எமது ஆழ்மனதிற்கு சில சக்திகளைப் பெற குறித்த தெய்வ உருவங்களை மனதில் இருத்திப் பழக மெதுவாக அந்த சக்திகள் எம்மில் விழித்தெழுந்து எம் மனம், உடலிற்கூடாக பயன் தரும் என்பதே உருவ வழிபாட்டின் இரகசியமாகும்!
இந்த வகையில் காலபைரவரின் ஆபதோத்தாரண மூர்த்தி ரூபம் நாம் தியானித்து வந்தால் ஆபத்துக் காலங்களில் எமது மனம் துரிதமாக விழிப்புணர்வுடன் செயற்பட்டு நாம் கஷ்டங்களில் இருந்து வெளிவருவோம்! அந்தக் காலபைரவரின் ஆற்றல் எமது மனம், பிராணன், உடல் ஆகியவற்றிற்கூடாக செயற்பட்டு எம்மை ஆபத்துச் சூழல்களில் இருந்து காப்பாற்றி அற்புதங்கள் புரியும்.
அத்தகைய ஆபத்தோத்தாரண மூர்த்தியின் தியானம் பற்றி இனிவரும் நாட்களில் பார்ப்போம்! இந்த ரூபத்தின் பொதுவடிவம் சாதாரண் மனிதவடிவம்; இரண்டு கரங்கள்; ஒருகரத்தில் கபாலமும், மறுகரத்தில் தண்டமும் வைத்திருப்பார். ஆயுதங்கள் மாறும்; இது ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் வெளியேறுவதற்கு எமக்குத் தேவையான நுண்ணறிவின் குறியீடு! இந்த ரூபத்தின் அர்த்தம் என்னவென்றால் இந்த வடிவத்தில் ஆபத்துதாரண மூர்த்தியைத் தியானம் செய்தால் எமக்கருகில் இருக்கும் மனிதர்களுக்குள் எமக்கு உதவி செய்யும் எண்ணத்தை காலபைரவர் புகுத்தி எமக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருவார் என்பதாகும்.
ஆபத்தோத்தாரண என்பதன் பொருள்:
ஆபத்தோ: ஓர் இடைச்சொல். "ஆபத்து" என்ற சொல்லின் இறுதி எழுத்து "து" நீங்கியது.
த்தாரண: ஓர் இடைச்சொல். "தருணம்" என்ற சொல்லின் இறுதி எழுத்து "ம்" நீங்கியது.
இரண்டு இடைச்சொல்களும் சேர்ந்து "ஆபத்தோத்தாரண" என்று ஆகிறது. இந்த இடைச்சொல்லை "ஆபத்தோ தருணம்" என்று பிரிக்கலாம்.
இதன் பொருள்: ஆபத்து நேரும் தருணம்.
ஆபதோத்தாரண பைரவர் என்றால் ஆபத்து நேரும் தருணத்தில் விழிப்புணர்வினைத் தருபவர் என்று அர்த்தம்! இன்றைய நவீன உளவியல் பாஷையில் சொல்வதானால் "presence of mind
during the danger situation" - இது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அதியுயர் நுண்ணறிவு!
சீர்காழி ஆபதோத்தாரண பைரவ ஸ்தலம்; இங்குள்ள் சட்டை நாதப் பெருமானே ஆபதோத்தாரண பைரவர். இவர் மேல் தருமைச் சிவ ஞான தேசிகர் கலித்துறையாக ஆபதோத்தாரணர் மாலை என 30 பாடல்கள் எழுதியுள்ளார். இவை அர்த்தம் புரிந்து பாராயணம் செய்வது எமக்கு ஆபத்தான இக்கட்டான நிலையில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கச் செய்யும்!
முதலாவது ஆப்தோத்தாரண தியானம்:
சீர்கொண்ட செம்பொற் றிருமேனி யும்
செம் முகமலருங் கார்கொண்ட சட்டையுந் தண்டாயுதமுங் கணங்களெட்டுங்
கூர்கொண்ட மூவிலைச் சூலமுங் கொண்டருள்
கூர்ந்த கொன்றைத் தார்கொண்ட வேணிய னே
காழி யாபதுத் தாரணனே
சீரான பொன்னிறத் தேக திருமேனி
மலர்ந்த செம்மையான முகம்
கறுத்த தோலைப் ஆடையாகப் போர்த்தி,
ஒரு கரத்தில் தண்டாயுதமும்,
மறுகரத்தில் திரிசூலமும்
கொன்றை மலர் மாலை சூடி,
சீர்காழிப்பதியில் இருக்கும்
ஆபத்துக்களை நிறுத்தும் (வேணியன் - நிறுத்துபவன்)
ஆபத்தோத்தாரணனே உம்மை நான் தியானிக்கிறேன்!
இதைக் காணும் அனைவருக்கும் ஆபதோத்தாரண மூர்த்தியின் அருட்கடாக்ஷமும், காசி காலபைர்வரின் அருளாசியும் கிட்டட்டும்!
இன்றைய காசி காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரின் தரிசனத்திற்காக!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.