ஏன் மூலிகைத் தாவரங்கள் மற்றும் அவற்றின் சாறுகள் மருத்துவத்தில் இன்னும் முக்கியமானவை? வரலாற்று ரீதியாக, தாவரங்கள் நமது மிக முக்கியமான மருந்துகளை அளித்துள்ளன, ஆனால், கடந்த நூற்றாண்டின் மருத்துவ வேதியியலில் பெரும் முன்னேற்றத்துடன், செயற்கை மருந்துகள் அவற்றை ஆராய்ச்சியின் முக்கிய மையமாக மாற்றியுள்ளன. இருப்பினும், இயற்கை பொருட்களைப் பயன்படுத்தியே மருந்துகளின் வளர்ச்சி 'முன்னணி' மூலக்கூறுகள் தொடர்கின்றன, மேலும் பல தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தூய கலவைகள் (அல்லது இயற்கை பொருட்கள்) நவீன, பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன;
எமது பாரம்பரிய மருத்துவங்களான சித்த ஆயுர்வேத மருத்துவங்கள் மூலிகைகளை அடிப்படையாகவே மருத்துவத்தைக் கொண்டிருக்கிறது.
“வேர்பாரு தழை பாரு
மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே” என்றே மருந்தின் ஒழுங்கு சித்தர்களால் சொல்லப்படுகிறது.
இன்று பல நாடுகளில் உள்ள மக்கள் பரவலாக தமது ஆரோக்கியப் பிரச்சினைகளை இயற்கையான முறைகள் மூலம் குணப்படுத்த விரும்புகிறார்கள்.
மூலிகைகளைப் பயன்படுத்தும் போது சில அடிப்படைத் தத்துவங்கள் இருக்கிறது.
மூலிகை ஒரு தாவரத்தை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?
ஒரு தாவரத்திற்கு கீழ்வரும் பகுதிகள் இருக்கிறது:
1) பட்டை
2) விதை
3) பழத்தின் தோல்
4) இலை
5) பழம்
6) பூ
7) பழத்தின் ஓடு
கிழங்கு
9) மகரந்தம்
10) பட்டை
11) கொடி
12) பிசின்
13) பால்
என்று ஒரு தாவரத்திலிருந்து மருந்துக்கு பயன்படும் 13 பகுதிகளும் வெவ்வேறான மருத்துவ - வேதியல் குணங்கள் உடையவை. ஒவ்வொரு மூலிகையிலும் அதன் எந்தப் பாகத்தை, எத்தகைய மருந்திற்கு, என்ன அளவில் சேர்க்க வேண்டும் என்பதே மூலிகை மருந்தைப் பயன்படுத்துபவர் அறிய வேண்டிய நுட்பம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.