இன்றைய காலபைரவ தியானம் திரு நாவுக்கரசர் தேவாரத்திலிருந்து, திருசேறைப் பதிகம், ஆறாவது பாடல்;
விரித்த பல் கதிர் கொள் சூலம்,
வெடிபடு தமருகம் கை தரித்ததோர்
கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே!
இந்தத் தேவாரம் பைரவரும் சிவபெருமானும் வேறு இல்லை என்பதை திருநாவுக்கரசர் உறுதிப்படுத்துகிறார்.
விரிந்த பெரிய கோரபல்
ஒளிவீசும் சூலம்
வெடிபடு தமரகம் எனும் உடுக்கை
இவற்றைக் கைகளில் தரித்துக் கொண்டு,
தாருகா வனத்து முனிவர்கள் ஆணவத்தால் ஏவிய யானையை தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு,
இந்தக் கோலத்தில் கால பைரவராகி நிற்கும் இந்த தோற்றத்தைப் பார்த்து உமையாரே அஞ்சி நிற்க
அழகிய வாயால் சிரித்து அருள் செய்தார்!
இப்படி தாருகாவனத்து முனிவர்களின் ஆணவமழிக்க சிவபெருமானே பைரவராகத் தோன்றினார் என்றும் அந்த பைரவ மூர்த்தியே திருச்சேறைப் பதியில் இருக்கிறார் என்றும் பாடுகிறார்.
சிவபெருமானே பைரவ ரூபம் கொள்கிறார் என்பதற்கு தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திரு நாவுக்கரசரே பிரமாணம் தரும் பாடல் இது!
இந்தப் பாடலில் வரும் வெடுபடு தமரகம் என்ற வார்த்தையை அனுபவத்தில் பெற வேண்டும் என்றால் காசி காலபைரவர் கோயிலில் நடு நிசிப் பூசையில் பங்குபெற்றினால் அங்கு அடிக்கப்படும் இரண்டு உடுக்கைகளும் மனதை எண்ணமற்ற சூனியமாக்கும்! உடல் முழுவதும் விழிப்புணர்வு பரவி ஆனந்தத்தை தரும்!
இன்று காசிகாபுராதி நாத காலைபைரவரின் மங்கள அலங்காரம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.