சக்தி வாய்ந்த சிவத்தியானத்தை எப்படி நாம் செய்வது? - ஓர் எளிய முறை வழிகாட்டல்
இலகுவான முறை
இருக்கிறது! எமது
மனம் எமது
உலக அனுபவங்களால் பீடிக்கப்பட்டு பயம்,
குழப்பம், வேதனை,
பொறாமை, அசூயை,
ஆணவம், எரிச்சல்,
கோபம் இவற்றால்
நிறைந்திருக்கிறது.
மேற்கூறிய அனைத்துமே மலங்கள் எனப்படும் அசுத்தங்கள்! இப்படி
நாளாந்தம் மனதை
அசுத்தத்தால் நிறைக்கும் நாம் பேருணர்வினைத் தரக்கூடிய சில
எண்ணங்களிலும் எமது
மனதை இயக்கிப்
பழக வேண்டும்.
மனதில் உள்ள
எண்ண அலைகளைக்
குறைக்க இசை
நல்ல ஒரு
கருவி! ஆனால்
அது மனதின்
எண்ணச் சுழலை
ஸ்தம்பிக்கச் செய்து
சிறிது நேரம்
எம்மை பழைய
எண்ணங்களில் இருந்து
விலகியிருக்கச் செய்ய்யுமே அன்றி மனதை
தாழ் நிலையிலிருந்து உயர்த்தாது!
மனம் தனது
பழைய குணத்திலிருந்து வெளிவந்து புதிய
தன்மை பெறவேண்டும் என்றால் உயர்ந்த
மங்களமான ஒன்றைப்
பற்ற வேண்டும்!
அந்த உயர்ந்த
ஒன்று எல்லாவற்றிற்கும் மூலமான ஒன்றாக
இருக்கவேண்டும்!
அப்படியான மங்களமான,
உயர்ந்த ஒரு
நிலையை சிவம்
என்று சொல்கிறோம்! இந்த சிவத்தின் அதியுயர் நிலையை
நாம் ஆரம்பத்திலேயே தியானிக்கும் ஆற்றல்
எமக்கு இல்லை
என்பதால் அந்த
ஆற்றலை தியானித்து அனுபவம் பெற்றவர்கள் பாடல்களை இசையுடனும் அதேவேளை அவர்களது
அனுபவத்தினை மனக்கண்ணில் காட்சியாகக் கண்டும்
அந்தப் பாடல்களைப் பாடுவதன் மூலம்
நாம் அளவற்ற
பலனைப் பெறலாம்!
பலனைப் பெறலாம்
என்றவுடன் பௌதீமான
இன்பங்கள் எல்லாவம்
வரும் என்று
அவாப் படாதீர்கள்! முதலில் உயர்ந்த
அனுபவத்த்தால் மனம்
தூய்மையானல் மனதிற்கு
இச்சாசக்தி வாய்க்கும்! இப்படி இச்சா
சக்தி வாய்ந்தால் நாம் எண்ணும்
காரியமெல்லாம் சித்தியாகும்! ஆகவே கடவுளை
வழிபடுவது என்பது
எம்மைச் செம்மைப்
படுத்தவும், அக
இன்பத்திற்கும் என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்!
இங்கு நாம்
எழுதும் திரு
ஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பினை கீழ்வரும் முறையில் தியானித்து எமக்கு உங்கள்
அனுபவத்தினை அறியத்தாருங்கள்:
1. அமைதியாக ஒரு
இடத்தில் மடிக்கணனி, மொபைல் போன்
இவற்றில் எழுதப்படும் தியான விளக்கத்தை குறைந்தது மூன்று
தடவை படித்து
மனதில் கிரகித்துக்கொள்ளுங்கள்.
2. பிறகு அதில்
கூறப்பட்ட தன்மைகள்,
உருவங்களை கண்களை
மூடி மனதில்
உருவகியுங்கள்.
3. Saivam வலைத்தளத்தில்
குறித்த பதிகம்
அருமையான இசையோடு
இருக்கிறது. முதலாவது
கொமெண்டில் தரப்பட்டிருக்கிறது. இதை இயக்கி
மனதில் அந்த
இசையுடனும் இந்த
தியான உருவத்தினை மனக்காட்சியாகவும் உருவகப்படுத்தி கண்களை மூடி
அனுபவித்து வாருங்கள்.
4. இதற்கு குளிக்க
வேண்டும், இதைச்
சாப்பிடக் கூடாது
என்று எந்த
நிபந்தனையாலும் உங்களைக்
கட்டுப்படுத்தாமல் உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்து வாருங்கள்! உங்கள் மனம்
முதிர முதிர
அனைத்தையும் சரியாகச்
செய்யும் பக்குவம்
வரும்!
5. குறைந்து 45 நாட்கள்
விடாமல் பயிற்சி
செய்யுங்கள். கட்டாயம்
பலன் பெறுவீர்கள்.
6.இதை நீங்கள்
அனுபவித்து ஆனந்தப்பட்டால் அந்த மகிழ்ச்சியை இங்கு பகிர்ந்து மற்றோரையும் தியானத்தால் பெறும் ஆனந்தத்தை அடைய உற்சாகப்படுத்துங்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.