குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!

இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!

ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ

இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!

மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here

2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்

நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.

அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே

உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே

-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 28, 2021

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 
காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள் தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 
வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 
வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.
இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ள வேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 
இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 
அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 

காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும்போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள்தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 

வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 

வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.

இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ளவேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 

இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 

அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  

Thursday, November 25, 2021

System Theory இனைப் பிரயோகித்தல்

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

System Theory இல் உள்ள Input, Process, Output, Feedback இவற்றினை வைத்துக் கொண்டு எப்படி ஒவ்வொரு விஷயத்தின் மீதும் system thinking இனை - தொகுதியாகச் சிந்திக்கும் பண்பினை உருவாக்குவது என்ற விஷயத்தினை 03 உதாரணங்கள் மூலம் அமிர்தவர்ஷினி கூறுகிறார். 

System theory approach சிக்கலான விஷயங்களை எளிமைப்படுத்த தேவையான முறை என்பதையும் அப்பம்மா மரக்கறி வாங்குவதையும், அதைப் பிரிப்பதையும் வைத்து விளக்கியாயிற்று! 

பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்!

Tuesday, November 23, 2021

ரொட்டியும் System theory யும்

அம்ருதவர்ஷினிக்கு ஒரே குறை! அப்பா மணிக்கணக்கில் பலருக்கும் வகுப்பெடுக்கிறார். எனக்கு படிப்பிக்கிறீர்கள் இல்லை என்று! 
சரி படிக்கலாம் என்றால் கணிதம், விஞ்ஞானம், எல்லாம் நான் எனது ஆசிரியர்களிடம் படிக்கிறேன். புதிதாக ஏதாவது படிக்கலாம் என்றாள்! 
கற்றல் என்பது சிந்திக்கத் தானே! சிந்திக்க எமக்கு இருக்கும் கோட்பாட்டு மாதிரி system theory! இதன் அடிப்படைகள் உள்ளீடு, செயல்முறை, விளைவு, பின்னூட்டம், நடைபெறும் சூழல் என்ற ஐந்து உறுப்புக்களால் ஆனது. 
இதை விளங்கப்படுத்த system theory ஐ வைத்து ரொட்டி (சப்பாத்தி) செய்வது எப்படி என்று விளங்கப்படுத்தியாயிற்று! 
Like பண்ணுங்க
Subscribe பண்ணுங்க
Share பண்ணுங்க  

Monday, November 22, 2021

தலைப்பு இல்லை

வந்து சேர்ந்த ஒரு தொகைப் புத்தகங்கள்! 

சென்னையிலிருந்து தருவித்துத் தந்தவர் Nirosh Shanthan ,

BukBuk.lk என்று வாசிப்பவர்களுக்கு உதவி செய்யும் தளம் ஒன்றினை நடத்துகிறார். புத்தக வியாபாரம் என்பதைத் தாண்டி வாசிப்பு உயிர் என்று இருப்பவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்கிறார். 

நாவல், இலக்கியம், கவிதை வாசிப்பவர்களுக்கு அதிகம் தீனி உண்டு. 

பரிந்துரைக்கிறேன். 

அப்பாவிற்கு வாசிப்புத் தான் தீனி என்பதால் மகள் happy birthday to you படிக்க புத்தகப் பொதி திறக்கப்படுகிறது.  

தலைப்பு இல்லை

வந்து சேர்ந்த ஒரு தொகைப் புத்தகங்கள்! 

சென்னையிலிருந்து தருவித்துத் தந்தவர் Nirosh Shanthan ,

BukBuk.lk என்று வாசிப்பவர்களுக்கு உதவி செய்யும் தளம் ஒன்றினை நடத்துகிறார். புத்தக வியாபாரம் என்பதைத் தாண்டி வாசிப்பு உயிர் என்று இருப்பவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்கிறார். 

நாவல், இலக்கியம், கவிதை வாசிப்பவர்களுக்கு அதிகம் தீனி உண்டு. 

பரிந்துரைக்கிறேன். 

அப்பாவிற்கு வாசிப்புத்தான் தீனி என்பதால் மகள் happy birthday to you படிக்க புத்தகப் பொதி திறக்கப்படுகிறது.  

Sunday, November 21, 2021

கற்றலில் அறிவின் நோக்கம்

கற்றலின் இலக்கை மற்றவர்களுடன் போட்டி போடும், மற்றவர்களை வெல்லும் ஒன்றாக பிள்ளைகளின் மனத்தில் விதைக்கக் கூடாது. இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வந்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர் மற்றவர்களை மேம்படுத்த தமது ஆற்றலைப் பயன்படுத்த மாட்டார்கள். 

எப்படிச் சுரண்டுவது, மற்றவர்களை வதைப்பது என்ற போக்கிலேயே அவர்களது தந்திரங்கள் முழுவதும் இருக்கும். வாழ்க்கையில் கல்வி, பணம், பதவி இவற்றில் உயர்ந்த நிலை அடைந்தாலும் திருப்தி இல்லாமல் எதற்காவது பின்னால் செயற்கையாக ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான் இலகுவாக மற்றவர்களுக்கு இவை கிடைத்துவிடக் கூடாது என்று தடங்கள் ஏற்படுத்தும் முட்டுக் கட்டைகளாக அமர்ந்திருப்பார்கள். 

கல்வி என்பது அக அனுபவத்திற்கும், பரந்து விரிந்த மனதால் உலகின் பல் பரிணாமங்களைக் காண்பதற்குரிய பார்வையை விருத்தி செய்யும் போசணையாகவும் இருக்க வேண்டும். 

இன்று பலர் உயர்ந்த பட்டங்களைப் பெற்றுவிட்டு திருப்தி இல்லாமல், சிந்தனை செய்ய நேரம் இல்லாமல் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும், பணத்திற்கும் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது கல்வி, அறிவு எதற்கானது என்ற தெளிவு இல்லாமல் தொழிலிற்காக, அந்தஸ்திற்காக கற்கிறோம் என்று கற்றவர்களின் நிலை தான்!

அறிவு மற்றவர்களுக்குப் பயன்படாவிட்டால் கற்ற கல்வியால் பயன் எதுவும் இல்லை! அதுப் போல் நாம் கஷ்டப்பட்டு படித்தால் எமக்கு பிறகு வருபவர்கள் கஷ்டப்படாமல் படிக்க என்ன வழி என்று சிந்திக்கும் மனப்போக்கு வளர்க்க வேண்டும். இப்படி இருக்கும் போது தான் சமூகமாக முன்னேற முடியும்.

கற்றலில் அறிவின் நோக்கம்

கற்றலின் இலக்கை மற்றவர்களுடன் போட்டி போடும், மற்றவர்களை வெல்லும் ஒன்றாக பிள்ளைகளின் மனத்தில் விதைக்கக்கூடாது. இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வந்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர் மற்றவர்களை மேம்படுத்த தமது ஆற்றலைப் பயன்படுத்த மாட்டார்கள். 

எப்படிச் சுரண்டுவது, மற்றவர்களை வதைப்பது என்ற போக்கிலேயே அவர்களது தந்திரங்கள் முழுவதும் இருக்கும். வாழ்க்கையில் கல்வி, பணம், பதவி இவற்றில் உயர்ந்த நிலை அடைந்தாலும் திருப்தி இல்லாமல் எதற்காவது பின்னால் செயற்கையாக ஓடிக்கொண்டிருப்பார்கள். ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான் இலகுவாக மற்றவர்களுக்கு இவை கிடைத்துவிடக்கூடாது என்று தடங்கள் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளாக அமர்ந்திருப்பார்கள். 

கல்வி என்பது அக அனுபவத்திற்கும், பரந்து விரிந்த மனதால் உலகின் பல் பரிணாமங்களைக் காண்பதற்குரிய பார்வையை விருத்தி செய்யும் போசணையாகவும் இருக்க வேண்டும். 

இன்று பலர் உயர்ந்த பட்டங்களைப் பெற்றுவிட்டு திருப்தி இல்லாமல், சிந்தனை செய்ய நேரம் இல்லாமல் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும், பணத்திற்கும் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது கல்வி, அறிவு எதற்கானது என்ற தெளிவு இல்லாமல் தொழிலிற்காக, அந்தஸ்திற்காக கற்கிறோம் என்று கற்றவர்களின் நிலைதான்!

அறிவு மற்றவர்களுக்குப் பயன்படாவிட்டால் கற்ற கல்வியால் பயன் எதுவும் இல்லை! அதுபோல் நாம் கஷ்டப்பட்டு படித்தால் எமக்கு பிறகு வருபவர்கள் கஷ்டப்படாமல் படிக்க என்ன வழி என்று சிந்திக்கும் மனப்போக்கு வளர்க்க வேண்டும். இப்படி இருக்கும் போதுதான் சமூகமாக முன்னேற முடியும்.

தலைப்பு இல்லை

“யோகமும் இயற்கையும்” நூல் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத் தலைவர் திரு. N. சிவகரன் அவர்கள் தனது மதிப்பீட்டு விமர்சனத்தை பைந்தமிழ் சாரல் நூல் விமர்சன அரங்கில் வழங்கினார்! 
இந்த நூலை விமர்சனத்திற்கு தேர்ந்தெடுத்தமைக்கு பெருமகிழ்ச்சியும் நன்றியும்! Rtn N. Sivakaran  

Tuesday, November 16, 2021

தலைப்பு இல்லை

அம்ருதவர்ஷினியின் படப்பிடிப்பில் அப்பாவிடமிருந்து இரண்டு காட்சிகள் மாத்திரம் தான்! 

ஒன்று புத்தகமும் கையும்

அல்லது கணனியும் கையும்

தலைப்பு இல்லை

ஆயுளும் ஆரோக்கியமும் வெவ்வேறானவை! இதை தெளிவாக ஆயுர்வேத மூலநூலான சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது. 
ஒருவன் ஆரோக்கியமானவனாக உற்சாகமாக வேலை செய்துக் கொண்டிருக்கலாம். திடீரென இறந்து போய் விடலாம். உடனே நன்றாகத் தானே இருந்தான் இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். 
இதைக் கூர்ந்து கவனித்த ரிஷிகள் ஆயுளை வளர்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்த அறிவே ஆயுர்வேதம். 
ஆயுள் என்பது சரீர, இந்திரிய ஸத்வ ஆத்ம ஸம்யோகா என்கிறது சரஹ சம்ஹிதை. 
சரீரம் என்ற ஸ்தூல உடல்
அதிலிருந்து இந்திரியங்களின் செயல்
ஸத்வ மனம் 
ஆத்மா என்ற உயிர்
என்ற இந்த நான்கினதும் சரியான இணைப்பினை ஒருவன் தினசரி வாழ்க்கையில் உருவாக்க இயலாதவன் ஆயுளைப் பெற முடியாது. 
ஆத்மாவை அறிந்து அதன் ஆற்றலை சத்துவ குணமுடைய மனதினால் உடலையும், புலன்களையும் ஆளத் தெரிந்தவன் மாத்திரமே நீண்ட ஆயுளைப் பெறலாம். 
மனதை ரஜோ, தமோ குணத்தில் அலைக் கழிப்பவர்களும், உடலை, புலன்களை கட்டுப்பாடு அற்றுப் பாவிப்பவர்களும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர், உடல், மனத்துடன் ஒன்றிணைந்து வலுவாகப் பிணைப்புடன் இருப்பதில்லை. 

தலைப்பு இல்லை

ஆயுளும் ஆரோக்கியமும் வெவ்வேறானவை! இதை தெளிவாக ஆயுர்வேத மூலநூலான சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது. 

ஒருவன் ஆரோக்கியமானவனாக உற்சாகமாக வேலை செய்துகொண்டிருக்கலாம். திடீரென இறந்து போய் விடலாம். உடனே நன்றாகத்தானே இருந்தான் இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். 

இதைக் கூர்ந்து கவனித்த ரிஷிகள் ஆயுளை வளர்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்த அறிவே ஆயுர்வேதம். 

ஆயுள் என்பது சரீர, இந்திரிய ஸத்வ ஆத்ம ஸம்யோகா என்கிறது சரஹ சம்ஹிதை. 

சரீரம் என்ற ஸ்தூல உடல்

அதிலிருந்து இந்திரியங்களின் செயல்

ஸத்வ மனம் 

ஆத்மா என்ற உயிர்

என்ற இந்த நான்கினதும் சரியான இணைப்பினை ஒருவன் தினசரி வாழ்க்கையில் உருவாக்க இயலாதவன் ஆயுளைப் பெற முடியாது. 

ஆத்மாவை அறிந்து அதன் ஆற்றலை சத்துவ குணமுடைய மனதினால் உடலையும், புலன்களையும் ஆளத்தெரிந்தவன் மாத்திரமே நீண்ட ஆயுளைப் பெறலாம். 

மனதை ரஜோ, தமோ குணத்தில் அலைக்கழிப்பவர்களும், உடலை, புலன்களை கட்டுப்பாடு அற்றுப் பாவிப்பவர்களும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர், உடல், மனத்துடன் ஒன்றிணைந்து வலுவாகப் பிணைப்புடன் இருப்பதில்லை. 

Friday, November 12, 2021

தலைப்பு இல்லை

சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்! 

அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து. 

அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறேன். 

இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆசிரியர்கள் இந்தப் பாடம் முடிக்கவில்லை, அந்தப் பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்! 

ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.

தலைப்பு இல்லை

சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்! 

அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து. 

அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக்கொடுத்திருக்கிறேன். 

இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆசிரியர்கள் இந்தப்பாடம் முடிக்கவில்லை, அந்தப்பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம்தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்! 

ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.

Wednesday, November 10, 2021

தலைப்பு இல்லை

இது என்ன உணர்ச்சி? எனக்கே தெரியவில்லை?

-

Tuesday, November 09, 2021

தலைப்பு இல்லை

கந்த சஷ்டி முடிவுற்றிருக்கும் இந்த நாளில் அறிவிற்கு விருந்தாக கந்த சஷ்டி கவசம் பற்றிய உரையாடல். 
கந்த சஷ்டி கவசத்தினுள் காணப்படும் மந்திரம், குண்டலினி, வாசியோகம், ஆறுமுகம், சக்தி இவை பற்றிய யோக விளக்கங்களும் உரையாடப்பட்டிருக்கிறது. 
வேல் என்பது ஆற்றலை, சக்தியைப் பிரயோகிக்கும் முறை! முருக உபாசனை என்பது குண்டலி யோகம், வாசியோகம்! 
உடலெங்கும் மனதின் துணைக் கொண்டு உணர்வினை வேலாக கவசிக்கும் முறை
கந்தர் சஷ்டி கவசத்தை,
1. துன்பங்கள் நீங்க
2. நினைத்த காரியம் கைகூட
3. யோக சித்தி பெற என 
மூன்று விஷயங்களுக்குப் பாவிக்க முடியும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. 
முருகன் அடியார்கள் பார்த்துக் கருத்துரையுங்கள்! 
நேர்காணலுக்கு நன்றி Dyena Sathasakthynathan Isuru Mano

தலைப்பு இல்லை

கந்த சஷ்டி முடிவுற்றிருக்கும் இந்த நாளில் அறிவிற்கு விருந்தாக கந்த சஷ்டி கவசம் பற்றிய உரையாடல். 

கந்த சஷ்டி கவசத்தினுள் காணப்படும் மந்திரம், குண்டலினி, வாசியோகம், ஆறுமுகம், சக்தி இவைபற்றிய யோக விளக்கங்களும் உரையாடப்பட்டிருக்கிறது. 

வேல் என்பது ஆற்றலை, சக்தியைப் பிரயோகிக்கும் முறை! முருக உபாசனை என்பது குண்டலி யோகம், வாசியோகம்! 

உடலெங்கும் மனதின் துணைகொண்டு உணர்வினை வேலாக கவசிக்கும் முறை

கந்தர் சஷ்டி கவசத்தை,

1. துன்பங்கள் நீங்க

2. நினைத்த காரியம் கைகூட

3. யோக சித்தி பெற என 

மூன்று விஷயங்களுக்குப் பாவிக்க முடியும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. 

முருகன் அடியார்கள் பார்த்துக் கருத்துரையுங்கள்! 

நேர்காணலுக்கு நன்றி Dyena Sathasakthynathan Isuru Mano

Monday, November 08, 2021

தலைப்பு இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத்தலைவர் திரு சிவகரன் அவர்களிடம் "யோகமும் இயற்கையும்" நூல் கையளிக்கப்பட்டது. வாசித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்! 
திரு. சிவகரன் Rtn N. Sivakaran அவர்கள் "மாணவர்களுக்கான ஆசிரியர்" ; மாணவர்களை வழி நடாத்தி ஆற்றல்களை வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற உந்தலை செயலாக்கிவர்! அவரது "Youth Truth and the Meaning of Life" என்ற மாணவர்களுக்கான webinar series தகுதியுடைய பல மாணவர்களை உலகறியச் செய்துள்ளது!

தலைப்பு இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத்தலைவர் திரு சிவகரன் அவர்களிடம் "யோகமும் இயற்கையும்" நூல் கையளிக்கப்பட்டது. வாசித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்! 

திரு. சிவகரன் Rtn N. Sivakaran அவர்கள் "மாணவர்களுக்கான ஆசிரியர்" ; மாணவர்களை வழி நடாத்தி ஆற்றல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உந்தலை செயலாக்கிவர்! அவரது "Youth Truth and the Meaning of Life" என்ற மாணவர்களுக்கான webinar series தகுதியுடைய பல மாணவர்களை உலகறியச் செய்துள்ளது!

Thursday, November 04, 2021

தலைப்பு இல்லை

அருளோடு செல்வம் ஞானம் 
ஆற்றலும் அன்பும் பண்பும் 
பொருள் நலம் பொறுமை 
ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் 
அசைந்திடா பக்தியன்பு 
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என 
அன்னையிடம் பிரார்த்தித்து 
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

தலைப்பு இல்லை

அருளோடு செல்வம் ஞானம் 

ஆற்றலும் அன்பும் பண்பும் 

பொருள் நலம் பொறுமை 

ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் 

அசைந்திடாபக்தியன்பு 

தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என 

அன்னையிடம் பிரார்த்தித்து 

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

Wednesday, November 03, 2021

தலைப்பு இல்லை

After long months of Corona lockdown now managed to cut my hair; however, beard will be maintained as same!
Hope this appearance is pleasing to everyone!

Tuesday, November 02, 2021

தலைப்பு இல்லை

இன்று தன்வந்திரி திரயோதசி! 
வடமொழி ஆயுர்வேத நூற்கள் தன்வந்திரியை பிரம்ம சம்பிரதாய வைத்தியக் கடவுளாகக் குறிப்பிடும்! 
தென்னாட்டு சித்த சம்பிரதாய நூற்கள் சிவன் பார்வதிக்கு உபதேசித்து, மகாவிஷ்ணுவிற்கு உபதேசமாகி தன்வந்திரி என்ற முனிவருக்கூடாக ஆயுள்வேத ஞானம் பரவியதாகக் கூறுகிறது. 
செய்ய மாதுக் கிறையவன் செப்பிய 
துய்ய வாயுள் மறையிற் றுலங்கிய
மெய்யை மாதவன் மேதினி வாழ்வுற 
ஐயன் தன்வந்திரிக்கருள் கூறினான்
ஓது நாடித் தொகையு மதிலுறு
வாத பித்தச் சிலேற்பன வன்மையும்
பேத மான வியாதியின் பெயர்களும் 
ஆதியான அருந்தவன் ஓதினான்
-தன்வந்திரி வைத்தியம் - 
பார்வதிக்கு சிவபெருமான் உபதேசித்த ஆயுள் வேதத்தில் உள்ள உண்மைகளை உடல் மேம்பட மகாவிஷ்ணு உயிர்கள் வாழ்வு மேம்பட ஐயன் தன்வந்திரிக்குக் கற்பித்தான். 
ஐயன் தன்வந்திரி நாடிகளின் எண்ணிக்கையும், அந்த நாடிகளில் வாத பித்த சிலேற்பனமும் அவற்றின் வலிமை, ஏற்படும் வியாதிகளது பெயர்கள் இவற்றைத் தொகுத்து ஓதினான்!

Monday, November 01, 2021

தலைப்பு இல்லை

சத்தியும் சிவமும் ஆயதன்மை 
இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும்
ஆக உணர்குண குணியும்ஆகி
வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் 
அவ்வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார் 
பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார். 
சிவ ஞான சித்தியார் சுபக்கம் - 89
ஆகமங்களில் வெவ்வேறு வடிவ சிவலிங்கங்கள் என்பதற்குரிய அர்த்தத்தினை இந்தப் பாடலினூடாகப் பெற முடியும்.
சக்தியும் சிவமுமே இந்த உலகத்தின் இரகசியம் எல்லாம்! ஆயம் என்றால் இரகசியம் என்று பொருள்! ஆயத்தன்மை என்றால் இரகசியத்தின் தன்மை என்று அர்த்தம்.
இந்த சிவசக்தி இரகசியம் என்னவென்றால் ஒத்திசைந்து சேர்ப்பதும், பிரிந்து விரிவதும்;
இது எப்படி என்றால் ஆண் உணவை உண்டு சேர்த்து சுக்கிலமாக்கி வித்தாகக் கொடுத்தால் பெண் அதைப் பெற்று விரித்து பல்கலங்கள் கொண்ட குழந்தையாக்கித் தருவதைப் போல்,
உணருவது சிவமாகவும் (உணர் குண), உணரப்படும் அனுபவம் (குணி) சக்தியாகவும் இருப்பதைப் போல்! எல்லாவற்றிற்கும் மூலமாக சிவம் இருக்க அந்த வித்தைப் பெற்று இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் ஆக்கி வாழ்வைத் தருபவள் சக்தியாக இருக்கிறாள்.
சிவமாகிய இலிங்கம் மூலமாக இருக்க அதைத் தாங்கும் பீடமாக சக்தி நிற்கிறாள்; இப்படி நிற்பதால் இந்த வாழ்க்கை உயிர் பெறுகிறது; இந்த உண்மை அறியாமல் பீடமும் இலிங்கமும் சேர்ந்து என்ன உண்மையைச் சொல்ல வருகிறது என்பதை அறியாமல் சிவஞானத்தை நோக்கிச் செல்ல முடியாது.
சிவமும் சக்தியும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தைப் படைக்கிறது என்று அறிவதே சிவலிங்க வழிபாட்டின் குறிக்கோள்!
இலிங்கத்தை உபாசித்து சிவசக்தி ஆயம் - இரகசியத்தை சூக்ஷ்ம அறிவைப் பெற்றவன் அடுத்து சிவசக்தி ஐக்கியம் எப்படி சதாசிவ ரூபத்திற்கூடாக பஞ்சீகரித்து பஞ்சபூதமாக விரிகிறது என்ற அறிவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவான்!
ஆகமங்கள்/தந்திரங்கள் என்பது இத்தகைய சூக்ஷ்ம அறிவை மனிதன் எப்படிப் பௌதீக நன்மையை மக்கள் பெறுவது என்ற தொழில்நுட்ப அறிவு. 
உலக நன்மையைப் பெற க்ஷணிக லிங்கங்கள் அமைத்து பூஜை செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்பதும், இன்ன பலனிற்கு இன்ன நிறப் பூக்கள் பயன்படுத்துவது என்பதும் சிவசக்தி ஐக்கிய இரகசியமே! 
இந்த சிவஞான சித்தியார் பாடல் நேற்று Lambotharan Ramanathan ஐயா அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட அகப்புரிதல் இந்தப் பதிவுகள்!

தலைப்பு இல்லை

சத்தியும் சிவமும் ஆயதன்மை 

இவ்வுலகம் எல்லாம்

ஒத்து ஒவ்வாஆணும் பெண்ணும்

ஆக உணர்குண குணியும்ஆகி

வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் 

அவ்வாழ்க்கை எல்லாம்

இத்தையும் அறியார் 

பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார். 

சிவ ஞான சித்தியார் சுபக்கம் - 89

ஆகமங்களில் வெவ்வேறு வடிவ சிவலிங்கங்கள் என்பதற்குரிய அர்த்தத்தினை இந்தப்பாடலினூடாகப் பெற முடியும்.

சக்தியும் சிவமுமே இந்த உலகத்தின் இரகசியம் எல்லாம்! ஆயம் என்றால் இரகசியம் என்று பொருள்! ஆயத்தன்மை என்றால் இரகசியத்தின் தன்மை என்று அர்த்தம்.

இந்த சிவசக்தி இரகசியம் என்னவென்றால் ஒத்திசைந்து சேர்ப்பதும், பிரிந்து விரிவதும்;

இது எப்படி என்றால் ஆண் உணவை உண்டு சேர்த்து சுக்கிலமாக்கி வித்தாகக் கொடுத்தால் பெண் அதைப் பெற்று விரித்து பல்கலங்கள் கொண்ட குழந்தையாக்கித் தருவதைப் போல்,

உணருவது சிவமாகவும் (உணர் குண), உணரப்படும் அனுபவம் (குணி) சக்தியாகவும் இருப்பதைப் போல்! எல்லாவற்றிற்கும் மூலமாக சிவம் இருக்க அந்த வித்தைப் பெற்று இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் ஆக்கி வாழ்வைத் தருபவள் சக்தியாக இருக்கிறாள்.

சிவமாகிய இலிங்கம் மூலமாக இருக்க அதைத்தாங்கும் பீடமாக சக்தி நிற்கிறாள்; இப்படி நிற்பதால் இந்த வாழ்க்கை உயிர் பெறுகிறது; இந்த உண்மை அறியாமல் பீடமும் இலிங்கமும் சேர்ந்து என்ன உண்மையைச் சொல்ல வருகிறது என்பதை அறியாமல் சிவஞானத்தை நோக்கிச் செல்லமுடியாது.

சிவமும் சக்தியும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தைப் படைக்கிறது என்று அறிவதே சிவலிங்க வழிபாட்டின் குறிக்கோள்!

இலிங்கத்தை உபாசித்து சிவசக்தி ஆயம் - இரகசியத்தை சூக்ஷ்ம அறிவைப் பெற்றவன் அடுத்து சிவசக்தி ஐக்கியம் எப்படி சதாசிவ ரூபத்திற்கூடாக பஞ்சீகரித்து பஞ்சபூதமாக விரிகிறது என்ற அறிவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவான்!

ஆகமங்கள்/தந்திரங்கள் என்பது இத்தகைய சூக்ஷ்ம அறிவை மனிதன் எப்படிப் பௌதீக நன்மையை மக்கள் பெறுவது என்ற தொழில்நுட்ப அறிவு. 

உலக நன்மையைப் பெற க்ஷணிக லிங்கங்கள் அமைத்து பூஜை செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்பதும், இன்ன பலனிற்கு இன்ன நிறப் பூக்கள் பயன்படுத்துவது என்பதும் சிவசக்தி ஐக்கிய இரகசியமே! 

இந்த சிவஞான சித்தியார் பாடல் நேற்று Lambotharan Ramanathan ஐயா அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட அகப்புரிதல் இந்தப்பதிவுகள்!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...