இன்று எமது திருமண நாள்
திருமணம் ஒரு தளை
அன்புத் தளை, முரண்பட்ட இரண்டு உள்ளங்கள்
தமது முரண்பாடுகளை அன்பினால்
ஒன்றிணைத்து முரண் நீக்கும் பந்தம்
உடல் தாண்டி உள்ளமும், ஆன்மாவும் இணையவில்லை என்றால் வாழ்க்கை என்பது போராட்டம்!
ஆண் விதை பெண் மண்
விதை வீரியமாக இருந்தாலும் மண் பண்பற்று இருந்தால் மக்கச் செய்யும்!
மண் பண்புடன் இருந்தாலும்
விதை வீரியமில்லையேல் முளையாது!
மண்ணில்லாத புவியில் செழுமையில்லை!
பெண்ணில்லா வாழ்க்கையில் முழுமையில்லை!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால்,
அவனுக்கு வேறு நெறிகள் எதற்கு!
இல்லறமல்லது நல்லறமன்று
காண்போர் எல்லோருக்கும் பரிபூரண லக்ஷ்மி கடாக்ஷமும்
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா
என அன்னையிடம் பிரார்த்திக்கிறோம்!
அனைவருக்கும் பேரன்புகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.