குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 27, 2021

தலைப்பு இல்லை

நகர சூழல் முகாமைத்துவம் - பருந்துப் பார்வை

#climathontalks

29.09.2021 (புதன்கிழமை), இரவு 7.30 மணிக்கு

அதிதிப்பேச்சாளர் :

திரு.த.சுமனேந்திரன்

சூழலியலாளர்

இயக்குநர், ஶ்ரீ சக்தி சுமனன் நிறுவகம்

பதிவுகளை மேற்கொள்வோருக்கு, மின்னியல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பதிவுகளிற்கு :

https://forms.gle/YkaaeYXnbTMabvct7

Zoom ID & Link :

Meeting ID: 881 2294 6974

Passcode: jaffna2021

https://us02web.zoom.us/j/88122946974...


Sunday, September 26, 2021

தலைப்பு இல்லை

வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மக்களுக்கான சூழலியல் நிகழ்வின் இன்றைய உரையின் சுருக்கம் படங்களாக!

பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா அவர்கள் நவீனகால இயற்கை வழி விவசாயம் பற்றி விரிவான தத்துவ, கோட்பாடுகள், வரலாறு, சாத்தியங்கள், போலி நம்பிக்கைகள் பற்றி ஆழமாக உரையாற்றி இருந்தார். 

சேதன விவசாயம் என்ற பதம் எப்படி குழப்பங்களைத் தோற்றுவிக்கிறது; இயற்கை வழி விவசாயம் தான் சரியான பதம் என்பதையும் விளக்கி இருந்தார்கள்.


Saturday, September 25, 2021

தலைப்பு இல்லை

எனது குருநாதரின் நினைவு நாள் நேற்று! 

அனுதினமும் குருவை நினைக்கையிலே நினைவு நாள் என்ற ஒன்றை பூரித்து போடுதல் என்பது முரணான ஒன்றாகத் தோன்றியது! 

சாமி அடிக்கடி சொல்வது, அவரது குரு சொல்லும் வார்த்தை "என்னுடைய குருநாதர் இவர் என்று குருவைச் சொல்லி நமக்கு மதிப்புத் தேடாமல், மாணவன் தனது சாதனையிலும், அறிவிலும் உயர்ந்து இவரது குரு யார்?" என்று அனைவரும் வியக்கும்படி ஒவ்வொரு மாணவனும் வாழ வேண்டும் என்பது, அருள் முருகேசு அத்தகைய மாணவர்" என்பாராம் ஸ்ரீ கண்ணைய யோகியார். 

இப்படியொரு மாணவனாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா! 

இன்று குருவைத் துதிக்கிறோம், வணங்குகிறோம் என்று அவரவர் உணர்ச்சிகளுக்கு அமைய ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைச் செய்தாலும் குருகாட்டிய வழியில் தினசரி நடக்கிறோமா என்பதே உண்மையான குருபக்தி! 

********************************************

கீழே பதிவில் குருநாதர் தான் உடல் விட்டு நீங்கப்போவதைப் பற்றிய என்னுடனான உரையாடலைப் பதிவு செய்துள்ளேன்!


காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 11

முற்பகுதிகள்
பகுதி - 10



சாமி காலையில் எழுந்தவுடன் தேனீர் கொடுத்துவிட்டு தண்ணீர் சுடவைக்க ஹீட்டரை குளியல் அறையில் போட்டு தேனீர் குடிக்கும் வரை ஏதாவது சிறு உரையாடல் நடக்கும். பொதுவாக அன்றைய நிகழ்வு, ஆசிரம முரண்பாடுகள் ஏதும் இருந்தால் அதுபற்றியதாக இருக்கும். இல்லை என்றால் சாமி அமைதியாக தேனீர் குடிக்கும் போது ஏதாவது சாதனை பற்றிய கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் அமைதியாகச் சொல்லுவார். அதன் பிறகு சாமி எழுந்து குளிக்கச் செல்ல, நான் தேனிர் கோப்பையை எடுத்துக்கொண்டு கதவை மூடிவிட்டு வந்து விடுவேன். சாமி குளித்த பின்னர் தியனத்திற்கு அமர்வார். தியானம் முடிவதற்குள் நான் குளித்து தயாராகி காத்திருப்பேன். 

வெளியே வந்து அன்றை தோட்ட வேலையாட்களுக்குரிய உணவு, வேலை ஆகியவற்றை திட்டமிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கோயிலிற்கு போய் கணபதி, ம்ருத்யுஞ்ஜெய தேவன், முருகன், காயத்ரி, அகத்தியர், இராமர், மகாவிஷ்ணு, விஸ்வாமித்திரர், ராதா கிருஷ்ணர் என்று எல்லோரையும் வணங்கி விட்டும், காளி, வெங்கடாஜலபதி சன்னதிக்குச் சென்று விட்டு ஆசிரமத்திற்கு வந்து உணவருந்துவார். உணவருந்தும் போது எமக்கு உணவு போட்டுத்தந்து விட்டு எம்மைச் சாப்பிட உட்காரவைத்துவிட்டுத்தான் தான் அருந்துவார். பொதுவாக ஆசிரமம், ஆன்மீகம் என்றால் உபவாசம் என்று எண்ணுபவர்களுக்கு சாமியிடம் சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும்! மூன்று நேரமும் வயிறாற சாப்பிட வைப்பார். 

உணவு முடிந்தவுடன் கதிரையில் வந்து அமர்ந்தால் உரையாடல் தொடங்கும். இப்படி ஒரு நாள்; சரியாக சாமி சமாதியாகுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்படி காலை உணவு உண்டபின்னர் அமருந்திருக்கும் போது, சாமி தனக்கே உரிய சிரிப்புடன் "தம்பி, குரு நாதர் விசா கொடுத்துவிட்டார் அப்பா! எல்லா  வேலையும் கெதியா (விரைவாக) முடிக்க வேண்டும் அப்பா" என்றார்.  நான் பதட்டத்துடன் "என்ன சாமி?" என்றேன். 

அதற்கு சுவாமி "இன்று தியானத்தில் குரு நாதர் மூன்று விரல்களைக் காட்டி காலம் முடிந்துவிட்டு தயாராகு என்று சொன்னார் அப்பா" என்று தனது மூன்று விரல்களைக் காட்டி குறும்புச் சிரிப்போடு சொன்னார். 

அதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்? 

போக வேண்டிய நேரம் வந்தாயிற்று என்றார். 

அப்படியென்றால் மூன்று விரல் காட்டியதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்.

தெரியவில்லை அப்பா, மூன்று நாளோ, மூன்று மாதமோ, மூன்று வருடமாகவோ இருக்கலாம் என்றார்! 

அப்படிச் சொன்னவுடன் எனக்கு கண்கள் பனித்து அழுகை வந்து விட்டது. எனக்கு பேச்சு நின்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்றவுடன் சாமி ஆறுதலாக "வந்த வேலை முடிந்தால் செல்லவேண்டியதுதானே அப்பா, இந்த உடலில் என்ன பற்று?" என்றார். 

இல்லை, சாமி, உங்களின் ஆயுள் 77 என்று கண்ணைய யோகியார் கணித்திருக்கிறார். நீங்கள் சொல்லும் கணக்குப் படி பார்த்தால் அது பிழையாகிறதே என்றேன். 

தெரியவில்லை அப்பா! குரு நாதருக்கே வெளிச்சம் என்று அந்தப் பேச்சினை முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பேச்சிற்கு சென்று விட்டார். 

இதற்குப் பிறகு துரிதமாக பல வேலைகள் தந்தார்; பதிப்புக்கு வராத பல யோக நூற்கள் பதிப்பித்தோம். சாதனை செய்யச் சொன்னார். 

இதே போல் இன்னுமொரு நாள் அமைதியாக அமர்ந்திருக்கும் போது கடல் கடந்த தேசத்தில் தான் எனது உயிர் பிரியும்" என்று அமைதியாகச் சொன்னார். 

சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு, சென்னையில் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. 

தலைப்பு இல்லை

வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் சங்கத்தின் "மக்களுக்கான சூழலியல் விஞ்ஞானம் IV" க்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு 2021 புரட்டாசி 26 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஜூம் வழியாக நிகழ்நிலையில் நடைபெறும். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை சமூகத்துடன் அறிவு பகிரும் வகையில் தமிழ் ஊடகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.

தலைப்புகள்:

01. "Organic 3.0: காலநிலைச் சிக்கலைக் கையாளும் வாய்ப்பாக?" 

நடராஜா சிறீஸ்கந்தராஜா, தகைநிலைப் பேராசிரியர், சூழல் தொடர்பாடல் துறை, சுவீடன் விவசாயப் பல்கலைக் கழகம், உப்சாலா 

02. "கழிவிலிருந்து வளங்களை உருவாக்குதல்",

கலாநிதி அனந்தினி நந்தகுமாரன், பீடாதிபதி/ சிரேஷ்ட விரிவுரையாளர், பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியாப் பல்கலைக்கழகம்

தலைப்பு: மக்களுக்கான சூழலியல் விஞ்ஞானம் - IV

நேரம்: புரட்டாசி 26, 2021 பிற்பகல் 09:00

இணைய வழி கூட்டத்தில் இணைவதற்கு:

https://learn.zoom.us/j/68333151774...

நுழைவு எண் : 683 3315 1774

கடவுக்குறியீடு : T^yBB.2J


Tuesday, September 21, 2021

தலைப்பு இல்லை

 Velu Varadhan புருஸ் லீயின் இந்தக் கருத்தினை,

“You must be shapeless, formless, like water. When you pour water in a cup, it becomes the cup. When you pour water in a bottle, it becomes the bottle. When you pour water in a teapot, it becomes the teapot. Water can drip and it can crash. Become like water my friend.”

இன்னும் எளிமையாக விளக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். 

இங்கு கூறப்பட்டிருப்பதை எளிமையாக விளக்குவதாக இருந்தால் பொதுவாக நாம் உடல் ஆரோக்கியம், உடல் பலம் என்பவற்றை நேரடியாக உடலின் தசைகளை வலுப்படுத்துதல் என்று ஆசனங்களாகவோ, உடல் பயிற்சிகளாகவோ ஆரம்பிக்கிறோம். 

இப்படி ஆரம்பிக்கப்படும் பயிற்சிகளால் உடலின் தசைகள் அழகாகும், வனப்பாகும், ஓரளவிற்கு வலிமை பெறும். 

ஆனால் புருஸ்லீயின் ஆராய்ச்சி மனித உடலிற்கு அதியுச்ச ஆற்றலை எப்படிக் கொண்டுவருவது என்பதைப் பற்றியதாக இருந்தது. குறிப்பாக ஆற்றல்களை முஷ்டிக்கு கொண்டுவருவது எப்படி என்பதே அவரது ஆராய்ச்சி; இதனால்தான் தனது பயிற்சி முறைக்கு Jeet Kune Do என பெயரிட்டார். இதன் அர்த்தம் Way of the Intercepting Fist. 

கைகளுக்கு, உடலிற்கு அதீத ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்து வரும் பாதைகளில் இறுக்கம், தடைகள் இருக்கக் கூடாது. உடலிற்கு ஆற்றல் அதிகமாக வரவேண்டும் என்றால் மனம் தூய்மையாக, வெறுமையாக இருக்க வேண்டும். 

இதையே புருஸ்லீ மனதை வெறுமையாக்கி நீரைப்போல் பாய்ந்தோடச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து பிறகு உடல் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இப்படிச் செய்யும் போது மனதின் முழுமையான ஆற்றலை உடலிற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பினார். 

கோபம், பொறாமை, எரிச்சல், குழப்பம், கவலை இவை எல்லாம் மனம் திரவமாக ஓடுவதற்கு எதிரான இறுக்க நிலைகள். இந்த உணர்ச்சிகளை மனதிலிருந்து நீக்குவதன் மூலம் மனதை நாம் நீர்போன்று ஓடச்செய்ய முடியும். அதியாற்றல் உள்ளதாக்க முடியும். இப்படி செம்மைபடுத்தப்பட்ட மனதுடன் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடல் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


புருஸ் லீயும் யோகாசனப் பயிற்சியும்

எமது ஸ்தூல உடல் மொத்தமாக 60% நீரினால் ஆனது; இதில் மூளையும் இதயமும் 73%, நுரையீரல் 83%, தோல் 64%, தசையும் சிறுநீரகங்களும் 79%, எலும்புகள் 31% நீரையும் கொண்டிருப்பதாக நவீன ஆய்வுகள் சொல்லுகின்றன. 

புருஸ் லீ உடலை வேகமாக இயக்குவதற்கு நாம் ஆபஸ் தத்துவம் - நீர் என்ற பஞ்ச பூத தத்துவ நிலைக்கு மனதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். 

இப்படி மனதை நீர்தத்துவ நிலைக்கு கொண்டுசென்றால் மாத்திரமே மனமும் உடலும் ஒன்றிணைந்து வேகமாகச் செயற்படும். ஏனென்றால் உடல் ஏற்கனவே நீர்தத்துவத்தால் நிறைந்திருக்கிறது. 

ஆனால் நாம் பொதுவாக மனம் obsession, rigidity, emotions, guilty, arrogance, pride போன்ற இறுக்கங்களிலேயே வைத்திருக்கிறோம். இவற்றை தந்திரசாஸ்திரம் அஷ்டபாசங்கள் என்று சொல்லும். இவற்றிலிருந்து வெளிப்பட்டு பாய்ந்து ஓடும் நீரைப் போல் மாற்றினால் எதையும் மனம் சாதிக்கும். 

இப்படி உருமாற்றம் பெற்ற மனதையே போர்ப்பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே புரூஸ் லீயின் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தி நீர் போன்று ஓட விடாமல் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் நாம் தேர்ச்சி பெறமுடியாது. அல்லது உடல் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தாது. 

புருஸ் லீயின் இந்தக்கூற்று இன்று யோகாசனங்கள் பயில்பவர்களுக்கும் பொருந்தும். மனதை நீர்போன்று இளக்கத்தெரியாமல் முரட்டுத்தனமாக ஆசனம் செய்பவர்கள் ஆசனங்களின் பலனை அனுபவிப்பதில்லை.


தலைப்பு இல்லை

புரூஸ் லீயைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை! 

போர்க்கலையின் அதியுச்ச ஞானத்தை அனுபவமாகப் பெற்ற ஒருவர்! அவரது Tao of Jeet Kune Do இன் முதல் அத்தியாயம் உடல், மனம், ஆற்றல் ஆகியவற்றை உச்சகட்ட திறனிற்கு எப்படிக் கொண்டு செல்வது என்ற தத்துவங்களின் தொகுப்பு!

நூலின் முதல் பந்தி ஒருவன் போர்க்கலையில் முழுமை பெறுவது பற்றிக் கூறுகிறது. தனியே உடலின் ஒவ்வொரு தசைக்கும் பயிற்சி கொடுத்தால் பூரணத்துவத்தை அடையமுடியாது. மனதை வெறுமைப்படுத்தி எங்கும் நிறைந்த பூரணத்தை உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் நிரப்புவதன் மூலம் மாத்திரமே பூரணத்துவம் பெற முடியும் என்கிறார். 

போர்க்கலையில் ஞானத்தைப் பெறுவதற்கு உண்மை அறிவையும், உண்மையான வாழ்க்கை எது என்பதையும் அறிவதற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து தெளிவற்ற நிலைகளையும் அகற்ற வேண்டும். அதேவேளை இது எல்லையற்ற விரிதலையும் குறிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் ஒரு திறனை மாத்திரம் விருத்தி செய்து பூரணத்துவம் பெறவேண்டும் என்று பயிற்சிக்காமல் பூரணத்துவத்தை எமக்குள் ஏற்றும் ஒவ்வொரு பகுதியையும் அதனுடன் இணைக்க வேண்டும். 

மேலே கூறிய கருத்து யோகத்தில் பூரணத்துவம் பெற சஹஸ்ராரத்திலிருந்து ஸக்தியை அழைத்து உடல் முழுவதும் நிரப்பி எமது குறையான பகுதிகளை பூரணப்படுத்தும் தந்திர சாஸ்திரத்தின் கூற்று!


Monday, September 20, 2021

தலைப்பு இல்லை

நாளை மகாளய பித்ரு பட்ச ஆரம்பம்; இந்தக்காலம் இறந்த எமது முன்னோர்கள் பூமிக்கு வருகை தரும் காலமாகவும், அவர்களை திருப்திப்படுத்தும் தர்ப்பணங்களுக்கு உரிய காலமாகவும் கருதப்படுகிறது. 

வாழ்க்கையில் இன்னல் உறுபவர்கள் இந்தக்காலப்பகுதியில் ஒரு சில சாதனா வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தமது வாழ்க்கை இன்னல்களிலிருந்து வெளிவரலாம். 

சூரிய அஸ்தமனத்தில் சிவபூஜை செய்து அந்த பூஜாபலத்தினை அந்த ஆத்மாக்களுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம்.

சிவபெருமானை ம்ருத்யுஞ்ஜெயராக தியானித்து பித்ரு மோக்ஷ மந்திரத்தின் மூலம் அம்ருதீகரணம் செய்வதன் மூலம் இந்த சாதனையைச் செய்யலாம். 

அனைவருக்கும் உடலைவிட்டு நீங்கிய பித்ருக்களின் ஆசிகள் கிட்ட பிரார்த்தனைகள்!


Saturday, September 18, 2021

தலைப்பு இல்லை

கையில் வந்து சேர்ந்த செல்வப் பினாட்டு! 

பினாட்டு பனம்பழத்தின் களியினை காயவைத்தெடுக்கும் அருமையான சாப்பாடு! 

இது பற்றி தால விலசம் - பனையின் முகவரி என்ற நூலில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இப்படிக் கூறுகிறார்.

செல்வப் பினாட்டின் திறமுரைப்பேன் மெல்லியலே

சுத்தத் தலத்திற் றோடையுயரப் பந்தரிட்டு

மெத்தச் சுசியாய மெழுகியே - யத்திமுகத் 

தைங்கரனைப் பூசனை செய்தையா பனைப்படைப்பை

யிங்கிதமாய்க் காப்பா யெனத்தொழுது - பங்கமின்றி

வெட்டிப் பழுத்தகனி வீழ்கனிக ளைக் கழுவித் 

தட்டி நெகிழ்த்துரித்துத் தாண்டடுக்கி வட்டக் 

கடகங் களிலிட்டு காடிவடித் தூற்றித் 

திடமாகச் சேர்த்துப் பிசைந்து - கொடுமிடிமை 

துன்று நலத்தைத் துருவி யுறப்பதுபோல்

ஒன்று களியை யுறந்தெடுத்து - நன்றாகப்

பின்னுமொரு கால்வேறு பெட்டியிலிட் டுப்பிசைந்து

மன்னுங்க் களிப்பிழைந்து வார்த்தொன்றய்ச் சொன்னபடி

கிஞ் ஞாஞ்ச் செடியின் கிளைக்கூட்டடி னாற்றுழவி

யெஞ்சாது குந்தை யெடுத்தெறிந்து செசெசவே

உன்னஞ்ச்செய் பந்தர் முழமா றிரண்டுடைய

பன்னஞ்ச்செய் பாய்மேற் பரவியே நன்னயமாய்

மாலை மடித்து வழி நாட் சுடர்தோன்றுங்

காலை விரித்துக் களிபரவி - மேலைவித

மெட்டு நாளெட்டுக் களிவிட் டிறுகியிறை

மட்டதா கத்தடித்து வந்ததற்பின் நிட்டமுடன்


Wednesday, September 15, 2021

தலைப்பு இல்லை

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள் இங்கு வாராது இடர்.


படிக நிறமும் பவளச்செவ் வாயும்

கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்

அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்

கல்லும் சொல் லாதோ கவி.


சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமல ஆசனத்தேவி செஞ்சொல்

தார்தந்த என்மனத் தாமரையாட்டி சரோருக மேல்

பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்

வார்தந்த சோதி அம்போருகத் தாளை வணங்குதுமே. 


Monday, September 13, 2021

இரண்டு வேளை உணவு

இன்று காலையில் அம்மா செய்தியைப் பார்த்துவிட்டு "அமைச்சர் இரண்டு வேளை சாப்பிடப் பழகச் சொல்லுகிறார், நீ ஏற்கனவே இப்படித்தானே சாப்பிடுகிறாய்" என்றார். 

சிலகாலத்திற்கு முன்னரே யோக ஸாதனைக்காக காலையும், மாலையும் இரண்டு வேளை உணவு மிதாகாரமாக உண்பது என்று முடிவெடுத்து பின்பற்றிக்கொண்டு இருப்பது உடலுக்கும், மனத்திற்கும் ஆனந்தமாக இருப்பதால் "அமைச்சர், நல்ல விஷயத்தைத் தானே சொல்லுகிறார்; வீட்டிற்குள் முடங்கி உடலுழைப்பு இல்லை என்றால் அதிகமாக உண்டால் வியாதிதானே" என்று ஆமோதித்தேன். 

இப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏற்கனவே தயார் என்று எனது தீர்க்க தரிசன ஆற்றலையும் உள்ளுக்குள் மெச்சிக்கொண்டேன்! 

எப்படியிருந்தாலும் மனிதன் வாழ்வதற்கு அரைவயிறு உணவும், கால்வயிறு நீரும், கால்வயிறு வெற்றுவயிறாக இருக்க உணவு உண்ணப் பழகினால் இதை ஆரோக்கியமான மிதாகாரம் என்று சித்தர்கள் சொல்லுகிறார்கள். இப்படிச் சாப்பிட்ட அப்புவும், ஆச்சியும் தொண்ணூறு, நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். 

வீணாக பதட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு எமது ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் கிடைப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வாக வாழப்பழகுவோம்! 

என்னைப் பொறுத்தவரையில் கொரோனா என்பது ஆணவம் பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டும் ஒரு ஞான அஸ்திரம். வெற்றி மமதையிலிருந்தவர்களின் மமதை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்கிருமியிடம் தோற்றுப்போகிறது. 

இயற்கையின் விதியில் உச்சத்திற்கு செல்லும் எதுவும் மீண்டும் விழ வேண்டும் என்பது நியதி! இதை தாவோ வெற்றியின் அபாயம் என்று சொல்லும்! எவரையும் வெற்றி கொண்டு விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அடுத்து தோல்வியை நோக்கி விழுகிறோம் என்பது மறைமுக அர்த்தம்! ஆகவே மமதை இல்லாமல் ஒத்திசைவுடன், ஒற்றுமையுடன் வாழ்வதே இன்பத்திற்கு வழி! 

அதுபோல் இதுவும் கடந்து போகும் என்பது இன்னொரு தத்துவம்! இப்போது உள்ள நிலையில் இந்த தத்துவங்கள் தானே எமக்கு அருமருந்து!


Sunday, September 12, 2021

பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும்

பாரதியார் தமிழிற்காக, சமூக சிந்தனைக்காக, பெண் விடுதலைக்காக, தமிழின் இலக்கியப் போக்கினை மாற்றியதற்காக அதிகமாக பேசப்படுகிறார், போற்றப்படுகிறார். ஆனால் அதிகம் பேசப்படாத பாரதியின் பக்கம் பாரதியின் ஸக்தி உபாசனை; யோக சாதனை! 

பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும் ஒரே காலத்தில், ஆங்கிலேய அரசினை பகைத்துக்கொண்டமைக்காக பாண்டிச்சேரிக்கு வருகிறார்கள். 

இருவரும் சேர்ந்து மகத்தாக மக்களின் மனத்தில் புரட்சி ஏற்படுத்த உழைத்த உழைப்பைப் பற்றி புதுச்சேரியில் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் கூறுவதை படத்தில் காண்க; 

பாரதியார் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கும் சுவாமி விவேகானந்தரின் உரையை ஒட்டி தமிழில் உரை கண்டிருக்கிறார். 

அரவிந்தரின் யோகத்தின் வடிவத்தை தமிழில் பாரதியின் பாடல்களில் காணலாம். 

பாரதியின் அதிவேகமாய் இயங்கும் மனமும், வலிமையற்ற உடலும் அரவிந்தரைப் போல் யோகத்தை பூரணமாக உடலில் இருந்து சாதிக்கும் நிலையைத் தரவில்லை. ஆனால் பாரதியார் மனத்தளத்தில் மிக வலிமையான ஒரு யோகியாக கொள்ளப்பட வேண்டியவர். 

அரவிந்தர் கூறும் அதிமனத்தின் இலட்சியம் எல்லாம் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீறுகொண்ட ஆற்றலுடன் சூக்ஷ்மமாக செயற்படும் வலிமையுடையவர். அரவிந்தரின் இலட்சியம் மனித குலத்திற்கானது என்பதால் தனது அனுபவம் முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவை அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பாரதி தமிழில் பாடி வைத்தார். 

இலட்சியமான மனிதகுலத்தில் தமிழர்களின் பண்பும், பங்கும் எப்படி இருக்க வேண்டும் என்ற யோக இலட்சியத்தை வகுத்துத் தந்தவர் பாரதியார்.


Thursday, September 09, 2021

தலைப்பு இல்லை

இன்று யோகம் பழகுகிறோம் என்று பலரும் ஆசனம், பிராணாயமத்திற்குள் சென்று சிக்கிக்கொண்டு ஆன்ம முன்னேற்றம் பெறமுடியாமல் தவிப்பதையும், குழப்பமடைவதையும் காண்கிறோம். 

உயர்ந்த வேதாந்தம், சித்தாந்தம் பேசும் பலருக்கு சாதனை அனுபவம் இருப்பதில்லை. இதற்குக் காரணம் சாதகர்கள் தகுந்த இச்சா சக்தியும், பிராண பலமும் விழிப்படையாமையே!

இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் தனது தினக்குறிப்பில் எழுதிவைத்துள்ளதன் சாராம்சம் வருமாறு:

(யோக) சாதனையின் சரியான முறைக்கு எதிரான வழியிலேயே அனேகர் தமது சாதனையைத் தொடங்குகிறார்கள். ஆசனம், பிராணன், சித்தம், மனம், புத்தி இப்படி ஒவ்வொன்றாக சுத்தி செய்து சித்தி செய்து இறுதியாக புத்தி விழிப்பையும், இச்சா சக்தியை அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள். 

ஆனால் உண்மையான சாதனை இதன் மறுதலை வடிவானது; இச்சா சக்தியுடன் (will power) ஆரம்பிக்கப்பட வேண்டியது. ஒருவன் இச்சா சக்தியுடன் சாதனை ஆரம்பித்தால் ஆசனம், பிரணாயாமம், கும்பகம், சித்த சுத்தி, ஏற்பாடுகள், தயாரிப்புகள் நியமங்கள் இவை எதுவும் தேவையில்லை. 

இராமகிருஷ்ணர் யோகம் பயிலவேண்டும் என்று எவராவது கேட்டால் "முதலில் ஸக்தி உபாசனை செய்" என்பார், முதலில் ஸக்தியைப் பேறு பிறகு அவள் "சத்" - உண்மையினைக் காட்டுவாள் என்பார். 

ஒரு யோகியின் முதல் நிபந்தனை இச்சா சக்தியும், ஸக்தியும்.

இதற்குத் தேவையானது மூன்று நிபந்தனைகள்

முதல் நிபந்தனை உன்னை நீ நம்புவது

இரண்டாவது நிபந்தனை உனக்கு மேல் இறைவன் இருக்கிறான் என்பது, 

மூன்றாவது அனைத்தையும் ஸக்தி - காளி இயக்குகிறாள் என்பது. 

உன்னை நம்பி முதலில் உன்னில் இச்சாசக்தியை விழிப்படைய வைக்க வேண்டும்; பிறகு இறைவனை நம்பி ஞானத்தினை செயற்படுத்த வேண்டும்; பிறகு ஞானத்தைக் கொண்டு சித்தம், மனம் என்பவற்றை சுத்தி செய்து பிராணனையும் மனதையும் அமைதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் உடலை அம்ருதத்துவம் செய்ய வேண்டும். 

இதுவே உண்மையான யோகம்; இதுவே மஹாபந்தம், உண்மையான தாந்திரீகம்! வேதாந்தம் புத்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கிறது! தாந்திரீகம் ஸக்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கும்! 

Record of Yoga", pp. 1371-1397


Wednesday, September 08, 2021

தலைப்பு இல்லை

கொரோனாவில் உலகம் ஆடிக்கொண்டிருக்க அமேசன் நிறுவனர் Jeff Bezos தனது வாழ்நாளை நீட்டிக்க வழி தேடுகிறாராம்! 

https://interestingengineering.com/jeff-bezos-is-funding...

இதைத்தானே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னராக சித்தர்கள் உடலை காயம் ஆக்கி - காயம் என்றால் அக்கினி - கல்ப காலம் வரை இருத்த வேண்டும் என்று சொன்னார்கள். 

அம்ருதம் என்ற சொல்லை அ+ம்ருதம் என்று பிரிக்கலாம். ம்ருத என்றால் மரணம் என்று அர்த்தம். அம்ருத என்றால் மரணமற்ற என்று அர்த்தம். 

ம்ருத்யு என்றால் மரணம் என்று அர்த்தம் ம்ருத்யுஞ்ஜெய என்றால் மரணத்தை வெல்லுதல் என்று அர்த்தம். சிவ உபாசனையில் ம்ருத்யுஞ்ஜெய என்று அர்த்தம். 

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நானிருந்த வீட்டு தாத்தாவிற்கு வயது 95; அவரது நீண்டகால ஆயுளிற்கு இரகசியம் என்னவென்றால் காலை நாலு மணிக்கு எழுந்து, தியானம் செய்து, பஞ்சாட்சரம் ஜெபித்து திருவாசகம் படித்து விட்டு, எழுந்து கோயிலிற்கு சென்று வணங்கி வருவார்; தினசரி மண்வெட்டி பிடித்து புல்லு செதுக்குவார். எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்! வாரம் இரண்டு மூன்று நாள் அவரின் பழங்காலத்து கதை கேட்பது வழக்கம்! அவன் பெரிய ஆளாக வருவான் என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவாராம்! இறுதியாக 104 வயதில் சிவபதம் அடைந்தார். 

மற்றொருவர் எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரிடம் உபதேசம் பெற்ற யோகி, சுப்பிரமணியம் ஐயா அவர்கள். 94 வயதில் பூரண ஆரோக்கியத்துடன் திடமாக வாழ்ந்து வருகிறார். மது, மாமிச உணவு தவிர்த்தல், தினசரி தீர்க்க சுவாசமும், புருவமத்தி தியானமும் செய்து வருதலும் மாத்திரமே தனது ஆரோக்கியமும் நீண்ட ஆயுளினதும் இரகசியம் என்று கூறுகிறார். இவரை அண்மையில் எமது மாணவர் ஒருவர் சென்று புத்தகங்கள் கொடுத்து ஆசிபெற்று வந்தார். 

எம்மிடமும் தொலைபேசியில் "எமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உள்ளது, அது அனைவரையும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது, அதனுடைய ஆசிகள்" என்று ஆசி கூறினார். 

அதேபோல் ஸ்ரீ கண்ணைய யோகியார் பல்லாண்டு காலம் வாழும் வழி என்று போதித்து அதன்படி 108 வருடங்கள் வாழ்ந்து காட்டினார். 

 ஹதயோக பிரதீபிகை மூச்சினை கும்பித்து, சித்த சலனமற்று, புருவமத்தியில் விழியினை செலுத்துவாரை காலன் தீண்டமாட்டான் என்று சொல்கிறது. 

ஆகவே Jeff Bezos இற்கு நம்முடைய பக்கமும் நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற நிறைய விஷயம் இருக்கிறது என்று ஒரு மின்னஞ்சல் எழுதலாம் என்று நினைக்கிறேன்! 

   


Sunday, September 05, 2021

தலைப்பு இல்லை

விநாயகர் கவசம் பற்றி எழுதிய ஒரு பழைய பதிவு - தினகரன் சைவ மஞ்சரியில் 2017ம் ஆண்டு வெளிவந்தது.

Saturday, September 04, 2021

ஒரு சாதகரின் மனம் சித்தம் கனவு பற்றிய அனுபவம்

யோக தத்துவத்தின் படி மனம், புத்தி, சித்தம் ஆங்காரம் ஆகிய நாலும் எப்படி செயற்பட்டும், புறச்சூழல் எப்படி சித்தத்தை தூண்டும் என்பதன் அனுபவ விளக்கம்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

****************************************************


வணக்கம் குரு‌..நம் உரையாடல் படி எனது நேற்றைய அனுபவத்தை அப்படியே பதிவு செய்துள்ளேன்.

-------------------------------------+

காயத்ரி சாதனையை தொடர்ந்து 4 வருடங்களாக  செய்து வரும் ஒரு தீவிர  சாதகன் நான். மேலும் சிருஷ்டியின் மாணவன்..

காயத்திரி சாதனையாலும், சிருஷ்டியின் வகுப்புகளாலும் நான் பெற்ற பலன்கள் மிக அதிகம். இதனால் தான் கடந்த 5 வருடங்களாக எந்தவித தீய  பழக்கமும் இல்லாத ஒரு‌  Teatotaller ஆக மாறினேன்...மனசலனங்கள் குறைந்து சமச்சீரான மனநிலையில் எப்பொழுதும் உணர்சிவசப்படாமல் எதையும் ஏற்கும் பக்குவமும், கோபதாபங்களில இருந்து விடுபட்டு அமைதியான மனதுடன் வாழம் பக்குவமும் அதிகரித்து கொண்டே உள்ளது. 

சிருஷ்டியின் வகுப்புகளால் மனம்‌, உடல், பிராணண் ஆகியவற்றிற்குள்ள தொடர்பு என்பதை புரிந்து கொள்ள முடிந்தது . மற்றும் சாதனையின் போது  மேற்கூறியவைகளை பயிற்சி மூலம் பகுத்து அனுபவ பூர்வமாக உணரும் ஆற்றலும் கிடைக்கபெற்றேன்.

5 வருடத்திற்கு முன்பு என் கதையே வேறு.‌மனம்போன போக்கில் புலனுக்கு அடிமைப்பட்டு அனைத்து கீழான ஆசைகளுடன்  வாழ்வின் நோக்கமும் அர்த்தமும் தெரியாமல் வாழ்ந்து வந்தவன்..

இந்த நிலையில் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் மூலம் சித்தம் எவ்வளவு வலிமையானது என்பதை உணர முடிந்தது‌‌.. ஏன் சிரத்தையான தினசரி  சாதனை முக்கியம் என்பதும் தெரிய வந்தது.

நீண்ட நாள் நண்பரை சில காலங்கள்  கழித்து ஒரு நட்சத்திர விடுதியில் சந்திக்க   சந்திக்க நேர்ந்தது.. நலம் விசாரிப்புகளுக்கு பின்பு  He invited me for the Drings..

அப்படியே நடந்த உரையாடல்களை பகிர்கிறேன்.

Friend : Hey Man, I'm so deliged for our meet, let's celebrate ..!! Common,Lets have drings.

Me : Sorry dear..I'm a Teatotaller now. I can Provide u company  but have only moktail and sure BIGNo to Alhacol.

Frined: Is this u 😂...Man really unbelievable...It's ok..Insted of juices Why can't u take non alhoic beer. it is Just  a mocktail. Hope U r fine if I place an order..

Me: Just thought for a while and I don't want to disappoint him .I Said yes and had 2 Non alaholic beer..The taste and smell of the beer is exactly like a real one but with NO alhakol.

We had a good time and lovely conversation with  dinner , I returned back  home..

பிறகு வீடு வந்து  உறங்க சென்றேன்...திடிரென நள்ளிரவில் ஒரு நெடிய கனவு வந்தது...கல்லூரி நண்பர்களுடன் அதே நட்சத்திர விடுதியில் அதே இடத்தில் நண்பர்களுடன் நான் அமர்ந்து Drings order செய்கிறோம்... 

நான் : கனவில் நான் முழு விழிப்புணர்வு நிலையில் இருந்தேன்.. என் அந்த காரணங்களின்  நிகழ்ந்த சம்பாவனைகள் மற்றும் உணர்வுகள் அப்படியே

என் புத்தி :நீ எப்படி இங்கு.??நீ குடிப்பதை விட்டுவிட்டாயே? எதற்கு நண்பர்களுடன் மீண்டும் இங்கு குடிப்பதற்கு வந்து இருக்கிறாய்..இது சரியில்லையே!! இது நிஜமா பொய்யா ? நீயா இது ?

என் மேல் மனம் : இதுல என்ன இருக்கு...நீ இப்படி தான் இருந்த..அங்க பாரு எல்லோரும் உனக்கு தெரிஞ்சவங்க..பல வருட நீண்ட நண்பர்கள்..எவ்வளவு சந்தோஷமா இருக்க...You born for enjoying the life...சும்மா விடுடா.. புலனாம்..அடக்கமாம்😂

என் புத்தி : அது சரி.. உன் நிலை 5 வருடங்களுக்கு முன்பு வேறு.. இப்போது வேறு..புரிந்து கொள் என்று மன்றாடி  எனது ஆங்காரத்தை துணைக்கு கூப்பிட்டது.

என் ஆங்காரம் : புத்தி சொல்வது சரிதான் . நீ ஒரு காயத்ரி சாதகன்..புலன் ஆசைகளில், தேவையற்ற இச்சைகளில  இருந்து விடுபட்டு வாழ பழுகி இருப்பவன்..இது 2021 ..எதற்கு இப்போது இது..புத்தி சொல்வதை உடனே கேள் ..எழுந்து செல்‌‌..இன்னும் 5 நிமிடத்தில் நீ குடிக்கபோகிறாய்.

என் புத்தி :  அதே தான் சொல்கிறேன்.. நீ மட்டும் இதை செய்தால் உன் சாதகன் என்ற  ஆங்காரம் அழியும்..அப்படி அழிந்தால்  அந்த அனுபவ அறிவு மூலம் பெற்ற புத்தியாகிய நானும்  அழிவேன்.  உனக்கு இது தேவையில்லை ..எழுந்து செல்..

என் மேல் மனம்: இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மேல் மனம் புத்தியுடன் பேரம் பேசாமல்  உடனே தனது துணைக்கு சித்தத்தை கூப்பிட்டது.. 

என் சித்தம் : எனது   அனைத்து அனுபவங்களின் கருவூலம்..அமைதியாக எனது குடிகாரன் என்ற ஆங்காரத்தை எனது சித்தம் விழிபித்து கொண்டு, சாதகன் என்ற ஆங்காரத்தை மறைய செய்து மனதுடன் சேர்ந்து கொண்டு  என்னுடைய புத்தியை தாக்கியது...பழைய சூழ்நிலையை மீண்டும் தயார் செய்தது. அதற்கு ஏற்றவாறு நண்பர் ஒருவர்..

நண்பர்1 : மச்சி ..KingFisher உன்னோட Favorite Brand..அதே தான இப்போதும்😭

நண்பர் 2: அவன் எப்பவுமே ஒரே  Standard ..இத்தனை வருமும் அப்படியேதான்..ஒரே Brand தான்..எனக்கும் அதே சொல்லுடா..

என் புத்தி : வேண்டாம் ! வேண்டாம் என்று மன்றாடுகிறது..

என் ஆங்காரம் : மனதுடனும் , சித்தத்துடனும் இப்போது சேர்ந்து கொள்கிறது.. அது தனது சாதகன் என்ற ஆங்காரம்  மறந்து...குடிகாரன் என்ற ஆங்காரத்தை விழிப்பிக்கிறது.. இப்போது ஆங்காரம் மற்றும் மனம் மற்றும் சித்தத்துடன் சேர்ந்து  இறுதி முடிவெடுக்கிறது 

என் புத்தி : அனைத்தும்‌ தெரிந்து செய்வதறியாமல் ஒற்றை ஆளாய்‌ பலமற்று குடிக்க வேண்டாம் வேண்டாம்  கூறுகிறது... அது எதுவும்  செய்ய இயலாமல் என்னை பாக்கிறது.பிறகு சித்தமும்‌ மனமும் ஆங்காரமும் எகத்தாளமாக புத்தியை பார்த்து சிரிக்கின்றன..புத்தியும் கடைசியில் குடிகாரன் என்ற ஆங்காரத்தின்‌ முன்பு‌ மண்டியிட்டு முடங்குகிறது.

நான் : வந்த Beer ஐ குடிக்கிறேன்..ஆராவாரமாக சப்தமடுகிறேன்...பயங்கரமாக Enjoy செய்கிறேன்..

சப்த நாடியும் ஒடுங்கி வியர்த்துப்போய் எழுகிறேன்..அப்போதுதான்‌ நடந்தவை அனைத்தும் கனவு என்று தெரிந்து என்னை ஆசுவாச படுத்திகொள்கிறேன்..தவறு‌ செய்யாமல் திரும்பி விட்டோம் என்ற ஒரு நிம்மதியான உணர்வு.

 ஒருவருடைய‌ சித்தத்தில் சேகரித்த அனுபவங்கள் எவ்வளவு வலிமையானது என்று நன்கு உணர்ந்தேன்.. சித்த பதிவுகள் புத்தி உட்பட அனைத்தையும் எப்படி  முறியடிக்கும் என்பதையும் மற்றும் ஏன் தினசரி சாதனை மற்றும்  சித்தசாதனை மிக மிக முக்கியம் என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

எனது புரிதலின் படி மனமானது புலன்வழி அறிவால்  தினசரி குப்பையாகிறது. அது ஒரு வெள்ளை நிற உடை..தினசரி அதனை Soap கொண்டு  Wash செய்யாவிடில்  அந்த வெண்ணிற உடை அழுக்காகிவிடும்.. 

சில சமயங்களில் அந்த வெண்ணிற உடையில் பெரியகறை ஏற்படலாம். அதனை Stain Remover இல்லாமல் Soap  மட்டுமே  கொண்டு நிச்சயமாக சுத்தம் செய்ய முடியாது.

இங்கு மனம் என்பது வெண்ணிற உடை.  Soap என்பது தினசரி சாதனை..Stain Remover என்பது குரு பாதம் மற்றும் குருவின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் ..

ஒரே நிகழ்வு பல விளைவு! எனது பழைய அனுபவம் ( சித்தம் ), அறிவு(புத்தி) வேறுபடுகிறது. இந்த புத்தி “குடிக்க வேண்டாம் ” என்று அறிவுரை சொன்னாலும் எனது  அஹங்காரம் (ego) இறுதி முடிவு எடுக்கிறது. 

” கண்ணா! லட்டு திங்க ஆசையா!” என்று ஆசையைத் தூண்டுகிறது. இதில் பழக்கத்தினாலும் முயற்சியினாலும் புத்தி  சித்தம் வலுப்பட வலுப்பட அஹங்காரம் ego செயலிலக்கிறது!

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றவரை gentleman  என்கிறோம். ஆனால் நான்‌ இதில் Gentle மேனாக இல்லை ( கனவாக இருந்தாலும்)

குரு அடிக்கடி சொன்‌ன ஒரு விடயம் நன்கு புரிந்தது.பயிற்சியாலும் நல்லவர் தொடர்பாலும் தீய ego வை வலுவிலக்கச் செய்வதே வக்கிரங்கள் மறைய வழி!  அதற்கு தினசரி சாதனை தான் ஒரே வழி என்பது புலப்பட்டது..

வெப்பத்தைத் தனித்தால் நீர் ஆவியும் ஆகாமலும், உறையாமலும் அமைதியான மனக்குளம் ஆகிறது. இந்நிலையில் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற வேறுபாடு இல்லாததால் “ஒரு மனப் படுகிறது”!  

There is no conflict among Ego,Intellect and Past experience based memory/wisdom! இதைத் தான் ” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” என்பதன் அர்த்தம் என்று உணர்நதேன்

வக்கிரம் மறைய மனதைப் பண்படுத்தும் உடல் மற்றும் மனப் பயிற்சி தேவை. இதைத்தான் ஆசனம் தியானம் என்று குரு‌ குறிப்பிட்டார்கள் என்ற நிதர்சனம் நன்கு புரிந்தது. 

நன்றிகள் குரு..உங்களாலும் குரு மண்டலத்தாலும் நான் கற்றதும்‌பெற்றதும் மிக அதிகம்..

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...