குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 01, 2015

சஷ்டி தேவி சாதனை

இதன் உச்சரிப்பை இந்த இணைப்பில் கற்கலாம் 

சஷ்டி தேவியானவள் துர்க்கையின் ஆறாவ‌து வடிவம். ஸ்கந்தரின் மனைவி தேவசேனாவும் இவளே, இவளை பலதா, விஷ்ணுமாயா எனவும் அழைப்பர். இயல்பிலேயே குழந்தைகளை காப்பதும், புஷ்டியாய் வளர்ப்பது, அறிவைக்கொடுப்பது, நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் எனபவற்றை தருவது இவள வழிபடுபவர்கள் பெறும் பேறுகளாகும்.

இவளது வழிபாடு பிரியவர்த்தன் எனும் அரசனது கதையின் மூலம் விளக்கப்படுகிறது. இவளது அருளின் மூலம் அரசனது வம்சம் தழைத்து அவனது மகன் புகழுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததால் இவளது சாதனையின் பெருமை அறியக்கூடியதாக இருக்கிறது.

குழந்தை பிறந்து ஆறாவது நாள், இருபத்தியொராவது நாள் (நாமகரணம், ஆறாவது மாத அன்னபிரசன்னம் ஆகியதினங்களில் இவளது பூஜை செய்வதால் குழந்தை ஆயுள், ஆரோக்கியம், அறிவு, ஞானம், ஆற்றல் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழும்.

இவளது மந்திரம் "ஓம் ஹ்ரீம் சஷ்டி தேவ்யை ஸ்வாஹா" என்பதாகும். இவள் சோடஷ‌மாத்ருகா தேவியினருள் ஒருத்தி. சோடஷ‌ மாத்ருகா தேவியினர் கௌரி, பத்மா, சசி, மேதா, சாவித்ரி, தேவசேனா, விஜயா, ஜயா, ஸ்வதா, ஸ்வாஹா, மாதரோ, லோகமத்ரா, ஹ்ருஸ்தி, புஷ்திதா,துஷ்தி, ஆத்மகுலதேவதா என்ற பதினாறு பேருமாவர்.

சஷ்டி தேவி தியான ஸ்லோகம்
சுபுத்ரதம் சா சுபதம் தயாரூபம் ஜகத் ப்ரசு
ஸுவேதா ஸம்பக வர்ணபாஹம் ரத்ன பூஷண பூஷிதம்
பவித்ர ரூபம் பரமம் தேவசேனாம் பரம் பஜே
பொருள்: நான் தேவசேனாவின் தெய்வீக ரூபத்தினை துதிக்கிறேன், தேவி எங்களுக்கு புத்திரனை ஆசீர்வதிக்கட்டும், அவளது தெய்வீகம் கருணை வடிவாக உலகெங்கும் பரவட்டும். தேவி தன் கரங்களில் ஏந்திய பொன்நிற சம்பக மலரை துதிக்கின்றேன். தேவி தன்னை அலங்கரித்துள்ள ரத்தினங்களையும் பொன்னாலான அணிகலனையும் துதிக்கின்றேன்.
இவாறு தியானித்த வண்ணம் மலரினை சாதகன் தனது தலையில் வைத்து மீண்டும் இருமுறை இந்த மூலமந்திரத்தினை ஜெபிக்கவும். பின்பு பாத்தியம், அர்க்கியம், ஆசமனியம், சந்தணம், மலர், தூபம், தீபம், நைவேத்தியம், பஞ்ச உபசார பூஜை செய்து கீழ்வரும் ஸ்தோத்திரத்தினை ஜெபிக்கவும்.,

1        நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸித்தியை ஷாந்தியை நமோ நமஹ‌,  சுபாயை தேவசேனாயை சஷ்டி தேவ்யை நமோ நமஹ‌
பொருள்: தேவியிற்கு நமஸ்காரம், மஹா தேவியிற்கு நமஸ்காரம், அரிய சித்திகளையும், அமைதியினையும் தரும் தேவியை நமஸ்கரிக்கிறேன். தூய‌ தேவ‌சேனா தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

2.   வ‌ர‌தாயை புத்ர‌தாயை த‌ன‌தாயை ந‌மே ந‌ம‌ஹ‌, ஸுக‌தாயை மோஷ‌தாயை ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: கேட்கும் வ‌ர‌ங்க‌ளை அருள்ப‌வ‌ளும், புத்திரனையும் செல்வத்தினையும் த‌ருப‌வ‌ளை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன். இன்ப‌த்தையும் மோஷ‌த்தையும் த‌ரும் ச‌ஷ்டி தேவியினை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

3.   சிருஷ்டிதாயை ச‌ஷ்ட‌ ஸ்வ‌ரூபின்யாயை சித்யாயை ச‌ ந‌மோ ந‌ம‌ஹ‌ மாயாயை சித்த‌ யோகின்யாயை ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: யார் சிருஷ்டிக்கும் ச‌க்தியாக‌ இருக்கிறாளோ, யார் ஆறு ரூப‌ங்க‌ளாக‌ இருக்கிறாளோ, யார் சூஷ்ம‌ ச‌க்திக‌ளாக‌ இருக்கிறாளோ அந்த‌ தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன். மாயா ச‌க்தியாக‌வும், புனித‌மான‌ யோகின்யாக‌வும் இருக்கின்ற‌ ச‌ஷ்டி தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

4.   சாராயை சார‌தாயை ச‌ பராதேவ்யை ந‌மே ந‌ம‌ஹ‌, பால‌திஷ்திர்ய தேவ்யை ச‌ ச‌ஷ்டி தேவ்யை ந‌மே ந‌ம‌ஹ‌
பொருள்: யார் எல்லாவ‌ற்றின‌தும் சார‌மாக‌ இருக்கின்றாளோ, ச‌ர‌ஸ்வ‌தி ஸ்வ‌ரூப‌மாக‌ இருக்கின்றாளோ அவ‌ளை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன். புத்திர‌னை கொடுக்கும் ச‌ஷ்டி தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

5.   க‌ல்யாண‌தாயை க‌ல்யாண்யை ப‌ல‌தாயை ச‌ க‌ர்மானாம்  பிர‌த்ய‌க்ஷ‌யாயை ஸ்வ‌ ப‌க்தானாம் ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: யார் புனித‌மான‌வ‌ளோ, புனித‌மான‌ செய‌ல்க‌ளை செய்ப‌வளோ, செய்யும் க‌ர்ம‌ங்க‌ளுக்கு ப‌ல‌னைத்த‌ருப‌வ‌ளோ அவ‌ளை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன். ப‌க்த‌ர்க‌ளுக்கு பிர‌த்ய‌க்ஷ‌மாயிருக்கும் ச‌ஷ்டி தேவியை பிரார்த்திக்கிறேன்.

6.   பூஜ்யாயை ஸ்க‌ந்த‌ க‌ந்தாயை ஸ‌ர்வேஸாம் ஸ‌ர்வ‌ க‌ர்மாஸு தேவ‌ ர‌க்ஷ்ன‌ காரின்யை ச‌ஷ்டி தேவியை ந‌மோ ந‌ம‌ஹ‌

பொருள்: யார் பூஜிக்க‌த் த‌குந்த‌வ‌ளோ, சுப்ர‌ம‌ண்ய‌னின் ப‌த்தினியோ, எல்லாக் க‌ர்ம‌ங்க‌ளிலும் எல்லாருக்கும் உத‌வுப‌வ‌ளும், தேவ‌ர்க‌ளை காப்ப‌வ‌ளுமான‌ ச‌ஷ்டி தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

7.   சுத்த‌ ச‌த்வ‌ ஸ்வ‌ரூபிண்யாயை வ‌ந்திதாயை ந்ருணாம் சாத‌  ஹிம்ச க்ரோத‌ வ‌ர்ஜிதாயை ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: யார் தூய‌ ச‌த்வ‌ குண‌ம் பொருந்திய‌வ‌ளோ, யார் வ‌ண‌ங்குவ‌த‌ற்கு உரிய‌வ‌ளோ, யார் எல்லோருக்கும் உத‌வுப‌வ‌ளோ, கோபம் ஹிம்சை போன்ற‌ குண‌ங்க‌ளிலிருந்து விடுவிப்ப‌வ‌ளான‌ ச‌ஷ்டி தேவியை ந‌ம‌ஸ்க‌ரிக்கிறேன்.

8.   த‌ன‌ம் தேஹி ப்ரிய‌ம் தேஹி புத்ர‌ம் தேஹி சுரேஸ்வ‌ரி, த‌ர்ம‌ம் தேஹி, ய‌ஸோ தேஹி ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: தேவி என‌க்கு செல்வ‌த்தினை த‌ருவாய், அன்பினை த‌ருவாய், புத்திர‌ர்க‌ளை த‌ருவாய், தேவ‌ர்க‌ளின் தெய்வ‌மே என‌க்கு த‌ர்ம‌த்தினை த‌ருவாய், புக‌ழினைத்த‌ருவாய், ச‌ஷ்டி தேவியே உன‌க்கு ந‌ம‌ஸ்கார‌ம்.

9.   பூமிம் தேஹி, ப்ர‌ஜாம் தேஹி வித்யாம் தேஹி சுபூஜிதே  க‌ல்யாண‌ம் ச‌ ஜ‌ய‌ம் தேஹி ச‌ஷ்டி தேவ்யை ந‌மோ ந‌ம‌ஹ‌
பொருள்: என‌க்கு நில‌ம் த‌ருவாய், ந‌ல்ல வாரிசு த‌ருவாய், ந‌ல்ல‌ அறிவு த‌ருவாய், ஓ வ‌ண‌ங்குவ‌த‌ற்குரிய‌வ‌ளே ம‌ங்க‌ள‌க‌ர்மான‌தை த‌ருவாய், வெற்றியைத்த‌ருவாய், ச‌ஷ்டிதேவியே ந‌ம‌ஸ்கார‌ம்.

10. சஷ்டி ஸ்தோத்ரம் இதம் பதன் யா ஸ்ரூனோதி சா வத்சாரம் அபுத்ரோ லப்ஹதே புத்ரான் வரம் சுசுர ஜீவானாம்
பொருள்: இந்த சஷ்டி தேவியின் ஸ்தோத்திரத்தினை பிள்ளைகளற்ற தம்பதிகளில் யாரொருவர் ஒரு வருடம் கேட்டாலோ வாசித்தாலோ அவர்கள் புத்திரனை அடைவார்கள். அத்துடன் வாழ்வில் எல்லவித சௌபாக்கியங்களை அடைந்து இன்பமான வாழ்வை அடைவார்கள்.

11. வர்ஷமேகம் ச ய பக்தாய சம்யதேத்தம்  ஸ்ரூனோதி ச‌ சர்வ பாப விநிர்முக்த மஹாவந்திய ப்ரசூயாதே
பொருள்: ஒருவருடம் இதனை கேட்டாலோ படித்தாளோ அந்தப்பெண்ணுடைய எல்லப் பாபங்களும் தீர்ந்து பிள்ளை பெறத்தகுதி உடையவளாகிறாள்.

12. வீர புத்ரம் ச குணீயம் வித்யாவந்தம் யஸ்வினம்  சுசிர் ஆயுஷ்மந்தமேவ சஷ்டி மாத்ரு ப்ரசாததத்
பொருள்: இதனைப்பாராயணம் செய்பவன் சஷ்டிமாதாவின் அருளினால் வீரமுடைய, நல்ல அறிவுடைய, பண்புடைய, தூய்மையான, நீண்ட ஆயுளுடைய  ஆண்மகனைப் பெறுவான்,

ஸ்ரீ சுப்ரமணிய வைவ்ருத புராணே ஸ்ரீ பிரியாவ்ருத ரச்சித சஷ்டி தேவி ஸ்தோத்திரம் சம்பூர்ணம்
பிரிய வ்ருதரால் எழுதப்பட்டு சுப்ரமணிய புராணத்தில் காணப்படும் சஷ்டி தேவி ஸ்தோத்திரம் முடிவுற்றது.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...