இந்த தியானம் வறுமையை நீக்கி, வேண்டும் வரம் அருளுவது; தண்டமும், சூலமும் இருகரங்களில் கொண்ட பச்சை சட்டை சாத்திய பைரவ ரூபம்
சாயாத சூல தண்டாயுதனே
பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர்
தொழுமேனியனே
யென்மிடி
தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு
வேண்டும் வரமளிப்பாய்
தாயா கியவப்பவே
காழி
யாபதுத் தாரணனே
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
03}
தண்டமும் சூலாயுதமும்
தர்மத்தின்
அடையாளம்,
அது
பைரவரிடத்தில்
எப்போதும்
சாயாத
நிலையில்
இருக்கிறது,
பச்சை நிற ஆடை உடுத்தி
சூரியனும்
தேவர்களும்
தொழும்
மேனியை
உடையவரே
என் வறுமையை நீக்குவாய்!
உன்னை வாயார துதிப்பர்வர்களுக்கு
வேண்டும்
வரமளிக்கும்
தாய் போன்ற கருணையுடைய
அப்பனே!
சீர்காழிப்பதி
உறையும்
ஆபத்துதாரண
பைரவரே
உம்மை நான் தியானிக்கிறேன்!
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
இன்றைய
மங்கள
அலங்காரம்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.