைக் கட்டுப்படுத்தல் அல்ல, மனதில் தோன்றும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தல். 

சீரிய ஏகாக்கிரம் என்றால் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை ஒரு logical order - தர்க்கப்படிமுறையில் சரியாக சிந்தித்தல். 

இந்தப் படிமுறையில் தர்க்க மனது ஏற்றுக் கொள்ளும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதில் இருக்க வேண்டும். தர்க்க மனம் திருப்தியுறாமல் ஆழ்மனம் திறக்காது. ஆழ்மனம் திறக்காமல் மனமது அடங்காது!

ஒரு காரியத்தில் ஏன் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் காரியத்தில் இறங்கினால் தர்க்க மனமும் ஆழ் மனமும் சண்டையிட்டே காலம் போய்விடும். 

மனதைக் கட்டுப்படுத்த முதல் வழி தர்க்க மனதின் கேள்விகளுக்கு திருப்தியான பதிலைச் சொல்லி சமாதானப்படுத்தல், 

இதற்குரிய எளிய வழி கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டு அந்தக் கேள்விக்கான பதில் திருப்தி என்றால் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியத்தை செய்தல். 

1) இந்தக் காரியத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? 

2) நாம் செய்யும் இந்தக் காரியத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை தீமைகள் எவை? 

3) காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? 

இந்த மூன்று கேள்விக்களுக்கும் திருப்தியான பதில் இருந்தால் மட்டும் காரியத்தில் இறங்க வேண்டும். பலர் இந்தக் கேள்விகளுக்கு திருப்தியான பதில் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் காரியத்தில் இறங்கி மனம் கட்டுப்படவில்லை, காரியம் சரியாகவில்லை என்று புலம்புவார்கள். 

ஆக மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அறிவைச் செம்மைப்படுத்த வேண்டும். அறிவைச் செம்மைப்படுத்த சரியான கேள்வியும், அதற்குரிய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சரியான பதில்களும் தெரிய வேண்டும்.


Thursday, February 21, 2019

ஞானச்சித்தன் பிதற்றல்கள் - 02

இறைச்சி சுட்ட சட்டியை அடுக்கிவிடுவார் கந்த சட்டியிலே,

மறைச்சு கிடாய் ஒன்று கட்டிவிடுவார் கொல்லையிலே,

மறைச்சு கட்டிய கிடாய் இறைச்சியாகும் சூரவதம் முடிகையிலே, 

கந்த சட்டியிலே இறைச்சி சட்டி வைத்தால் பாவமென்று எண்ணும் மூடர்கள்! 

வெந்த சட்டியில் வேகும் கிடாய் உண்ண ஆசையானால், 

கந்த சட்டியில் இறைச்சி சட்டி பூட்டி என்ன பலன் கண்டாயடா?


ஞானச்சித்தன் பிதற்றல் - 01

கோடி கோடியாய் கொட்டி கோயில் எதற்கு ஈசன் உள்ளிருக்கையில்! 

ஆடி ஆடி தன் புகழ் பாட செய்யும் ஏற்பாடுகலல்லவோ இவை! 

ஓடி ஓடி மனமதை செம்மையாக்க வழியல்லோ தேவை எமக்கு! 

மூடி மூடி நிற்கும் அறியாமையல்லவோ இந்த செயல்கள்! 


தலைப்பு இல்லை

கோயில்கள் சிந்தனையின் எழுச்சி மையமாக வேண்டும். மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்கள்! இப்படியான மக்கள் ஒன்று கூடும் இடங்கள் இன்று வியாபாரச் சந்தைகளாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய மக்கள் கூடும் இடங்கள் மக்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஸ்தாபனங்களாக இருக்க வேண்டும். 

கோயில்கள் மக்களின் அறிவினையும், மனத்தினையும் வளர்க்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் உடையவையாக இருக்க வேண்டும். வெறும் மனதிற்கு கேளிக்கையும் இன்பம் மட்டும் தருபவையாக இல்லாமல்!

Tuesday, February 19, 2019

தலைப்பு இல்லை

யோகத்தில் சித்தி என்பது சாதகன் தன்னில் தகுந்த பக்குவத்தை ஏற்படுத்தலிலும், இறையின் கருணையிலும் மட்டும் தங்கியிருக்கிறது. 
யோகத்தில் முயற்சி என்பது எமது மனதிலும் உடலிலும் தெய்வ சக்தியை விழிப்பிக்க தகுந்த "பக்குவத்தை" ஏற்படுத்துவது. 
இப்படி பக்குவம் பெற்றாலும் எம்மை விட உயர்ந்த ஆற்றலின் கருணை இன்றி எதுவும் நடந்து விடாது. 
இந்த இரண்டு நிபந்தனைகளையும் சரியாக புரிந்த சாதகன் தனது முயற்சியில் உறுதியும் தான் எவ்வளவு முயன்றாலும் தெய்வத்தின் கருணையையே சித்திக்கு காரணம் என்ற ஞானத்துடன் தனது சாதனையைத் தொடர வேண்டும்.

தலைப்பு இல்லை

கதைகளும் வரலாறுகளும் சலனமுறும் மனதிற்கு சற்று ஆற்றுப்படுத்தி காரியத்தை சாதிக்கும் வல்லமை தரும் ஒருவித ஊக்கிகள்! 

இரசாயனவியல் கற்றவர்கள் ஊக்கிகள் பற்றி அறிந்திருப்பார்கள். ஊக்கிகள் தாக்கத்தில் பங்குபெறாது, ஆனால் ஊக்கி இல்லாமல் தாக்கம் நடைபெறாது. 

இவ்வாறான ஒன்றே எமது புராணங்களும், இதிகாசங்களும்! எமது மனதை மேம்படுத்தும் கருத்துக்களை மனதுக்கு உவந்து கொடுக்கும் ஒருவித முறையாகவே அவை இருக்கிறது. 

இன்று பலரும் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நவீன தொல்லியல் மூலம் நிறுவினால்தான் உண்மை என்ற போக்கில் சிந்திக்கிறார்கள். அப்படி நிறுவினால் மிக்க மகிழ்ச்சி! 

அப்படி நிறுவப்பட முடியாவிட்டால் அதில் கூறப்பட்ட அனைத்தும் பொய் என்று வாதிடும் முட்டாள் தனத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 

பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போதைய நடைமுறை, எமது தாத்தா, பூட்டனார் காலத்தில் அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் தாத்தாவே இல்லை என்று நினைப்பதைப் போன்றது இது. 

இதைப் போல் தான் அகத்தை பண்படுத்தும் முயற்சியில் இறங்கும் பலர் புறவயப்பட்டு தமது தேடலை மேற்கொண்டு குழம்பிப் போய்விடுகிறார்கள். 

இதற்கு ஒரு உதாரணம் குண்டலினி எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? எந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள். 

யதார்த்தத்தில் இந்தக் கேள்விகளுக்குரிய பதில் எதுவும் பலனைத்தராது. குண்டலினி என்பது ஒருவன் தனது உணர்வை உயர்ந்த தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஒரு குறியீடு. இதைப் பற்றி ஆராய்வதால் இந்த நிலை கிட்டாது! அதற்குரிய பயிற்சியை சரியாக செய்தால் கிட்டும் நிலை இது! 

ஆனால் குழம்பிய மனத்திற்கு இந்தக் கேள்விகளும் மனம் திருப்தியுறும் பதில்களும் அவசியம்! அதனால் தான் இத்தனை நூறு நூற்களும், உபதேசங்களும்!


Friday, February 15, 2019

அகத்தியரும் குடும்ப வாழ்க்கையும்

குரு நாதர் உரைத்தபடி....
அகத்தியர் என்ற உணர்வு நஞ்சினை வெல்லும். தீமையை வென்று ஒளி நிலையடைய வழிகாட்டும். பேருணர்வு எப்படி செயற்படுகிறது என்ற விளக்கமே லோபாமுத்திரை சமேத அகத்திய மாமகரிஷியாக புராணங்களில் உரைக்கப்பட்டது. 
உலகிற்கு, உயிரிற்கு மங்களம் உண்டாக்கும் ஸ்ரீ வித்யாவினை முதலில் பூவுலக மானிடருக்கு அறியக்கூடிய வகையில் ஈர்த்தவர் அகத்தியர்! பிரம்மாண்டத்தின் ஒழுங்கினை, வளத்தினை இயக்கும் உயர் உணர்வை (supra consciousnesses) தனது குருவான ஹயக்ரீவரிடமிருந்து மானிடர்கள் அனைவரும் அறியும் அதிர்வு நிலைக்கு (frequency) கொண்டுவந்தவர் அகத்தியர் பெருமான்! 
இதை வேறு வகையில் சொல்வதானால் தகுதியுடைய ஒரு உயிரான்மா பூவுலகில் உயர் உணர்வை ஈர்க்க இருப்பதால் அந்த உயர் உணர்வு பூமியில் இறங்கியது. அப்படி பூமியின் உயர் உணர்வை இயக்கத்திற்கு கொண்டுவந்தவர் அகத்தியர்! இதனாலேயே பூமியை சமப்படுத்த தென்னாடு அனுப்பப்பட்டார் என்ற புராணக்கதை கூறப்பட்டது. 
பூவுலகம் நச்சு எண்ணங்களால் நிறைய நிறைய அதன் பாரம் அதிகமாகி சமநிலை குழம்ப, அதை சமப்படுத்த சிவனாரால் தென்னாடு அனுப்பப்பட்டவர் அகத்தியர்! 
அகத்தியரின் வேலை உலகிற்கு நன்மை செய்யவேண்டும், மனித குலம் மேம்பட வேண்டும் என்று எங்கெல்லாம் பக்குவம் உள்ள ஆன்மா எண்ணுகிறதோ அங்கெல்லாம் தனது தவத்தின் பலத்தை வித்தாக கொடுத்து மரமாக வளர்ப்பது! 
தன்னை பிரபஞ்ச பேருணர்வான ஸ்ரீ லலிதையின் வடிவாகி ஸ்ரீ லலிதையை அகஸ்தியமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்து, தன்னுடன் ஈருடல் ஓருயிராய் ஒன்றிய தனது மனைவி லோபாமுத்திரையையும் தான் பெற்ற தவசக்தியை ஊட்டி அவரையும் அந்த பேருணர்வு பெறவைத்து லோபாமுத்திரமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்த்தினார்! 
எவருக்கு இல்லறத்திலுள்ள நச்சான தீய எண்ணங்களை அகற்றி மகிழ்வான ஒளி மிகுந்த வாழ்க்கை வேண்டுமோ அவர்கள் அன்னை லோபாமுத்திரா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷியை எண்ண அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அவர்கள் வாழ்வை ஒளியாக்கும்! 
அகஸ்தியகுலபதி
15/03/2019

Thursday, February 14, 2019

அகத்தியர்

நண்பர் ஒருவர் அகத்தியரின் சரித்திரம் என்று நூல் ஒன்று பகிர்ந்திருந்தார், பலரும் அகத்தியர் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர், அகத்தியர் என்று பாடல்களில் இருப்பதெல்லாம் பிற்காலத் தமிழில் இருக்கின்றனவே என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அகத்தில் உள்ள ஈசனுக்கு எப்படி காலக் கோட்டில் பகுத்த சரித்திரம் எழுதுவது.

அகத்தில் உயிரான ஈசனை அறிவிக்கும் பேருணர்வு அகத்தியம்,

அந்தப் பேருணர்வை ஈர்த்தால் அகத்தில் உருவாகும் தீ அகத்தியம்

அகத்திலுள்ள தீ - அகத்தீ - எல்லாத்தீமைகளையும், நஞ்சுகளையும் எரித்து நஞ்சை வென்ற பேரொளி நிலை தரும் உணர்விற்கு பெயர் அகத்தியம்

அகத்தியர் என்பது ஒரு பேருணர்வு - Supra conciousnesses, இந்த உணர்வை எம்மில் ஈர்க்க எம்மை தூய்மைப்படுத்தும் ஆற்றல் அகத்தியம்.

இந்த உணர்வை பலரும் பல்வேறு காலத்தில் ஈர்த்து பெற்று அகத்தியராகவும், பல்வேறு பெயர் தாங்கியும் வெளியிட்டும் உள்ளனர்.

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவெல்லாம் நஞ்சை வென்று தீமையை வென்று அம்ருதத்துவத்தில் செலுத்துகிறதோ அந்த உணர்வுகளெல்லாம் அகத்தியம்.


Wednesday, February 13, 2019

தலைப்பு இல்லை

When we think about logical way of practicing this vision 
Let's strive to enhance the tranquility, beauty, wealth and bliss of this universe,
we have to strive to enhance the tranquility, beauty, wealth and bliss of this earth, where we live!
we have to strive to enhance the tranquility, beauty, wealth and bliss of country where we live!
we have to strive to enhance the tranquility, beauty, wealth and bliss of village where we live,
we have to strive to enhance the tranquility, beauty, wealth and bliss of home where we live,
then finally we have to strive to enhance the tranquility, beauty, wealth and bliss of our body, mind and Prana - Vital energy!
இந்த இலட்சியத்தை எப்படி சரியாக பயிற்சிப்பது;
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப் பாடுபடல் வேண்டும். 
நாம் வாழும் இந்த பூமியின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப்பாடுபடல் வேண்டும்
நாம் வாழும் இந்த நாட்டின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப்பாடுபடல் வேண்டும்
நாம் வாழும் இந்த ஊரின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப்பாடுபடல் வேண்டும்
நாம் வாழும் இந்த வீட்டின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப்பாடுபடல் வேண்டும்
நாம் வாழும் இந்த உடலின் மனத்தின் அமைதியினையும், அழகினையும், செல்வத்தினையும், ஆனந்தத்தினையும் அதிகரிக்கப்பாடுபடல் வேண்டும்

01. சூழலியல் தத்துவம் – Environmental Philosophy



இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சனைகளாக சூழலியல் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன. புவியின் வரலாற்றில் மனிதன் இனம் சூழல் மாசுபடலுடன் சண்டையிட வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்தபின்னர் இந்த நூற்றாண்டு உயிர்பல்வகைமை அழிவுகளின் உயர்ந்த காலப்பகுதியாக அறியப்பட்டுள்ளது. வில்சன் என்பார் தனது ஆய்வறிக்கையில் (“Threats to Biodiversity,” Scientific American, 1989) தினசரி 100 உயிர்ப்பல்வகைமை இனங்கள் அழிவுற்றுவருவதாக கணக்கிட்டு அடுத்துவரும் பத்தாண்டுகளின் இந்த விகிதம் இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம் எனக் கணக்கிட்டுள்ளார்.

இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், வளி என்பன தமது இயல்புத்தன்மையினை இழந்து, மாசடைந்து, குறைந்து வருகிறது. 1804ம் ஆண்டில் ஒரு பில்லியன் சனத்தொகை அடுத்த இரு நூறு ஆண்டுகளில் ஏழுமடங்காகி 2018ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 7.7 பில்லியன் ஆகியுள்ளது. கணிப்பீட்டின் படி அடுத்த 15 வருடங்களில் இன்னும் ஒரு பில்லியன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரிப்புடன் வளங்கள் குறைவடைதலும், சூழல் மாசடைதலும் அதிகரிக்கப்போகிறது. சனத்தொகை அதிகரிப்பு வளங்களின் தேவையை அதிகரிப்பது என்பதை விட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று உருவாக்கப்படும் மாயைகள் அதிகமாக உயிர்த்தொகுதியின் வளத்தினை சுரண்டுகிறது. உதாரணமாக இன்றைய ஆடம்பர வாழ்க்கையின் நட்சத்திர ஹோட்டல்களின் நீர் மற்றும் வளங்களின் பயன்பாட்டினால் ஒரு விருந்தினருக்கு தரும் உபசரிப்பிற்கு செலவாகும் வளத்தை சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு மனிதனது பயன்பாட்டில் நூறு நபர்களுக்கு பயன்படுத்தக்கூடியதான ஆடம்பர வாழ்க்கை முறையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

அபயகரமான விஷக்கழிவுகளும், அணு இரசாயனக் கழிவுகளும் அதிகரிக்கின்றது. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இன்றி சூழலைப்பாதிக்கக் கூடியவை.

வளிமாசடைதலினால் ஏற்படக்கூடிய பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அதிகரிப்பால் புவி வெப்பமாதல் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்.

இந்தப் பிரச்சனைகளின் தீர்விற்காக உலக அரங்கில் அனைத்து நாட்டு அரசுகளும் தீர்வுத்திட்டத்தை தமது அரசியலில் ஒருபாகமாக முன்னெடுத்து வருகின்றன.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ரிபப்ளிகன் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸனினால் சூழல் மாசடைதல் தொடர்பான மூன்று முக்கிய சட்டங்களை அமுல்படுத்தியதிலிருந்து சூழல் மாசடைதல் தொடர்பான சட்ட நெறிமுறைகள் உலக அரங்கில் முன்னெடுக்கப்பட்டுத் தொடங்கியது.

இன்றைய காலகட்டத்தின் சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்களை பொல்லாதவர்களாக கற்பிக்கும் மனம் இதன் பாதகங்களை அறிந்தபின்னர் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களளவில் நன்மையானதாக அவர்களது அறிவின் எல்லைக்குள் நம்பியே எடுத்திருக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் சடுதியான சனத்தொகைப்பெருக்கம் மனிதகுலத்தை உணவு, நீர், மின்சாரம், நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட்டு நீண்டகாலம் வாழுதல் போன்றவற்றின் தேவையை மட்டும் அடிப்படையாக வைத்துகொண்டு அபிவிருத்திக்கொள்கைகளையும், அறிவியலையும் முன்னெடுக்கத்தொடங்கியது. எனினும் சூழலியலில் சிக்கற்தன்மையினையும் விளைவுகளையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இன்னொரு முறையாகச் சொன்னால் ஒரு முடிவு எடுக்கமுன்னர் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடக்கூடிய தீர்மானிக்கும் பொறிமுறை இருக்கவில்லை.

இங்குதான் சூழலியலிற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்க வேண்டிய தேவை உண்டாகிறது. மனிதன் தனக்கு நன்மை தரும் என்று தீர்மானிக்கு அனைத்தும் இயற்கையால் நன்மையான விளைவாக தரப்படுமா? அதன் பாதகங்கள் என்ன? குறுகியகாலத்தில் நன்மை எனக்கருதப்படுவது நீண்டகாலத்தில் தீமையாகலாமா? இப்படி ஒரு சுய உணர்வுடன் நிதானமாக சிந்தித்து தீர்மானிக்கும் தன்மையைத் தரும் ஒரு தத்துவ அடிப்படையினை அனைத்து முடிவுகளும் கொண்டிருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

தொடரும்….


01. சூழலியல் தத்துவம் – Environmental Philosophy

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சனைகளாக சூழலியல் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன. புவியின் வரலாற்றில் மனித இனம் சூழல் மாசுபடலுடன் சண்டையிட வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்த பின்னர் இந்த நூற்றாண்டு உயிர் பல்வகைமை அழிவுகளின் உயர்ந்த காலப்பகுதியாக அறியப்பட்டுள்ளது. வில்சன் என்பார் தனது ஆய்வறிக்கையில் (“Threats to Biodiversity,” Scientific American, 1989) தினசரி 100 உயிர்ப்பல்வகைமை இனங்கள் அழிவுற்றுவருவதாக கணக்கிட்டு அடுத்துவரும் பத்தாண்டுகளின் இந்த விகிதம் இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம் எனக் கணக்கிட்டுள்ளார். 
இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், வளி என்பன தமது இயல்புத்தன்மையினை இழந்து, மாசடைந்து, குறைந்து வருகிறது. 1804ம் ஆண்டில் ஒரு பில்லியன் சனத்தொகை அடுத்த இரு நூறு ஆண்டுகளில் ஏழுமடங்காகி 2018ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 7.7 பில்லியன் ஆகியுள்ளது. கணிப்பீட்டின் படி அடுத்த 15 வருடங்களில் இன்னும் ஒரு பில்லியன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
சனத்தொகை அதிகரிப்புடன் வளங்கள் குறைவடைதலும், சூழல் மாசடைதலும் அதிகரிக்கப்போகிறது. சனத்தொகை அதிகரிப்பு வளங்களின் தேவையை அதிகரிப்பது என்பதை விட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று உருவாக்கப்படும் மாயைகள் அதிகமாக உயிர்த்தொகுதியின் வளத்தினை சுரண்டுகிறது. உதாரணமாக இன்றைய ஆடம்பர வாழ்க்கையின் நட்சத்திர ஹோட்டல்களின் நீர் மற்றும் வளங்களின் பயன்பாட்டினால் ஒரு விருந்தினருக்கு தரும் உபசரிப்பிற்கு செலவாகும் வளத்தை சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு மனிதனது பயன்பாட்டில் நூறு நபர்களுக்கு பயன்படுத்தக்கூடியதான ஆடம்பர வாழ்க்கை முறையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 
அபாயகரமான விஷக்கழிவுகளும், அணு இரசாயனக் கழிவுகளும் அதிகரிக்கின்றது. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இன்றி சூழலைப்பாதிக்கக் கூடியவை. 
வளிமாசடைதலினால் ஏற்படக்கூடிய பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அதிகரிப்பால் புவி வெப்பமாதல் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள். 
இந்தப் பிரச்சனைகளின் தீர்விற்காக உலக அரங்கில் அனைத்து நாட்டு அரசுகளும் தீர்வுத்திட்டத்தை தமது அரசியலில் ஒருபாகமாக முன்னெடுத்து வருகின்றன. 
45 ஆண்டுகளுக்கு முன்னர் ரிபப்ளிகன் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸனினால் சூழல் மாசடைதல் தொடர்பான மூன்று முக்கிய சட்டங்களை அமுல்படுத்தியதிலிருந்து சூழல் மாசடைதல் தொடர்பான சட்ட நெறிமுறைகள் உலக அரங்கில் முன்னெடுக்கப்பட்டுத் தொடங்கியது. 
இன்றைய காலகட்டத்தின் சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்களை பொல்லாதவர்களாக கற்பிக்கும் மனம் இதன் பாதகங்களை அறிந்தபின்னர் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களளவில் நன்மையானதாக அவர்களது அறிவின் எல்லைக்குள் நம்பியே எடுத்திருக்கிறார்கள். 
சென்ற நூற்றாண்டில் சடுதியான சனத்தொகைப்பெருக்கம் மனிதகுலத்தை உணவு, நீர், மின்சாரம், நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட்டு நீண்டகாலம் வாழுதல் போன்றவற்றின் தேவையை மட்டும் அடிப்படையாக வைத்துகொண்டு அபிவிருத்திக்கொள்கைகளையும், அறிவியலையும் முன்னெடுக்கத்தொடங்கியது. எனினும் சூழலியலில் சிக்கற்தன்மையினையும் விளைவுகளையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இன்னொரு முறையாகச் சொன்னால் ஒரு முடிவு எடுக்கமுன்னர் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடக்கூடிய தீர்மானிக்கும் பொறிமுறை இருக்கவில்லை. 
இங்கு தான் சூழலியலிற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்க வேண்டிய தேவை உண்டாகிறது. மனிதன் தனக்கு நன்மை தரும் என்று தீர்மானிக்கும் அனைத்தும் இயற்கையால் நன்மையான விளைவாக தரப்படுமா? அதன் பாதகங்கள் என்ன? குறுகியகாலத்தில் நன்மை எனக்கருதப்படுவது நீண்டகாலத்தில் தீமையாகலாமா? இப்படி ஒரு சுய உணர்வுடன் நிதானமாக சிந்தித்து தீர்மானிக்கும் தன்மையைத் தரும் ஒரு தத்துவ அடிப்படையினை அனைத்து முடிவுகளும் கொண்டிருக்க வேண்டிய தேவையிருக்கிறது. 
தொடரும்….

தலைப்பு இல்லை

ஒரு மாற்றத்திற்கு இனிமேல் சூழலியல் தத்துவம் பற்றி எழுதலாம் என்று எண்ணம்! 

என்ன சொல்கிறீர்கள்?


Monday, February 11, 2019

மு. தளையசிங்கம் அவர்களின் மெய்யுள் கூறும் பூரண இலக்கியக் கோட்பாடு

ஈழத்தின் தலைச் சிறந்த சிந்தனாவாதியும், தனது காலத்தை தாண்டிய இலக்கிய வடிவத்திற்கான கருதுகோளை முன்வைத்தவரும், சுந்தரராமசாமியினால் பாரதியின் கருத்துலகை விட முழுமையான கருத்துலகை முன்வைத்த சிந்தனையாளர் என குறிப்பிடப்பட்டவருமான மு. த எனப்படும் மு. தளையசிங்கம் அவர்களின் இலக்கியக் கோட்பாட்டிற்கான ஒரு முன்மொழிவு தான் மெய்யுள். 
இதைப் படிக்க நேர்ந்தது மிகவும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பம் என்றாலும் எனது சிந்தனைப் போக்கிற்கு பிடித்த ஒன்றாக இருந்ததால் மெய்யுள் எனும் அவரது நூலை படிக்கத் தொடங்கினேன். 
அந்த நூலின் முதல் அத்தியாயம் பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் என்ற தலைப்புடன் தொடங்குகிறது. இதில் தற்போதுள்ள பொழுதுபோக்கு இலக்கியம் என்ற வரையறையுடன் கூடிய இலக்கியங்கள் மனிதகுலத்தின் ஆற்றலை எப்படி வீணடிக்கிறது என்பதையும் இலக்கியத்தினதும் கலையினது உண்மை நோக்கத்தினையும் நிறுவுகிறது. 
பொழுதுபோக்கு என்ற ஒன்று இல்லை என்பதை நானும் நம்புகிறேன். உண்மையில் நாம் எல்லோரும் இந்த உடலுக்குள் ஒரு நிறுத்தற் கடிகாரத்தில் நேரத்தை குறித்து வைத்து விட்டு ஒவ்வொரு சுவாசம் கழியும் போதும் எமது உடலை விட்டு நீங்குவதற்குரிய பிராணனை செலவழிக்கிறோம் என்ற உண்மையை அறியத்தவறியவர்களாக காலத்தை பலரும் வீணாக்குகிறார்கள். 
ஆக மு.த முன்வைக்கும் முதல் கேள்வி, இலக்கியம் எதற்காக தேவைப்படுகிறது? இலக்கியம் நிச்சயமாக பொழுதுபோக்கிற்கு அல்ல, தரமான இலக்கியம் மனிதனின் அகத்தேவையான அமைதிக்கும், ஓய்விற்கும், பரவசத்திற்குமானது என்று நிறுவுகிறார். இத்தகைய இலக்கியங்கள் தான் வாழ்க்கைப்பிரச்சனைக்கு தீர்வினையும், தெளிவினையும் கொடுக்கக்கூடியது என்கிறார். 
இந்தக் கருத்தை படிக்கும் போது எனக்குள் மிகுந்த ஆச்சரியம் உண்டானது. ஏனெனில் பண்டிட். ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா அவர்கள் இதே கருத்தை முன்வைத்தே தனது இலக்கியங்களைப் படைத்தார். பண்டிட் ராம்சர்மா ஆச்சாரியா என்பவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய காயத்ரி சாதகர்! அவரது எழுத்துக்கள் இந்தியில் எழுதப்பட்டு தற்போது மொழி பெயர்ப்பாகி கிடைக்கின்றது. இந்த இலக்கிய வடிவத்தின் ஆரம்பம் ஸ்ரீ அரவிந்தருடன் தற்கால மனித குலத்திற்கு கிடைக்கிறது. ஆனால் ரிஷிகளும், பண்டைய சித்தர்களும் இந்த வகை இலக்கியங்களே படைத்தார்கள். 
இடைக் காலத்தில் மன்னர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக படைக்கப்பட்ட மன்னன் புகழ்கூறும் இலக்கியங்கள் மக்களின் மனதை மயங்கச் செய்து போலி இலக்கியங்களை படைக்க ஆரம்பிக்கிறது. 
ஆக இலக்கியம் கலை என்பது மனதிற்கு அமைதியையும், ஆனந்தத்தினையும் தந்து பூரணத்தை நோக்கி செலுத்தும் பண்புள்ளதாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். மற்ற பொழுதுபோக்கு இலக்கியம் கலை என்பவை போலி இலக்கியம் என்கிறார். அப்படி படைக்கப்படுபவை மக்களை மயக்கத்தில், கனவில் ஆழ்த்தி தமது காரியங்களை சாதித்துக்கொள்ளும் என்கிறார். 
இலக்கியம் என்பது மனிதனின் பூரணமின்மை என்ற நோயைப்போக்கும் மருந்தாக இருக்க வேண்டும் என்பதை நிறுவுகிறார். 
இந்தப் பார்வை தற்காலத்தைய தமிழ் சமூகத்தின் பொழுதுபோக்குகளான சினிமா, நாவல் போன்றவற்றின் இரசனையையும் அது சமூகத்தின் மன நிலைக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சிந்திப்பதற்கான ஒரு அடிப்படையைத் தருகிறது. 
உதாரணமாக சினிமா என்பது மனித மனத்தின் மகிழ்ச்சி, ஆனந்தம், அமைதி என்பவற்றை தருவதற்கான ஒரு கலைப்படைப்பாக இருக்கிறதா, அல்லது பகை, குரோதம், பழிவாங்கல், சண்டை சச்சரவுகளை தூண்டுவதற்கான வழிகோலிகளாக இருக்கிறதா என்பதை நிதானிக்க, சிந்திக்க இந்த மெய்யுள் கோட்பாடு உதவுகிறது.

Sunday, February 10, 2019

தலைப்பு இல்லை

எந்த ஒரு அறிவும், ஞானமும் தூய்மையானதும், ஆரோக்கியமானதும், அனைவருக்கும் நலனைத் தரும் ஆற்றலுள்ளதாகவுமே உண்மை இயல்பில் இருக்கிறது. 

இதை சூழ்ச்சியுள்ள மனம் உடைய மனிதர்கள் தமது அறியாமையால் அதிகாரப்பசிக்காக வளைக்கும் போதும் போலியான மனமாயைகளால் பார்க்கும் போதும் அவை கெட்டுப் போய் விடுகிறது.

முற்காலத்தில் வைத்தியன், வித்தை சொல்லும் ஆசிரியன் எல்லோருக்கும் சமூகத்திற்கு களங்கமற்ற மனதுடன் சேவை செய்ய அரசனால் தேவையான அளவு மானிய நிலம் வழங்கப்பட்டிருந்தது. இந்த மானிய நிலத்தின் விளைச்சலின் வருமானமே அவருக்குரிய செல்வத்தை ஈட்டுமே அன்றி வைத்தியமோ, கல்வியோ வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கவில்லை. ஆசிரியனுக்கும் வைத்தியனுக்கும் தான் செய்யும் சேவையால் இலாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் அந்த சேவையில் நோக்கம் கெட்டுப்போய் விடும் என்ற உண்மை அறிந்ததால் இந்த ஏற்பாடுகள்!

இன்று கல்வியும், மருத்துவமும் வருமானம் ஈட்டும் தொழிலாகிவிட்டதால் கல்வியில் இலாபம் சம்பாதிக்க புதுப்புது உத்திகள், புதுப்புது பட்டங்கள் எல்லாம் உருவாக்கி சிந்தனைத் திறனை மழுங்கடித்து மந்தைக் கூட்டத்தை உருவாக்கும் உலகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. 

மருத்துவத்தில் sales representative என்ற தொழிலே விந்தையானது, நோய் தீர மருத்துவம் என்றால் ஏன் மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும். மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் நோய் கூட வேண்டுமல்லவா? 

வைத்தியோ நாராயணோ ஹரி - வைத்தியன் நாராயண அம்சமான ஹரி என்ற நிலை மாறி இன்றைய வைத்தியனுக்கு நோயாளி இலாபம் சம்பாதிக்கும் கறவை மாடாகிவிட்டான்! 

குரு ப்ரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வரஹ என்ற நிலையில் முற்காலத்தில் குருவே ஒருவனின் முன்னுதாரணம். ஆசிரியனே மாணவனின் தாயும் தந்தையும்! இந்தப் பண்பும் உணர்வும் மாறி நான் காசு கொடுக்கிறேன், நீ படிப்புக் கொடுக்கிறாய், வகுப்பு முடிந்தால் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணம் மாணவனுக்கும், ஆசிரியருக்கோ தனது கை நிரப்பினால் போதும் என்ற மனதையும் உருவாக்கியுள்ளது!


தலைப்பு இல்லை

English Writings - 02

Those who are interested in reading the article on "Pranayama- An Introduction " please find in this link:

https://www.dropbox.com/.../Pranayama-%20an...


தலைப்பு இல்லை

இந்த நூல் சென்ற முறை மதுரை மீனாட்சி அம்மையை தரிசித்துவிட்டு வெளியே வந்த போது இருந்த புத்தக நிலையத்தில் நண்பர் Karthik உடன் சென்று துலாவியபோது கையில் கிடைத்தது! பல மாதங்களுக்குப் பிறகு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது கைகளில் கிடைத்தது. 

ஜெயமோகன் முன்னுரை எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

மிகச் சுவாரசியமான புத்தகம், புத்தகத்தை கீழே வைக்காமல் 100/249 பக்கங்கள் படித்தாயிற்று. 

இந்திய வேளாண் மரபு, வேளாண் வரி - சுரண்டலின் தொடக்கம், வேளாண் அறிவியல், இயற்கை நியதிகளின் மீறல், இந்திய வேளாண்மையின் சரிவு, நவீன வேளாண்மையின் ஊடுருவல், உணவுப் பற்றாக்குறை உண்மை நிலை, சுதந்திர இந்தியாவின் வேளாண்மை, அமெரிக்க உணவு உதவியும், PL 489 உம், வீரிய விதைகளின் தொழில் நுட்ப வரலாறும், பசுமைப் புரட்சி இந்தியாவில் அரங்கேறிய கதை, மாயச் சுழலில் சிக்கிய விவசாயம், இன்றைய வேளாண் நெருக்கடி, சர்வாதிகாரத்துக்கு வன்முறை, எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம், சமுதாய மாற்றத்திற்கான அடிப்படை, வேளாண்மையின் இறுதி லட்சியம் என்ன? என 17 தலைப்புகளில் சுவாரசியமாக கதையாக சொல்லுகிறது. 

நவீன சிந்தனையால் கவரப்பட்டு பாரம்பரிய அறிவியலை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். 

பாரம்பரியம் என்றவுடன் கண்ணை மூடிக் கொண்டு வக்காளத்து வாங்காமல், அதேவேளை பாரம்பரியத்தின் ஞானத்தை மறுக்காமல் அழகாக கருத்துகளை முன்வைக்கிறது.

இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்!


தலைப்பு இல்லை

English writings - 01

Those who are interested in reading the article on "Konganava Siddhar’s Bālā Upasana" please find in this link: 

https://www.dropbox.com/.../Bala%20Upasana%20of...


தலைப்பு இல்லை

இன்று பலர் தம்மை ஆன்மீகத்தில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்! இப்படி தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது உண்மையில் நான் குழப்பமாகி விடுகிறேன்! 

ஒருமுறை ஒரு அன்பர் தன்னை உங்களைப் போன்று நானும் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு நான் சிரித்துக் கொண்டு நான் ஆன்மீகத்தில் இல்லை! என்றேன். அவருக்கு திகைப்பாகிவிட்டது! அது எப்படி நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றித் தானே எழுதுகிறீர்கள்! பிறகெப்படி ஆன்மீகவாதி இல்லை எனலாம் என்றார்! எனது பதில் நான் ஆன்மீகம் எழுதவில்லை, எனக்கு மிகப் பிடித்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன், நீங்கள் அதை ஆன்மீகமாகப் பார்க்கிறீர்கள் என்றேன்! 

பலர் ஆன்மீகம், லௌகீகம் என்று தம்மை வேறுபடுத்தி உயர்வாக காட்டினால்தான் தாம் உயர்கிறோம் என்று நினைப்பது மனதின் ஒரு மாயை! 

மனதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறி முறையையே ஆன்மீகம், மனதை உயர்ந்த சிந்தனைக்கு செலுத்தாத எதையும் ஆன்மீகம் என்று சொல்ல முடியாது! ஆக ஆன்மீகத்தின் எளிய விளக்கம் உணர்வாகிய ஆன்மாவை எதுவெல்லாம் உயர்ந்த நிலையில் வைக்கிறதோ அதுவெல்லாம் ஆன்மீகம். 

மனம் தனது புலன்களின் வழி புற உலக இன்பத்தை அனுபவிக்கும் நிலையையே லௌகீகம் என்கிறோம். இந்த அனுபவம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை! 

லௌகீகம் மண் என்றால் ஆன்மீகம் செடி!

மண் இல்லாமல் செடி முளைக்காது, 

ஆனால் மண் செடியை அழிக்காத தன்மையுள்ளதாக, வளர்க்கும் வழியாக இருக்க வேண்டும். 

செடி வளர வேண்டும் என்றால் மண்ணைத் தான் சரியாக பதப்படுத்த வேண்டும். ஆக ஒருவன் தனது உலக வாழ்வாகிய மண்ணை சரியாக பண்படுத்த மனம் செம்மையாகி உணர்வு உயரும். 

பலர் ஆன்மீகம் என்று தமது உலக வாழ்க்கையாகிய மண்ணை பாலைவனமாக்கி வளமற்றதாக்கிவிடுவதையே இன்று நாம் காண்கிறோம்! இப்படி ஆகிய பின்னர் அதில் எந்த விதையையும் விதைக்க முடியாது!


ஆன்மீகமும் லௌகீகமும்

இன்று பலர் தம்மை ஆன்மீகத்தில் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்! இப்படி தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உண்மையில் நான் குழப்பமாகி விடுகிறேன்!
ஒருமுறை ஒரு அன்பர் தன்னை உங்களைப்போன்று நானும் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு நான் சிரித்துக்கொண்டு நான் ஆன்மீகத்தில் இல்லை! என்றேன். அவருக்கு திகைப்பாகிவிட்டது! அது எப்படி நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றித்தானே எழுதுகிறீர்கள்! பிறகெப்படி ஆன்மீகவாதி இல்லை எனலாம் என்றார்! எனது பதில் நான் ஆன்மீகம் எழுதவில்லை, எனக்கு மிகப்பிடித்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன், நீங்கள் அதை ஆன்மீகமாகப் பார்கிறீர்கள் என்றேன்!
பலர் ஆன்மீகம், லௌகீகம் என்று தம்மை வேறுபடுத்தி உயர்வாக காட்டினால்தான் தாம் உயர்கிறோம் என்று நினைப்பது மனதின் ஒரு மாயை!
மனதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறிமுறையையே ஆன்மீகம், மனதை உயர்ந்த சிந்தனைக்கு செலுத்தாத எதையும் ஆன்மீகம் என்று சொல்ல முடியாது! ஆக ஆன்மீகத்தின் எளிய விளக்கம் உணர்வாகிய ஆன்மாவை எதுவெல்லாம் உயர்ந்த நிலையில் வைக்கிறதோ அதுவெல்லாம் ஆன்மீகம்.
மனம் தனது புலன்களின் வழி புற உலக இன்பத்தை அனுபவிக்கும் நிலையையே லௌகீகம் என்கிறோம். இந்த அனுபவம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை!
லௌகீகம் மண் என்றால் ஆன்மீகம் செடி!
மண் இல்லாமல் செடி முளைக்காது, ஆனால்
மண் செடியை அழிக்காத தன்மையுள்ளதாக, வளர்க்கும் வழியாக இருக்க வேண்டும்.
செடி வளரவேண்டும் என்றால் மண்ணைத்தான் சரியாக பதப்படுத்த வேண்டும். ஆக ஒருவன் தனது உலக வாழ்வாகிய மண்ணை சரியாக பண்படுத்த மனம் செம்மையாகி உணர்வு உயரும்.
பலர் ஆன்மீகம் என்று தமது உலக வாழ்க்கையாகிய மண்ணை பாலைவனமாக்கி வளமற்றதாக்கிவிடுவதையே இன்று நாம் காண்கிறோம்! இப்படி ஆகியபின்னர் அதில் எந்த விதையையும் விதைக்க முடியாது!

தலைப்பு இல்லை

உலகில் ஒரு சிலர் இறைவனின் அருள் பெற்றவர்களாகவும் சிறப்பானவர்களாகவும் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே முதல் மடமை! 

அனைவரும் சிறப்பாகவும், அருள்  பெற்றவர்களாகவுமே இருக்கிறார்கள். தமது மனதையும், உடலையும், ஆற்றலையும் எப்படி பயன்படுத்துவது என்பதை சரியாக அறிந்தவர்களாக இருப்பதில்லை! இப்படித் தெரிந்துக் கொண்டவர்கள் மேலும் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள்.

தலைப்பு இல்லை

என்னைப் பொறுத்த வரையில் உலகில் மிகவும் சுவாரசியமானது மனிதன் முன்துணிபுடன் (prejudice) எதையும் அணுகுவது! 

அடிப்படையில் மனித மனம் இப்படிப்பட்ட முன் துணிபினைத் தான் விரும்புகிறது. மனதின் இந்த இயற்கையால் தான் ஜோதிடம்  அனைவராலும் விரும்பப்படுகிறது. 

ஆனால் எந்த முன் துணிபும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதில் தான் ஒருவன் தனது இச்சா சக்தியை (will power) பயன்படுத்தி வெற்றி காணமுடியும். 

முன்துணிபு தர்க்க மனதின் கூறு!

இச்சாசக்தி தெய்வ மனதின் கூறு!


தலைப்பு இல்லை

வெகுவிரைவில்..

Saturday, February 09, 2019

தலைப்பு இல்லை

எங்கள் குடும்பத்தில் எமது தலைமுறையின் கடைக்குட்டி Haréyharéñ Panchendrarajan இன்று தனது முதலாவது சிறுவர்களுக்கான கதை நூலை வெளியிட்டுள்ளான். 

எழுதுகோலில் எனது சிறகுகள் என்று பெயரிடப்பட்ட நூலில் 54 பக்கங்களில் 40 தலைப்புகளில் சிறு குட்டிக் கதைகள், தனது பாடசாலை அனுபவம், மாத்தளை தேர்த்திருவிழா, தனது எழுத்திற்கு உத்வேகமாக இருந்த பேராசிரியர் என். சோதி அவர்களைப் பற்றி என சுவாரசியமாக எழுதியுள்ளான். 

நாளைய உலகம், போதைப் பொருள் அற்ற சமூகம் போன்ற சமூக சிந்தனையையும் கூறியுள்ளான். 

இன்னும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்களும்! ஆசிகளும்!

அவனது திறனை வெளிக் கொணர்ந்த அதிபர் திரு. கணேசமூர்த்தி ஐயா அவர்களது ஊக்கமும், மாத்தளை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர்களில் சிறப்பாக செயலாற்றும் Dinesh Kanna அவர்களும் முக்கியமானவர்கள்! 

Friday, February 08, 2019

தலைப்பு இல்லை

With the blessings of my Guru, my first full English article (in Spiritual writing) was published in Kumbabisheka Souvenir of Devipuram. 

About Will of Divine called - Bala  

Article talk about decoding some of the siddha tradition jargon of Konganava Siththar! 

With Her grace this year planning to write more on English!

Thank you Amma Rama Kandarpa


தலைப்பு இல்லை

விஞ்ஞான பைரவ தந்திரத்தின் முதல் மூன்று உத்திகள் உள் மூச்சு வெளி மூச்சினை கவனித்தல்! இந்த உத்தியே புத்த பகவான் பயன்படுத்திய தியானமுறை! இதை பாலியில் ஆனா பானா ஸதி என்று கூறுவார்கள். ஆனா என்றால் உள்மூச்சு, பானா என்றால் வெளிமூச்சு, ஸதி என்ற விழிப்புணர்வு அல்லது கவனித்தல்! 

இதுவே சித்தர்களின் வாசியோகத்தின் அடிப்படை முதல் பயிற்சி! ஆக வேர்கள் ஒன்றாக இருக்க கிளைகள் பல! 

புத்தரிற்கு தாமரையை படைத்தல் ஒரு குறியீடு! 

சேற்றிலிருந்த தாமரை சூரியனைத் தேடி தன்னை மலர்விக்க எழுவது போல், ஒருவன் உலக துன்பங்களைத் தாண்டி தன்னை ஞானத்தில் மலர்விக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு. 

காயத்ரி, லக்ஷ்மி போன்ற தெய்வங்கள் தாமரை மேல் அமர்ந்திருத்தல் என்பதன் குறியீட்டு விளக்கமும் ஒருவன் தனது உடல் வாழ்க்கையில் உள்ள அசுத்தங்களை நீக்கி தன்னில் தெய்வ சக்தியை மலர்விக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே! 


தாமரையைப் படைத்து குறித்த குணங்களை எம்மில் விழிப்பிக்கச் செய்ய வேண்டுகிறோம். 

வெண்தாமரை - மனச்சுத்தி

செந்தாமரை - அன்பும் கருணையும்

நீலோத்பலம் - அறிவுடன் ஞானத்தைப் பெறல்

ஊதா - விழிப்புணர்வு

நேற்று அனுராதபுரத்தில் புத்தர் பரிபூரண விழிப்புணர்வு பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையின் கீழ் எதிர்பாராத விதமாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தரிற்கு வெண்தாமரை மலர் படைத்தல் மனச் சுத்திக்கான வேண்டுதல்!


Wednesday, February 06, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 09

தாந்திர மார்க்கம் பற்றி பலரும் பலவாறாக கற்பனை செய்ய முடியும், அதைப் பற்றிய சிறிது புரிதலுடன் விஞ்ஞான பைரவ தாந்திரத்தை அணுகுதல் பலன் தரும். 
தாந்திர மார்க்கம் என்பதை இன்று பலரும் ஏதோ தவறான மார்க்கம் என்பது போலவும் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகவும் எண்ணுகிறார்கள். 
இது பல மேலைத்தேய அரைவேக்காடுகள் இந்தச் சொல்லை தவறாக விளம்பரப்படுத்தி கூகுள் பூராகவும் இதைத் தேடினால் காமம் சார்ந்த விளக்கமாக வர வைத்திருப்பதிலிருந்து உருவான அபிப்பிராயமாக இருக்கிறது.  
தாந்திரம் அல்லது தந்திரா என்பது உத்தி (technique) என்று பொருள். எதற்கான உத்தி அறிவினை, விழிப்புணர்வினைப் பெறுவதற்கான உத்தி {விஞ்ஞான பைரவ தாந்திரத்தின் படி}! 
மனிதன் தனது புலன் வழி சென்று தான் யார் என்ற உண்மை உணர்வை இழந்து துன்பப்படுகிறான். அவன் அத்தகைய நிலையில் அவனது உண்மை நிலை என்ன என்பதைக் கூறினால் குழப்பமும் பயமும் அடைவான், அதாவது சதா காமத்திலும், உலக இன்பங்களிலும் மூழ்கி துன்பத்தை இன்பம் என்று எண்ணியிருக்கும் ஒருவனிற்கு " நீதான் பிரம்மம்" நீ விழிப்புணர்வு அடைந்தால் உன்னில் இருக்கும் இந்த உலகைப் படைத்த மூலசக்தியை அறியலாம் என்றால் "அட போடா, உலகைப்படைத்த மூலசக்தியாவது மண்ணாங்கட்டியாவது" என்று கூறிவிட்டு மீண்டும் தான் செய்வதை செய்து கொண்டு தான் இருக்கப் போகிறான். 
ஆக தந்திரா ஒருவனது இயல்பிற்கு தகுந்து அந்த நிலையில் அவன் செய்யும் செயலை விழிப்புணர்வுடன் செய்துவரும் படி உத்திகளை போதிக்கிறது. 
ஒரு மனிதனுக்கு தெரிந்த புலன்களால் உண்மை என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்தம் அவனது உடல், ஆகவே தந்திராவின் உத்திகள் உடல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அறுதியான விழிப்புணர்வை பெற வைப்பதே தாந்திரீகத்தின் நோக்கம். 

அடுத்த நிலையில் மனதும் உணர்ச்சிகளும் மனிதனது சிக்கல்களை உருவாக்குகிறது. ஆக அதை தூய்மைப்படுத்தும் நடைமுறைகளை தாந்திரம் போதிக்கிறது! 
உத்திகளைப் போதிக்கும் முறை என்ற அடிப்படையில் இந்த வழியில் self style approach இல்லை! குறித்த உத்திகளில் சித்தியடைந்த வழிகாட்டி - குரு இல்லாமல் பயணிக்க முடியாது. குருவுடன் பயணிப்பதற்கு குறித்த மனப்பாங்கு அவசியம்! அந்த மனப்பாங்கு இல்லாமல் உத்திகள் புரியாது. ஆகவே தாந்திரத்தில் மனப்பாங்கு அல்லது பாவம் (Bhava) என்பது முக்கிய பங்களிக்கிறது. 
ஆக சரியான பாவம் - மனப்பாங்கு இல்லாமல் தாந்திர வழிகள் சித்தியைத் தராது.

Tuesday, February 05, 2019

நான் ஏன் எழுதுகிறேன்? - 03

அடிப்படையில் எழுதுவதற்குரிய உத்வேகம் எமது அகத்திலும் புறத்திலும் நடைபெறும் விஷயங்கள் சார்ந்து எமது மனதை சிந்திக்க தூண்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது!

எமது சிந்தனைகள், கேள்விகளுக்கான, தேடல்களுக்கான முதல் படி எம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் உரையாடுவதில், கேள்வி கேட்பதில் ஆரம்பமாகிறது. இதில் திருப்தியான பதில் கிடைக்காமல் மேலும் தேடல் அதிகரிக்க, ஆழமான புரிதலைப் பெற வாசிப்பிலும், நூல்களைப் படிப்பதிலுமாக முன்னேறுகிறது. 

மிகச் சிறிய வயது முதல் நூற்களால் நிரம்பிய வீட்டில் வாழ்ந்த ஞாபகம் என்னுள் தாக்கம் செலுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு அறை நிறைய மாமாவின் சோவியத் ரஷ்ய நூற்களும், மார்க்சிச நூற்களும் நிரம்பி மார்க்ஸ் - எங்கல்ஸ், மாக்சிம் கார்க்கி போன்ற பெயர்களை பார்த்த ஞாபகம்! இன்னொருபுறம் அம்மாவின் சித்த மருத்துவப் புத்தகங்கள். 

எனது சிறுவயது வாசிப்பு கேள்வி, தேடல் ஆர்வம் சித்தர் பாடல்களிலும், மருத்துவத்திலும், சரித்திர நூற்கள், புராணக்கதைகள், அறிவியற் கோட்பாடுகளை வாசிப்பதிலும் ஆரம்பமாகியது. இந்த சிறுவயது வாசிப்பு ஆர்வத்தில் சரித்திரம் படிக்கும் ஆர்வம் மட்டும் குறித்த காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விட்டது! ஏனென்றால் சரித்திரம் என்று எழுதப்படுவது உண்மைச் சரித்திரத்தில் எள்ளளவும் தொடர்பில்லாமல், ஒரு சாராரின் கதையைச் சொல்லும் பெருமை கூறல்களுமாகவும், அதிகாரத்தையும், ஆணவத்தையும் நிறுவும் ஒன்றாகவுமே எனக்குப் பட்டது. ஆனால் ஒரு சமூகத்தின் அறிவியலுக்கான, அறிவிற்கான கூறு சரித்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் என்பது மறுப்பதற்கில்லை! 

ஒரு விஷயத்தின் மேலோட்டமான புரிதலை என்னால் எப்போதும் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை! உதாரணமாக ஒரு விஷயத்திற்கு இது தான் ஒரே காரணம் என்ற ஒன்று ஒரே வரியில் இருப்பதாக ஒரு போதும் நான் நம்பியதில்லை! சிறுவயது முதல் ஒரு விஷயத்தை எடுத்தால் அதன் முழுமையான புரிதலையும் பெறவேண்டும் என்ற முயற்சி ஆழமாக இருந்தது. அதற்கான விடாப்பிடியான முயற்சியும் மன ஒருமையும், ஞாபக சக்தியும் வாய்த்திருந்தது. 

உலகமும், எண்ணங்களும், பல் பரிணாமத்தில் இயங்குபவை என்பதையும் ஒன்றுடன் ஒன்று இடைத் தொடர்படைந்து கொண்டிருப்பவை என்பதையும் எப்போதும் உளமார நம்பினேன். அதற்குரிய தேடல்களாக அறிவியலையும், மறையியலையும் படிக்க பெரிதும் ஆர்வம் காட்டினேன்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...