இந்த
தியானம்
சாதகனை
புலனடக்கி
மெய்
ஞானத்
தேடலில்
செலுத்தி,
நுண்மையான
புலனறிவினைக்
கொடுத்து
அதனால்
அறிவு
சிறப்படைந்து
புகழ்
தரக்கூடிய
காலபைரவ
தியானம்
இது.!
ஒருவன்
ஒரு
விஷயத்தில்
சிறப்பறிவு
பெறவேண்டும்
என்றால்
அவன்
தன்
புலன்
களை
அடக்கி
கவனத்தைக்
கூட்டி
மன
ஏகாக்கிரமடையச்
செய்து
தவம்
செய்யும்
ஆற்றல்
பெறவேண்டும்.
தவம்
என்றவுடன்
கண்களை
மூடி
பட்டையும்,
ருத்திராட்சக்
கொட்டையும்
போட்டுக்கொண்டு
வேஷங்கள்
தரித்து
காட்டில்
சென்று
கண்மூடி
இருப்பதல்ல!
மனதின்
எண்ணச்
சுழல்களைக்
குறைத்து,
கவனத்தை
நாம்
ஒரு
விடயத்தின்
மீது
செலுத்தி
அதில்
பரிபூரண
அறிவும்
அந்த
அறிவால்
பெறும்
ஆற்றலும்,
இதனால்
பெறும்
புகழும்
தவத்தால்
கிடைப்பதாம்.
இத்தகைய
ஆற்றல்
நமக்குள்
விழிப்புணர்வு
ஏற்பட்டால்
மாத்திரமே
நடக்கும்!
இந்த
விழிப்புணர்வு
நிலையைத்
தருவது
பைரவரே!
நீண்ட
தவம்
புரியும்
ஆற்றல்
ஒருவனுக்கு
பைரவரின்
அருளாலேயே
கிடைக்கிறது.
நெறியும்
பொறியுந்
தவமுமெய்ஞ்
ஞானமும்
நீடறிவும்
பொறியும்
புகழுங்
கொடுத்தருள்
வாய்புரங்
காய்ந்தவனே
குறியுங்
குணமுங்க்
கடந்தவனே
குழக்கன்று
கட்டுந்
தறியின்
கண்வந்தயவனே
காழி
யாபதுத்
தாரணனே
மனதை
நேறிப்படுத்தும்
ஆற்றலும்
பொறிகளை
அடக்கி
தவஞ்செய்யும்
ஆற்றலும்
அந்த
தவத்தால்
கிடைக்கும்
மெய்
ஞானமும்,
ஆழமான
அறிவும்
இவற்றால்
வரும்
புகழும்
கொடுக்தருள்வாய்
முப்புரங்களைக்
காய்த்தவனே
–
எரித்தவனே!
இந்த
வடிவம்
என்று
குறிப்பிட
முடியாமலும்
முக்கணங்களைக்
கடந்த
நிலையில்
இருப்பவனே
இளம்
கன்று
தறிகெட்டு
ஓடுவதுபோல்
இருக்கும்
என்னைக்
காத்து
அபயம்
தருவாய்!
சீர்காழிப்பதி
உறையும்
ஆபத்து
தாரண
பைரவ
மூர்த்தியே
உம்மை
நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
06}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.