ஒருவன் வாழ்வதற்கு எவ்வளவு செல்வம் தேவையோ அவ்வளவு செல்வம் அவன் பெற்றிருக்க வேண்டும். மூச்சு முட்டும் அளவிற்கு ஒருவன் சந்தோஷப்பட்டான் என்றால் அவனுடைய நுரையீரல் நிறையும் வரை என்று அர்த்தம்; செல்வம் எமக்கு தேவையான அளவு எமது வாழ்வை நடாத்தும் அளவிற்கு நிறைந்திருக்க வேண்டும்.
அதுபோல்
ஒருவன்
வாழ்க்கை
மற்றவர்களோடு
தொடர்பு
பட்டு,
இன்புற்று
இருக்க
வேண்டும்
என்றால்
அவன்
வாழ்வில்
மொழியறிவு
அவசியம்.
எம்
தாய்மொழியைப்
பொறுத்தவரையில்
இயல்,
இசை,
நாடகம்
என்ற
முத்தமிழும்
ஒருவன்
வாழ்க்கையில்
இல்லாவிட்டால்
அவன்
வாழ்க்கை
இன்புற
முடியாது.
பைரவர்
சொர்ணாகர்ஷண
பைரவராக
எமக்கு
பரிபூரண
லக்ஷ்மி
கடாக்ஷம்
தரக்கூடியவர்!
அதுபோல்
அக்ஷரம்
என்ற
எழுத்துக்கதிபதியாகவும்
இருக்கக்கூடியவர்.
இப்படி
நாம்
பெறும்
கல்வியையும்
செல்வத்தையும்
மற்றவர்களுக்கு
எள்ளளாவாவது
கொடுத்து
உண்டு
இருக்க
மனம்
வேண்டும்.
பைரவ
உபாசனையால்
தேவையான
அளவு
செல்வமும்,
கல்வியும்,
அவற்றை
மற்றவர்களுக்கு
கொடுத்து
வாழும்
தியாகப்
பண்பும்
வாய்க்கும்
என்பது
இந்தப்
பாடலின்
பொருளாம்.
முட்டுற
வாழும்
பெருஞ்செல்வமும்
மும்முத்
தமிழ்க்கல்வியும்
எட்டுணை
யேனுங்
கொடுத்துண்
டிருக்க
வெனக்கருள்வாய்
வட்ட
மதிசடையானே
சிகர
மலைக்கமர்ந்த
சட்ட
முடையவனனே
காழி
யாபதுத்
தாரணனே
வாழ்க்கையின்
தேவைகள்
பூர்த்தியாகும்
அளவுக்குச்
செல்வமும்,
வாழ்க்கை
இன்பமுற
தெளிவுற
இயல்
இசை
நாடகம்
என்ற
முத்தமிழும்
இப்படிக்
கிடைக்கும்
செல்வத்தையும்
கல்வியையும்
எள்ளளவாவது
மற்றவர்களுக்கு
கொடுத்து
வாழும்
பண்பும்
எனக்கருள்வீர்
பைரவப்
பெருமானே!
அழகிய
வட்டவடிவ
சந்திரனும்,
சடையும்,
கையிலாயச்
சிகரத்தில்
அமர்ந்த
தோற்றத்தில்
இருக்கும்
சட்டை
நாதர்
இருக்கும்
சீர்காழிப்
பதியில்
இருக்கும்
ஆபத்து
தாரண
பைரவரே
உம்மை
நாம்
தியானிக்கிறோம்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
08}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.