இந்தப் பாடல்
பைரவ உபாசனைக்கு உரிய தகுதியைக் கூறுகிறது. வேட்டையாடுபவன் தனது இரையைக்
கண்டவுடன் அதன்
பின்னால் எந்த
சிந்தனையும் இல்லாமல்
ஒடி அதை
எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதுதான் எண்ணம்! இப்படித்தான் தெய்வ உபாஸனை
என்றால் நாம்
விரும்பியதையெல்லாம் கடவுளிடம் கேட்டுவிடலாம் என்ற
பேராசையே கடவுளிடம் வரம் கேட்பவர்களது நிலைமை!
ஆனால் பைரவரை
இப்படி அதியாசைகளை வைத்துக்கொண்டிருக்கும் வேடனின் நிலையில் இருந்து
உபாசிக்க முடியாது!
பைரவர் ஆணவ
சம்ஹாரம் செய்பவர்.
ஆகவே அவரிடம்
வரம் பெற
விரும்புவர்கள் விழிப்புணர்வுடன் தாம் செயல்களின் கருத்தையும் உண்மையையும் உணர்ந்து செயலாற்ற
வேண்டும்! இப்படி
பைரவ உபாசனைக்குரிய பண்பினைக் கூறுகிறது இந்தப்பாடல்!
அடுத்து பைரவர்
கண்களுக்குத் தெரியாத
அதிதெய்வீக சக்திகளான வேதாள, பூத
கணங்களையும் கட்டுப்படுத்துபவர் என்ற வல்லமையும் சொல்லப்படுகிறது.!
அரம்பிடிக்குங் கண்ணினாராசை மேற்கொண்டலைவதெல்லாம்
வரம்பிடிக்குங் கருத்துண்மை
கண்டார்க்கில்லை வந்தருள்கூர
உரம்பிடிக் குந்துட்ட வேதாள பூதத்தை
யோட்டி வெட்டித்
தரம் பிடிக்கும் வடுகா
காழி யாபத்துத் தாரணனே
அரத்தைப் பிடித்து
தமது அம்பு
வேல் இவற்றைத்
தீட்டிக்கொண்டு வேட்டையாடுபவர்கள் தாம் ஆசைப்பட்ட இரை கிடைப்பதற்கு அலைவது போலவே
உம்மை வரம்
கேட்பவர்கள் தமது
இச்சைகள் தர்மத்திற்குட்பட்டதா என்ற கருத்து,
உண்மையைக் காண்பதில்லை! ஏனென்றால் அவர்களுக்கு உமது வல்லமை
தெரிவதில்லை!
நீர் கண்களுக்குத் தெரியாத அதிதெய்வீக சக்திகளாக பிரபஞ்சத்தில் துன்பத்தை விளைவிக்கும் உரம் வாய்ந்த
வேதாளங்கள், பூதங்களை
வெட்டியோட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடுக
பைரவரே,
சீர்காழிப்பதியில் உறையும்
ஆபத்துத் தாரணரே
உம்மை நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 13}
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.