இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை கண்டபொழுது ஏற்கனவே சிந்திக்கப்பட்ட சில விஷயங்களையும் சேர்த்து இந்தப் பதிவை எழுதலாம் என்று எண்ணத் தோன்றியது!
அண்மையில்
எனது
நண்பர்
குழுவொன்று
உயர்தர
மாணவர்களுக்கு
கருத்தரங்கு
ஒன்று
ஏற்பாடு
செய்திருந்தது;
அதன்
முடிவில்
பின்னூட்டம்
பெறப்பட்ட
போது
ஒரு
மாணவன்
தமக்கு
மதிய
உணவிற்கு
சிக்கர்
பிரியாணி
வழங்கப்படவில்லை
என்று
கடுமையாக
விமர்சித்து
பின்னூட்டம்
எழுதியிருந்தான்!
அதைப்
படித்த
போது
அவன்
ஒரு
நகைச்சுவை
உணர்வுடன்
எழுதியது
போல்
தோன்றினாலும்
அடிப்படையில்
வாழ்க்கையில்
அடுத்த
மாதம்
பரீட்சை
எழுதி
சித்திபெறவேண்டிய
முக்கியமான
ஒரு
நிலையில்
இருந்து
கொண்டு
இப்படிச்
சிந்திக்கிறானே
என்ற
கவலையும்
வந்தது!
அதுபோல்
சாதாரண
தரத்தில்
மிக
நல்ல
பெறுபேற்றினைப்
பெற்ற
ஒருமாணவன்
உயர்தரம்
தொடராமல்
வேலைக்குப்
போகிறேன்
என்று
சொல்ல
இன்னுமொரு
நண்பன்
உனக்கு
என்ன
பிரச்சனை
வீட்டில்
கல்விக்கு
செலவழிக்க
முடியாதா?
நாங்கள்
உதவுகிறோம்
என்று
கேட்க,
அவன்
சொன்ன
பதில்
பகீர்
என்றது.
தனது
கல்விச்
செலவு
போக
தனிப்பட
தனக்கு
எப்படியாவது
மாதம்
20000/= தனிப்படச்
செலவு
இருக்கிறது;
அதையும்
நீங்கள்
தருவீர்களா?
என்று
கேட்டு
எனது
நண்பனுக்கு
தலையில்
நெருப்பு
அள்ளிக்
கொட்டினான்
அந்த
மாணவன்!
20000/= தனிப்பட
செலவு
வைத்திருக்கும்
பெரிய
மனிதனாகிவிட்டன்
அவன்!
இவையெல்லாம்
பிள்ளைகளை
சிறுவயதிலிருந்து
நுகர்வுக்
கலாச்சாரத்திற்கு
அடிமையாக்கி
வாழ்க்கை
என்பது
இன்பம்
நுகர்வதற்கு
என்ற
எண்ணத்தை
ஏற்படுத்துவதால்
வரும்
வழுக்கள்
என்றே
எண்ணத்
தோன்றுகிறது.
இப்போது
பெற்றோர்களும்,
ஆசிரியர்களும்
சொல்லும்
ஒரு
விஷயம்
பிள்ளைகளை
அடித்துத்
திருத்த
முடியாது
என்பது!
ஆனால்
அது
உண்மையல்ல!
இப்போது
உள்ள
இளைஞர்களுக்கு
நேரம்
செலவழிக்க
பெற்றோருக்கும்,
ஆசிரியர்களுக்கும்
நேரம்
இல்லை!
அந்த
நேரத்தை
யூடியுப்,
பேஸ்புக்,
திரைப்படம்
மாணவர்களது
மனதிற்கு
பெற்றோராகவும்,
ஆசிரியராகவும்
இருந்து
வழிகாட்டுகிறது
என்பதே
உண்மை!
பல்கலைக்கழகத்தில்
பேராசிரியர்கள்
தமது
ஆய்வுகளிலும்
பட்டங்களிலும்
வெளி
நாட்டுப்பயணங்களிலும்
குறியாக
இருக்கிறார்கள்!
பாடசாலையில்
ஆசிரியர்கள்
தமது
வருமானத்தைப்
பெருக்குவது
எப்படி
என்ற
கவலையில்
இருக்கிறார்கள்
பெற்றோர்களுக்கு
உழைப்பும்,
பணிச்சுமையும்!
ஆகவே
ஒரு
பிள்ளையின்
value system இனை கட்டமைக்கும் பணியை சமூக ஊடகங்களும், திரைப்படங்களும், டிக் டொக் வீடியோக்களும் எடுத்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.