குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, July 06, 2023

மாத்தளையின் கல்வி முன்னேற்றம்

பாடசாலை மாணவர்களுக்கான "கற்பது எப்படி - How to Study" என்ற குறுகிய பாடவிதானத்தை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale இன் வேண்டுகோளிற்கு இணங்க மாத்தளையின் கல்வி முன்னேற்றத்திற்கான தொடங்குகிறேன். 

கற்றல் என்பது கீழ்வரும் ஏழு திறன் களைக் கொண்டது. இந்த ஏழு திறன்களையும் சரியாக வளர்க்காமல் எவரும் எந்தவொரு விடயத்தையும் சிறப்பாக கற்று பயன்படுத்த முடியாது. 

1. வாசிப்பும் கிரகித்தல்

2. ஞாபசக்தி வளர்ச்சி

3. நேர முகாமைத்துவம் 

4. பாடக்குறிப்புகளை தெளிவாகவும் வினைத்திறனாகவும் எழுதுதல்

5. வகுப்பறையில் ஆர்வத்துடன் பங்குபற்றல்

6. கட்டுரைக் கேள்விகளுக்கும் வாய்மொழி பதில் அளிக்கும் திறனை விருத்தி செய்தல்

7. பரீட்சைக்கு தயார்படுத்தல்

இந்தக் கற்கை நெறி இந்த எட்டு அமிசங்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து கற்றலில் திறமையுடைய கல்விமான்களை உருவாக்க எண்ணம் பூண்டுள்ளது. 

உங்கள் பிள்ளைகளுக்கு இந்தக் கற்கை நெறியை பிரத்தியேகமாக பயிற்றுவிக்க வேண்டின் தொடர்பு கொள்ளுங்கள்.


Thursday, June 15, 2023

STEM கல்வி வளர்ச்சியை எப்படி அமுல்படுத்துவது - சில சிந்தனைகள்

மலையகத்தில் STEM கல்வி முன்னேற்றத்தை Dr. Kumaravelu Ganesan Dr. Nava Navaratnarajah Dr. Nishānthan Ganeshan ஆகியோர் STEM-Kalvi ஊடாக முன்னெடுக்கிறார்கள். மாத்தளை பாடசாலை அதிபர்கள் குழுவில் பகிர்ந்து கொண்ட சில சிந்தனைகள் அனைவருக்குமாக! 
அதிபர்களே, ஆசிரியர்களே 
நாம் மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்கு சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றை நான் இங்கே கீழே பட்டியலிட்டுள்ளேன். 
இது தொடர்பாக உங்கள் பாடசாலை விஞ் ஞான, தொழில் நுட்ப ஆசிரியர்களுடன் மேலதிகமாக கலந்தாலோசித்து அறிவுரைகளை வழங்கக் காத்திருக்கிறோம். 
இயற்கை அறிவியல், உயிரியல், பௌதீகவியல், கணிதம், புள்ளிவிபரவியல், சமூக அறிவியல், அரசறிவியல், பொருளியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பரந்த பொருளில் நாம் அறிவியலை - விஞ்ஞானத்தைக் குறிப்பிட முடியும். 
மேற்குறித்த துறைகள் அனைத்திலும் அறிவைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முறை அறிவியல் முறை - scientific methods என்று சொல்லப்படுகிறது. 
நாம் ஏன் அறிவியல் முறைகளை படிக்க வேண்டும்? விஷயங்கள் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, கணிப்புகளைச் செய்வது நடகப்போவதைக் கணிப்பது மற்றும் தவறுகளைத் தடுப்பது மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நம்பகமான முறை அறிவியல் முறையாகும். இந்தச் சிந்தனை மாணவர்களிடையே தூண்டப்பட வேண்டும். 
ஆராய்ச்சியில் மிக முக்கியமான கருவி எப்போதும் மனிதனின் மனதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை (பெவரிட்ஜ், 1957). ஹக்ஸ்லியின் (1863) கூற்றுப்படி, விஞ்ஞான விசாரணையின் முறை மனித மனதின் செயல்பாட்டின் வெளிப்பாடே தவிர வேறில்லை. 
விஞ்ஞான முறை என்பது அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்து அறிவைப் பெறும் முறையாகும். 
விஞ்ஞான முறை என்பது நிகழ்வுகளை ஆராய்வதற்கும், புதிய அறிவைப் பெறுவதற்கும், அல்லது முந்தைய அறிவை சரிசெய்து ஒருங்கிணைப்பதற்குமான நுட்பங்களைக் குறிக்கிறது (Goldhaber and Nieto 2010).
நியுட்டனின் கருத்துப்படி ஒரு அறிவு விஞ்ஞானம் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு விசாரணை முறையானது, குறிப்பிட்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு உட்பட்டு கவனிக்கத்தக்க, அனுபவபூர்வமான மற்றும் அளவிடக்கூடிய ஆதாரங்களை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் (நியூட்டன், 1726).
விஞ்ஞான முறை என்பது முறையான பரிசோதனை, அவதானிப்பு, அளவீடு மற்றும் உருவாக்கம், சோதனை மற்றும் கருதுகோள்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கொண்ட செயல்முறைகளின் தொகுப்பாகும்.
இப்படியான சிந்தனை முறையை நாம் மாணவர்களிடையே வளர்க்க முடியுமா? அதற்கு என்ன செய்ய முடியும்?
அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

Monday, June 12, 2023

உயர்கல்வித் துறை

இலங்கையின் பொறுப்பற்ற உயர்கல்வித் துறை எப்போது மாறுவார்கள் என்பது தெரியவில்லை. 
பல்கலைக்கழகங்களும், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய தவறினை நாட்டிற்குச் செய்து கொண்டிருக்கிறது. 
ஒரு நாட்டின் தொழிற்துறை வளர்வதற்குத் தேவையான மனித மூளைத் திறன் வளத்தை உருவாக்குவதுதான் இந்த உயர் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு! 
இந்தப் பொறுப்பை பொறுப்பற்றதனத்தில் செய்வதில் இவை சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவை. 
தம்மிடம் பயிலும் மாணவர்கள் கற்கையின் பின்னர் தொழில் புரிவதற்குரிய நிறுவனங்கள் எவை? அவை எதிர்பார்க்கும் திறன் கள் எவை? அவை எமது பாடத்திட்டத்தில் இருக்கிறதா? எமது மாணவர்கள் குறித்த தொழில் துறையில் வெற்றியீட்ட எல்லாப் பயிற்சிகளையும் கொடுக்கிறோமா என்று இல்லாமல் அங்கிருக்கும் விரிவுரையாளர்களின் வசதிக்கும், அறிவிற்கும் தகுந்த படி கற்கைகளை உருவாக்கி வெளிவிடுகின்றனர். 
Job market இனது demand இற்கு supply என்ற விதியைப் பின்பற்றாமல் நான் உற்பத்தி செய்வதை வாங்கிக் கொள் என்ற திமிர்தனமே இருக்கிறது. 
பெரும்பாலான IT கம்பனிகள் இந்த அரைகுறை உற்பத்திகளை மட்டம் பண்ணி polish செய்ய இன்னுமொரு இடை நிலை பயிற்சிக் கற்கையை வைத்திருக்கிறது. 
நல்ல தொழில் நுட்ப பயிற்சியைத் தந்தாலும் அவற்றை பிரயோகித்து தொழில் பெறக்கூடிய நிறுவனங்கள் வடகிழக்கில் உள்ளதா? பயிற்றுவிக்கப்படும் மனித வளத்தை உள்வாங்க நிறுவனங்கள் இருக்கிறதா?

Saturday, June 03, 2023

வினாத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி

Brain Tracy வினைத்திறன் பற்றிய ஒரு மிக முக்கியமான நூல் "Eat that frog" என்ற கோட்பாடு மிக முக்கியமானது! இன்று காலையில் ஒரு மாதிரி அந்தப் பெரிய தவளையை விழுங்கியாயிற்று! 
அது தான் வருகைதரு விரிவுரையாளனாக எனது பல்கலைக்கழக சூழலியல் விஞ்ஞான மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் பாட நெறியின் வினாத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி! 
இது உண்மையிலேயே தவளை உண்ணும் பணி போன்றது தான்! முறையாக தெளிவாக கற்பித்து, பின்னர் முக்கியமான பகுதிகளை எல்லாம் சுயகற்றலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நோட்ஸும் கொடுத்து எல்லோரும் சித்தியடைய வேண்டும் என்று ஆவலுடன் வினாத்தாளைக் கொடுத்தால் ஒரு சில விண்ணர்கள் பரீட்சைத்தாளில் ஆசானுக்கு பரீட்சை வைப்பார்கள்! இது தவளையைத் தின்பதை விட மோசமானது.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் போது உண்ண வேண்டிய பெரிய தவளைகளின் பட்டியல்:
1) எத்தனை வினாக்கள் செய்தோம் என்று தொகுத்து முன்பக்கத்தில் போட மாட்டார்கள்; நீ விரும்பினா நான் எத்தனை வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன் என்று கண்டுபிடி - இது முதலாவது தவளை
2) கடைசிக்கேள்வியில் தொடங்கி முதலாவது கேள்வியில் விடை எழுதி முடிப்பது!
3) மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால் மாட்டி தென்னை மரத்தில் கட்டினேன் என்று ஒரு வரி எழுதி பிறகு தென்னை மரத்தைப் பற்றி எழுதுவது! 
4) சிலர் தமது கற்பனையில் தோன்றுவதை தொடர்பில்லாததை சரியான விடைபோல் எழுதி சில வினாடிகல் இது சரியான விடைபோல இருக்கிறதே புள்ளிகள் வழங்கலாம் என்று திணறடிப்பது! 
இப்படி பல தவளைகளைத் தின்று பணியை முடிக்க வேண்டியுள்ளது. எப்படி இருப்பினும் வினாத்தாள் திருத்துவது என்பது ஒவ்வொரு மாணவனதும் மனதைப் படிக்கும் ஒரு கற்றல்!

Monday, May 22, 2023

கல்வித் திட்டங்கள் சார்ந்த அவதானம்

கடந்த சில ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி சார்ந்த சமூக நிறுவனங்களை வளர்த்தெடுக்க உதவி புரிந்தவன் என்ற நிலையில் கீழ்வரும் அவதானங்களைப் பெற்றுள்ளேன்;
1) சமூக சேவை மிகவும் கவர்ச்சியானது, எனவே ஏதாவது ஒரு யோசனை முன்வைத்தவுடன் அனைவரும் அதனைப் பிரதி செய்து தாமும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பெறுகிறார்கள். இது மிக நல்லவிடயம் அதிகமாக இப்படியான எண்ணம் உடையவர்கள் உருவாக சமூகத்திற்கு நன்மை. 
2) இனி இந்த உத்வேகம் சரியாகச் செய்யப்படுகிறதா என்று கேட்டால் அதில் அனேக வழுக்கள் - தவறுகள் இருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது; அண்மையில் சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்கு என்று சொல்லிவிட்டு மேடையில் 50 பேரை ஏற்றி உட்கார வைத்து மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன் என்று அறுவை செய்து நேரத்தை வீணடிக்கும் பாங்கு காணப்படுகிறது. மாணவர்கள் மனம் fragile ஆனது; கல்வியைத் தவிர, கல்வியில் கவனத்தைத் ஏற்படுத்துவதை தவிர வேறு எதுவும் கருத்தரங்கு என்று சொல்லி தேவையற்ற அலம்பல்கள் இல்லாமல் சுருக்கமாக இருக்க வேண்டும். 
3) பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே அவசியமான உத்வேகம்; பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் நிபுணர்களை உதாரணமாக வழிகாட்டியாக காட்ட முடியும்; பாடசாலை மாணவனுக்குச் பாடவிதானமும், கற்பது எப்படி என்ற முறையும், கற்றல் ஒழுக்கமுமே பிரதானம். தேவையற்ற உத்வேகம் (motivation) இருக்கக் கூடாது. 
4) திட்டங்கள் பெரிதாக்கி, நிதிகள் அதிகமாகும் போது போட்டி, பொறாமை ஏற்பட்டு திட்டம் சிதறலாம்; ஒருவர் மாத்திரம் தலைமைத்துவத்தில் இருக்கும் போது ஒருவருக்கே புகழ் கிடைக்கிறது; நாம் கொடுக்கும் நிதியில் இவர் புகழ் பெறுகிறார் என்ற போட்டி, பொறாமை ஏற்படலாம்; இதற்கு நிதர்சனமான உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம். இப்படித் திட்டத்தைச் சிதறடித்து விட்டு குரங்கு கைகளில் கிடைத்த பூமாலை மாதிரி பதவியைக் கைப்பற்றிய பின்னர் என்ன செய்வது என்ற தெரியாமல் தடுமாறும் நிறுவனங்கள் இருக்கிறது. கல்வித்திட்டங்களில் மனப்பாங்கு மாணவர்கள் பயன்பெறுகிறார்களா என்பது மாத்திரமே; யாப்பு, ஆப்பு என்று தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கெடுக்கக் கூடாது; தேவையான இடத்தில் ரூல்ஸ் பேசாமல் நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்
5) கல்வித்திட்டங்களை கல்வியியலாளர்கள் மூளையாகச் செயற்பட பொருளாதார உதவியை எல்லோரும் தம்மால் இயன்ற நிலையில் செய்ய வேண்டும் என்ற தெளிவு சமூக சிந்தனை பரவலாக இருக்க வேண்டும். பொருளாதார உதவி செய்யும் அனேகர் தாமே திட்டத்தை வடிவமைக்க வேண்டும், தன்னை கௌரவப்படுத்தினால்தான் நிதி தருவேன், எந்தக் கலியாணம் என்றாலும் நான் தான் மாப்பிளையாக இருக்க வேண்டும், செத்த வீடு என்றால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகப்பணியில் பெரும் தலைவலி பிடித்தவர்கள். 
6) பாடசாலை உதவிகள் கேட்கும் போது அவற்றை நிரல் படுத்த வேண்டும்; do the best with available policy பின்பற்றப் பட வேண்டும்; அடிப்படை வசதியுடன் நாம் உச்ச பட்ச விளைவைப் பெறக்கூடிய திறமை இருக்க வேண்டும். சில பாடசாலைகள் வசதிகளைக் கேட்கும் அளவிற்கு பெறுபேறுகளைத் தருவோம் என்ற உறுதி தரமுடிவதில்லை. 
7) பாடசாலையின் கல்வி வளர்ச்சி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்ற மூன்று பேரின் அக்கறை, அர்ப்பணிப்பில் பிரதானமாகவும்; அதிபர் இவற்றை ஒருங்கிணைத்து தலைமைத்துவம் வழங்கும் மையப்புள்ளியாகவும் இருக்க இவற்றிற்கு தேவையான வளங்களை, உதவிகளைத் தரும் தூண்களாக பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பை மீறி பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் அதிபரைப் போன்று, ஆசிரியர்களைப் போன்று தம்மை மிமிக்கிரி செய்யும் போது தேவையற்ற நிர்வாகக் குழப்பங்கள் உருவாகி பிள்ளையார் பிடிக்க குரங்கான சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவரவர் வேலையை அவரவர் சிறப்பாகச் செய்ய என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும்; 
 பாடசாலை நிர்வாகத்தில் எப்போது பிஸியாக இருக்கிறேன் என்று அதிபர், ஆசிரியர்கள் கூறக் கேட்கிறோம்; இந்த பிஸியான தன்மை எந்த விளைவுகளைத் தருகிறது? நாம் முன்னேறிச் செல்வதற்காக பிஸியாக வேலைச் செய்கிறோமா? அல்லது எந்தவித திட்டமும், நோக்கமும் இன்றி எமக்குள் இருக்கும் பதட்டத்தை பிஸியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டியது. 
உங்கள் அனுபவங்கள் கருத்துக்களையும் பகிரலாம்.

Thursday, May 18, 2023

மலையகத்தின் கற்றல் நிலை

பெருந்தோட்ட மலையகத்தின் கல்வி நிலை பற்றி எமது சிங்கள சகோதரர் கயான் யதேஹி - ගයාන් යද්දෙහි இன் ஆய்வுக்கட்டுரை தமிழில் 
தலைப்பு: இலங்கையின் மற்ற பகுதிகளை விட பத்து மடங்கு பெருந்தோட்டப் பிள்ளைகள் படிப்பை நிறுத்துகிறார்கள்!
கட்டுரையைப் பகிர்ந்த மல்லியப்புசந்தி திலகர் திலகர் அண்ணாவிற்கு நன்றி! 
சுடச்சுட மொழிபெயர்ப்பு நல்கிய google translator இற்கு கோடானுகோடி நன்றிகள்!
பகுதி - 01
____________
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் கல்விச் செலவுகளை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் குறித்து தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செய்திகள் வந்தன. பெருந்தோட்டம் தொடர்பான கடுமையான சமூக நெருக்கடியாக இது மாறியுள்ளது. அது பற்றிய ஆய்வின் முடிவுதான் இந்தக் கட்டுரை.
___________________
இந்த ஆண்டு சிவானொளி பாதமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கல்விக்காக அதிக செலவு செய்யும் அளவுக்கு அம்மாவிடம் பொருளாதார பலம் இல்லாததால் பள்ளிக்கு விடைபெற்றார் ராமலிங்கம் ரமேஷ். ரமேஷ் குடும்பத்தில் மூத்தவர் மற்றும் ஐந்து இளைய சகோதரர்களைக் கொண்டிருந்தார். ரமேஷின் தந்தை நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இருந்ததை அடுத்து, 42 வயதான தாய் குடும்ப பாரத்தை ஏற்றார். ரமேஷ் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, சிவானொளி பாதமலை யாத்ரீகர்களுக்கு 'கொடு பாக்கெட்' விற்கத் தொடங்கினார். 'கொடு பாக்கெட்' என்பது முதன்முறையாக சிறீபா யாத்திரிகர்களுக்கான ஊசிகள், நூல் மற்றும் சிறிய குச்சி உள்ளிட்ட உபகரணங்களின் தொகுப்பாகும். இவற்றை வாங்கிக் கொண்டு மோசடி செய்பவர்களில் பெரும்பாலானோர் தேர்வில் வெற்றி பெற பெற்றோர்களால் சிவானொளி பாதமலை யாத்திரைக்கு வரும் மாணவர்களே!
“சாதாரண தரம் வரைதான் படிச்சேன்..அதுக்கு மேல் செலவு செய்ய அம்மாவுக்கு சக்தி இல்லை.. அக்கா, அண்ணன் அஞ்சு பேரோட புத்தகம், இதர விஷயங்களுக்கு நிறைய காசு செலவாகும்.. எப்படியும் ஸ்கூலுக்கு அனுப்பணும்னு நினைச்சு நிறுத்திட்டேன். தோட்டத்தில் உள்ள பல பிள்ளைகள் படிக்க விரும்பினாலும் பாடசாலை செல்வதை நிறுத்த வேண்டியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளே இதற்குக் காரணம்..."
ஒரு புத்தகத்தின் விலை Rs12,000!
காளி கணேசம்மாவுக்கு இன்னும் நாற்பது வயதுதான் ஆனாலும் அதைவிட வயது அதிகமாகத் தெரிகிறார். நான்கு பிள்ளைகளின் தாயான கணேசம்மா பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் தனது இளைய குழந்தையைப் பெற்றெடுத்தார். அவள் மஸ்கெலியாவின் நியூ ஃபாக் மோர் பிரிவில் சிரிபாத மலையை நோக்கிய உயரமான இடத்தில் ஒரு லைன் அறையில் வசிக்கிறாள்.அரணாலு பூமியை முத்தமிட்டு சூரிய அஸ்தமனத்தில் திரும்புவதற்கு முன்பு அவள் அன்றைய வேலைக்காக புறப்படுகிறாள். இதற்கு ஓராண்டுக்கு முன், கணேசம்மாவின் கணவர், தோட்டத்தில் மரங்களைப் பறித்து சம்பாதித்த பணம், உணவுக்கு போதாததால், கொழும்பில் கூலி வேலைக்கு சென்று விட்டார். தான் பட்ட துன்பங்களை தன் பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்க, அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று சக்சுதாவுக்குத் தெரியும், ஆனால் தீராத பொருளாதாரச் சிக்கல்கள் கணேஷம்மாவின் கனவுகளை மங்கச் செய்யும் அளவுக்கு வலுவாகிவிட்டன.
சந்திரா மோர்கன் சந்தியாவுக்கு 16 வயது. நியூ ஃபாக் மோர் தோட்டத்தில் 11ம் ஆண்டு படித்து வரும் அவள், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்குத் தயாராகி வருகிறாள். “எனது வகுப்பில் 37 பேர் படிக்கின்றனர்.சுமார் ஐந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.வீட்டில் பொருளாதார பிரச்சனையால் ஏதாவது வேலைக்கு செல்வதாக சொல்கிறார்கள்.வாரத்தில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களும் உண்டு. கூடுதல் வகுப்புக்கு சென்றால் மஸ்கெலியா நகருக்கு தான் செல்ல வேண்டும்.அண்டாளையில் இருந்து மஸ்கெலிக்கு பஸ்சில் செல்ல 120 ரூபாய்.அங்கு செல்ல 240 ரூபாய்.டியூஷன் வகுப்புகளுக்கு சென்றால் இன்னும் நிறைய பணம் வேண்டும். . தோட்டத்தில் வேலை செய்யும் என் அம்மாவால் செலவு செய்ய முடியாது, அதனால் அவர் வகுப்புகளுக்கு செல்லவில்லை." அவள் சொன்னாள்.
பெருமாள் கணேசன் (58) உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரால் வழக்கம் போல் தோட்டத்தில் விடாமுயற்சியுடன் வேலை செய்ய முடியாது. இவரது மகன் கணேசன் ரகுருவன் வயது 16. “என் மகன் காட்மோர் தமிழ் கல்லூரியில் படித்து கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதி, கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தோல்வியடைந்தான். மீண்டும் தேர்வு எழுத வேண்டுமானால் கூடுதல் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். செலவு செய்ய பணமில்லை. அதனால இப்போ என் மகன் தோட்டத்துக்கு வேலைக்குப் போறான்..." என்று சோகத்துடன் கூறுகிறார் கணேசன்.
இக்குழந்தைகளின் தலைவிதியை மாற்றியமைக்க நீண்டகாலமாக பாடுபட்டு வருகிறார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.பழனியாண்டி மோகன் (62). "எஸ்டேட் பள்ளிகளில் பல குழந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. பெரும்பாலான தோட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதன்மை பிரிவு மட்டுமே உள்ளது. அதையும் தாண்டி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பஸ்சில் பள்ளிக்கு செல்ல வேண்டும். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. கோவிட் காலத்தில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.பின்னர் டீசல்.பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது பேருந்து கட்டணம் இன்னும் உயர்ந்தது.இதனால் இன்று பேருந்தில் ஒரு நிறுத்தத்திற்கு 28 ரூபாய் வசூலிக்கின்றனர்.இதன் குழந்தைகள் தோட்டம் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு வரும்.தோட்டத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் போது பஸ் கட்டணம் கிடையாது.அதை தாண்டிய வகுப்புகளில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்துகின்றனர்.ஆறாம் வகுப்புக்கு.வயது வந்ததும். ,குழந்தைகளுக்கு குடும்ப பொருளாதார நிலை பற்றிய புரிதல் கிடைக்கும்.சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல ஆசைகள் இருக்கும்.இவற்றை நிறைவேற்ற பணம் வேண்டும்.வீட்டில் இருந்து பணம் கிடைக்காத போது அந்த பணத்தை வாடகை கொடுத்து சம்பாதிக்க இந்த குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். அவர்களின் பள்ளிப் பயணம் இப்படித்தான் முடிகிறது.
பெரும்பாலான மக்கள் பசியுடன் வருகிறார்கள்
அதிபர் சுப்பையா பிரபாகரன்
சாமிமலை ஓலாட்டன் கல்லூரி முதல்வர் சுப்பையா பிரபாகரன் கூறியதாவது: தற்போது உடற்பயிற்சி புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.மறுபுறம் போக்குவரத்து கட்டணமும் அதிகரித்துள்ளது.தோட்ட குடும்பங்களின் பெற்றோரால் முடியாது. இந்த கூடுதல் தொகையை வாங்குங்கள்.பள்ளி சீருடை வாங்க 1,500 ரூபாய்.2,000 செலவழிக்க வேண்டும்.பெரும்பாலும், குடும்ப பொருளாதார பிரச்னையால், பையன்கள் பள்ளி செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால், பெற்றோர். நால்வரையும் பள்ளிக்கு அனுப்பும் அளவுக்கு பண பலம் இல்லை.சில குழந்தைகள் பள்ளிக்கு வந்து மதிய வேளையில் உண்ணாவிரதம் இருக்க தாய்மார்கள் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்.அப்பாவுக்கு பண வசதி இல்லை.இந்த குழந்தைகள் வகுப்பை விட்டு வெளியேறும் போது மற்ற குழந்தைகள் வகுப்பில் உள்ளனர். சாப்பிடுகிறார்கள். இது தொடரும் போது, அவர்கள் பள்ளி பயணத்திற்கு விடைபெறுகிறார்கள்."
பள்ளிக்கு செல்ல இந்த பஸ் கட்டணத்தை குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் தாங்க முடியாது. நியூ கார்ட்மோர் கல்லூரியின் ஆசிரியை திருமதி தவ மனோஹரி கூறினார். "பள்ளிக்குச் செல்ல ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள் உள்ளனர். எனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளுக்குச் செல்கிறது. பேருந்தைத் தவறவிட்டால் 1,000 ரூபாய் வீல் செலுத்த வேண்டும். காரணமாக. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் தாய்மார்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.வேலை தேடி கொழும்பு செல்கிறார்கள்.அப்படியானால் பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் வயதான பெற்றோரிடம் வளர்கின்றனர்.குழந்தைகள் அவர்கள் சொல்வதை கேட்பதில்லை.காரணம். இதில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அலைந்து திரியும் குழந்தைகள் ஏராளமாக உள்ளனர்.கடந்த முறை எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வுக்கு 47 குழந்தைகள் விண்ணப்பித்தனர்.ஆனால் 37 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.உறுதிப்படுத்த இதுவே சிறந்த சான்று. இடைநிலை வகுப்புகளில் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது..."
பெருந்தோட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு.விஜய் சந்திரன் இந்தப் பிரச்சினை குறித்து பல முக்கியமான அவதானிப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடரும்....

Wednesday, January 25, 2023

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்

எமது புதுவருட சங்கல்பத்தில் நாம் வாழும் மாத்தளைச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது என்று சங்கல்பித்து 25 நாட்களுக்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுக்கும் இந்த வருடம் க. போ. த சாதாரண தரப் பிரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணிதச் செயலட்டைகளை வழங்கும் பணியில் ஒருபகுதியை எனது சிருஷ்டி நிறுவகம் மூலம் நிதி வழங்கி இந்தப் பணி நிறைவேறப் பங்காளராகியுள்ளது. இன்னும் பலர் இந்தப் பணிக்கு உதவியுள்ளார்கள். 

சிருஷ்டி புராதன ஞானத்தினை நவீன மனங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று உலகெங்கும் உள்ள சில நூறு மாணவர்களுடன் சிறப்பாக இயங்குகிறது. 

மாத்தளையின் கல்வி வளர்ச்சிப் பணியில் பாரிய பங்களிப்பினை களத்தில் செய்து வரும் சுபீட்சம் அறக்கட்டளை Velayutham Sutharshan அண்ணா அவர்கள் இந்தப் பணியை தனிப்பட தொடர்பு கொண்டு பாராட்டினார். அவருக்கு எமது நன்றிகள்! எதிர்காலத்தில் சுபீட்சத்தின் பணிகளை நடைமுறைப்படுத்த என்னால் இயன்ற ஆலோசனைகளையும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கள உதவிகளையும் செய்விக்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. 

அனைத்துப் பாடசாலை அதிபர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செயலட்டைகள் தமது மாணவர்களுக்கு உதவும் என்ற மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செயலாளர் Dr. Nishānthan Ganeshan, இயக்குனர் சபை உறுப்பினர் Sathasivam Luxsmi Kanth ஆகியோர் களத்தில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்துகிறாரகள். இந்தத் திட்டத்தின் அச்சாணி STEM-Kalvi நிறுவனர் Dr. Kumaravelu Ganesan அண்ணா அவர்கள்! அவருக்கும் எமது நன்றிகள்! 

பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale தனது அறிவிப்பில் நன்றி தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.


Monday, December 19, 2022

தலைப்பு இல்லை

தனி மனிதனாக பட்டம், புகழ், பணம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்து வெற்றி பெறுவது இலகுவானது. உதாரணமாக யாழ்ப்பாணத்து சமூகத்தை எடுத்தால் எல்லோரும் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; வாகனம் வாங்க வேண்டும்; பெரிய தொழிலில் இருக்க வேண்டும், வெளி நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று தனிமனித வெற்றியில் சிறப்புறுகிறார்கள். ஆனால் கூட்டாக வெற்றி பெற வேண்டிய அரசியல், சமூகச் முன்னேற்ற செயற்பாடுகளில் தோல்வியுற்றவர்களாகவே இருக்கிறார்கள். 
இயற்கையில் ஒரு கல அங்கியாக இருக்கும் போது மிக எளிமையாக இருக்கும் உயிர்கலம் பலகல அங்கியாக தோற்றம் பெறும் போது பல்வேறு சிக்கல் நிலையை அடைகிறது. இந்த சிக்கல் நிலைக்குள் ஒரு சம நிலை இல்லை என்றால் எப்போதும் நோயுற்றதாக இருக்கிறது. 
தனிமனிதன் ஒருவன் பட்டதாரியாகுவது அவனது தனிப்பட்ட திறன் சார்ந்தது; ஆனால் ஒரு சமூகத்தில் 90% நபர்கள் பட்டதாரியாக வேண்டும் என்றால் அதற்கு பலரது ஒன்றிணைந்த செயற்பாடு அவசியமானது. 
தனிமனிதன் அமைச்சரைக் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து அதிகாரத்தைப் பெற்று தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்; ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் அரசியல் உரிமை பெறவேண்டும் என்றால் கூட்டிணைந்த அரசியல் ஞானம் உள்ள சமூகம் இருக்க வேண்டும்.
சமூகத்திற்குள் இருக்கும் சிக்கல் தன்மை சரியான சம நிலையில் பேணப்பட வேண்டும். 
அண்மையில் கேள்வியுற்ற செய்தி; மிகப் பெரிய சேவை செய்த சமூக நிறுவனம் ஒன்று அதிகாரப் போட்டியால் சிதைந்து போனது என்று; இது தமிழர்களுக்கு புதிய கதை அல்ல; சோழ, சேர, பாண்டியர் காலத்திலிருந்து தமிழர்களின் வரலாறு இது தான்! 
சர்வவல்லமை உள்ள இறைவன் போன்ற தலைவன் ஒருவன்; அவனுக்கு நிகர் எவருமில்லை என்று புகழ் பாடி அவனைக் கொம்பில் ஏற்றுவது; அவனது ஆற்றல் கண்டு பயமுறுவது; பிறகு அவருக்கு மட்டும் எப்படி இப்படிப் புகழ் வரலாம் என்று அசூயை உருவாக்குவது; அவர் என்னை மதிக்கிறார் இல்லை; அவருக்கு மட்டுத்தான் அதைச் செய்ய முடியுமா, சரியான பாடம் புகட்டுகிறேன் என்று அரசை -தலைவனைக் கவிழ்ப்பது! நானும் செய்து காட்டுகிறேன் என்று நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் திட்டத்தைக் கவிழ்ப்பது இதுதான் தமிழர்களின் அதிகாரப் போட்டியின் சுருக்க வரலாறு! 
Peter Kropotkin என்ற ரஷ்ய தத்துவாசிரியர் ஒரு அதிகாரமைய நிலவுடமைக் குடும்பத்தில் பிறந்தவர்; அரசின்மை - Anarchism என்ற ஒரு அரசறிவியல் கோட்பாட்டினை முன்மொழிந்தார். இதன் படி அதிகாரப்படி நிலைகள் அற்ற தேவையற்ற நிறுவன அமைப்புகளை உருவாக்காமல் ஒருங்கிணைந்து செயல்படுதல் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார். இதன் படி ஒரு சமூக நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இலக்காக செயற்பட வேண்டும்; ஆனால் அதிகாரங்களை ஒரிடத்தில் குவித்து தேவையற்ற பூசல்களை உருவாக்கக் கூடாது. 
இன்றைய தமிழ் சமூகத்தின் தேவையும் இதுதான்! 
ஒவ்வொருவரும் தமது அக சந்தோஷத்திற்காக, சமூக முன்னேற்றத்திற்கான தனது பங்களிப்பு, தானும் சமூகத்திற்கு நல்லது செய்தேன் என்ற அக உந்தலுடன் சமூக நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டாலும் தனித்தனியே ஒவ்வொருவரும் ஒருதிட்டம், இன்னொரு திட்டம் என்று ஒருவித ஒத்திசைவு இன்மையை ஏற்படுத்தாமல், அனைவரது உழைப்பும் சமூகம் கூட்டாக முன்னேற வேண்டும் என்ற இலக்காக இருக்க வேண்டும். இதில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முனைப்பு, எனது கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு, அசூயை என்ற மற்றவர் நல்லது செய்யும் போது ஏற்படும் எமக்கு ஏற்படும் கலக்கம் இவைகள் அற்ற உயர்ந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு உதவேண்டும். 
சித்த மருத்துவத்தில் வாயு என்ற பிராணனே உயிர் சக்தி; இந்த உயிர்சக்தி தகுந்த அளவில் உடல் எங்கும் தங்காமல் ஓடிக்கொண்டிருந்தால் அவை உயிரைக் காக்கும் சக்தி; எங்காவது தங்கினால் வாதம் - இதை தோஷம் அல்லது குற்றம் என்று சொல்லுவார்கள்; இதையேதான் Peter Kropotkin அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் Anarchism ஆக சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 
பொன்னியின் செல்வனை ஆனந்தித்துக் கொண்டாடும், ஹீரோயிசத்தை அரசியல் தலைமையாக நம்பும் தமிழர்கள் இப்படியான அதிகாரமையம் அற்ற அனைவரும் முன்னேறக்கூடிய சமூக அமைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்களா என்பது சிந்திக்கப்பட வேண்டியதே!!!

Saturday, September 24, 2022

தலைப்பு இல்லை

இன்றைய காலைப்பொழுது பாக்கியம் தேசியக்கல்லூரி பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினோம். 

மாத்தளையின் கல்வி முன்னேற்றத்தில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale உடன் தோளுக்குத் தோள் நின்று செயற்படும் நண்பர் திரு. Jayaprakash Sithambaram அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப்படிப்புகள், சிறு கற்கை நெறிகள், பட்ட மேற்படிப்புகளை தற்போது மாத்தளை கல்வி நிலையத்திலேயே வழங்குகிறது. அதன் இயக்குனர் எனது ஆய்வுப் பேராசிரியரின் இன்னுமொரு மாணவர் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாத்தளையில் வசிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து தனியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெற்றோருக்கு செலவு வைக்காமல் இலகுவாக அரச பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு! 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 பேருக்காவது இதில் கற்பதற்குரிய செலவை புலமைப்பரிசில் மூலம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பை நடாத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எமது சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறோம். 

பாக்கியம் தேசியக் கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பும் தந்திருந்தார்! 

ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய Sathasivam Luxsmi Kanth நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். 

சாதாரணதரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் விடுமுறையினை வீணாக்காமல் ஆங்கில அறிவையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க இந்தக் கற்கைகள் உதவி செய்யும். 

மாத்தளையில் இருக்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இந்த நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு அதிபர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்! இந்த நிகழ்வை நடாத்த விரும்பும் அதிபர்கள் எமது ஆலோசகர் திரு Jayaprakash Sithambaram அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பாடசாலையில் இந்தக் கற்கைகளைக் கற்க தகுதியுள்ள, ஆனால் வசதியற்ற மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கற்கைக்குரிய நிதி உதவிகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செய்யும்.


Wednesday, September 07, 2022

உயர்தரப் பெறுபேறுகளும் மாத்தளையின் தமிழ் சமூக கல்வி முன்னேற்றமும்.

ஒவ்வொரு பாடசாலை நிர்வாகமும்  உயர்தரப் பெறுபேறுகளை ஆராயும்போது சரியான புள்ளிவிபரவியல் முறையினைப் பயன்படுத்த வேண்டும். 

சில பாடசாலைகள் தாம் உயர்தரத்தில் அதிகப் பேரைச் சித்தியடைய வைக்கிறோம் என்பதில் பூரிப்படைவைதைக் காண்கிறோம். 

ஒரு மனிதன் திருப்தியடையக்கூடாத ஒரே விஷயம் அறிவும் கல்வியும்! ஆகவே நாம் உயர்தரம் சித்தியடைய வைக்கிறோம் என்பது பெருமையல்ல!

சித்தியடையும் உயர்தர மாணவர்கள் எத்தனை பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள்? அப்படித் தெரிவாகும் எத்தனை பேர் பல்கலைக்கழகத்தின் கற்கையைத் தொடர்ந்து பட்டதாரியாகிறார்கள்? அப்படி பட்டதாரி ஆகியவர்களில் எத்தனை பேர் உயர்தொழிலில் இருக்கிறார்கள்? அத்தகைய உயர்தொழிலில் இருக்கும் பழைய மாணவர்களை பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு எப்படி பயன்படுத்துவது? இவை எல்லாம் பாடசாலை நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டிய அதிமுக்கிய விடயம்!

உயர்தரம் என்பது ஒரு போட்டிப் பரீட்சை; அந்தப்போட்டியில் நமது பாடசாலை எங்கிருக்கிறது என்பது பற்றி பார்க்கக்கூட விருப்பமில்லாமல் கதவுகளை மூடிக்கொண்டு நல்லதொரு கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது. 

குறிப்பாக மலையகத்தில் தமிழ்ப் பாடசாலைகள் – சிங்களப் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? இவையெல்லாம் ஆராயப்பட வேண்டும். 

கட்டிடங்களைக் கட்டி, வசதிகளை ஏற்படுத்தினாலும் உயர்தரத்தில் எவ்வளவு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள், அதன் மூலம் உயர் தொழிலைப் (higher professions) பெறுகிறார்கள் என்பதுதான் உண்மையான கல்வி வளர்ச்சி! 

கீழ்வரும் தரவினை தெளிவாக, அர்த்தமுள்ளதாக இப்படி ஒழுங்குபடுத்தலாம். 

ஒட்டுமொத்த மத்திய மாகாணத்தில் 14 தமிழ் பாடசாலைக் கல்வி வலயங்கள் இருக்கின்றன. 

மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவெல, நாவுல ஆகிய இரண்டும் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மாத்தளை பிரதான நகர்ப்புற கல்வி வலயம் 11 வது இடத்தில் இருக்கிறது. 

பிரதான நகராகிய கண்டியும் மாத்தளையும் பின்தங்கியிருக்கிறது. 

பொதுவாக பிரதான நகரைவிட கிராமப்புற கல்விவலய பாடசாலைகள் பெறுபேறுகளில் நல்ல பெறுபேறுகளைக் காட்டுவதை அவதானிக்க வேண்டும். இந்தப் பாடசாலைப் பெற்றோரின் பொருளாதார மட்டம் நகர்ப்புற பெற்றோரின் பொருளாதார மட்டத்தை விட குறைவானதாகும். 

இந்த ஒப்பீடு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் தனித்தமிழ் வலய பெறுபேறு ஒப்பீடு! உண்மையில் பிரயோசனமில்லாதது; உண்மையான பந்தயத்தில் ஓடும் குதிரையாக ஒப்பிட வேண்டும் என்றால் நாம் சிங்கள - முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம் என்பது தெரியும். 

இதனால் எதிர்காலத்தில் சமூகப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வழக்கறிஞரோ, வைத்தியரோ, பொறியலாளரோ, கணக்காளரோ, பட்டதாரி ஆசிரியரோ சமூகத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை மாத்தளைச் சமூகம் விளங்கவேண்டும். 

பொறுப்புத் துறப்பு: கீழே படத்தில் உள்ள தரவு அட்டவணை சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டது; ஆகவே இது உத்தியோகப் பூர்வ தரவினூடான ஆய்வு அல்ல; இந்த ஆய்வு கல்வித்திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் செய்யவேண்டிய உத்தியோகபூர்வ பணி; அவர்களிடமிருந்து இப்படித் தெளிவான ஆய்வுகள் சமூகத்திற்கு வெளிவர வேண்டும். இந்தப்பதிவின் நோக்கம், எது சரியான இலக்கு? அதை அடைவதற்கான சரியான ஆய்வு முறை எது? என்பதற்கான பரிந்துரையைக் கூறுவதாகும்.


Thursday, September 01, 2022

மாத்தளை தமிழ் பாடசாலை உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப கல்வி நிலை பற்றிய ஒரு ஆய்வு by FTGM - STEM Unit

மாத்தளையில் பிரதான தமிழ் பாடசாலைகளின் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பேறுபேறுகள் வெளிவந்த மாணவர்களுடன் இன்று ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற வகையில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினேன்.

இதன் பிரகாரம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறமுடியாமல் இருப்பதற்கான காரணங்களாக கீழ்வரும் காரணிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது;

1) பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை; பாடசாலை முழுமையாகக் கற்பிக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பவில்லை.

2) அனைத்து மாணவர்களும் தமது பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய டியுசன் ஆசிரியர்களையே நம்பியிருக்கிறார்கள்.

3) தாமாக படிக்கும் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு சில விடயங்கள் புரிய கஷ்டமாக இருக்கும்போது அதைத் தெளிவு செய்து உதவி செய்யக்கூடியவர்கள் (ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர்கள்) இல்லை. 

4) எல்லோரும் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் மீண்டும் படிப்பதை மாத்திரம் படிக்கிறோம் என்று நினைத்து நேரத்தை வீணாக்கியிருக்கிறார்கள். எவரும் கோட்பாடுகளைப் புரிவதற்கோ, அதை வினாக்களுடன் தொடர்புபடுத்தி எழுதுவற்கோ பயிற்சிக்கவில்லை. பயிற்சி இல்லாததால் பரீட்சையில் குறித்த நேரத்திற்குள் விடை எழுதும் திறன் குறைவாக இருக்கிறார்கள். 

இந்த நான்கு காரணிகளில் முதல் இரண்டு காரணிகளும் கல்வித்திணைக்களம், பாடசாலை நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை. 

மற்றைய இரண்டு விடயங்களுக்கு மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். 

இதன் பிரகாரம் இரண்டாம் தடவை தோற்ற இருக்கும் ஆர்வமுள்ள சில மாணவர்களுக்கு நான் தொடர்ச்சியாக சில பயிற்சியை வழங்க ஆரம்பித்துள்ளேன். 

இந்தப் பயிற்சி நெறியில் பங்குபெறும் மாணவர்கள் கீழ்வரும் பயிற்சிகளைப் பெறுவார்கள்:

1) ஒவ்வொரு பாட அலகினையும் புரிந்துகொள்வதற்கான உத்திகள்.

2) கேள்விகளைப் பயிற்சி செய்து ஞாபகசக்தியை விருத்தி செய்யும் முறைகள்.

3) தினசரி கற்பதற்கான அட்டவணையை வினைத்திறனாக தயார்படுத்தும் முறைகள்

4) தான் ஒவ்வொரு அலகிலும் எப்படி முன்னேறுகிறேன் என்பதை சுய பரிசோதனை செய்யும் பயிற்சிகள்.

5) பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற வகையில் உடல் நலம், மன நலம் எப்படிப் பேணுவது


Thursday, August 25, 2022

தலைப்பு இல்லை

இன்று மாத்தளை க/கலைமகள் மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவர் தின விழாவிற்கு விஷேட அதிதியாக அழைத்திருந்தார்கள். 

தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கு நாம் வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருத்தல் என்பதும் பாடசாலையில் அந்தப் பண்பு ஆரம்பமாகி எமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தலைமைப் பண்பினை ஏற்கவேண்டி வரும் என்பதை இளம் மாணவ உள்ளங்களில் பதிய வைக்க முயற்சித்தேன்.

மேலும் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் நோக்கம், அவர்களுடைய பணி மாத்தளையின் கல்வி வளர்ச்சியில் என்ன பணி செய்ய முடியும் என்பதையும் ஒரு அறிமுகம் செய்து வைத்தேன். 

பாடசாலையின் அதிபர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை என்பதை நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்! மாத்தளை கல்விச் சமூகம் அவரை இனங்கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கல்வித்திணைக்கள அதிகாரி திரு. ரில்வான் பிரதம அதிதியாகவும், கலைமகள் மகா வித்தியாலத்தின் பழைய மாணவரும் மாத்தளை பொலிஸ் நிலைய உப பரிசோதகருமான திரு ஆனந்த ராஜா ஆகியோர், திரு, ஜெயப்பிரகாஷ், மற்றும் அனேக மாத்தளைப் பாடசாலை உப அதிபர்கள், ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.


Wednesday, August 17, 2022

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale எப்போதும் எமது சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய கவனத்துடன் செயற்பட்டு வருகிறது. 

இந்த அடிப்படையில் மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் மாணவி ஒருவர் உயிரியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு தெரிவாகி இருக்கிறார்; குடும்பச் சூழலால் கல்வியை விடும் நிலையில் இருந்த அவர் கற்பதற்கு அவருடைய பாடசாலை ஆசிரியர்களும், அதிபரும் சேர்ந்து செய்த உதவியால் இன்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 

தொழில்நுட்ப பாடங்களுக்கு கணனி இல்லாமல் கற்க முடியாது. இதை உணர்ந்து ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் Ravi Shankar ஆகிய இருவரும் "ஐயம் இட்டு உண்" அறக்கட்டளையின் ஸ்தாபகரும், முன்னாள் ஈ-கல்வி தொண்டு நிறுவன தலைவருமான Muralee Muraledaran அண்ணா அவர்களின் நிதி உதவியுடன் மடிக்கணணி ஒன்றினை ஏற்பாடு செய்து அவரது கற்கைக்காக ஒன்றியத்தினூடாக வழங்கியுள்ளனர்.

இந்த மடிக்கணனி அவரது கற்கைக்கு கடனாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்தக் கடன் படித்து உயர்ந்த தொழிலிற்கு வந்தபின்னர் இதைப்போல் 10 பிள்ளைகளுக்கு நீங்கள் திருப்பி வழங்குவதன் மூலம் மீள் செலுத்த வேண்டும் என்று கூறினேன். உறுதியுடன் ஏற்றுக்கொண்டார். {இது ஒரு உத்வேகத்திற்கும், எதிர்காலச் சந்ததிமேல் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் சொல்லபட்ட வார்த்தை! அவர் அதை பக்குவமாக பாவித்துவிட்டு கல்வி முடிந்தவுடனோ, புதுக்கணனி வாங்கினாலோ இன்னொருவர் பாவிக்கும் வகையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது மாத்திரமே அவர் மீது சுமத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ நிபந்தனை!}

இந்த நிகழ்வில் ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் பங்குபற்றினேன்! நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர், ஒன்றியத்தின் ஆலோசகர் Jayaprakash Sithambaram, அதிபர் அவர்களும் பங்குபற்றினர்.


Tuesday, July 26, 2022

தலைப்பு இல்லை

இன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பிரயோக கணித புதுமுக பட்டதாரி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம்:

181 மாணவர்கள் துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பீடத்தின் பழைய மாணவர்களாக இருந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். 

1) முதலாம் ஆண்டில் நான் தொழில் வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறேன் என்ற இலக்கினை நிர்ணயுங்கள். 

2) ஆங்கிலம் நன்கு உரையாட, எழுத திறனை விருத்தி செய்துகொள்ளுங்கள். 

3) உங்கள் துறையில் வரும் புதிய தகவல்களை எப்போதும் படித்து உங்களை எப்போதும் update இல் வைத்திருங்கள். 

4) படிக்கும் காலத்தில் சவால்களுக்கு முகம் கொடுங்கள்; புத்தாக்க தீர்வினை சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

5) அரசாங்க வேலைக்கோ, வேலை கிடைப்பதற்கோ படிக்காதீர்கள்; வேலையை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக உங்கள் துறையில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பியுங்கள். 

6) படித்து முடித்தவுடன் பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் உங்கள் துறையில் இருக்கும் வாய்ப்பின் மூலம் உள்நுழைந்து உங்களுக்கான வாய்ப்பினை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். 

7) Do the best with available மனப்பாங்கினை வளருங்கள்;

 முரண்பாடுகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்; Assertiveness என்ற ஆக்ரோஷமாக இல்லாமல் அல்லது செயலற்ற முறையில் 'தவறானதை' ஏற்றுக்கொள்ளாமல், உங்கள் சொந்த அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்காக அமைதியான மற்றும் நேர்மறையான வழியில் நிற்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

9) உங்கள் துறையில் உள்ளவர்களுடன் networking வைத்திருங்கள். 

10) மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்கள் அறிவையும், திறனையும் விருத்தி செய்ய கடுமையாக உழையுங்கள்.


Saturday, June 25, 2022

ஸ்ரீ அரவிந்தரின் பிராணக் கல்வி முறை

 

ஒரு குழந்தை தனது பிராண ஆற்றலை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி சிறுவயதிலேயே சொல்லிக் கொடுப்பதன் மூலம் பல தவறான பழக்க வழக்கங்கள் தடுக்கப்படலாம்.

பிராணக் கல்விமுறையில் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் இருக்கிறது. இந்த இரண்டுமே அதன் நோக்கம், செயல் என்பவற்றில் வெவ்வேறாக இருந்தாலும் அவை இரண்டும் முக்கியத்துவத்தில் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லையே.

முதலாவது அடிப்படை, புலன் உறுப்புகளின் வளர்ச்சியும், பயன்படுத்துவதும் என்ற அறிவினைப் பெறுவது

இரண்டாவது அடிப்படை, எமது ஆளுமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது, விழிப்புணர்வில் முன்னேற்றமடைவது, ஆளுமையை தாழ் உணர்ச்சிகளிலிருந்து உருமாற்றமடையச் செய்வது என்ற அறிவினை, பயிற்சியினைப் பெறுவது.

வயதுடன் ஒரு பிள்ளையின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க அந்தப்பிள்ளைக்கு கலையின் சுவை அறியும் படியும், தன்னுடைய மனப் பிராண ஆற்றல்களை செம்மைப்படுத்தும் ஆற்றலாகவும், திறமையாகவும் உருமாற்றும்படி செய்விக்க வேண்டும். அவனை இயற்கையிலும் மனிதப் படைப்பிலும் உள்ள அழகான, உயரிய, ஆரோக்கியமான மற்றும் உன்னதமான விஷயங்களை நேசிக்கவும் பாராட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதுவே ஒரு உண்மையான அழகியல் கலாச்சாரமாகும், இது அவனை இழிவான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும்.

Tuesday, April 05, 2022

தலைப்பு இல்லை

 

ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அடிப்படைக்கல்வி என்பது வாழ்வதற்கான, நாம் ஒரு துறையில் அடியெடுத்து வைப்பதற்கான அறிவினைப் பெறும் முதல் படியே!

உதாரணமாக இளமானிப் பட்டம் பெற்றவர் என்றால் அந்தத்துறையின் அடிப்படைக் கோட்பாடுகள், வரைவிலக்கணம் அறிந்தவர் என்று அர்த்தம்!

முதுமாணி என்றால் அந்தத்துறையில் உள்ள அறிவை பிரயோகிக்கும் ஆற்றல் உள்ளவர் என்று அர்த்தம்!

தத்துவமானி, முனைவர் என்றால் தனது துறையில் புதிய அறிவிற்கு பங்களித்தவர் என்று அர்த்தம்!

ஒரு தொழிலதிபர் என்றால் ஒரு துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி பலரை ஒன்றிணைத்து பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பலருக்கு வாழ்க்கையின் அடிப்படையை உருவாக்க வல்லவர் என்று அர்த்தம்!

ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட இளமானி, முதுமாணி, தத்துவமானி, முனைவர் பட்டங்கள் உடைய எத்தனைபேர் தொழிலதிபர்களாக மாறுவது என்ற கல்வி எங்கும் கற்பிக்கப்படுவதில்லை!

Recommended reading for my career guidance students

Friday, April 01, 2022

தலைப்பு இல்லை

 

அடிப்படையில் இலங்கையர்களும், இலங்கையில் உள்ள இந்தக் கல்விமுறை உருவாக்கும் கல்வியாளர்களும் சோம்பேறிகள்! இதை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இலங்கையர்களால் high end IT product இனை உருவாக்கத் தகுந்த திறன் வளம் இல்லை என்று இந்தியாவிற்கு தனது திட்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதனால் வரும் வருமான இழப்பு பல மில்லியன் டொலர்கள்! அத்தகைய கம்பனி 04 இனுடைய வருமானம் இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரு வருடத்தில் அடைக்கும். இந்த வருமானத்தை ஈர்க்கத்தக்க வகையில் மனித வளத்தினை உருவாக்க நாம் நீண்டகால மூலோபாய திட்டங்கள் ஏதும் வைத்திருக்கிறோமா என்றால் இல்லை!

இங்குள்ள புத்திஜீவிகள் கற்பிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கு விரும்புவதில்லை! இங்குள்ள ஒரு PhD holder தனது துறையில் லட்சம் டொலர் வர்த்தகத்தை உருவாக்க முடிந்தால் இலங்கை எவ்வளவோ பெரிய பணக்கார நாடாக இருக்கும்!

இங்கிருக்கும் புத்திஜீவிகள் படிக்காத முட்டாள் அரசியல்வாதிகள்தான் தமக்கு படியளக்கும் தெய்வம் என்று சிந்தனையில் இருக்கும் வரை இப்படி உசுப்பேற்றுபவர்களை தலைவர்களாக்கி, பின்னர் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபோது கொதித்தெழுந்து உணர்ச்சியைக் கொட்டிவிட்டு வீட்டில் போய் சுருண்டு படுப்பதை மாத்திரம் தான் செய்யமுடியும்!

இதுவரை என்னிடம் தொழில் புரிந்தவர்களும் சரி, இப்போது நான் வழிகாட்டும் பட்டதாரி மாணவர்களும் சரி எல்லோருக்கும் சொகுசாக அரசாங்க வேலையில் போய் குப்பை கொட்ட வேண்டும்! தனியாக தமது திறனைப் பாவித்து ஒரு சிறிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை அறவே இல்லை! உலகம் எப்படி இயங்குகிறது! பொருளாதாரம் எப்படி இயங்குகிறது, அதில் தனது பங்கு எங்கிருக்கிறது என்ற துளி சிந்தனைகூட இல்லை!

Saturday, January 15, 2022

தலைப்பு இல்லை

அண்மையில் மாத்தளையில் முதல் 20 இடங்களுக்குள் உயர்தரத்தில் மூன்று A சித்திபெற்ற ஒரு மாணவி எமக்கு அருகில் இருக்கும் ஊரில் வசிப்பவர்கள். அவரின் தாய் தனது மகளிற்கு படிப்பதற்கு மடிக்கணணி தேவை என்று வங்கிக்கு கடனுக்காக விண்ணப்பித்து கடன் எடுப்பதற்கு கூட வங்கிக்கணக்கு இல்லாத ஒரு விவசாயக் குடும்பம்! அந்த மாணவியின் ஊக்கமும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைப்பவை! தாய் பிள்ளையின் படிப்பிற்கு காட்டிய அக்கறை நிச்சயமாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த எனது நண்பர்கள் வட்டத்திற்குள் செய்தி அனுப்பினோம்!

இரண்டு நண்பர்கள் உடனடியாகப் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றுள் எமது பாடசாலைத் தோழர் Kalimuththu Naguleshwaran அவர்களது நிறுவனம் StudyBuddy உடனடியாக புதிய கணனியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இன்று பாடசாலை அதிபரூடாக குறித்த மாணவிக்கு கையளித்தோம்!

Kalimuththu Naguleshwaran மற்றும் இன்னுமொரு இளைஞரும் சேர்ந்து StudyBuddy என்றொரு கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஒரு SDT card இல் சாதாரண தரத்திற்கு தேவையான அனைத்துப் பாடங்களும் பல்வேறு ஆசிரியர்களை வைத்து காணொளி ஆக்கி தயார்படுத்தியுள்ளார்கள். இலங்கையில் நிகர் நிலைக் கல்வி என்பது உண்மையில் சாத்தியம் இல்லை என்பதை புள்ளி விபரவியல் மூலம் ஆராய்ந்து அதற்கு மாற்றாக இதை உருவாக்கி உள்ளார்கள்.

எவரும் உதவி என்று கேட்க முன்னர் உதவும் மனமுடைய மனித சமுதாயம் இருந்தால் உலகில் எவரிற்கும் துன்பமில்லை!

இந்தப் பதிவு எம்மிடம் பணமில்லாவிட்டாலும் உதவும் உள்ளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உதவலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் பகிர்வதற்கான ஒரு பதிவு

Friday, December 31, 2021

ஆற்றல் மிக்க இளையோர் - 01

வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan

இந்தப்பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துகொள்வதற்காகவும் பகிர்ந்துகொள்கிறேன். 

இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும்போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும்போது அவர் எனக்குச் சொன்ன செய்தி! 

நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத்தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அதுபோல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்! 

இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும். 

PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார். 

மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. 

மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது. 

என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!


Wednesday, December 22, 2021

தலைப்பு இல்லை

I did a small experiment with my students whom I teach, by posting the below quote and ask to tell their opinion; actually, I don't know this statement was said by Elon Musk or not; however, this helped me to open up their view. 

Definition of Intelligence is the ability to learn, emotional knowledge, creativity, and adaptation to meet the demands of the environment effectively.

All the degree holders are actually meet their demands of exams and obtain the degree; so they are intelligent, but the problem is how they do consistently after their degree and contribute to developing the social, economical, political systems of the world. 

here are the comments: 

******************************************************************

Yeah that is true sir if we just do our education just for marks, we can get a good degree but if cant apply relevant points to relevant consequences that act as an educated fool

*****************************************************************

Most people are mistaken in thinking that having a degree makes perfect. But there are many people and entrepreneurs who have done extraordinary things without even having a degree. And also we are all different and each of us must make our own way in life

******************************************************

Education not just fulfills all the things of us. To deal with society in a greater way we need to get many more experiences as well as need to learn simple tricks.

*******************************************************************

Absolutely true sir, Due to the current education system all compete with each other, and as a result, humanity and other human qualities are lost. There are persons who completed Master and can't work in a company successfully without the sense of human. They have no interaction among their co-workers. So my opinion is everyone has to balance their educational and social life.

**************************************************

I agree education and intelligence both are different. To succeed in our life, we must not need a degree. But a person who has a bachelor's degree not be an idiot. There are some qualifications for a degree.


ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...